Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரம் இந்திய ராணுவம் இம் மாதம் 20 ம் தேதி செவ்வாய் கிழமை கொழும்புக்கு வந்திறங்க தயாராக உள்ளது

Featured Replies

தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கையில் பிரவேசிக்க உள்ள படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று செல்லவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் யூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு செல்வர்;. இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய போர்;க்ப்பலின் மூலம் பிரவேசிக்க உள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் ஐந்து நட்சத்திர விருந்தகங்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்திய படையினருக்காக இரண்டு வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு இந்திய துருப்பினரை ஏற்றி செல்லும்; கப்பல், இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுத்துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவில் இருந்தே கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கிடையி;ல் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு பாதுகாப்புக்காக அந்த நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு செல்லவுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிய தலைவருக்காக சுமார் 100 ஆப்கானிஸ்தானிய படையினர் இலங்கையில் தரையிறங்க உள்ளனர். எனினும் ஏற்கனவே வெளியாகிய இந்தத் தகவல்களை அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா மறுத்திருந்தார். வெளிநாட்டு படைகள் இலங்கையில் தரையிறங்க மாட்டார்கள் என உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

Edited by isoorya

  • கருத்துக்கள உறவுகள்
1000 பாக்கிஷ்தான் படைகள் இலங்கைக்கு வர இருப்பதாக உள்ளதாகவும்,ஆப்கானிஷ்தானிலி

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் எல்லோரையும் பாதுகாக்க நாங்கள் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு பத்தோடு பதினொன்றாக அமெரிக்க படைகளும் போய் இறங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் :icon_mrgreen::lol:

இவர்கள் எல்லோரையும் பாதுகாக்க நாங்கள் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு பத்தோடு பதினொன்றாக அமெரிக்க படைகளும் போய் இறங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் :icon_mrgreen::lol:

ஓ! உங்களுக்கு அப்படி ஒரு ஆசையும் இருக்கிறதா?!!! வேறு என்னவெல்லாம் நடந்தால் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்?!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆப்கானிஸ்தானும் சாக்கில ( சார்க் ) அங்கத்துவ நாடா ?

அப்ப அங்கிருந்து பின்லாடனும் வருவாரா ?

அங்கில் ஒசாமாவிற்கு அழைப்பு அனுப்ப மஹிந்த ஐயா பல மாதங்களாக முன்றாராம். ஆனால் அங்கில் ஒசாமாவின் சரியான முகவரி தெரியாததால் அழைப்பு அனுப்ப முடியாமல் போய் விட்டதாம். ஆகவே இம்முறை அவர் மாநாட்டுக்கு வருகைதரமாட்டார் என்று மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகிறேன். :icon_mrgreen::lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சாக்கு மகாநாட்டுக்கு வாறவர்களுக்கு யாரால பிரச்சினை? ஏன் எல்லா நாடும் துள்ளிக்குதிக்குது? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ! உங்களுக்கு அப்படி ஒரு ஆசையும் இருக்கிறதா?!!! வேறு என்னவெல்லாம் நடந்தால் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்?!!!

அதெல்லாம் பரம ரகசியமப்பா :icon_mrgreen::lol::(

அதெல்லாம் பரம ரகசியமப்பா :D:(:D

பரம இரகசியங்கள் அம்பலத்திற்கு வரும் போது பரலோகம் தெரிவதுண்டு!!! :icon_mrgreen::lol::(

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கில் ஒசாமாவிற்கு அழைப்பு அனுப்ப மஹிந்த ஐயா பல மாதங்களாக முன்றாராம். ஆனால் அங்கில் ஒசாமாவின் சரியான முகவரி தெரியாததால் அழைப்பு அனுப்ப முடியாமல் போய் விட்டதாம். ஆகவே இம்முறை அவர் மாநாட்டுக்கு வருகைதரமாட்டார் என்று மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகிறேன். :D:(:D

ஏன் நீங்கள் அங்கிளின் ராணுவ பேச்சாளரா :icon_mrgreen: ? அங்கிளின் முகவரி இதோ

5 ம் பதுங்குகுழி ,3/4 ம் மலை, தோறா போறா மலைத்தொடர் , ஆப்கனிஸ்தான் .

முக்கிய குறிப்பு : இது ரகசியம் :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சாக்கு மகாநாட்டுக்கு வாறவர்களுக்கு யாரால பிரச்சினை? ஏன் எல்லா நாடும் துள்ளிக்குதிக்குது? :icon_mrgreen:

வெள்ளை வானிலை வந்து ஈரச் சாக்குக்குள்ளை கட்டிக்கொண்டு போடுவினம் எண்டி பயப்படுகிறார்கள் போலுள்ளது .

Edited by தமிழ் சிறி

இன்னும் எத்தனையாவது சாக்கு மானாட்டில் தமிழ் ஈழம் கலந்து கொள்வது?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை வானிலை வந்து ஈரச் சாக்குக்குள்ளை கட்டிக்கொண்டு போடுவினம் எண்டி பயப்படுகிறார்கள் போலுள்ளது .

சிறி அப்ப இந்த சாக்குகளுக்கு சாக்கால்தான் பிரச்சனையா ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்மாதம் 20ந்திகதி செவ்வாய்க்கிழமை என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இம்மாதம் 20ந்திகதி ஞாயிற்றுக்கிழமையாகும்

இம்மாதம் 20ந்திகதி செவ்வாய்க்கிழமை என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இம்மாதம் 20ந்திகதி ஞாயிற்றுக்கிழமையாகும்

கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு... அது சரி எப்பவாம் அந்த சாக்கு மாநாடு?..

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அப்ப இந்த சாக்குகளுக்கு சாக்கால்தான் பிரச்சனையா ? :icon_mrgreen:

சாக்கு தான் பிரச்சினை சுப்பண்ணை .

ஆனால் அரிசிச்சாக்கா , மாச்சாக்கா , சீனிச்சாக்கா , மிளகாய்ச்சாக்கா அல்லது தவிட்டுச் சாக்கா என்றுதான் இன்னும் தெரியவில்லை . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாக்கு தான் பிரச்சினை சுப்பண்ணை .

ஆனால் அரிசிச்சாக்கா , மாச்சாக்கா , சீனிச்சாக்கா , மிளகாய்ச்சாக்கா அல்லது தவிட்டுச் சாக்கா என்றுதான் இன்னும் தெரியவில்லை . :icon_mrgreen:

உந்த ஒரு சாக்கும் இல்ல அது மண் சாக்கு சிறி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதம் 20ந்திகதி செவ்வாய்க்கிழமை என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இம்மாதம் 20ந்திகதி ஞாயிற்றுக்கிழமையாகும்

இதற்குப் பெயர்தான் , துப்பறியும் சங்கர்லால் என்று சொல்வது . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

First Indian military contingent here Tuesday

* MORE DUE LATER

* LODGED IN FIVE STAR HOTELS

By Gayan Kumara Weerasinghe

The first contingent of a three thousand strong Indian military team providing security for Indian Prime Minister Manmohan Singh and his delegation, will arrive in Colombo on Tuesday.

This first contingent is expected to be about 1000 military personnel. Another contingent is scheduled to arrive on the 20th of this month. Two Five Star hotels in Colombo have been fully booked for two weeks for the accommodation of these Indian military personnel, LAKBIMAnEWS learnt. The last batch of the Indian military personnel will arrive later this month aboard an Indian naval vessel. This vessel will be anchored in the Colombo port as long as the Indian delegation stays here. Troops aboard the ship will disembark only in an emergency, well placed defence sources said.

Earlier, the Sri Lankan government acceded to the request by India, Pakistan and Afghanistan to bring in their own troops for the protection of their VIPs. Accordingly, LAKBIMAnEWS understands that helicopters for transport of VIPs, along with bullet proof vehicles, would be sent to Sri Lanka and manned by their security personnel.

A five hundred strong contingent of Pakistani military personnel is expected to arrive with President Pervez Musharaff. The Afghan contingent is expected to be less than hundred.

அப்படி வராமாட்டார்கள் என்றார்கள். வந்தால் அவமதிப்பு என்றார்கள். என்ன நடக்கிறது அங்கே துட்டகெமுனுவின் வாரிசுகளுக்கு?

மேற்குறிப்பிட்ட ஆங்கில செய்தியின் படி முதல் பகுதி இந்திய படையினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வருகிறார்கள். (அதாவது 15.07.08 அன்று. திகதி அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. செவ்வாய்க்கிழமை என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது). மற்ற பகுதி படையினர் எதிர் வரும் 20ந்திகதி வருகிறார்கள். இப்ப கணக்கு சரி.

அப்பிடிப்பார்த்த சரிதான்

அப்பாடா இப்பத்தான் நிம்மதியப்பா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை வரவுள்ளன.

[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 04:18.55 AM GMT +05:30 ]

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கை வரவுள்ளன.

படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வரவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை வரவுள்ளன. இதில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர். இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்தியப் போர்க்ப்பலின் மூலம் வரவுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் ஐந்து நட்சத்திர விருந்தகங்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்திய படையினருக்காக இரண்டு வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்திய துருப்பினரை ஏற்றி வரும் கப்பல் இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுத்துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கிடையில் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு பாதுகாப்புக்காக அந்த நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு வரவுள்ளனர்.

அதேநேரம் ஆப்கானிஸ்தானிய தலைவருக்காக சுமார் 100 ஆப்கானிஸ்தானிய படையினர் வருகைதரவுள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b02ZLu2e

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ உவங்கள் ஏதோ சதித்திட்டம் போட்டிருக்கிற மாதிரி தெரியுது.. தலைகளுக்குப் பெரிய அச்சுறுத்தல் எல்லாம் இல்லை. ஆனாலும் சார்க் மாநாட்டுக்கு பெருமளவில் பாதுகாப்புப் படையை உபயோகிக்க வேண்டி வந்திருக்கும். அதைத் தவிர்க்க அயல் நாட்டுப் படைகளை உபயோகிக்கிறாங்கள் போல இருக்கு..! :)

  • தொடங்கியவர்

விடுதலை புலிகள் இப்போது இலகுவாக தாக்குதல் நடத்தலாம் பாக்கிஷ்தான் படை வேசத்தில்,அல்லது இந்தியப்படை வேசத்தில் அல்லது ஆப்கான் படை வேசத்தில் உள்நுளைந்து தாக்குதலை மேற்கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இதுல இந்திய இராணுவமம் பாகிஸ்தான் இராணுவமும் கொழும்மில நின்டு மோதுபட்டா சூப்பரா இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.