Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

Featured Replies

அன்பான யாழ்கள உறவுகளுக்கு,

சமீபத்தில் வெளியான " குருவி" திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் அது தொடர்பான நகைச்சுவை விமர்சனம்( கலைஞர் அவர்கள் விமர்சித்திருந்தால்) ஆகியவற்றை இந்திய தமிழ் இணையத்தளம் ஒன்றில் படித்தேன்.(உலாவிய தளம் ஞாபகமில்லை மன்னிக்கவும்) ...............

அவ் விமர்சனங்களை முறையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன் தமிழன்பன்.

உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.

இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.

தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.

கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள் (மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.

படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

kuruviga7.jpg

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.

குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.

குருவி மூன்றெழுத்து

விஜய் மூன்றெழுத்து

தரணி மூன்றெழுத்து

திரிசா மூன்றெழுத்து

சுமன் மூன்றெழுத்து

விவேக் மூன்றெழுத்து

மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !

"குருவி" - படம் பற்றிய ஆரோக்கியமான அலசல்

குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள்.ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

* படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல.

ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

* எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்.. டிரெயினு . இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

* செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.

* மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

* இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

* பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

* நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

* ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

* இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

* தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

* தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

* கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

* இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

* காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

* இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

* எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!! இளைய தளபதி புகழ் ஓங்குக!! நல்லாயிருங்க!!

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட கேவலமாக ஒரு படத்தை விமர்சனம் பண்ண முடியாது..

முரளி கவனிக்கவும்.

கல்லெறி நமக்கு மட்டுமல்ல....எல்லோருக்கும் பொதுவானது......

செம கடி, எல்லா வலைப்பூக்களிலும் குருவியை சுட்டு தள்ளிவிட்டார்கள்

இதை விட கேவலமாக ஒரு படத்தை விமர்சனம் பண்ண முடியாது..

முரளி கவனிக்கவும்.

கல்லெறி நமக்கு மட்டுமல்ல....எல்லோருக்கும் பொதுவானது......

அவர்கள் திருப்பி கல்லெறிவர்களா?

இந்த பைத்தியக்காரனை வைத்து கில்லி, திருப்பாச்சி, அழகியதமிழ் மகன் என்று குப்பைத்தமிழ்ப்பட்ங்களை எடுத்துக்கொண்டிருப்பார்கள். இளைய தளபதி மண்ணாங்கட்டி.. இவனை திரை உலகத்தால் துரத்த வேண்டும். இவனது எல்லாப் படங்களையும் கலந்து பார்த்தாலும் வித்தியாசம் தெரியாது. கிராபிக்ஸ் மூலம் சண்டை பிடிப்பதுதான் நடிப்பா?

ரஜனியின் நடிப்புத் திறனுக்கு முள்ளும் மலரும், எங்கேயொ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி, அபூர்வ ராகங்கள் சாட்சி

கமலுக்கு நாயகனே போதும்

சூர்யாவுக்கு காக்க காக்க

விக்கிரமுக்கு காசி மாதிரி பல

பிரசாந்த்துக்கு கூட தமிழ் இருக்கிறது.

இந்தக் செம்பட்டைக்குரங்கனுக்கு ஒன்றும் இல்லை.. காதலுக்கு மரியாதை கதையால் தப்பியது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் திருப்பி கல்லெறிவர்களா?

இந்த பைத்தியக்காரனை வைத்து கில்லி, திருப்பாச்சி, அழகியதமிழ் மகன் என்று குப்பைத்தமிழ்ப்பட்ங்களை எடுத்துக்கொண்டிருப்பார்கள். இளைய தளபதி மண்ணாங்கட்டி.. இவனை திரை உலகத்தால் துரத்த வேண்டும். இவனது எல்லாப் படங்களையும் கலந்து பார்த்தாலும் வித்தியாசம் தெரியாது. கிராபிக்ஸ் மூலம் சண்டை பிடிப்பதுதான் நடிப்பா?

ரஜனியின் நடிப்புத் திறனுக்கு முள்ளும் மலரும், எங்கேயொ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி, அபூர்வ ராகங்கள் சாட்சி

கமலுக்கு நாயகனே போதும்

சூர்யாவுக்கு காக்க காக்க

விக்கிரமுக்கு காசி மாதிரி பல

பிரசாந்த்துக்கு கூட தமிழ் இருக்கிறது.

இந்தக் செம்பட்டைக்குரங்கனுக்கு ஒன்றும் இல்லை.. காதலுக்கு மரியாதை கதையால் தப்பியது..

ஏன் இந்த கொலை வெறி....பொன்னியின்செல்வன்.???

செம்பட்டைக் குரங்கனா :wub::wub::wub: ஏன் இப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: விஜய்க்கு நடிக்கத் தெரியுமா? அவரின் படங்கள் எல்லாமே ஒரேமாதிரித்தான். டப்பாங்குத்தும், நக்கலும் இல்லாமவிட்டால் தியேட்டரில ஈ மெய்க்கும்.

இந்த லட்சணத்தில கமல் ரஜனி என்று ஒப்பிட்டும் வேறு பார்க்கிறார்கள். இன்றைக்கு தமிழில் நடிக்கக் கூடிய நடிகர்கள் பட்டியலில் முதலில் வருபவர் விக்ரம், பின்னர் சூர்யா, ஜெயம் ரவி, பரத்..என்று நீள்கிறது. இந்த பட்டியலின் பின்புறத்தில்கூட விஜயின் பெயர் வராது.

:lol: விஜய்க்கு நடிக்கத் தெரியுமா? அவரின் படங்கள் எல்லாமே ஒரேமாதிரித்தான். டப்பாங்குத்தும், நக்கலும் இல்லாமவிட்டால் தியேட்டரில ஈ மெய்க்கும்.

இந்த லட்சணத்தில கமல் ரஜனி என்று ஒப்பிட்டும் வேறு பார்க்கிறார்கள். இன்றைக்கு தமிழில் நடிக்கக் கூடிய நடிகர்கள் பட்டியலில் முதலில் வருபவர் விக்ரம், பின்னர் சூர்யா, ஜெயம் ரவி, பரத்..என்று நீள்கிறது. இந்த பட்டியலின் பின்புறத்தில்கூட விஜயின் பெயர் வராது.

சரியாகச்சொன்னீர்கள் ரகுநாதன்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் செம்பட்டைக்குரங்கனுக்கு ஒன்றும் இல்லை

புதுவித இனக்குரங்காய் இருக்கே ?? இப்பதான் கேள்விப்படுகிறன். :lol::unsure:

இந்தக் செம்பட்டைக்குரங்கனுக்கு ஒன்றும் இல்லை.. காதலுக்கு மரியாதை கதையால் தப்பியது..

கீ கீ அம்மனாமாக் நின்று கொண்டு கோவனத்தோடு இருப்பவனை பார்த்து நக்கலா?

காதலுக்கு மரியாதை படம் வென்றதுக்கு கதை தான் காரனம் என்றால் குருவி தோற்றதுக்கும் கதை தானே காரணம்?

ரஜனிக்கு எப்படி முல்லும் மலருமோ அப்படி தான் விஜய்க்கு காதலுக்கு மரியாதை. லவ்ருடேய், பூவே உனக்காக.

துள்ளாத மனமும் தூள்ளும். பிரியமானவளே.

வென்னை ஒரு படம் வெல்லும் போது கதை தான் முக்கிய காரணம் என்ரால் மற்ற படம் தோக்கும் போது மட்டும் கதாநாயகனா காரனம்?

கேக்கிறவன் யாழ்கள கருத்தாளன் என்ரால் கண்ட கண்ட நாய் எல்லாம் ஊளையிடுமாம்

புதுவித இனக்குரங்காய் இருக்கே ?? இப்பதான் கேள்விப்படுகிறன். :o:o

உண்மையாவே, ஒண்டு மட்டும் விளங்குது நீங்க என்னை காணவில்லை எண்டும் :D மற்றது நீங்க கண்ணாடியில முகத்தை பார்க்கிறதில்ல என்பது :o ..(அட நான் பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ).. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாவே, ஒண்டு மட்டும் விளங்குது நீங்க என்னை காணவில்லை எண்டும் :unsure: மற்றது நீங்க கண்ணாடியில முகத்தை பார்க்கிறதில்ல என்பது :unsure: ..(அட நான் பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

தன்னைத் தானே ... அடிக்கிறத இன்றுதான் முதற்தடவையா காணுகிறேன். ; D

@ வினித்,

கேட்டீங்களே ஒரு கேள்வி பாருங்க... ^^

Edited by Tigerblade

தன்னைத் தானே ... அடிக்கிறத இன்றுதான் முதற்தடவையா காணுகிறேன். ; D

அட...எல்லாம் முற்பாதுகாப்பு காரணம் யாரும் அடிக்க முன்னம் நாமளே அடித்திட்டா பிறகு அடிக்க ஏலாது அல்லோ :rolleyes: ..நலமா அண்ணா??..தமீழீழ புகைபடங்களின் புதிய வரவை காணவில்லை.. :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

..... இன்றைக்கு தமிழில் நடிக்கக் கூடிய நடிகர்கள் பட்டியலில் முதலில் வருபவர் விக்ரம், பின்னர் சூர்யா, ஜெயம் ரவி, பரத்..என்று நீள்கிறது. இந்த பட்டியலின் பின்புறத்தில்கூட விஜயின் பெயர் வராது.

என்னடா செல்லம்!... நம்ம பிரகாஸ்ராஜை தவற விட்டுட்டீங்க?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட...எல்லாம் முற்பாதுகாப்பு காரணம் யாரும் அடிக்க முன்னம் நாமளே அடித்திட்டா பிறகு அடிக்க ஏலாது அல்லோ :D ..நலமா அண்ணா??..தமீழீழ புகைபடங்களின் புதிய வரவை காணவில்லை.. :D

அப்ப நான் வரட்டா!!

நல்லாத்தான் சமாளிக்கிறீங்கள். :D

நான் நலம், நீங்கள்? புதிய புகைப்படங்கள் நேரமின்மையால் இணைக்கமுடியவில்லை, வந்து செய்திகளை (ஊர்ப்புதினங்களை) வாசிக்கவே நேரம் போகிடும். ^^

நல்லாத்தான் சமாளிக்கிறீங்கள். :wub:

நான் நலம், நீங்கள்? புதிய புகைப்படங்கள் நேரமின்மையால் இணைக்கமுடியவில்லை, வந்து செய்திகளை (ஊர்ப்புதினங்களை) வாசிக்கவே நேரம் போகிடும். ^^

அட.."சமாளிப்பு" கூடவே பிறந்ததாக்கும்.. :)

நானும் நலம் நன்றி அண்ணா..புதின தரிசனத்துடன் நிற்காம கொஞ்சம் அங்கால இங்காலையும் வாங்கோ அண்ணா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.."சமாளிப்பு" கூடவே பிறந்ததாக்கும்.. :)

நானும் நலம் நன்றி அண்ணா..புதின தரிசனத்துடன் நிற்காம கொஞ்சம் அங்கால இங்காலையும் வாங்கோ அண்ணா... :wub:

அப்ப நான் வரட்டா!!

உங்களைப் போல எல்லோருக்கும் இந்தத் "திறமை"(?) கூடவே பிறந்திருக்காது. :rolleyes:

Edited by Tigerblade

உங்களைப் போல எல்லோருக்கும் இந்தத் "திறமை"(?) கூடவே பிறந்திருக்காது. :rolleyes:

என்ன இருந்தாலும் உப்படி எல்லாம் என்னை புகழ கூடாது சொல்லிட்டன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

அன்பான யாழ்கள உறவுகளுக்கு,

சமீபத்தில் வெளியான " குருவி" திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் அது தொடர்பான நகைச்சுவை விமர்சனம்( கலைஞர் அவர்கள் விமர்சித்திருந்தால்) ஆகியவற்றை இந்திய தமிழ் இணையத்தளம் ஒன்றில் படித்தேன்.(உலாவிய தளம் ஞாபகமில்லை மன்னிக்கவும்) ...............

அவ் விமர்சனங்களை முறையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

At November 20, 2007 10:17 PM, theevu said…

//இந்த விஜய் எல்லாம் எப்பிடிங்கண்ணா ஹீரோ ஆனார்? முகத்தில் எப்பவும் ஒரு மூணு நாள் கழிச்சு கொல்லைக்கு போறவன் முக்குறா மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன்..

http://videospathy.blogspot.com/2007/11/blog-post_20.html

:rolleyes:

Edited by Ponniyinselvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.