Jump to content

முரண்பாடு...


Recommended Posts

பதியப்பட்டது

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னுடன் கதைத்த விடயம் ஒன்றை இணைக்கிறேன்

இதனது தொடர்ச்சியினை எழுதுவது கள உறவுகளின் பொறுப்பு..

அவர்:-தம்பி உவங்கள் சரி வரமாட்டாங்கள்

தமிழ்ச்செல்வம்,பால்ராஜ் எண்டு பெரிய தலை எல்லாம் போகுது.. உவங்களால ஏலாது போல கிடக்கு...

ஒன்றில் அடிக்கிறதென்டா அடிக்கவேணும் அல்லது சும்மா இருக்க வேணும்..

நான்:- சரி அண்ணா போன மாவீரர் தினத்திட்கு வந்தனீங்களோ

அவர்:- இல்லைத்தம்பி மனிசிக்கு வேலை.. மகளை கூட்டிக்கொண்டுவர பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்ததெடாஅப்பு

நான்:-வாற பொங்கு தமிழ் 12 ஆம் திகதி நடக்க இருக்கு..இங்கு இருந்து மகிழூந்து என்றால் 30 நிமிடம் தானே அதுக்கு வருவீங்களோ அண்ணா...

அவர்:- அதுதான் அப்பு நானும் யோசிக்கிறேன் எத்தின நாளைக்குத்தான் இப்பிடி போறது... எனக்கு இதெல்லாம் அலுத்துப்போச்சுது..நீ போறியேடா தம்பி.. ஏன் உனக்கு வேற வேலை இல்லையே..

நான்:- (ஆம் என்று தலை ஆட்டியபடி) அண்ணா இவ்வளவு காலமும் இங்கை இருக்கிறியள் ஏதாவது உதவிகிதவி செய்யிறனீங்களோ...

அவர்:- அதை ஏன் தம்பி கேட்கிறாய்.. போன வருஷமும் என்னுடைய தம்பி 100£ குடுத்தவன்..

நானும் 1998 ஆம் ஆண்டு 50£ குடுத்தனான்..அதுக்குப் பிறகு தான் ஆனையிறவு அடிச்சவை...அதோட அப்பப்ப அந்த இந்த டிக்கடுக்களும் எடுக்கிறனான்....

அடுத்த இரண்டொரு கிழமையில வந்த அவர் சொன்னார்

அவர்:- தம்பி நேற்று மன்னாரில எங்கட பெடியங்கள் செம அடியாமென்ன.. கிடந்த ஆயுதங்களை எலாம் தூக்கிகொண்டு போயிட்டாங்களாம்... இவங்கள் எப்ப அடிப்பாங்கள் எண்டு சொல்ல ஏலாதப்பு நல்ல பலமாகத்தான் இருகிறாங்கள் போல.....

பி.கு: சில வேளைகளில் அவசரத் தேவைகளுக்காக அவரது வேலை நேரத்திட்காக நான் வேலை செய்வதுண்டு..

ஏனோ எனக்கு அவரை பிடிக்கவில்லை..நான் இப்போது அவருக்காக அப்படி செய்வதை நிறுத்தி விட்டேன்

-யாவும் நிஜம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உதயம் ........

முரண் ...உரையாடல் நன்று அதை முரண்பாடு ...என்று

எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து .

புலம் பெயர் நாடில் இப்படியும் .....இருக்கிறார்கள்

என்பதற்கு ஒரு உதாரணம் ....இது .

மேலும் உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகள்

நன்றியுடன் நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உதயம், நிஜம் சிலரது முகத்திரை கிழித்தது.இவர்களை எந்த வகையில் சேர்த்து கொள்வது.இந்திய இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கும் இவர்களை போன்றவர்களுக்கும் எத்தனை மாறுபாடுகளை காண முடியும்.

எத்தனைக்கு எத்தனை? கணக்குகளில் மட்டும் சூரப்புலிகள்.

என் பிள்ளை, என் மனைவி,என் குடும்பம் என்னோடு,

பிறகென்ன உறவவெனக்கு ஊரோடு

கந்தம்மான் மகளும் பொன்னம்மா பொடியனும் உயிரிழந்து போனாலும் போகட்டும்

வேலைவிட்டு வீடுவந்து சோபாவில் நானிருக்க

சூடாக வேண்டும்,

ஒரு கோப்பை தேதண்ணீர்

கதைக்க ஒர் ஊர்ச்செய்தி.

Posted

நன்றி சகோதரி.. நீங்கள் சொன்னதுபோல் திருத்தி உள்ளேன்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறும் 20வீத மக்களின் ஆதரவோடும்............ மகாத்தானா மாவீரர்களின் தியாகத்தாலும் ஒரு தமிழ் மறவன் (தலைவன்) சாதித்தவையே ............. ஈழதமிழன் என்றொரு இனமும் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்று உலகிற்கு எடுத்துகாட்டியதோடு அவர்களையும் பேச ஈழத்திற்கு அழைத்தது!

இந்த அடையாளத்தின் பிறப்பால் மானங்கெட்டு வாழ்வது மிகுதி 80வீதமும்.

Posted

வெளி நாட்டில நிறைய தமிழ் ஆட்கள் தாங்கள் 10 வருடத்திட்கு ஒருக்கா குடுக்கிற 50£ இல தான் யுத்தம் நடக்கிறதா நினைச்சுக்கொண்டிருக்கினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.