Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்கிசையில் குண்டு வெடிப்பு

Featured Replies

டி சேரம் வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

- டயலொக் குறுநகல் செய்தி

Blast heard near Sri Lanka capital-military 10 Sep 2008 14:35:42 GMT

COLOMBO, Sept 10 (Reuters) - An explosion was heard south of the Sri Lankan capital Colombo late on Wednesday, the military said, but no more details were immediately available.

"There was an explosion heard near Mount Lavinia," military spokesman Brigadier Udaya Nanayakkara said, referring to a town south of Colombo. (Editing by Paul Tait)

http://www.alertnet.org/thenews/newsdesk/SP161018.htm

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் பாதைக்கு அருகில் வெடித்த குண்டால் இதுவரைக்கும் காயங்கள் இல்லை எங்கிறது.. டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

கல்கிசையில் குண்டுவெடிப்பு

[புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 07:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் இன்று இரவு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்கிசையில் உள்ள டி சேரம் வீதியில் உள்ள தொடருந்து கடவைக்கு அருகில் இன்று புதன்கிழமை இரவு 7:50 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இதில் எவரும் காயம் அடையவில்லை கல்கிசை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பினையடுத்து குறித்த பகுதியில் காவல்தறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குண்டுவெடிப்பிற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

புதினம்

கொழும்பின் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் இன்று இரவு குண்டுவெடிப்பு!

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் இன்று இரவு குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கல்கிசையில் உள்ள டி சேரம் வீதியில் இன்று புதன்கிழமை இரவு 7:50 நிமிடமளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குப் பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விவரம் விரைவில்......

http://www.tamilseythi.com/srilanka/colombo-2008-09-10.html

  • கருத்துக்கள உறவுகள்

கல்கிஸை ரயில் பாதையில் குண்டு வெடிப்பு தண்டவாளத்துக்கு சிறிது சேதம்; சேவைகள் பாதிப்பு

வீரகேசரி இணையம் - கல்கிஸை ரயில் பாதையில் இன்று இரவு குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்கிசை டிசேரம் மாவத்தையிலேயே இன்று இரவு 7.50 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குண்டு வெடிப்பினால் தண்டவாளத்துக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் போக்குவரத்துக்காக பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

டி சேரம் மாவத்தைக்கு அருகாக செல்லும் ரயில் கடவையில் சிறிய ரக குண்டு ஒன்று வெடித்துள்ளது. ரயிலை இலக்கு வைத்தே இந்த குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை டிசேரம் மாவத்தையும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன், ரயிலை இலக்கு வைத்து பொருத்தப்பட்ட குண்டு சுமார் 200 கிராம் நிறையுடையதாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்கு அருகே இருந்த ரயில் பாதையில் ரயில் ஒன்று பயணித்துக் கொண்டிருந்ததாகவும் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொலிஸ் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாரோ கடற்கரையில கஞ்சா அடிக்கப்போற ஆக்கள் வைத்திருக்கிறாங்கள் இதுக்கு வீதியை மூடி விசாரணை நடத்தி செய்யுங்கோ செய்யுங்கோ இதைவிட்டால் உங்களுக்கு வேற என்ன வேலை :lol:

ஈழத்தில் பிறந்தவன் என்றும் தமிழ் தேசியத்தை தான் விரும்புவான்.இதில் ஆதரவு எதிர்ப்பு என்று இல்லை.தமிழன் தமிழர்களுக்காக பாடுபடுகின்றான்.தமிழ் தேசியம் என்பது கடசிகளோ அல்லது பாடசாலை விளையாட்டு போட்டியில் பிரித்து வைத்து விளையாடும் குழுக்களா அல்ல ஆதரவு எதிர்ப்பு பார்ப்பதற்கு? அது ஈழத்தமிழர்களுக்கான மொத்த அடையாளம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.