Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் இருபது அவதாரங்கள்!

மேலும் புதிய படங்கள்குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பாடலில் 20 கெட்டப்களில் தோன்றுகிறார்.

வேட்டையராஜா டைப் மன்னர் கெட்டப், ஸ்டைலானன இளைஞர், ராபின்ஹூட், எகிப்திய மன்னர் என விதவிதமான தோற்றங்களில் ரஜினி தோன்றவுள்ளார்.

இது குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்ட போது, ரஜினி சார் ஒரு பாடலில் பல்வேறு தோற்றங்களில் நடிப்பது உண்மைதான். ஆனால் அவை என்னென்ன என்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். இன்னும் சில நாள்தானே... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...' என்றார்.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்டப் பாடலுக்காக அஜீத், விஜய், விக்ரம் ஆகிய முன்னணி இளம் நடிகர்கள் ரஜினியுடன் தோன்றப் போகிறார்கள்.

தமிழ் சினிமாவின் 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் இந்தப் பாடல் அமையும். அஜீத், விஜய், விக்ரமிடம் இதுகுறித்து இன்னும் நான் பேசவில்லை. விரைவில் அதுகுறித்த விவரங்களைத் தெரிவிப்பேன் என்றார் வாசு.

இளமை துள்ளும் ரஜினி!

வாவ்... ரஜினியா இது! இந்திய சினிமாவின் இன்றைய மார்கண்டேயன் யார் என்று கேட்டால் தயங்காமல் சொல்லலாம் அது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று. வயதை வென்ற மாபெரும் கலைஞன் என்பதை ஒவ்வொரு ஸ்டில்களிலும் நிரூபிக்கிறார்.

புதிதாக வெளியாகியுள்ள குசேலன் பட ஸ்டில்களில் அவரது ஸ்டைலும் அழகும் சொக்க வைக்கும் விதத்தில் உள்ளன. இன்னும் இருபது வயது குறைந்து சிம்பு, தனுஷ் என இன்றைய இளசுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அதிகபட்ச இளமையுடன் அசத்தலாகக் காட்சியளிக்கிறார் ரஜினி.

கே.பாலச்சந்தரின் கவிதாலயாவும் ஜி.பி.விஜயகுமாரின் செவன் ஆர்ட்ஸூம் இணைந்து தயாரிக்கும் குசேலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. டப்பிங் வேலைகளை முடித்த கையோடு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து குசேலன் ஸ்டில்களை அதிகாரப்பூர்வமாக வழங்கினார் இயக்குநர் பி.வாசு.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவின் நிகரற்ற கலைஞர்களுள் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஜினி சார் முன்னெப்போதையும் விட இப்போதுதான் இன்னும் இளமையாகத் தெரிகிறார். வயதுக்கு அப்பாற்பட்ட ஒரு அபூர்வ கலைஞன் அவர்.

ஆரம்பத்தில் சில காட்சிகளில் வருவதாகத்தான் அவரது திட்டம். ஆனால் ஸ்க்ரிப்டைப் பார்த்து கன்வின்ஸ் ஆகி முழு நீள கதாநாயகனாக வருகிறார். எடுத்து முடித்த படத்தைப் பார்த்து நான் நினைச்சதுக்கும் மேல நல்லா வந்திருக்குப்பா என்று பாராட்டினார் சூப்பர் ஸ்டார்.

அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு விஷூவல் விருந்தாக அமையப் போகிறது.

82 நாளில் சாதனை

இந்தப் படத்தை எடுத்து முடிக்க எனக்கு 82 நாட்கள் தேவைப்பட்டது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளுக்கும் சேர்த்தேதான் இந்தக் கணக்கு. ரஜினி சார், நயன்தாரா, மீனா தவிர, மற்ற எல்லா நடிகர்களும் தமிழுக்கும் தெலுங்குக்கும் மாற்றப்பட்டார்கள். மொத்தம் 33 நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் ரஜினியின் பிரமாதமான ஸ்டைல் இருக்கும். அவரது வியக்க வைக்கும் அழகு, இளமைத் தோற்றம் பெரிய பிளஸ் பாய்ண்ட். எந்த வகையிலும் குறையில்லாத பிரமாண்டமான ஒரு படைப்பு இது.

குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் வரும் ஜூன் 30 –ம் தேதி நடக்கிறது.

ரஜினி வியந்த ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. ஆரம்பத்தில் பிரகாஷைப் பார்த்த ரஜினி சார், இவரா... இவர் எப்படி இந்தப் படத்துக்கு? என நம்ப முடியாமல் கேட்டார். ஆனால் பாடல்களைக் கேட்டு முடித்ததும், ரஹ்மான் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார் பிரகாஷ் என பாராட்டினார் ரஜினி.

படத்தில் மூன்று பாடல்களில் ரஜினி தோன்றி பாடுகிறார். ஒரு பாடலில் பசுபதி மீனா வருகிறார்கள், என்றார் இயக்குநர் பி.வாசு.

தெலுங்கில் கதாநாயகடு

ஆரம்பத்தில் குசேலடு எனும் பெயரில்தான் இந்தப் படம் தெளுங்கில் தயாரானது. ஆனால் குசேலடு, பக்த குசேலடு என்றெல்லாம் அங்கே நிறைய பக்திப் படங்கள் வந்துவிட்டதால், இப்போது கதாநாயகடு என்று புதுப் பெயர் சூட்டியுள்ளனர் இப்படத்துக்கு.

தெலுங்குப் படைப்பில் ரஜினியுடன் இன்னொரு நாயகனாக திரையைப் பகிர்ந்து கொள்கிறார் ஜெகபதிபாபு.

வியக்க வைக்கும் வர்த்தகம்

ஜூலை இறுதி வாரத்தில் 1200 பிரிண்டுகளுடன் உலகமெங்கும் ரிலீசாகிறது இரு மொழிகளிலும்.

குசேலன் படத்தின் இந்திய உரிமையை பிரமிட் சாய்மிரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியிருக்கிறது. பிக் மியூசிக் நிறுவனம் ரூ.2.25 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. உலக உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி உரிமை கலைஞர் டிவிக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/movies/heroi...-20-getups.html

கத பறயும் போல் என்ற மலையாள திரைப்படத்தின் தழுவல் . முன்பு சந்திரமுகி தயாரிப்பு நடவடிக்கையின் போதும் மணிச்சித்திரத்தாள் என்ற மலையாள திரைப்படம்தான் என்று பத்திரிகைளில் செய்தி வந்தபோது இல்லையில்லை இது வித்தியாசமான கதை என்றார்கள். இறுதியில் மலையாளத்திரைப்படம் திறமையானதாக இருந்தது. தற்போது மலையாளத்திரையுலகின் பல்துறை கலைஞன் சீனிவாசனின் கத பறயும்போல் என்ற சித்திரம் தமிழில் குசேலனாக. . ம் எப்பதான் சொந்தமாக யோசிக்கப்போறாங்களோ தெரியலைப்பா

  • கருத்துக்கள உறவுகள்

குசேலன் பட பாடல்கள்

குசேலன் படம் பார்க்க விரும்பும் அனைத்து ரஜனி ரசிகர்களும் மறக்காமல் இப்பவே கத பறயும் போல் மலையாள திரைப்படத்தை பார்த்ததுவிடுங்கள்.

உண்மையில் குசேலன் ரஜனியின் படம் அல்ல. பசுபதிதான் கதாநாயகன். ஏன்தான் இப்படி ரஜனி படம் என்று பீலா விடுறாங்களோ தெரியலையப்பா ?

வெறும் பதினைந்து நிமிடங்களிறகாய் பல கோடி வாங்கும் உலக மோசடி நடிகன் இவராகத்தான் இருக்கும்

ரஜினி நடிப்பதற்காக கதையில் அவரின் கதாபாத்திரம் பெரிதாக்கப்பட்டுள்ளது.

இப்போது தமிழ் சினிமாவின் நிலை இதுதான். பிறமொழிகளில் வந்த படங்களை மீண்டும் எடுக்கிறார்கள். அல்லது பழைய படங்களை மீண்டும் எடுக்கிறார்கள்.

நல்ல படங்களைப் புறக்கணித்தால் இது தான் நிலைமை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசேலன் ரஜனி - புதுத்தகவல்கள்.

அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தமிழகம் ரெடி! ரஜினி ரசிகர்கள் குடம் குடமாய் பால் அபிஷேகம் பண்ண கட்அவுட்கள் செய்ய இப்போதே தயாராகிவிடலாம். என்.டி. டி.வி.யிலிருந்து `டைம்ஸ் நவ்' நார்த்இண்டியன் சேனல்களுக்கு செமத் தீனி. இப்படிப் பேசிக்கொண்டே போகலாம்.

`குசேலன்' வேடத்தில் சும்மா எஃகு மாதிரி இருக்கும் ரஜினி பற்றியும் படத்தைப் பற்றியும் இயக்குநர் பி.வாசு பேசினால் சும்மா அதிருதில்ல...

`` `கத பறையும் போள்' படத்தைப் பார்த்ததுமே மம்முட்டி பண்ணிய ரோலில் ரஜினி செய்தால் நன்றாக இருக்கும்னு நினைச்சேன். ஏன்னா அவரைத் தவிர வேறு யார் பண்ணினாலும் அது சரியா இருக்காது. யார் வேணா நடிக்கலாம். ஆனால் ரஜினிக்கும், அந்த கேரக்டருக்கும் உள்ள நெருக்கம் அவர் நிஜவாழ்க்கையிலும் இருக்கு. அவருக்கு நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ்னு பார்த்தால், ஒரு ஆறுபேர் இருக்காங்க. ஃப்ரெண்ட்ஷிப்பிற்கு அவர் கொடுக்கும் இம்பார்ட்டன்ட்தான் இந்தப் படத்தின் ஹைலைட். அவர்கள் அத்தனை பேரையும் எனக்கு நல்லாத் தெரியும். என் முன்பு ரஜினி தன் நண்பர்களிடம் பழகுவதற்கும், நான் அந்தப் பக்கம் போனபிறகு அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம், ஜாலி, கிண்டல், கேலி, எகத்தாளம், ஒருத்தரை ஒருத்தர் சீண்டி விளையாடுவது... இப்படி எல்லாத்தையும் நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான ஃப்ரெண்ட்ஷிப் அது. பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அந்த விஷயம் `குசேலன்' படத்தில் இருக்கு.

`செவன் ஆர்ட்ஸ்' என்ற மலையாள சினிமா கம்பெனியிடம்தான் `கத பறையும் போள்' நெகட்டிவ் ரைட்ஸ் இருந்தது. ரஜினி பண்ணுவது என்று முடிவானதும், அவர் `கே. பாலசந்தர் சாரையும் இதில் சேர்த்துக்கணும். செவன் ஆர்ட்ஸ் புரொடியூசருக்கு கே.பி.சாரைச் சேர்ப்பது பற்றி மாறுபட்ட கருத்தோ, முகச்சுளிப்போ இருந்தால் இந்தப் படமே வேண்டாம். எனக்கு கே.பி.சார்தான் முக்கியம்' என்று சொன்னார். அப்புறம் கே.பி.சாரிடம் கேட்டபோது, `நீ என்ன நினைக்கிறாயோ அதைப் பண்ணுப்பா. இதிலென்ன இருக்கு' என்று பெருந்தன்மையோடு சொன்னார். செவன் ஆர்ட்ஸ் இதற்கு சம்மதித்ததால்தான் `குசேலன்' ஆரம்பமானது.

பூஜை டயத்தில் ரஜினி, `நான் படம் முழுதும் வரமாட்டேன். 25 சதவிகிதம்தான் வருகிறேன்' என்றார். அப்போது அவர் மலையாளப் படத்தைப் பார்த்தாரே தவிர, `குசேல'னுக்கான ஸ்கிரிப்டில் நான் என்னென்ன பண்ணி இருக்கேன் என்பது அவருக்குத் தெரியாது. எனக்கு மட்டுமே தெரியும். அப்புறம் ஸ்கிரிப்டை சொன்னதும் `அப்படியா! அப்படியா!' என்று கேட்டு ரொம்பவும் இன்வால்வாகிவிட்டார். மலையாளத்தில் என்ன ஃபீல் இருந்ததோ அதைக் கொஞ்சமும் குறையாமல் ரஜினி கொடுத்திருக்கார். என்டர்டெயிண்மென்டுக்காக நிறைய சேஞ்சஸ் பண்ணியிருக்கேன். மலையாளத்தில் மொத்தம் மூன்று பாட்டுதான். ஆனால் இதில் ஐந்து பாட்டு. ரஜினி சம்பந்தப்பட்டது மட்டும் மூன்று பாட்டு. படம் ஓப்பனிங் ஆனதுமே ரஜினி வருவார் என்று நினைக்கலாம். ஆனால் மூன்றாவது ரீலில்தான் வருகிறார்.

அவர் வரமாட்டாரா? எப்போது வருவார் என்கிற எதிர்பார்ப்பு பரபரன்னு இருக்கும்.

நான் ரஜினியை `இளமை ஊஞ்சலாடுகிறது' படத்திற்கு டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்தபோதிலிருந்து பார்க்கிறேன். ஒரே வித்தியாசம் தலைமுடிதான். நான் அசிஸ்டென்டாக இருக்கும்போது எப்படி எழுந்து நின்று மரியாதை கொடுத்தாரோ, அதேபோல்தான் என்னுடைய அசிஸ்டென்டுக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறார். நான் என்ன நினைக்கிறேன்னா, நாளைக்கு இவர்கள் டைரக்டர்களாகப் போகிறார்கள் என்று நினைத்து மரியாதை கொடுக்கிறாரோன்னுதான் தோணுது.

ஒருநாள் ஜாலியா கேஷுவலா அவரிடம் இதைக் கேட்டேன். அதற்கு அவர், `என்னமோ தெரியலை சார், யோசிச்சோ, வேணும்னோ இதைச் செய்யறதில்லை.என் மனசுக்குள்ள எதையும் புதுசா வரவச்சிக்கிறதில்லை. நான் இயல்பா இருக்கேன். பார்ப்பவர்கள் நான் என்னவோ சிம்பிளா இருக்கேன்னு சொல்றதுதான் எனக்குப் புரியல' என்றார்.

சாயந்திரமானால் நானும் ரஜினியும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 6 கிலோ மீட்டர் வாக்கிங் போவோம். அப்போது ரஜினியிடம், `ஜெகபதிபாபு உங்களை ஃபாலோ பண்ணப் போகிறாராம்' என்றேன். உடனே ரஜினி, `அப்படியா சொன்னார்' என்று ஆச்சரியப்பட்டார். அப்போது நான் அவரிடம், `சார் எனக்கு ஒரு ஆசை. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே! பேசாமல் எல்லா நடிகரோடும் நீங்க நடிச்சிடுங்களேன்' என்றேன். அதற்கு அவர், `எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றதும், நான், `எல்லோரும் ஜெகபதிபாபு மாதிரியே மாறிடுவாங்களே,ஏன்னா எல்லோருமே எங்கோ உயரத்திலிருக்கிற மாதிரி மிதமிஞ்சிய மிதப்பில் இருக்காங்க. ஒரு டைரக்டரைப் பார்த்தால் அவங்க பேசறதும், நடந்துக்கிறதும் எல்லாமே செயற்கைத்தனமாக இருக்கு. இதை அவங்க முகத்தைப் பார்த்தாலே தெரியும்' என்றேன். பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தார். காரணம் அதுதான் ரஜினி'' என்று முடித்தார் பி.வாசு..

- சந்துரு

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-07-02/pg4.php

அப்ப ரஜனி மாமா கொஞ்ச நேரத்திற்கு தான் குசேலன் படத்தில வருவாரா.. :lol: (என்ன கொடுமை இது)..சா..சா என்னால இப்படி எல்லாம் பார்க்க ஏலாது..கொஞ்ச நேரம் அவர் வந்தாலும் திரை முழு நேரமும் அதிர்கிற மாதிரி தான் வருவார் எண்டு நினைக்கிறன்.. :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எவ்வளவு நேரம் வாறம் என்பது முக்கியமல்ல எவ்வளவு செய்தோம் என்பது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.