Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியின் முக்கிய நகரங்களை நெருங்கியிருக்கும் படை தரப்பு-வீரகேசரி சுபத்திரா

Featured Replies

மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர்,

அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர்.

இன்னொரு முனையில் வவுனிக்குளத்தின் மேற்குப் பகுதியில் 10 ச.கி.மீ பரப்பளவை கடந்த 24ஆம் திகதி கைப்பற்றியிருக்கின்றனர். 57ஆவது டிவிசன் துருப்புகள் இந்தப் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட போது புலிகள் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து விட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

இந்த மோதலில் புலிகளின் 7 சடலங்களையும் 120 மி.மீ மோட்டார் மற்றும் 81மி.மீ மோட்டார்கள் இரண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியதாகப் படைத்தரப்பு அறிவித் துள்ளது.

வவுனிக்குளத்தின் மேற்குப்புற அணைக்கட்டு மல் லாவி நகருக்கு தெற்கே சுமார் 3கி.மீ தொலைவில் உள்ள பகுதியாகும். ஏற்கனவே ஒட்டங்குளம் பகுதி யில் நிலைகொண்டிருந்த 573 பிரிகேட் படையினரே தமது கட்டுப்பாட்டுப் பகுதியை கிழக்கே மேலும் விஸ்தரித்திருக்கின்றனர்.

படையினரின் முன்னகர்வுக்கு இடமளித்து, வைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு புலிகள் பின்னகர்ந்து நெகிழ்ந்து கொடுப்பதால் படையினரால் வேகமாக முன்னேறிச் செல்ல முடிகின்றது.

தற்போது படையினர் மேற்குக் கரையில் வெள்ளாங் குளத்தையும், அங்கிருந்து கிழக்கு நோக்கிய பிரதான வீதியில் துணுக்காய், மல்லாவி பகுதிகளையும் அடுத்து மாங்குளத்தையும் இலக்கு தலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கின்ற நிலையில்,

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அதற்கு முன்னதாகவே, "இந்தக் காலப்பகுதிகளில் வன்னிப் படை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமாட்டாது. சார்க் பாதுகாப்புக்கு 2000 படையினர் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். வன்னிக் களத்திலிருந்து படையினர் எவரும் கொழும்புக்கு அழைக்கப்படவோ, படைநடவடிக்øக கள் நிறுத்தப்படவோ மாட்டாது' எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

விடத்தல்தீவை அடுத்து இலுப்பைக்கடவையையும் கைப்பற்றியுள்ள நிலையில், படையினர் தற்போது மன்னார் மாவட்டத்தின் எல் லையில் நின்று கொண்டிருக்கின்றனர். இலுப் பைக்கடவையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள வெள்ளாங்குளத்துடன் எல்லை மன்னார் மாவட்டத்தின் முடிவடைந்து கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை ஆரம்பிக்கிறது.

படையினர் விடத்தல்தீவுக்குத் தெற்கே உள்ள 12 ஆவது மைல் கல்லில் இருந்து கடந்த 15ஆம் திகதி வடக்கு நோக்கிய நக ர்வை ஆரம்பித்தனர். தற்போது 22 ஆவது மைல்கல் வரை படையினர் முன்னேறியிருக் கின்றனர். சுமார் 10 மைல் அதாவது சுமார் 16 கி.மீ தூரத்தை வேக நடையில் கடந்திருக்கின் றனர்.

தற்போது இலுப்பைக்கடவைக்கு வடக்கே சுமார் 3 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக் கின்ற படையினருக்கு புலிகள் கடும் எதிர்ப் பைக் காண்பித்து நகர்வைத் தாமதப்படுத்துகி ன்றனர்.

இது மன்னார் நகரில் இருந்து 34 கி.மீ தொலைவிலுள்ள பகுதியாகும். படையினரால் இலுப்பைக்கடவைக்கு வடக்கேயிருக் கின்ற மற்றொரு முக்கிய இடமான மூன்றாம் பிட்டியை இதுவரை கைப்பற்ற முடியவில்லை.

இந்தப் படைநகர்வில் நேரடியாக ஏ32 வீதியில் முன்னேறுவதைத் தவிர்க்கும் படை யினர், இந்த வீதிக்கு கிழக்குப் புறமாக உள்ள பகுதிகளுக்கு ஊடாக ?ன்னேறியே பிரதான வீதியில் குறுக்கறுத்து இடங்களைப் பிடிக்கின்றனர்.

மூன்றாம்பிட்டியை இவ்வாறு சுற்றிவளைத்துப் பிடிக்க இலுப்பைக்கடவைக்கு வடகிழக்கே 5 கி.மீ தொலைவில் இருக்கும் முருங்கையடிப்பிட்டியினூடாக படையினர் மேற்கொண்ட நகர்வு தடுக்கப்பட்டிருக்கி றது. இலுப்பைக்கடவை கைப்பற்றப்படுவதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் உள்ள குருந்தன்குளத்தில் புலிகள் நடத்திய வழிமறிப்புத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள்அறிவித்திருந்தனர்.

தற்போது முருங்கையடிப்பிட்டியில் நடக் கும் சண்டைகள் மூன்றாம்பிட்டியைக் கைப் பற்றுவதற்கான சண்டைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழியே படை யினர் முன்னேறினால் அவர்கள் அடுத்த கட்டமாக மூன்றாம்பிட்டியை அடைந்து விடுவர். இலு ப்பைக்கடவைக்கும் வெள்ளாங்குளத்துக் கும் நடுவே ஏ32 வீதியில் இருப்பதுதான் மூன்றாம்பிட்டியாகும்.

வெள்ளாங்குளத்தை நோக்கி இராணுவத் தின் இரண்டு டிவிசன் படையினர் களம் இற க்கப்பட்டுள்ளனர். 58ஆவது டிவிசன் தெற் குத் திசையில் இருந்தும், 57ஆவது டிவிசன் துணுக்காய்க்கு தெற்கு மற்றும் மேற்குப் பகுதி 582 பிரிகேட் முன்னேறும் அதேவேளை கிழக்குப் புறத்தில் இருந்து கேணல் ரவிப் பிரிய தலைமையிலான 571 பிரிகேட் முன் னேறி வருகிறது. 571 ஆவது பிரிகேட் துருப் புக்கள் முருங்கையடிப்பிட்டிக்கும் திகலிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் புலிகளின் வழிமறிப்புத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

இதற்கிடையில் புலிகள் வெள்ளாங்குளத்தில் பாரிய வழிமறிப்புச் சமருக்குத் தயாராவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வெள்ளாங்குளத்திற்குள் படையினரை நுழைய விடாதபடி, அதற்கு வடக்கே ஓடும் பாலியாற்றை அரணாக வைத்து பாரிய மண் அணையுடன் கூடிய காவல்நிலைகளை அமைக்கும் நடவடிக்கையில் புலிகள் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனிக்குளத்தின் மேற்கிலிருந்து துணுக் காய்க்கு வடக்கே அனிஞ்சியன்குளம், கல்விளான் வழியாக வெள்ளாங்குளத்துக்கு வடக்கே சென்று மேற்குக்கடலில் கலக்கிறது பாலியாறு. இந்த ஆற்றங்கரையை அண்டிப் புலிகள் அமைத்து வரும் மண்அணையானது களில் இருந்தும் வெள்ளாங்குளத்தைக் குறி வைத்திருக்கின்றன.

வெள்ளாங்குளத்திற்குத் தெற்கேயிருந்து கேணல் சஞ்சய வணிகசிங்க தலைமை புலிகளுக்கு இரட்டிப்புப் பலத்தைக் கொடுக்கலாம்.

இந்த அரண் அமைக்கும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதால் படையினரின் நகர்வைப் புலி கள் தாமதப்படுத்தி வருகின்றனர் எனக் கூறப்டுகிறது. வெள்ளாங்குளத் தில் இருந்து மேற்கே செல்லும் துணுக் காய், மல்லாவி, வன்னிவிளாங்குளம் வழியாக மாங்குளம் வரையாக செல்லும் வீதியை மையப்படுத்தி, அந்தப் பகுதிகளை கைப்பற்றுவதற்கு படையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் தற்போது துணுக்காய்க்கு தெற்கே சுமார் 4கி.மீ தொலைவில் ஒட்டங்குளம் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கின்ற படையினர் தொடர்ந்து வடக்கே நகர்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், படையினர் தற்போது நிலை கொண்டிருக்கின்ற பகுதிக்கும் துணுக்காய், மல்லாவி பகுதிகளுக்கும் இடைப்பட்ட பிர தேசம் பரந்த வயல்வெளிகளையும், புல்வெளிகளையும் கொண்ட தென்பதாகும்.

இது இயற்கையாக புலிகளுக்கு கிடைத்திருக்கி ன்ற பாதுகாப்பு அரண் என்றே சொல்லலாம்.இந்த வெட்ட வெளிக்குள் வைத்துப் படையினரை வழிமறித்து புலிகள் சமர் செய்யக்கூடும்.

தற்போது ஓமந்தைக்கு மேற்கே பாலமோட்டை, நவ்வி பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற 62ஆவது டிவிசனின் பிரதான இலக்காக ஏ9 வீதியில் உள்ள புளியங்குளம் சந்தியே உள்ளது.

துணுக்காய்க்கு தெற்கே ஒட்டங்குளம் பகுதியில் அதாவது சுமார் 4கி.மீ தொலைவு வரை 573ஆவது பி?கேட் படையினர் முன்னேறியிருக்கின்றனர். இவர்கள் துணுக் காய், மல்லாவி பகுதிகளைக் கைப்பற்றினால் அடுத்த கட்டமான நகர்வுகள் ஏ9 வீதியை மையப்படுத்தியதாகவே இருக்கப்போகிறது.

துணுக்காய், மல்லாவி, மாங்குளம் அச்சில் பகுதிகளுக்கு படையினர் நிலைகொள்ளும் நிலை ஏற்பட்டால் காலத்தில் எதிர்கொண்டதைவிடவும் மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளலாம்.

புலிகளுக்கு மாங்குளம் ஊடாக வவுனியா, மன்னார் போர்முனைகளுக்கு விநியோகங்களை செய்யமுடியாத நிலை தோன்றினால் அடுத்த கட்டமாக அவர்கள் இன்னும் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அத்துடன் படையின?ன் 130மி.மீ ஆட்டிலறிகளின் எல்லைக் கோட்டுக்குள் இரணைமடுப் பகுதியும் வந்து விடும். எனவே வன்னி மீது அதிக?த்து வரும் படையினரின் அழுத்தங்களை புலிகள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

புலிகள் தற்போது களமுனையில் அதிகளவில் 152 மி.மீ, 130மி.மீ, 122மி.மீ ஆட்டிலறிகளையும், 81மி.மீ மோட்டார்களையும் பயன்படுத்துவது குறைந்திருப்பதாக சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

புலிகள் இவற்றை வன்னியில் பெரும் தாக்குதலுக்காக ஒதுக் கீடு செய்திருப்பதால் சிறியளவிலான எதிர்த்தாக்குதல்களுடன் பின்வாங்கிச் செல்வதாகவே கருதப்படுகிறது.

புலிகள் விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை பகுதிகளை விட்டு பின்வாங்கிய போதே படைத்தரப்புக்கு அவர்கள் பெரும் பாய்ச்சலுக்காகத் தான் பதுங்குகிறார்கள் என்ற சந்தேகம் வந்து விட்டது. இதனால் முன்னரங்க நிலைகளில் உள்ள 57, 58, 62 ஆகிய டிவிசன்கள் அதிகளவில் தற்காப்பில் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புலிகளின் அண்மைய நெகிழ்வுத் தன்மைகளை படைத்தரப்பு தவிர்ந்த எவருமே அவர்களின் பலவீனமாக நோக்கவில்லை என்பது முக்கியமானது. அளவுக்கு அதிகமாகப் புலிகள் விட்டுக் கொடுத்துப் பின்வாங்குவது படையினரை வன்னிக்குள்ளே புலிகள் ஜயசிக்குறு ஆழமாக உள்ளே இழுத்துவிட்டு தாக்குவதற்குத்தான் என்றே பலரும் கருதுகின்றனர்.

மன்னாரிலும் வவுனியாவிலும் படையினரன் கட்டு ப்பாட்டுப் பிரதேசங்கள் விரிவடைந்துள்ள அளவுக்கு, அங்கு நிலை கொண்டிருக்கின்ற படையினரின் செறிவு போதுமானதல்ல என்று கருதப்படுகிறது. ஜயசிக்குறு காலத்திலும் இதேபோன்ற நிலை ஏற்பட்ட போது அந்தத் தருணத்தை புலிகள் பதில் தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக மல்லாவி, துணுக்காய் பகுதிகளைக் கைப்பற்றுவதும் ஏ9 வீதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் தமது இலக்கு என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

இராணுவத்தின் 62ஆவது டிவிசன் தற்போது பாலமோட்டை, நவ்வி பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், புலிகள் இந்தக் கள?னைகளில் கடுமையான எதிர்ப்பைக் காண்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இராணுவ வட்டாரங்களிலும் இராணுவ ஆய்வாளர் மட்டங்களிலும் புலிகளின் பாரிய பதில் தாக்குதல் ஒன்று எதிர்பார்க்கப்படுவது உண்மை.

இந்த எதிர்த்தாக்குதல் எப்போது நிகழப் போகிறது என்பது தான் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

சார்க் மாநாட்டுக்காக புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் முடிவடைந்ததும் வன்னிக் களமுனையில் புலிகளின் பதில்தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னிக் களமுனையில் மிகவும் ஆழமாக ஊடுருவி நிலைகொண்டிருக்கின்ற படைத்தரப்பு புலிகளின் எதிர்த்தாக்குதல் ஒன்றை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதற்கும் புலிகளின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கும் அந்தப் பதில் தாக்குதலே விடைதரும்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

Edited by isoorya

வணக்கம் யாழ்கள வாசகர்களுக்கு,

வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எம் யாழ்கள வாசகர்களுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.

நன்றி வீரகேசரி இணையம்

subathrasarticle1lq0.jpg

subathrasarticle2tg2.jpg

Stalingrad

Stalingrad

அது 2வது உலக யுத்தம்

இனி வரப்போவது வன்னி... இது அதை விஞ்சும்

எது வந்தாலும் எம்மவர்கள் இழப்பை சந்திக்காமல் இருக்க வேண்டும்..

இழப்பைக் கண்டஞ்சி புலிகள் எதையும் கைவிட்டதில்லை.

நீங்க சொல்வது சரி தான்..

அவர்கள் இதற்கு அஞ்சுவதில்லை..ஆனால் இழப்பு இழப்பு தானே..

நான் சொல்வது உயிர்களை.. :wub:

அது இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னேன்..

நான் எழுதியது உங்களுக்கான எதிர்க்கருத்தல்ல தூயா,

வரலாற்றில் தமிழர் கண்டுவந்ந அழிவுகள் இழப்புகள் (உயிர்) அனைத்துமே விடுதலைப் போராட்டம் சார்ந்ததாக நடக்கவில்லை. அவைகள் சிங்களத் தரப்பினால் திட்டமிட்டே நடத்தப்பட்டன. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடுதலைப்போர் பல இழப்புகளினால்தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதில் தம்மை எரித்துக் கொண்ட மாவீரர்கள் வரலாற்று நாயகர்கள். புலிகள் இழப்புகளைக் கண்டு அஞ்சியிருந்தால் விடுதலைப் போர் இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருக்காது. என்பதைத்தான் சொல்ல வந்தேன்.

இறந்துபோன மக்கள் 100,000 தாண்டும் ஆனாலும் மாவீரர்கள் 20,000 +

எப்பிடிப்பாத்தாலும் இழப்புத்தான் தூயா... விருப்பமில்லைத்தான் தூயா ஆனாலும் நடமுறை யதார்த்தம் இதுதான்... என்ன செய்ய?

அது 2வது உலக யுத்தம்

இனி வரப்போவது வன்னி... இது அதை விஞ்சும்

நானும் அதைத்தான் ஒருவரியில் தெரிவித்தேன்.

இலங்கை கிட்லர் [மகிந்த] இதைவிரைவில் உணர்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.