Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணேசரும் சிவபெருமானும் ஒருவரே

Featured Replies

கணேசரும் சிவபெருமானும் ஒருவரே

தேவர்களை வருத்திய நஞ்சை அடக்கி இடரை நீக்கிய மகேசுரமூர்த்தியின் திருவருளாகிய திருக்கண்டத்தினின்றும், பிரதம சிருட்டியாரம்பத்தில் அடியார்களுடைய இடரை நீக்குங் காரணமாக, விநாயகக் கடவுள் தோன்றியருளினாரென வாதுளாகமம் கூறுகின்றது, அவர் யானை முகத்தையும், மூன்று திருக்கண்களையும், ஐந்து திருக்கரங்களையும், அவைகளில் தந்தம், பாசம், அங்குசம், பண்ணியமாகிய இவைகளைத் தரித்தவராயும், கிம்புரிப்பூணணிந்த ஒற்றைத்தந்தத்தையும், இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி யென்னும் மும்மதத்தையும், இரண்டு திருவடிகளையும் உடையவராய் இருந்தருளுகின்றனர்.

கயமுக சம்மாரத்தின் பொருட்டு முரிக்கப்பட்டதாகிய ஒரு கொம்பை ஏந்தியருளியது, மும்மலங்களையும் நீக்கியருளுபவர்தா மென்பதை அறிவித்தற்காகும். ஆன்மாக்களை அநாதியே பந்தித்த ஆணவ மலமாகிய யானையைப் பாசத்தாற் கட்டி, அங்குசத் தாலடக்கி, மறைத்தலென்னுங் கிருத்தியத்தைச் செய்பவர் என்பதை உணர்த்துவதற்காகப் பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியருளினார்,

ஆணவத்தை நீக்கி ஆன்மாவை அடிமை கொள்ளுபவர் என்பது, ஆணவ ரூபமாகிய கயமுகனுடைய சேனைகளைப் பாசத்தாற் கட்டி, அங்குசத்தாலடக்கிம் அவன் மலவலி கெட்டுப் பெருச்சாளி ரூபமாகவர, நீங்காத ஞானத்தைக் கொடுத்துச் சுத்தனாக்கி, வாகனமாம் பேற்றைஅளித்து, அடிமை கொண்ட சரித்திரத்தாலினிது விளங்கும்,

Lord-Ganesha--Shiva.jpg

  • தொடங்கியவர்

தணிகைப் புராணம்

கண்ணிலாணவ வெங்கிரிபிணித் தடக்கிக்

கரிசினேற் கிருகையுமாக்கு

மண்ணலைத்தணிகைவரைவள ராபற்

சகாயனையகந்தழீஇக்களிபாம்

பேரின்பத்தைக் கொடுப்பதாகிய அத்துவிதமுத்தி யினியல்பை, விந்துநாததத்துவங்களின் வடிவமைந்த துதிக்கை இனிது விளக்குகின்றது.

அடியார்கள் பசுஞானத்தைக் கவளமாக்கி ஒப்பிக்க, அதனையுண்டு, திருவயிற்றினுள்ளாக வடக்கிச், சிவஞானத்தைக் கொடுப்பவர் தாமென்பதை உணர்த்துதல் காரணமாகக், கவளவுணவாகிய மோதகத்தை ஏந்தினர்.

  • தொடங்கியவர்

ShivaGanesh.jpg

கடவுள் ஒருவர் எண்டுதானே சொல்லிறீனம் ஆறுமுக சுவாமிகள்? அப்ப கணேசரும் சிவபெருமான் மாத்திரம் இல்ல.. மிச்சம் யேசு அல்லா புத்தன் பரமபிதா ... இப்பிடி எல்லாரும் ஒருவராத்தான் இருக்கவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் ஒருவர் எண்டுதானே சொல்லிறீனம் ஆறுமுக சுவாமிகள்? அப்ப கணேசரும் சிவபெருமான் மாத்திரம் இல்ல.. மிச்சம் யேசு அல்லா புத்தன் பரமபிதா ... இப்பிடி எல்லாரும் ஒருவராத்தான் இருக்கவேணும்.

ஓமோம் கலைஞா,

அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு" என்று மிகச் சுலபமாகச் சொன்னார்கள் எங்கள் முன்னோர்கள்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்"

அன்பே கடவுள் ! கடவுளுக்கு சூடம் ஏற்றிப்போட்டு சொல்லால் சுடுபவர்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போறதில்லை.

நாவலர் அவர்களே உங்கள் கருத்துக்கள் நன்று. படங்கள் மிக அருமை. அழகு

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 10ம் வகுப்பு வரை கணேசர் வேறு, சிவன் வேறு என்று தான் படித்தோம். இப்போ நாவலர் வந்து பாடத்திட்டத்தையே மாற்றிவிட்டார். :lol::lol:

இவர் தான் கணேசா என்று தான் சொல்ல கேள்வி.

hindugod_ganesh1.jpg

இவர் தான் கடவுள் சிவன் என்றும் படித்திருக்கிறோம். நாவலர் நல்லா குழம்பீட்டார் போல இருக்கு.

shiva.2.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதியும் அந்தமும் பற்றி தெரிந்தவர்கள் அதிகப்பிரசங்கம் செய்ய மாட்டார்கள்.

  • தொடங்கியவர்

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே தொடர்ந்து படியுங்கள். முரளி நண்பரே! கடவுளும் சிவனும் என்று ஒரு கட்டுரை விரைவில் தருகிறேன். தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.

  • தொடங்கியவர்

திருவிளையாடற் புராணம்

உள்ளமெனுங்கூடத்திலூக்க மெனுந்

தறிநிறுவியுறுதியாகத்

தள்ளரியவன் பென்னுந்தொடர்பூட்டி

யிடைப்படுத்தித் தறுகட்பாசக்

கள்ளவினைப்பசுபோதக் கவளமிடக்

களித்துண்டு கருணையென்னும்

வெள்ளமதம் பொழிசித்திவேழத்தை

நினைந்துவருவினைகடீர்ப்பாம்.

இக்கடவுளே ஐயமற்ற பொருளாயுள்ளவரும், அறுவகைச் சமயத்தாராலுந் துணியப்படும் பொருளாயுள்ளவரும், ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியமென்னும் ஆறு குணங்களையுடையவரும், அனாதி போதம், சர்வஞ்ஞத்துவம், திருப்தி, அலுப்தசத்தி, அநந்தசத்தி, சுவதந்திரம் என்னும் சுத்த குணங்களாறு முடையவரும், பஞ்சகிருத்திய பதியாயுள்ளவரும் என்று பெரியோர் கூறுவர்.

சிவபெருமான் பஞ்சகிருத்தியபதிதா மென்பதை ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களினாலும் உணர்த்துதல் போல, விநாயகக் கடவுளும் துதிக்கை முதலிய ஐந்துதிருக் கரங்களினாலும் உணர்த்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

SHIVA. (Sanskrit: "Auspicious One") Shiva is not only the destroyer but the creator--the meeting point between all opposite forces--the forces of good and evil, life and death. In the depiction above, Shiva is shown in his family manifestions-- with wife Parvati and son Ganesha. In his matted hair, whose locks flow like Ganges River, there is the crescent moon, signifying control over time (or the cup of immortal fluid). According to legend, Shiva brought the Ganges River to earth by allowing her to trickle through his hair. Also depicted are symbols associated with Shiva: the trident (trishul), the coiled serpent (keeper of life energy, associated with water), the lingam (stone phallus associated with energy--Shiva's fundamental phallic form), and a body covered with ashes. The object in the center of the forhead, sometimes shown as a jewel, is the third eye--knowledge and wisdom; the drop or power-point suggests the invisible or vanishing Center, the absolute Reality.

From the Encyclopaedia Britannica: Shiva "unfolds the universe out of the drum held in one of his right hands; he preserves it by uplifting his other right hand in abhaya-mudra; he reabsorbs it with his upper left hand, which bears a tongue of flame; his transcendental essence is hidden behind the garb of apparitions, and grace is bestowed and release made visible by the foot that is held aloft and to which the hands are made to point; and the other foot, planted on the ground, gives an abode to the tired souls struggling in samsara."

The main goal of devotees of Shiva is to free the soul from the bonds which tie the individual to mortal human existence. Through yoga, ascetic practices including acts of penance, and renunciation of wordliness--followers of Shiva try to achieve shivata--that is, to acquire the nature of Shiva. The three horizontal bars on their foreheads symbolize Shiva's nature. His third eye shows inward vision, and has the power of burning destruction when focused outward.

In the Mahabharata, Shiva is represented with his trishul as the divine Yogi in his ascetic form, isolated inmeditation in the Himalayas where Arjuna meets him during his own ascetic retreat. Here, Shiva manifests as the Divine hunter, in command of time, life, and death. He is called by one of his many names, Pashupati ("Lord of Beasts")

As the cosmic dancer (Nataraja), symbolizing the rhythmic energy of the universe, Shiva is depicted encirled by a circle of fire performing the dance of life and death, creation and destruction.

Shiva "is one of the most complex gods of India, embodying seemingly contradictory qualities. He is both the destroyer and the restorer, the great ascetic and the symbol of sensuality, the benevolent herdsman of souls and the wrathful avenger. Though some of the combinations of roles may be explained by Shiva's identification with earlier mythological figures, they also arise from a tendency in Hinduism to combine complementary qualities in a single ambiguous figure." (Encyclopaedia Britannica)

The Festival of Shivaratri, in March, honors Shiva.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

GANESHA. Depicted with elephant's head on a human body, Ganesha is the son of Shiva and Parvati. According to legend, The Mahabharata--the story of the human race (the Bharat, or people of south Asia) was written down by Ganesha, the god of writing and beginnings. Also known as Ganapati among other names, Ganesha is the Hindu deity of wisdom as well as writing and beginnings. Ganesha is the scribe to whom Vyasa (compiler of The Mahabharata, and sometimes narrator and vital participant) is telling the story. Lord of Multitudes, Remover of Obstacles. (See this Ganesha Website.)

According to legend, Ganesha was born while his father Shiva was away on a hunting trip. As in many stories from the heroic or mythical age, Ganesha was born full-grown, and he was protecting his mother when his father returned. Finding this stranger near his wife's bath, Shive promptly beheaded him. When Shiva discovered that he had in fact beheaded his own son, Shiva promised Parvati to restore his head with the first head he encountered. Unfortunately, the first creature Shiva beheld was an elephant.

In addition to his elephant's head, Ganesha is depicted with four hands in which he carries a rope (to carry devotees to the truth), an axe (to cut devotees' attachments to wordly things), and a sweet dessert ball -laddoo- (to reward devotees for spiritual activity). His fourth hand's palm is always extended to bless people. His elephant-like head and the quick moving tiny mouse vehicle suggest his tremendous wisdom, intelligence, and acumen.

Ganesh Chaturthi in September is a festival celebrating Ganesha's birthday.

http://www.miracosta.edu/home/gfloren/shivaparvati.htm

  • தொடங்கியவர்

கணேசரும் சிவபெருமானும் ஒருவரே என்பது தத்துவ ரீதியாக கூறப்பட்டது. தொடர்ந்து படியுங்கள் புரியும் நண்பரே!

  • தொடங்கியவர்

கந்தபுராணம்

காப்பவனருளுமேலோன் கண்ணகன்

ஞாலம் யாவும்

தீப்பவனேனைச் செய்கை செய்திடு

மவனு நீயே

யேப்படுஞ் செய்கை யென்னவெம

துளம்வெதும்பு மின்ன

னீப்பது கருதியன்றோ நீயருள்

வடிவங் கொண்டாய்.

  • தொடங்கியவர்

அவன், அவள், அதுவாய் இருக்கும் உலகத்திலேயுள்ள உயர்திணைப் பொருளும் அ·றிணைப் பொருளும் தம்மிடத்திலே தோன்றி யொடுங்குகின்றமையைச் சிவலிங்கத்தினுடைய நபுஞ்சக லிங்கமாகிய பிரமபாகத்தாலும், ஸ்திரீலிங்க மாகிய விட்டுணுபாகத்தாலும், புல்லிங்கமாகிய உருத்திர பாகத்தாலும் சிவபெருமான் உணர்த்துவதுபோல, இவரும் கொம்புள்ளதனால் ஆண்போலிருக்கும் ஒரு பாகத்தாலும், கொம்பின்மையால் பிடி போலிருக்கும் ஒரு பாகத்தாலும், இரண்டுங் கூடினமையால் அலிபோலிருக்கும் உருவத்தாலும் உணர்த்துதலானும் சிவபெருமான் கொண்ட உருவத்திருமேனி இருபத்தைந்தனுள் ஒன்றாகிய அர்த்த நாரீசுவர வடிவம் போல இவருடைய திருவுருவமும் பொருந்துதலாலும், பிரணவ வடிவமாகச் சிவலிங்கம் அமைந்திருத்தல் போல, விநாயகக் கடவுளுடைய திருமுகமும் பிரணவ வடிவமாய் அமைந்திருத்தலானும், விந்து தத்துவத்தைக் குறிக்கும் ஆவுடையாள் வட்டவடிவமாகவும் நாத தத்துவத்தைக் குறிக்கும் துதிக்கையின் நுதிவட்ட வடிவமாகவும், நாத தத்துவத்தைக் குறிக்கும் மேற்பாகம் நீண்ட வடிவமாகவும் இருத்தலானும் சிவபெருமான் ஞானமே உருவமாகப் பொருந்தியிருத்தல் போல, இவருஞ் சுத்தஞானமே உருவமாகப் பொருந்தியிருத்தலாலும், சிவபெருமான் ஞானாசாரியராயிருந்து உண்மைப் பொருளை யுபதேசித்தது போல, இவரும் நம்பியாண்டார் நம்பிக்குப் பரமாசாரியராயிருந்து ஞாநோபதேசஞ் செய்தமையாலும், பிறவாற்றாலும் சிவபெருமானும் விநாயகரும் ஒருவரே யென்பது நன்கு விளங்குகின்றமை காண்க.

  • தொடங்கியவர்

398376556_0804b23684.jpg

அர்த்த நாரீசுவரர்

VinayagarART011.jpg

விநாயகர்

shiva_linga_eh85sm.jpg

சிவலிங்கம்

  • தொடங்கியவர்

கூர்மபுரணம்

வெண்ணிலாக்கற்றை கான்றுவிளங்குமோர் பிறைக் கோடின்றி

யெண்ணிவோர் பாகங்கூந்தற் பிடியென விருந்தவாற்றாற்

பெண்ணொருபாகம் வைத்த பிஞ்ஞகனுருவு காட்டு

மண்ணலங் களிநல்யானேயடி மலர் சென்னி சேர்ப்பாம்.

  • தொடங்கியவர்

திருமுறைகண்ட புராணம்

எந்தையே......

சந்தமறைமுதற்கலைக நீயே யோதித்

தரல்வேண்டுமென வேழமுகத் தோன்றானு

மந்தமறவோது விக்கவோதி நம்பி மகிழ்ந்தனன்......

  • தொடங்கியவர்

சூதசங்கிதை,

உயர்தினையும·றினையும் படைத்தளித்துத்

துடைக்கு முதலொருதானே யென்

றயர்வறவெத்தகையோரு மறிந்துய்யத்

தெரிக்குமடையாள மேய்ப்பப்

பெயர்கொளுயர் திணையும·றிணையும்

விரவிய வுருவிற் பிறங்குவாணை

மயர்வடியவர்க்க கற்று மொருமருப்பானை

விநாயகனை வணங்குவாமால்.

---------ச.குமாரசுவாமிக் குருக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் அவர்களே,கணேசரும் சிவபெருமானும் ஒருவரே என புது அர்த்தம் கற்பிக்க முனைகிறீர்கள்.

  • தொடங்கியவர்

தத்துவ ரீதியாக இருவரும் ஒருவரே!

பிறப்பு இறப்பு என்பது சிவபெருமானுக்கும் கிடையாது! கணேசருக்கும் கிடையாது!!

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவ ரீதியாக இருவரும் ஒருவரே!

பிறப்பு இறப்பு என்பது சிவபெருமானுக்கும் கிடையாது! கணேசருக்கும் கிடையாது!!

மேலும் விளக்கம் தாருங்கள்,நாவலர் அவர்களே.

பிள்ளையார் தோற்றம்

மரகத முனிவர்னு ஒரு முனிவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது.

அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.

திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள" வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார்.

http://www.mazhalaigal.com/religion/mythol...s_pillaiyar.php

இப்படி பார்க்கும் போது பிள்ளையார் மட்டும் இல்லை, முருகனும் சிவனும் ஒன்று என்றும் சொல்லலாம் தானே. ( முருகனும் சூரர்களை அழிப்பதர்க்காக உருவாக்க பட்ட சிவனின் சக்தி தானே )

Edited by Kavarimaan

  • தொடங்கியவர்

நல்ல விளக்கங்கள் கவரிமான் அவர்களே! ஆம் தத்துவ ரீதியாக முருகனும் சிவனும் ஒன்று தான்.

நுணவிளன் அவர்களே! கீழே உள்ள விளக்கங்கள் தங்களுக்கு சிறிது சைவ சமயத்தைப் பற்றி புரிய உதவும்.

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின்

சைவ வினா விடை

முதல் புத்தகம்

1. கடவுள் இயல்

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?

திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?

சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.

இரண்டாம் சைவ வினா விடை

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.

15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.

18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமா�� �க் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.