Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதில் தேவை?

Featured Replies

யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்?

ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்?

எப்படி தொடர்பு கொள்வது?

திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை?

பதில் தேவை?

அஜீவன் அண்ணாவே யாழ் உறவோசையில தலைப்பு போடுற அளவுக்கு நிலமை வந்திட்டுதோ? :wub:

யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்?

ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்?

எப்படி தொடர்பு கொள்வது?

திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை?

பதில் தேவை?

என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.

இங்கே இருக்கும் இரு பகுதிகளுக்கும் சென்று பாருங்கள் மோகன்.

உங்களுக்கே பிரச்சனை விளங்கும் என்றே நினைக்கிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39501&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39361&hl=

விளங்கிவில்லையானால்

நான் பின்னர் தெளிவுபடுத்துகிறேன்.

நன்றி!

இங்கே இருக்கும் இரு பகுதிகளுக்கும் சென்று பாருங்கள் மோகன்.

உங்களுக்கே பிரச்சனை விளங்கும் என்றே நினைக்கிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39501&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39361&hl=

விளங்கிவில்லையானால்

நான் பின்னர் தெளிவுபடுத்துகிறேன்.

நன்றி!

ஒரே விடயம் சம்பந்தப்பட்ட தலைப்புகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது. அதுதான் எனக்குத் தெரிகின்றது.

  • தொடங்கியவர்

ஒரே விடயம் சம்பந்தப்பட்ட தலைப்புகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது. அதுதான் எனக்குத் தெரிகின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39501&hl=

இங்கே ஒரு செய்தி முதலில் பதிப்பட்டுள்ளது.

அதாவது

மன்னாரில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: கடும் மோதலில் 45 படையினர் பலி

Friday, 30 May 2008

மன்னார் மாவட்டத்தில் இன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத் தரப்பினருக்கும் இடையில் வெடித்த கடும் மோதல் சம்பவத்தில் 25 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 45 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபோதே இந்த மோதல் வெடித்தது...

தொடர்ந்து வாசிக்க.....

இதுதான் முதலில் யாழில் பதியப்பட்ட செய்தி!

அதாவது: நேற்று, 06:58 PM ( இது ஐரோப்பிய நேரம்)

அதன் பின்னர் பதியப்பட்ட

மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க .....

நேற்று, 05:26 PM ( இது எந்த நாட்டு நேரம் எனத் தெரியாது)

இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல.............

கேட்டே ஆக வேண்டும்?

இந்த செய்தி

மாற்றத்துக்குள்ளானது ஏன்?

முதல் பதியப்பட்ட செய்தி

பின் தள்ளப்பட்டதற்கான காரணம் என்ன?

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?

இது நேர மாற்றத்தின் காரணம் என நீங்கள் நிச்சயம் ஒரு காரணத்தை முன் வைப்பீர்கள்!

அது எனக்குத் தெரியும்.

ஆனால் இது முறையுமல்ல.

நியாயமுமல்ல.

அது எவர் பதிந்தாலும் எனக்கு ஒன்றுதான்.

யாழ் களத்தில் பதியும் நேரம்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமே தவிர

பதியும் ஒருவரை

அல்லது

அது எங்கிருந்து பதியப்படுகிறது என்பது முன்னிலைப் படுத்தப்படலாகாது.

இதற்கு முன்னும் இது போன்ற தன்மைகளை பல முறை கண்டுள்ளேன்.

இன்று அது குறித்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுதற்கு காரணம்

நான் செய்தியை பதிந்த போது

அதை நம்ப மறுத்தவர்கள் குறித்து அதே பதிவில் காணலாம்.

அதன் பிறகு அதன் நம்பகத் தன்மை

இன்னொரு பதிவால்தான் நம்பப்படுகிறது என்றால்

அதற்காக நானும் பேசியே ஆக வேண்டும்.

ஒருவருக்கு ஒரு நீதியும்

இன்னொருவருக்கு மற்றொரு நீதியும்

எங்குமே வேண்டாம்.

நீதி அனைவருக்கும் பொதுவாகட்டும்!

நீங்கள் போட்ட ஒரு பதிவு போன்ற

எனது பதிவு புதிதாக பதியப்பட்ட போது

அது உங்கள் (மோகன்) பதிவுக்கு கீழ் வந்திருக்கிறது.

அது நியாயமானது!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39361&hl=

அது சரி!

ஆனால் முன்னைய நிலை நிச்சயம் தவறு!

அதில் மாற்றுக் கருத்து எவருக்கும் வர வாய்ப்பில்லை.

அதற்காக தொழில் நுட்பக் காரணங்கள் காரணம் என்றால்

அதை ஏற்க நான் தயாரில்லை.

ஒன்று யாழ் முறையாக செயல்படவில்லை

அல்லது

உங்களில் யாராவது ஒருவரது விருப்பு வெறுப்புக்கு

ஏற்ற விதத்தில் யாழ் களம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

அல்லது

யாழ் களத்தில் குறிப்பிட்டவர்கள்

இருப்பவர்கள் புனைப் பெயரில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறார்கள்.

இவை எவருக்கும் எழக் கூடிய சந்தேகங்கள்.

அவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும்

அல்லது

அவர்கள் தயவு செய்து அப் பொறுப்பிலிருந்து

தார்மீகமாக வெளியேற வேண்டும்.

எது சரியோ

அதை செய்யுங்கள்!

ஆரம்ப காலத்திலிருந்தே

விடுதலைப் புலிகளது ஆதரவு ஊடகங்கள் போல்

பாசாங்கு செய்து பிழைப்பு நடத்திய ஊடகங்களையும்

அதன் பெயரால் வாழ்ந்து புகழ் சோர்த்து

பிழைப்பு நடத்தியோரையும் எனக்கு தெரியும்!

இன்று அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

அதே நிலை பல இடங்களில் இன்றும் உண்டு.

தேவையும் தற்கால நிலையும் கருதி சிலர் மெளனம் காக்கிறார்கள்.

அது குறித்து சொல்ல வேண்டிய இடத்தில்

சொல்லி வைப்பது எனது கடமை என்றே கருதுகிறேன்.

அதற்கான கவனிப்பை இன்று இல்லாவிட்டாலும்

ஒருநாள் அந்த கவனிப்பு நிச்சயம் நடக்கும்!

எனவே இது குறித்து சரியான அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

அதுவே எனது வேண்டுகோள்!

விடுதலைக்காக குரல் கொடுக்கும் ஒரு இனம்

அதன் காலில் அதனாலே மிதிபடுவது போல் கேவலம் வேறில்லை.

நன்றி!

Edited by AJeevan

எனக்கெண்டால் ஒன்றுமே விளங்கேல அஜீவன் அண்ணா...

புதினம் செய்தி இது:

post='414675']

மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

அஜீவன் தள செய்தி இது:

மன்னாரில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: கடும் மோதலில் 45 படையினர் பலி

Friday, 30 May 2008

மன்னார் மாவட்டத்தில் இன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத் தரப்பினருக்கும் இடையில் வெடித்த கடும் மோதல் சம்பவத்தில் 25 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 45 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபோதே இந்த மோதல் வெடித்தது...

தொடர்ந்து வாசிக்க

மேலுள்ளவாறு தான் எனக்கு காட்டுகிறது. மேலே காட்டப்பட்டுள்ள நேரம் ஐரோப்பிய நேரம். இங்கிலாந்தில் இருப்பவர்களுக்கு இங்கிலாந்து நேரமும், கனடாவில் இருப்பவர்களுக்கு கனடா நேரமும் காட்டும். மேலுள்ள நேரத்தின்படி பார்க்கிறபோது புதினம் செய்தி தான் முதலில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உங்களின் செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு செய்திகளையும் இணைக்கும் போது முதலில் இணைக்கப்பட்ட (கருத்துக்களத்தில்) செய்தியே முதலில் காட்டும். அதுதான் வழமை. அப்படித்தானே காண்பிக்கிறது. இல்லையா?

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

எனக்கெண்டால் ஒன்றுமே விளங்கேல அஜீவன் அண்ணா...

புதினம் செய்தி இது:

அஜீவன் தள செய்தி இது:

மேலுள்ளவாறு தான் எனக்கு காட்டுகிறது. மேலே காட்டப்பட்டுள்ள நேரம் ஐரோப்பிய நேரம். இங்கிலாந்தில் இருப்பவர்களுக்கு இங்கிலாந்து நேரமும், கனடாவில் இருப்பவர்களுக்கு கனடா நேரமும் காட்டும். மேலுள்ள நேரத்தின்படி பார்க்கிறபோது புதினம் செய்தி தான் முதலில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உங்களின் செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு செய்திகளையும் இணைக்கும் போது முதலில் இணைக்கப்பட்ட (கருத்துக்களத்தில்) செய்தியே முதலில் காட்டும். அதுதான் வழமை. அப்படித்தானே காண்பிக்கிறது. இல்லையா?

நான் எனது கொப்பியூட்டரில் உள்ள நேரத்தை

இலங்கை நேரத்துக்கு மாற்றினால்

பின்னால் நான் செய்தி இணைத்தால் கூட

முன்னால் வருமா?

அப்ப அதை நான் செய்கிறேன்.

நானும் தெளிவு பெற்று விட்டேன்.

இல்ல

ஞானம் பெற்று விட்டேன்.

நான் எழுதும் கேள்விக்கு

பதிலை பிந்தி எழுதினாலும்

கேள்விக்கு முன் பதில் வரும் அப்படித்தானே?

உதாரணமாக:

சுவிஸிருந்து கேட்கும் கேள்வி: உங்க பெயர் என்ன? (May 30 2008, 06:58 PM)

லண்டனில் இருந்து வரும் பதில்: அலாவுதீன் . (May 30 2008, 05:26 PM)

அது யாழுக்கு வரும் போது இப்படி வரும்:-

லண்டனில் இருந்து வரும் பதில்: அலாவுதீன். (May 30 2008, 05:26 PM)

சுவிஸிருந்து கேட்கும் கேள்வி: உங்க பெயர் என்ன?(May 30 2008, 06:58 PM)

அடடா என்ன அட்டகாசம்? :icon_mrgreen:

அதே கருத்தாடல்களிலும் வருமா?

இப்ப புரியுது யார்

இதற்கு சூத்திரதாரி என்பது!

வாழ்க வளமுடன்

Edited by AJeevan

நான் எனது கொப்பியூட்டரில் உள்ள நேரத்தை

இலங்கை நேரத்துக்கு மாற்றினால்

பின்னால் நான் செய்தி இணைத்தால் கூட

முன்னால் வருமா?

:icon_mrgreen: அப்பிடியில்ல அஜீவன் அண்ணா. நீங்கள் உங்கள் கணினியில் உள்ள நேரத்தை எப்படி மாற்றினாலும் இணைய வழங்கிக்கு என்று ஒரு நேரமுள்ளது. அந்த நேரம் மாறாது. அதேபோல் கருத்துக்களத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு இலக்கம் இருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் முதலில் ஒரு கேள்வி எழுதினால் அதற்கான இலக்கம் 414516 என்று வரும். அதற்கு நான் பதில் எழுதினால் அதற்கான இலக்கம் 414517 என்று வரும். இதன்படி கருத்துக்கள் ஒழுங்குபடுத்தப்படும். நீங்களோ நானோ எங்கள் கணினிகளில் நேரத்தை மாற்றுவதால் வழங்கியிலும் கருத்துக்கள தகவல் வங்கியிலும் பாதிப்பு செலுத்தக்கூடிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நான் நினைக்கவில்லை.

அஜுவன் வேலை மினக்கெட்டு செய்திகளில் நேரங்களை மாற்ற வேண்டிய தேவை இங்கு யாருக்கும் இல்லை.

புதினம் செய்தி:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=414675

நீங்கள் இணைத்த செய்தி:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=414688

அதாவது புதினத்தின் பதிவு 414675 எனவும் உங்கள் செய்தியின் பதிவு 414688 எனவும் பதியப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் ஏனைய பழைய செய்திகளையும் இப்படி சென்று பாருங்கள்.

அது தவிர நேரத்தினையும் சரியாகக் கவனியுங்கள். மேலே இளைஞன் கூறியது போன்று நீங்கள் எந்த நாட்டில் இருப்பதாக அங்கு நேரத்தினைத் தெரிவு செய்துள்ளீர்களோ அதன்படியே நேரம் காண்பிக்கப்படும். உதாரணமாக இலண்டனில் இருக்கும் ஒருவர் நான்கு மணிக்கு ஒரு செய்தியினை இணைத்தால் சுவிசில் இருக்கும் ஒருவருக்கு ஐந்து மணிக்கு இணைத்ததாகக் காண்பிக்கும். (கவனிக்க: இது களத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் உள்நுழைந்திருக்கும் போது மட்டும் இப்படிக் காண்பிக்கும்). களத்தில் உள்நுழையாத ஒருவருக்கு பொதுவாக இலண்டன் நேரமே அவர் எங்கிருந்தாலும் காண்பிக்கும்.

இதற்கு முன்னும் இது போன்ற தன்மைகளை பல முறை கண்டுள்ளேன் என்று கூறியுள்ளீர்கள். தயவு செய்து மேற்கூறிய முறைப்படி எவ் இலக்கங்களில் பதியப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

அடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சந்தேகங்கள் இருந்தால் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து இனி வரும் காலங்களிலாவது அவசரப்பட்டு அவசியமில்லாது குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நான் எனது கொப்பியூட்டரில் உள்ள நேரத்தை
இலங்கை நேரத்துக்கு மாற்றினால்
பின்னால் நான் செய்தி இணைத்தால் கூட
முன்னால் வருமா?[/code]

நீங்கள் எங்கு எப்படி நேரத்தினை மாற்றினாலும் ஒரே கருத்துக்களை இணைக்கும் போது மேற்கூறியபடி கருத்து இலக்கங்களை அடிப்படையாக வைத்தே இணைக்கும்படி இதனை (இந்த script) உருவாக்கியவர்கள் செய்துள்ளார்கள்.

மீளவும் கேட்டுக் கொள்வது அடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அஜீவன் அண்ணா,

முந்தி ஒரு பிரச்சனை இருந்தது அது என்ன எண்டால் யாழில ஒரே மாதிரி செய்திகள் இணைக்கப்படுவது. ஒரு விசயமே ஊர்ப்புதினத்தில நாலைஞ்சு இடங்களில திருப்பி திருப்பி வேற வேற தலைப்புக்களோட இருந்திச்சிது. இதால நாங்களும் நிருவாகத்துக்கு சொல்லி இருந்தம். அதுகள ஒண்டாக்க சொல்லி, வாசிக்கிற ஆக்களுக்கு இலகுவாக இருப்பதற்கு.

இதன்பிறகு இப்ப ஒரு செய்தி வந்தால் அது எவரது செய்தியாக இருந்தாலும்.. முதல் வந்த செய்திக்கு பின்னாலதான் பிறகு வாற அது சம்மந்தமான செய்திகளும் இணைக்கப்படும். உண்மையில நிருவாகம் இதுல பாரபட்சம் காட்டுவது இல்லை.

ஆனால், புதினம் இணையம் யாழில் முன்னிலைப்படுத்தப்படுவது தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. புதினம் இணையமும் மற்றைய இணையங்கள் போல யாழில கையாளப்பட்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது எண்டு நினைக்கிறன். தவிர.. புதினம் தமிழரிண்ட உத்தியோகபூர்வ இணையம் எண்டும் சொல்லிறதுக்கு இல்ல. பதிவு இருக்கு, சங்கதி இருக்கிது, தமிழ்நெட் இருக்கிது. ஆனால், புதினத்துக்கு மட்டும் யாழில சிறப்பு சலுகை கொடுக்கப்படுவது விளங்க இல்ல. இது எனது தனிப்பட்ட கருத்து.

கருத்துக்களம் கருத்துக்கள உறவுகளால் கையாளப்படுகின்றது. நிருவாகம் தவறுகளை திருத்துகின்றது. ஆனால், புதினம் விடயத்தில் இது ஏன் வித்தியாசமாக கையாளப்படுகின்றது. தெரியவில்லை. இதுவும் எனது தனிப்பட்ட கருத்து. பிறகு ஒருத்தரும் கோவிச்சு போடாதிங்கோ. :icon_mrgreen:

பி/கு: இஞ்ச நான் முன்னிலைப்படுத்தப்படுவது எண்டு சொல்லிறது, மேலதிகமாக வாசிக்க எண்டு சொல்லி நியூஸ்பொட் இணைக்கிறத.. வேறு ஒண்டும் இல்ல.

  • தொடங்கியவர்

நான் வேலை மினக்கெட்டு எழுதவில்லை :icon_mrgreen:

யாரையும் முதன்மைப்படுத்த வேண்டாம்.

அது நானாக இருந்தாலும் சரி!

நட்பு - குடும்பம் என்பது வேறு

பொது வாழ்வு என்பது வேறு

நான் தவறு செய்தாலன்றி

எதற்கும் அஞ்சுவதில்லை.

நான் குடும்பத்தை பார்க்கும் பார்வையோடு

பொது வாழ்வை பார்ப்பதில்லை.

அது வேறு இது வேறு!

மீண்டும் சந்திக்கிறேன்...................

அதுவரை

அடடா..! இப்படி ஒரு பிரச்சினை வேறயையா?

எனது கேள்விகள் சந்தேகங்கள் என்பவற்றை வலைஞன் பதிந்த அடையாளம் கூட இல்லாமல் அகற்றுகுறாரே அதெப்படி???? மோகன் அண்ணாவுக்கு நேரம் கிடைத்தால் சிறு விளக்கம் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் பதிவு இலக்கம் 414675 எனவும் அஜீவனின் செய்தியின் பதிவு 414688 என மோகன் அவர்கள் எழுதியிருக்கிறார். புதினம் தானியங்கி மூலம் யாழில் செய்திகள் இணைக்கப்படுவதுண்டு. சிலவேளைகளில் ஒரே செய்திகளைப் புதினம் மறுபடியும் தானியங்கி மூலம் இணைக்கிறது. ஒருவேளை இம்முறையும் புதினம் ஒன்றிற்கு மேல் ஒரே செய்திகளை இணைத்திருக்கலாம். புதினம் 2வது முறையாக இணைத்த செய்தியின் பதிவு இலக்கம் 414688 ஐ விட அதிகமாக இருக்கலாம். அஜீவன் அந்தச் செய்தியை மட்டும் பார்த்திருக்கலாம். புதினம் முதலாவதாக இணைத்த 414675 செய்தியினை அஜீவன் பார்க்காது விட்டிருக்கலாம்.

ஒரு சின்ன விடயத்துக்கு நிற்வாகத்தின் மீது குறை சொல்லவது சரியாகப்படவில்லை. உலகத்தமிழர்களிடையே தமிழீழ உணர்வை ஊட்டுவதற்காகவும் தமிழ் மீது பற்றினை அதிகரிக்கவும் யாழ் இணையம் செயற்படுகிறது. தங்களது சொந்தப் பணத்தில் யாழ் இணையத்தினை நடாத்துகிறார்கள். நிற்வாகிகளுக்கு குடும்பம், வேலைப்பளு என்று பல விதப்பிரச்சனைகள் இருக்கிறது. யாழுக்கு 24 மணி நேரமும் அவர்கள் முழித்திருந்து யாழை அவதானிக்க முடியாது. எதுக்கெடுத்தாலும் யாழ் நிற்வாகிகளைக் குறை சொல்வது நல்லதாகத் தெரியவில்லை.

எனது கருத்துக்கள் சிலவும் யாழில் நிற்வாகத்தினரால் நீக்கப்பட்டது. அதற்கு நான் யாழ் நிற்வாகிகள் மீது கோபப் பட்டேனா?. பிறகு தான் தெரிந்தது எனது கருத்தில் பிழை இருக்கிறது. நான் யாழ்கள விதிமுறைப்படி கருத்தினை எழுதவில்லை. நான் பிழையாக எழுதியதினால் தான் எனது கருத்துகள் நீக்கப் பட்டது.

முரளி அவர்கள் புதினத்தினை யாழ் முன்னிலைப் படுத்துவதாகக் கருத்தினை எழுதியிருக்கிறார். மற்றைய இணையத்தளங்களும் தானியங்கி மூலம் செய்திகளை இணைக்க விரும்பினால் என்ற கருத்தினை முன்பு யாழ்கள நிற்வாகிகள் சொல்லி இருந்தமை ஞாபகத்துக்கு வருகிறது. அந்த இணையத்தளங்கள் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பாததினால் , யாழ் களம் புதினத்தினைத் தூக்கிப் பிடிப்பது என்பது பொருள் படுமா?. எதுக் கெடுத்தாலும் யாழ் நிற்வாகிகள் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல .

புதினம் இணையத்தளத்துக்கு செய்திகள் அனுப்புபவர்கள் பலர் சிறிலாங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்தும் உயிர் ஆபத்துக்கு மத்தியில் செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களில் சிலர் ஒட்டுப்படைகளினால் தேடப் படுகிறார்கள். உலகத்தமிழர்களுக்கு செய்திகளை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்கு புதினம் உட்பட பல இணையத்தளங்கள் இயங்குகின்றன. முன்பு யாழில் புதினம் செய்திகள் யாழ்கள உறுப்பினர்கள் இணைப்பதுண்டு. தவிர்க்க முடியாத காரணங்களினால் புதினத்தின் செய்திகளில் சில தவறுகள் இருப்பின், புதினம் அச்செய்தியினை திருத்தம் என்று அறிவிப்புடன் செய்தியைச் சரி செய்து இணைக்கிறது. ஆனால் யாழில் இணைத்தவர்கள் அச்செய்தியினை திருத்தம் செய்வதில்லை. உடனே சில உறுப்பினர்கள் புதினம் மீது வசை பாடத் தொடங்குவார்கள். இதனால் தான் புதினம் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்புகிறது.

அஜீவன் அவர்கள் சிங்கள ஊடகங்களில் வரும் பல புதிய செய்திகளையும், மற்றைய ஊடகங்களில் வரமுன் பல புதிய செய்திகளைத் தொடர்ந்து தருபவர். தொடர்ந்து எங்களுக்கு இப்படியான செய்திகளைத் தர வேண்டும்.

கந்தப்பு அவர்களின் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும் பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இல்லை. :rolleyes:

தானியங்கியாக மற்றைய இணையங்கள் செய்திகளை தந்தால் யாழில் நியூஸ்பொட் போல இன்னொரு கருத்துக்கள உறவு உருவாக்கப்பட்டு கருத்துக்கள் தானியங்கியாக இணைக்கப்படும் என்று நிருவாகம் கூறி இருந்ததா?

நிற்க...

சிலவேளைகளில் குறிப்பிட்ட செய்தி அஜீவன் அண்ணா அவர்களின் தளத்தில் புதினத்திற்கு முன்னமே பிரசுரிக்கப்பட்டு இருக்கலாம். எனினும், புதினம் மூலம் தானியங்கியாக செய்திவருவதால் அஜீவன் அண்ணாவின் செய்தி அஜீவன் அண்ணா மூலம் பதியப்படும்போது பின்னுக்கு வந்து இருக்கலாம்.

அப்பிடி எண்டால் அஜீவன் அண்ணா நீங்களும் RSS FEEDS ஐ கொடுக்கலாமே? பதிவு, சங்கதி இவற்றின் மூலம் RSS FEEDS பெறப்படுமாயின் இவற்றின் செய்திகளும் தானியங்கியாக இணைக்கப்படும் என்று கந்தப்பு அவர்கள் கூறுகின்றாரா? :rolleyes:

அஜீவன் அண்ணாவிற்கு செய்தி அனுப்புபவர்களுக்கும்தான் உயிராபத்து இருக்கின்றது. புதினத்தின் செய்தியாளர்களுக்கு மாத்திரம் இல்லை இந்த ஆபத்து. அண்மையில் யாழில் கொடூரமாக கொல்லப்பட்டவர் சக்தி/சிரச செய்தியாளர் என்பதை நீங்கள் கண்டுகொள்ள வேண்டும்.

இப்போது புதினத்தின் செய்திகள் முழுமையாக இணைக்கப்படுகின்றது. இது பல வாசர்களிற்கு இலகுவாக இருக்கும்.

அடிப்படையில் எனது கேள்வி..

யாழ் இணையம் கருத்தாடல் தளமா அல்லது செய்தி சேவையா?

மற்றவர்களின் செய்திகளை ஒட்டும் இணையம் செய்தி சேவையாக இருக்கமுடியுமா?

கருத்துக்கள உறவுகளின் கருத்தாடல்களே யாழ் இணையத்திற்கு அடிப்படை என்று நான் நினைக்கின்றேன். கருத்துக்கள உறவுகள் கருத்தாடல் செய்வதற்காகவே புதினம், பதிவு, வீரகேசரி மற்றும் இன்னோரன்ன இணையங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைக்கப்படுகின்றன என நான் நினைக்கின்றேன்.

அவ்வாறு இல்லாதுவிடின்,

ஊர்ப்புதினத்தில் பிரசுரிக்கப்படும் செய்திகளிற்கு கள உறவுகள் பதில் கருத்துக்கள் எழுதக்கூடிய வசதியை நிறுத்திவிடலாமே?

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எண்டால் அஜீவன் அண்ணா நீங்களும் RSS FEEDS ஐ கொடுக்கலாமே? பதிவு, சங்கதி இவற்றின் மூலம் RSS FEEDS பெறப்படுமாயின் இவற்றின் செய்திகளும் தானியங்கியாக இணைக்கப்படும் என்று கந்தப்பு அவர்கள் கூறுகின்றாரா? :lol:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=342164

ஊ.....தமிழர்கள் உட்புகுந்துவிட்டர்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவா

உங்களின் நோக்கம் என்ன என்று புரிந்து கொள்ளமுடியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு, சங்கதி இவற்றின் மூலம் RSS FEEDS பெறப்படுமாயின்

பதிவு சங்கதி போன்றவற்றுக்கு RSS feed உருவாக்கச் சொல்லி முதலில் அவர்களை சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.