Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியின் மனிதாபிமான அவலங்களை வேலைத்தளங்கள்

Featured Replies

வேலைத்தளங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முதல் ஏனைய பொது இடங்களில் உள்ள கணினிகளில் உள்ள screen saver அய் பயன்படுத்தி வன்னியின் மனிதாபிமான அவலக் காட்சிகளை ஏனைய சமூகத்தவர்களோடு பகிருவதற்கு ஒரு யோசனை.

முதலில் இலவசமாக கிடைக்கும் Google Photos Screensaver போன்ற ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்

http://pack.google.com/screensaver.html

Google Photo Screesaver அய் install பண்ணி முடிந்த பின்னர் control panel இற்கு சென்று display அய் தெரிவு செய்யவும்

cpanelviewxp9.jpg

முதலில் Screen Saver என்ற tab அய் தெரிவு செய்யவும்

பின்னர் Google Photo Screen Saver அய் தெரிவு செய்யவும்.

3 ஆவதாக settings அய் தெரிவு செய்யவும்.

dpropertiesvieweu5.jpg

1- இணையத்தோடு தொடர்ச்சியாக இணைந்திருக்கும் கணனி ஒன்றில்

gpssettingsviewdx9.jpg

பின்வரும் RSS feed இணைப்பை பிரதி செய்து பதியவும்.

http://api.flickr.com/services/feeds/photo...;format=rss_200

pfssettingsviewlt5.jpg

2- இணையத்தோடு இணைந்திருக்காத கணினிக்கு படங்களை கணனியில் ஒன்றில்

gpssettingsview2ad8.jpg

கணனியில் படங்களை தரவிறக்கி வைத்திருக்கும் பாதையை கொடுக்கவும்.

fsettingsviewjn0.jpg

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வழிகாட்டல் குறுக்ஸ் .

அடிக்கிற கை தான் அணைக்கும் . :lol:

குறுக்ஸ்

நீங்கள் ஒருஇனவெறிபிடித்தசிங்களவனாக இருந்தாலும் நல்லாய் தமிழ் எழுதிறீங்க :lol:

Edited by r.raja

நானும் செய்ந்திட்டேன்..

வாகரை நோக்கிய அரச பயங்கரவாத வன்முறையின் போது, அனுப்பப்பட்ட உணவுத்தொகுதியினை தமிழ் மக்களே பறித்ததாக ஒரு படமொன்று அனேகமான சிங்கள இனவாதத்தினைக் கக்கும் பத்திரிகைகளில், அதுவும் முன்பக்கத்தில் வெளியானது. அதுவரை தமிழர் படும் அவலத்தினை குறித்து எப்படமும் காணக்கூடியதாக இருந்ததில்லை.

இவ்வாறான நடவடிக்கைகள் தமிழினத்தினைக் கேவலப்படுத்த தருணங்களை எதிர்பார்த்து நிற்கும் "குறுகிய"மனம் கொண்டோருக்கு வாய்ப்பளித்து விடாமல் இருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையார் சொல்வதையே நானும் சிந்தித்தேன். இப்படங்களை பார்த்தால்.. ஏதோ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் சித்திரவதைகளை அனுபவித்து சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்.. எனவே சிறீலங்காவுக்கு உதவுங்கள் என்பது போலத்தான் இருக்கிறது.

வெளிநாடுகளில் சிறீலங்காவில் நடக்கும் பிரச்சனையின் தன்மை புரியாதவர்கள் மத்தியில்.. ஒரு விடயத்தை கொண்டு செல்லும் போது போதிய தகவலை அது கொண்டிருக்காவிடின்.. எமக்கே அது பாதகமாக அமைந்துவிடும்..!

எம்மவர்கள் வெளியிட்ட சில படங்களிலேயே வேறோரு கருத்தை எழுதி சிங்களம்.. புலிகளின் சிறுவர் படையணி என்றும் பொதுமக்களுக்கு கட்டாயப் பயிற்சி என்றும் பிரச்சாரம் செய்ய பாவித்ததை மறந்துவிடலாகாது..! இறுதியில் அவை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கருத்தைக் கூட கவர்ந்து.. கண்டனங்களை பெற்றுத் தந்ததை கருத்தில் கொள்ள வேண்டும்.

எமது போராட்டம் பற்றி சர்வதேச அரங்கில் உள்ள மக்களுக்கு செல்லும் தகவல்கள் சிறீலங்கா அரசு வெளியிடும் தகவல்களே அதிகம். எனவே ஒவ்வொரு பிரச்சார வடிவிலும்.. போராட்டத்தின் தார்ப்பரியம்.. மக்களின் நிலை.. ஏன் மக்களுக்கு இந்த நிலை என்பதை தெளிவாகக் காட்டுதல் வேண்டும்.

எனவே படங்களை இணைக்கும் போது சரியான பதங்களை அல்லது காட்சியமைப்புக்களை அங்கு பின்னணியில் அமைத்துக் கொள்ள வேண்டும். இன்றேல்.. அது தவறான அர்த்தப்படுத்தல்களை வழங்கி.. சிங்கள அரசின் இன அழிப்பு என்பது உலக அரங்கில்... கொடிய பயங்கரவாதத்துக்கு எதிரான தார்மீக யுத்தமாகி நிற்க நாமே உதவி வழங்கியதாகி விடும்.

எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளினூடு.. படங்களை இணைத்து அனுப்புவதனூடு கூடிய தகவல்களை வழங்கக் கூடியதாக இருப்பதுடன்.. நிர்வாக மட்டத்தில்.. அடுத்தவர்களை தொந்தரவு செய்யாததாகவும் இருக்கும்..! சில வேலைத்தளங்களில் இவ்வாறான செயற்பாடுகள் விரும்பப்படுவதில்லை. எனவே அவ்வாறான இடங்களிலும் இவற்றை செய்யப் போய்.. எமது பிரச்சார நோக்கிலான செயற்பாட்டை.. அதன் நோக்கத்தை.. தரம் தாழ்த்தி விடவும் கூடாது..!

எனவே.. மந்தைகள் போல.. ஒருவர் ஒட்டிறார் என்று செயற்படாமல்.. சிந்தித்து செயற்படுங்கள்.! :D:lol:

Edited by nedukkalapoovan

எழுதிட்டு தானே போடவேண்டும்..இல்லை எனில் எந்த நாட்டு படம் என்றே அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது தானே..

இங்கும் இந்தியன் என்று தானே பொதுவாக அனைவரையும் சொல்வார்கள்..

  • தொடங்கியவர்

screen saver ஓடும் போது ஒவ்வொரு படங்களுக்குரிய title & flickr username உம் காட்டப்படும். அத்தோடு mouse அய் அரக்கினால் முதலில் flickr தளத்தில் படம் போட்டிருப்பவரின் பகுதிக்கு இணைப்பு படத்திற்கான இணைப்பு போன்ற தகவல்களைக் காட்டும். அதில் தொடுப்பு செய்து போகலாம் இணையத்திற்கு.

TROKilinochi இன் Flickr தளத்தில் ஒவ்வொரு படங்களுக்கும் முடிந்தவரை பொருத்தமான title மற்றும் விளக்கங்கள் எழுதியிருக்கிறார்கள். முற்று முழுக்க வெளியாருக்கு என்று எல்லா பின்னணித்தகவல்களையும் அடக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு படத்திலும் இல்லாவிட்டாலும். ஒவ்வொரு set introduction இலும் ஓரளவு பின்னணித் தகவலகள் இருக்கு.

கணனியில தரவிறக்கம் செய்து போட்டால் தகவல்களை ஒவ்வொன்றாக எழுத வேண்டும்.

வாகரை இடப்பெயர்வு முதல் ஏனைய கிழக்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் மனித அவலங்களின் போது புலம்பெயர்ந்தவர்கள் "இறுதி யுத்தம்" "பல முனைகளில் களங்கள் திறக்கப்பட்டு சிலவாரங்களில் 70வீதமாக இருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசம் 100வீதம் ஆக்கப்படும்" போன்ற மயக்கங்களில் இருந்தவர்கள். அதனால் மனிதாபிமான கண்ணோட்டங்களில் செய்திகள் அதிக அளவில் வந்தது சிங்கள ஊடகங்களில் மட்டும் தான். அவர்களது குறிக்கோள் வேறாக இருந்தாலும் கிடைக்கும் ஆதாரங்களை தரவுகளை காலத்திற்கு ஏற்ப மனிதாபிமான கண்ணோட்டத்தில் தமது குறிக்கோள் நோக்கிச் செய்தியாக்கினார்கள்.

கிழக்கில் முடிந்து ஆக்கிரமிப்பு போரின் கவனம் வடக்கில் மன்னாரில் ஆரம்பித்த பொழுது கூட தமிழ் ஊடகங்கள் மயக்கத்தில் இருந்து வரவில்லை. தற்பொழுது அடிமடியில் கை வைத்துள்ள நிலையில் ஒரு பகுதியினர் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா, என்ன கருசனை என்ன கருசனை. ஊர் கண்ணே பட்டு விடும் சாமியோவ். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.