Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயம் – மதம் – பகுத்தறிவு – பரிணாமம்

Featured Replies

ச.சச்சிதானந்தம்

“உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு. “ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன.

மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான். அவன் சிறு சிறு குழுக்களாக அமைந்து வேட்டையாடிய பின்னர், உணவை குழுவினருடன் பகிர்ந்து கொண்டான். இவ்வாறு கூட்டு வாழ்வாகத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் சமூக வாழ்வாக மாறியது. கூட்டு வாழ்க்கையின் பொருட்டு மனிதர் பரிமாற்றம் இடம் பெற்றது. காலம் செல்ல செல்ல கருத்துப் பரிமாற்றங்களால் கூட்டு வாழ்க்கை வலுப்பெற்றது. வேட்டையாடுதலைத் தொடர்ந்து பயிர்த் தொழில் நடைமுறைக்கு வந்தது.

கடவுள் மனிதனை படைத்தான் என்று கூறிக்கொ்ண்டே மனிதன் கடவுள்களை படைப்பது இன்னமும் முற்றுபெறவில்லை

மனிதன் இவ்வாறு வளர்ச்சி அடைந்து வாழத்தொடங்கியதும் தனக்கு ஆச்சரியமாகவும், புதுமையாகவும் தோன்றியவற்றை எல்லாம் தனக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினான். மனிதன் மீது இயற்கை செலுத்திய ஆதிக்கம் அவனது உணர்வில் பயத்தை உண்டாக்கியது. இவ்வாறு உண்டான நம்பிக்கை, பயம் போன்றவை மனிதனது உணர்வில் ஏதோ ஓர் சக்தி கடவுள் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்து விட்டன. சூரியன், மழை, காற்று, நெருப்பு முதலானவற்றைக் கடவுள் எனக் கருதினான். இயற்கையின் ஆற்றல்மிகு வெளிப்பாடுகளின்போது துணிவிழந்து துணை அற்றவன் ஆனான். வழக்கத்துக்கு மாறான புயலால் அவன் வாழ்வு மற்றும் உடமைகளின் அழிவுகளைக் கண்டபோது, காணும்போது காற்று, மழை முதலியவற்றை கடவுளின் சீற்றத்தால், வெறுப்பால் விளைந்த விளைவுகள் என்று நினைத்தான்.

எனவே அவன் தன்னைத் தானே கடவுளை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டான். வழிபாடுகள் தோன்றின. இவ்வாறுதான் அறிவின் பலவீனத்தால், அறியாமையால் காரண காரியம் தெரியாததால் எழுந்த பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உருவானது. கடவுள் நம்பிக்கையினால் மதம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறான எண்ணங்களே பின்னர் உண்டாக்கபட்ட மதக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன

மனிதன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் அவன் இயற்கைக்கு மேலான சக்திகளிடம் திரும்பினான். தன் விருப்பு, வெறுப்பு முயற்சிகளில், சிலவேளைகளில் சில இயலாமைகளின் போது தன் உறுதியான எண்ணத்தாலும், எண்ண ஒருமைப்பாட்டாலும் “ முடிக்க முடியும்” என்ற தீர்மானத்திற்கு வந்தான். மனிதன் தன் வாழ்வின் முக்கிய நிலை மாற்றங்களான பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு ஆகியவை கடவுளின் விருப்பத்தால் நிகழ்பவை எனவும் நினைத்தான். எனவே, கடவுளது அனைத்து செயல்களும் தூய்மையாக கொண்டாடப்படப் பட வேண்டும் என எண்ணினான். இப்படியான எண்ணங்கள், கருத்துக்களின் விளைவான கடவுள் நம்பிக்கையும், மதக்கோட்பாடுகளும் இயற்கையை விளங்கிக் கொள்ளாமல் தன்னில் நம்பிக்கை இல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளின் மீதுள்ள நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன.

இதனால் மதம் சமூகத்தில் வலிமையான ஆதரவையும் ஆதாரத்தையும் பெற்றது. இவ்வர்க்கத்தினர் மடலாயத் தலைவர்களாகவும், மதத் தலைவைர்களாகவும் ஆனார்கள். இத்தலைவர்கள் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தமையால் அரசியலில் ஈடுபடவும், அரசுகளை தம் வசப்படுத்தவும் வலிமை பெற்றிருந்தார்கள். இன்னும் இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதனின் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என நினைத்து பல கடவுள்களை வணங்கினான். மடலாயத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்கள், சுயநலங்கள் காரணமாகவும் கடவுள்களுக்குள் பிரிவுகளை உண்டாக்கினார்கள். கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறிக்கொண்டு மனிதன் கடவுள்களைப் படைப்பது முற்றுப்பெறவில்லை.

காட்டு மனிதனை தேவை, கூட்டு மனிதன் ஆக்கியது. கூட்டு மனிதனை சிந்தனை, பகுத்தறிவு, துணிவு ஆகியன விஞ்ஞான மனிதன் ஆக்கின. மனிதனின் முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவின் பங்கு அளப்பரியது. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத நிலையில் மதங்கள் போன்ற சமுதாய இயக்கங்கள் இயற்கை அமைப்புக்களை நிகழ்ச்சிகளை அதாவது உலகம், உயிர் தோன்றியது பற்றி தன்னுடைய வளர்ச்சிக்கு சாதகமாக பல கற்பனைகளைப் பிறப்பித்து விட்டன. இதனால் அறிவுக்கு ஒவ்வாத விஞ்ஞானத்திற்கு எதிரான, மனித வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைச் செயல்கள், நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு வளர்ச்சி முதலியவற்றை எல்லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றன.

மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும்.

உலக வரலாற்றில் மதங்களின் தோற்றத்தை நோக்கும் போது, பழைய மதங்களின் மறு மலர்ச்சியாகவே புதிய மதங்கள் தோன்றியதைப் பார்க்கலாம். மேலும் மனிதர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து அபிப்பிராய வேறுபாடுகளினால் மதங்களில் பல பிரிவுகள் ஏற்படலாயின. ஒவ்வொரு மதக்காரனும் தன் மதம் மூலமாகத்தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்கு போக முடியும் என்றும், தன் தன் மதத்தலைவைர் தான் கடவுள் மகன், கடவுள் தூதன், கடவுள் அவதாரம் என்றும் சொல்லித் திரிகின்றான். இவர்களில் யார் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்கு பாவம் என்றும், மோட்சம் இல்லை என்றும் சொல்லக்கேட்கிறோம். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதங்களுக்காக எத்தனை நரகத்திற்குப் போய் வருவது?

மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலை நாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றது. பல இனிப்பான, அழகான, செல்வாக்கான வார்த்தைகளை எடுத்துக் காட்டுகிறார்கள். மதவாதிகளை கூறுவதுபோல் சொல்கின்ற ஒழுக்க விதிகளின்படி யார் ஒழுகுகிறார்கள்?

கடவுள் சொன்னபடி மதக் கோட்பாடுகளின்படி யார் நடந்து கொள்கிறார்கள்?

மதங்களைப் போதிக்கின்றவர்களாவது அவர்கள் கூறும் ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகளின் படி வாழ்ந்திருப்பார்களா?

“அன்பே சிவம்” என்பவர்களும்

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்பவர்களும்

“அன்பே கடவுள்” என்று சொல்பவர்களும்

“கடவுள் இல்லை” என்று சொன்னதும் தன்னை இல்லை என்று சொன்னமாதிரியான கோபத்தில்

“ஊருக்குபதேசம் உனக்கில்லையடி பெண்டாட்டி” என்பது போல் சீறாமல் ஆத்திரப்படாமல் இருக்கிறார்களா?

“ஒரு மனிதனின் நல்ல பண்புகள் அவன் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும்” தத்துவ மேதை பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியது நடைமுறையில் பலரிடம் காணக்கூடியதே.வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கங்கள், மூட பக்தி, குருட்டு நம்பிக்கைகள் போன்றவைகள் எல்லாம் மதம், கடவுள், பாவபுண்ணியம், மோட்ச நரகம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே நடைபெற்று வருகின்றன. எந்த ஒரு காலத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு மத உணர்ச்சி அதிக தீவிரமாகவும், மதத்தில் மக்களுடைய பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு உலகில் கொடுமையும் மிகவும் மோசமான நிலையும் இருந்திருக்கின்றன. இதற்கது மதக் கலவரங்களைக் கூறலாம். மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும் என பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.

ஒரு காலத்தில் மத்தலைவர்கள் கூறுவதுதான் வேதம். அவர்கள் கூறும் வேதம் தான் அறிவியல் என்றிருந்தது. ஆனால் காலப்போக்கில் மதத்தலைவர்களின் கற்பனைக் கட்டுப்பாட்டுக் கதைகள் துணிவான சில சிந்தனையாளர்களால் பொய்யாக்கபட்டன. பூமித்தட்டையானது என பைபிளில் சொல்லப்பட்டிருகின்றது. ஆனால் பூமி உருண்டையானது. பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கோபெர்னிக்கசும் பிறகு வாதிட்ட கலிலியோவுக்கு வயதான கிழவர் என்றுகூட இரக்கப்படாமல் சிறைத்தண்டனை வழங்கியது இங்குயிஸிஸன் (Inguisition) திருச்சபை.

மனிதனின் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் என்றும், சக்தி என்றும் , கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், அவற்றிற்கு காரணகாரியம் தோன்றிய பின்பு அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நோய்கள் என்றும், சூரிய கிரகணம் சூரியனை விழுங்குவது என்றும், பெண்களுக்கு மாதவிலக்கு வருவது கடவுளின் சினத்தால் என்றெல்லாம் என்றெல்லாம் பல மாதிரியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். (இன்னும் அவ்வாறு நம்பி வருபவர்களும் உண்டு)அம்மை போடும் நோய்கள் வைரசுகளால் வரும் தொற்று நோய்கள் என அறிகிற போது அம்மனுக்கு செய்யும் படையல் பொங்கல் குறைந்து விட்டன.

மனிதனின் நல்ல பண்புகள் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும் - தத்துவமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

பூமி சூரியன் அவற்றின் இயக்கம், அதன் கால அளவுகளைக் கண்டு பிடித்தது தெரியவந்தபின்னர் சூரியன் கடவுள்களும் இல்லை சூரியனை இராகு பாம்பு கடிப்பதில்லை எனவும் ஒரு தெளிவு ஏற்பட்டது. மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின்னர் இரு சூலகங்களிருந்தும் ஒன்று விட்ட 28 நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது. இதனால் மாதவிலக்கு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளப்பட்டது

அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறைந்து கொண்டே போகும்.எதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனவே, அண்டத்திற்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாவே கடவுள் என்றும், கடவுள் எல்லாவற்றுக்கும் மேலான சக்தி என்றும் பல காலமாக பரவலாக காரணம் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இந்த உலகில் நாம் வாழ்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனும் அமைப்பு திட்ட வாதத்தையும் கடவுள் நம்பிக்கைக்காரர்களும் வாதிடுகின்றார்கள். இந்த வாதம் மூக்குக்கண்ணாடி போட்டுக்கொள்ளவே மூக்கு என்று சொல்வது போல் வேடிக்கையானது. உயிரினங்களுக்கு ஏற்றதாக இடத்தில் நிலைமைகள் அமைவதில்லை. ஆனால் உயிரினங்கள் இடத்திற்கு தக்கவாறு வளருகின்றன. உயிரினங்கள் அவை வாழும் இடத்திற்கேற்ப உடலமைப்பு பெற்றிருக்கின்றன.

இந்த அண்டத்தில் பெருஞ் சக்திகளாக அணுக்கருச்சக்தி (Nuclear Energy) ஈர்ப்புச்சக்தி, (Cravitional Energy) , மின் காந்த சக்தி,(Electro Magnectic) கதிரியக்கச்சக்தி,(Radio Activity) என்பனவற்றை விஞ்ஞானத்தில் குறிப்பிடுவர். மேலும் பொருளின் நிலையைப் பொறுத்து இயக்கப்பண்புச்சக்தியாகவும், நிலைப்பண்புச்சக்தியாகவும் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு சக்தியும் செயற்படுகின்றன.

படைப்பு என்பது இன்மையிலிருந்து உண்டாக்கபடல் என்ற பொருளை உடையது. ஆனால் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உண்டாக முடியாது என்றும், உள்ள பொருளிலிருந்தே எதுவும் காலப்போக்கில் உருமாறி உருமலர்ச்சி (Evolution) பெற்றுத் தோற்றம் அளிக்கும் என்பதே அறிவியல். சார்ல்ஸ் டாவினின் பரிணாமக்கொள்கையின் படி ஒரு கல உயிர் கால ஓட்டத்தில் பல கலமுள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து மென்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறிக் கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) காரணமாகப் இப்பேரண்டம் (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைதரசன் நெருப்புக்கோளமாக ஆகி பல இலட்சக்கணக்கான கிலோமீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகியன, இவ்வண்டங்களின் நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆகின. சூரியன் 5500 c பாகை வெப்பநிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேல் (Antares) பெரேல்கூஸ் (Betegeuse) ஆர்க்துருஸ் (Arctturus) ஆகியன உள்ளன.

460 கோடி ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களுக்கு இடையிலான வாயுவும், தூசியும் சுருங்கி, செறிந்து இயக்க விளைவினால் பூமி தோன்றியது. “பிரம்மா பூமியைப் படைத்தர் “ என்றும் ஆதி நிலைத் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் சொல்லப்பட்டும் வருபவை பொய்யாகின்றன. பூமியின் போர்வையான வளி மண்டலத்தில் நைதரசன், அமோனியா, மிதேன், நீராவி முதலான மூலக்கூறுகள் ஓயாது பெய்த பெருமழையின் வாயிலாக புவியின் பரப்பில் இருந்த கடல்களில் கரைந்து கலந்தன. இவ்வாறு கல்லில் கரைந்த மூலக்கூறுகள் சூரிய வெப்பம், மின்னல் புற ஊதா கதிர் வீச்சு முதலியவற்றால் இரசாயனத்தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றிலிருந்து அமினா அமிலங்களும் , அமினோ அமிலங்களிலிருந்து புரதங்களும் உருவாகி அவை பின் கலவுருவாகி (Protoplasm) காலப்போக்கில் ஒரு கல் (monocell) உயிர்கள் ஆகின. உயிரினங்களின் உடலமைப்பியல், தொழிலியல் அடிப்படை அலகு கலம் (Cell) ஆகும். கலங்களில் சுவாசம் நிகழ்வதால் பல இரசாயனத்தாக்கங்கள் கலங்களில் நிகழ்கின்றன. தொடரும் இரசாயனத்தாக்கங்களால் உயிரினங்கள் வாழுகின்றன. வளருகின்றன. பெருகுகின்றன.

எளிமையான அமைப்புடன் தோன்றிய உயிரினங்களில் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. தற்போது காணப்படுகின்ற உயிரினங்கள் பல தொடக்க காலத்தில் இருந்திருக்கவில்லை. இவையெல்லாம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவானவையே. பரிணாம வளர்சியின் உச்ச நிலையே மனிதன்.

(மார்ச் 1997 ல் வெளிவந்த "பாலம்" சஞ்சிகையில் பிரசுரிக்கபட்ட இக்கட்டுரை கட்டுரையின் முக்கியத்துவத்தையொட்டி முரசத்தில் மீள்பிரசுரமாகிறது. பாலம் சஞ்சிகைக்கும் கட்டுரையாளர்

ச. சச்சிதானதந்த்திற்கும் எமது நன்றிகள்.)

http://swissmurasam.info/content/view/9513/31/

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) காரணமாகப் இப்பேரண்டம் (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைதரசன் நெருப்புக்கோளமாக ஆகி பல இலட்சக்கணக்கான கிலோமீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகியன, இவ்வண்டங்களின் நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆகின. சூரியன் 5500 c பாகை வெப்பநிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேல் (Antares) பெரேல்கூஸ் (Betegeuse) ஆர்க்துருஸ் (Arctturus) ஆகியன உள்ளன.

மதவாதிகள் எதை மையமாக வைத்துக் கடவுளை உருவகிக்கிறார்களோ.. அங்கேதான் அறிவியலும் தேடிக் கொண்டிருக்கிறது. விடைதான் கிடைக்கவில்லை..??!

சச்சிதானந்தம் அறிவியலூடாக ஏதோ பெருவெடிப்பு பேரண்டம் நைதரசன்.. மெதேன்.. என்று அழகாக எழுதிய திருப்தியில் ஏதோ புதுவித கண்டுபிடிப்பை கண்டுபிடித்துவிட்டு கடவுளின் இருப்புக்கான மனிதனின் காரணப்படுத்தலை முறியடித்த சந்தோசத்தில் நிம்மதியாக உறங்கி இருக்கக் கூடும். ஆனால் கேள்வி ஒன்று இன்னும் நிலைத்திருக்கிறது.. அந்தப் பிரபஞ்சம் உருவாக நடந்த வெடிப்புக்கான காரணிகள் எங்கிருந்து வந்தன.. யார் உருவாக்கினார்கள்..??! என்பதே அந்தக் கேள்வி..!

அறிவியல் பெருவெடிப்புப் பற்றிப் பேசுகிறது.. பேரண்டம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அந்தப் பேரண்டத்தை ஆக்க நடந்த வெடிப்பு ஏன் நடந்தது... அது நடக்கக் காரணமாக இருந்த கூறுகள் எப்படி உருவாகின.. பலவிதமான சக்திகள்.. இங்கு வியாபித்திருக்கின்றனவே.. அவற்றின் ஆதிமுதல் எது..???! என்பது போன்ற கேள்விகள்.. இன்னும் விடைகாண முடியாமல்..???!

அந்த வகையில்.. மதவாதத்தை வெறும் பெரு வெடிப்பு.. பேரண்ட அறிவியலை வைச்சு.. முடிவு கட்டலாம் என்பது சச்சிதானந்தத்தின் அறியாமை என்றே கொள்ள வேண்டும்.

மனிதன் பகுத்தறிய இயற்கையின் எல்லை என்பது இன்னும் பல மடங்கு பரந்து விரிந்தே கிடக்கிறது. அறிவியலில் ஆகட்டும் அங்கும் இதுவே உண்மை..!

எவ்வளவோ கணணிகள் தொழிற்பட.. நுட்பமாக திட்ட்மிட்டு மனிதன் வடிவமைத்த பெருவெடிப்புச் சோதனை என்பது கூட.. இயற்கையின் கூறை மோதவிடுதலில் தான் தங்கி இருக்கிறது. அதிலிருந்து பிறக்கும்.. அறிவியல் கூட இயற்கையைப் பற்றியதானதாகத்தான் இருந்திருக்கும். ஆனால்.. அதைக் கூட மனிதனால் திருத்திகரமாகச் செய்ய முடியவில்லை. பெருவெடிப்புச் சோதனை தொழில்நுட்பக் கோளாறால்.. பல மாதங்களுக்கு பின்போடப்பட்டுள்ளன..??!

மனிதனே திக்குமுக்காடும் இவ்வளவு நுட்பமான அறிவியல்.. எப்படி.. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பால் வெளிப்பட்டது..??! அந்த அறிவியலின் மூலகர்த்தா யார்..???! யார் இந்த இயற்கையின் ஆரம்ப அலகின் மூலம்.. அந்த மூலத்தின் மூலம் யார்..???! கேள்வி சங்கிலிக் கோர்வையாகிறதே தவிர.. விடை..???!

இடைநிலையில் இருந்தும் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.. பெருவெடிப்பு.. பேரண்டம்.. ஒரே ஆரம்பக் கூறில் இருந்து பிறத்தன என்ற கருதுகோளின் கீழ்.. அதேன் பரினாம வளர்ச்சி பூமியை மையப்படுத்தி மனிதனோடு மட்டும் நின்று கொள்கிறது. கோடான கோடி நடச்சத்திரங்களையும் கோள்களையும் பிரசவித்த அந்தப் பெருவெடிப்புக்குப் பின்னான உயிரியல் பரினாம வளர்ச்சி ஏன் பூமியில் மட்டும்.. இனங்காணப்படுகிறது.. வேறேங்கும் ஏன் மனிதன் போன்ற திறன்மிக்க அல்லது அவனை விடத்திறன் மிக்க பரினாம வளர்ச்சி இனங்காணப்படவில்லை..??! அல்லது அதை இனங்காணும் அளவுக்கு மனிதன் பரினாம வளர்ச்சியடையவில்லையா..??! அப்படி இருக்க இதுதான் பரினாம வளர்ச்சி என்று முடிவை எப்படி முன் வைக்கிறார்கள்... இந்த பந்தி எழுத்தாளர்கள்.

அறிவியலாளர்களே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ள விடயத்துள் சச்சிதானந்த்தம் போன்றவர்கள் அரைகுறை விளக்கங்களோடு நுழைந்து கட்டுரை படைப்பதிலும்.. மக்களுக்கு சரியான அறிவியல் பாதையை இனங்காட்டுவதே மதக் கோட்பாடுகளை மனிதன் தேடிச் செல்வதிலின்றும் ஓரளவுக்கு அவனை அறிவியல் மயப்படுத்தும்..! :lol:

Edited by nedukkalapoovan

மதவாதிகள் எதை மையமாக வைத்துக் கடவுளை உருவகிக்கிறார்களோ.

மதவாதிகள் எதை மையமாக வைத்து கடவுளை உருவாக்கினார்கள்?

. அங்கேதான் அறிவியலும் தேடிக் கொண்டிருக்கிறது.

எங்கே தான் அறிவியல் தெடிக் கொண்டிருக்கிறது?

அப்படி இருக்க இதுதான் பரினாம வளர்ச்சி என்று முடிவை எப்படி முன் வைக்கிறார்கள்... இந்த பந்தி எழுத்தாளர்கள்.

பரிணாமம் என்ன்னும் கோட்பாட்டை பந்தி எழுத்தாளர் முன் வைக்கவில்லை, டார்வினின் பரிணமக் கோட்பாடு முன் வைக்கிறது.அதற்கான பல ஆதாரங்கள் அறிவியலின் எல்லாத் துறையிலும் இருக்கின்றன.

அறிவியலாளர்களே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ள விடயத்துள் சச்சிதானந்த்தம் போன்றவர்கள் அரைகுறை விளக்கங்களோடு நுழைந்து கட்டுரை படைப்பதிலும்..

சச்சிதானந்தம் அவர்களின் கட்டுரையில் இருக்கும் அரை குறை விளக்கங்கள் என்ன என்ன?

அறிவியலாளர்கள் இதுவரை கண்டு அறிந்தவற்றை அடிப்படையாக வைத்தே சச்சிதானந்தம் அவர்கள் தனது கட்டுரையை எழுதி உள்ளார்.

மக்களுக்கு சரியான அறிவியல் பாதையை இனங்காட்டுவதே மதக் கோட்பாடுகளை மனிதன் தேடிச் செல்வதிலின்றும் ஓரளவுக்கு அவனை அறிவியல் மயப்படுத்தும்..! :lol:

மக்களிற்கான சரியான அறிவியற் பாதை என்ன?

மக்கள் மதங்களைத் தேடிச் செல்லாதிருக்க அவர்களை அறிவியல் மயப்படுதப்பட வேண்டும் என்றால் மதங்களுக்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் ,மக்கள் மதங்களை நோக்கிச் செல்லாதிருக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நல்ல வரவேற்கத்தக்க நோக்கம் தான் ஆனால் உங்கள் அனேகமான கருத்தாடல்கள் மதங்களுக்கு அறிவியற் சாயம் பூசி போலியான அறிவியலாக இருந்து வந்துள்ளது.இப்போது அவ்வாறு இல்லை என்றால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதிகள் எதை மையமாக வைத்து கடவுளை உருவாக்கினார்கள்?

இயற்கையை மையமாக வைத்துக் கடவுளை உருவாக்குகிறார்கள். இயற்கைக்கு அப்பால் அல்ல..!

எங்கே தான் அறிவியல் தெடிக் கொண்டிருக்கிறது?

அறிவியலும் அதே இயற்கைக்குள் தான் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறதே தவிர அறிவியல் இயற்கை தொடர்பில் எதனையும் புதிதாக ஆக்கிக் காட்டிடவில்லை..! உள்ளதையே வேறு வேறு வடிவங்களுக்கு மாற்றியுள்ளது..!

பரிணாமம் என்ன்னும் கோட்பாட்டை பந்தி எழுத்தாளர் முன் வைக்கவில்லை, டார்வினின் பரிணமக் கோட்பாடு முன் வைக்கிறது.அதற்கான பல ஆதாரங்கள் அறிவியலின் எல்லாத் துறையிலும் இருக்கின்றன.

கேள்வியே அடிப்படையில் ஒரு பெருவெடிப்பில் உருவான அகிலத்தில் டார்வினின் கோட்பாடு.. பூமிக்குள் மட்டும் சரி வந்ததா என்பதுதான். ஏன் இதே கூர்ப்பு.. பிற இடங்களில்.. இல்லாமல்.. போனது..???! அறிவியல் லாமார்க்கின் கொள்கையையும் தான் கொண்டிருக்கிறது. கோட்பாடுகள் விதிகள் அல்ல. முடிந்த முடிவுகளும் அல்ல. டார்வினைக் கட்டிக்கொண்டே இருப்பதற்கு. அதைக் கடந்தும் போக வேண்டிய நிலை இருக்கிறது.

சச்சிதானந்தம் அவர்களின் கட்டுரையில் இருக்கும் அரை குறை விளக்கங்கள் என்ன என்ன?

அறிவியலாளர்கள் இதுவரை கண்டு அறிந்தவற்றை அடிப்படையாக வைத்தே சச்சிதானந்தம் அவர்கள் தனது கட்டுரையை எழுதி உள்ளார்.

சச்சிதானந்தம் அறிவியல் பதங்களைப் பாவித்திருக்கிறாரே தவிர அவருடைய விளக்கங்கள் தவறானவை.

ஒரு சிறிய உதாரணம்:

இந்த விளக்கம் அறிவியல் மயமாக இதைப் பற்றி அறிவியல் ரீதியாக அறியாதவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையில் சாதாரண விஞ்ஞான அறிவுள்ள மாணவனுக்கே தெரியும்.. சூல் ஒரு தனிக்கலம் என்பதும்.. அதனுடன் வேறு கலங்கள் காணப்படுவதில்லை என்பதும்.. உண்மையில் சூல் அழிவடைவதால் இரத்தம் வருவதில்லை. மாறாக கருப்பையின் அக மேலணி அழிவடைந்து அடுத்த வட்டத்துக்கு தயார் ஆவதால்.. தான் அவ்வாறு நிகழ்கிறது என்பதும் அறிவியல் உண்மை. இந்த எளிமையான விடயத்திலேயே திரிபுகள்.. இவ்வாறு பல..!

இவ்வாறே சச்சிதானந்தம் அழகாக அறிவியல் சொற்களைக் கொண்டு புனையிடல் செய்திருக்கிறார். குறிப்பிட்ட சச்சிதானந்தம் பகிரங்கமாக இதற்கு ஆதாரம் சமர்ப்பிப்பாரா. எந்த அறிவியல் நூலில் சூல்களும் அதனுடன் கூடிய கலங்களும் சிதைவடைவதால் தான் மாதவிடாயில் இரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதற்கு..??! :lol::lol:

மக்களிற்கான சரியான அறிவியற் பாதை என்ன?

மக்கள் மதங்களைத் தேடிச் செல்லாதிருக்க அவர்களை அறிவியல் மயப்படுதப்பட வேண்டும் என்றால் மதங்களுக்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் ,மக்கள் மதங்களை நோக்கிச் செல்லாதிருக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நல்ல வரவேற்கத்தக்க நோக்கம் தான் ஆனால் உங்கள் அனேகமான கருத்தாடல்கள் மதங்களுக்கு அறிவியற் சாயம் பூசி போலியான அறிவியலாக இருந்து வந்துள்ளது.இப்போது அவ்வாறு இல்லை என்றால் மகிழ்ச்சி.

அறிவியலையே சரியாக இனங்காட்டாத இக்கட்டுரை... எவ்வாறு மிக ஆழமான அறிவியலால் காணப்பட்ட வேண்டிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வலுவான கருத்துக்கு வலுச்ச்சேர்க்கும். எனவே கடவுள் நம்பிக்கையை கட்டுரையால் வெட்டி வீழ்த்துகிறேன் என்று விட்டு மக்களுக்கு அறிவியலைக் கூட தவறாக இனங்காட்டுதல்.. சரியான அறிவியற்பாதையன்று..! :lol:

இவ்வளவ்வற்றையும் விளங்கிக் கொள்ளத் தகுதியற்று கேள்வி கேட்பதில் பிரயோசனமில்லை. :lol:

Edited by nedukkalapoovan

//இயற்கையை மையமாக வைத்துக் கடவுளை உருவாக்குகிறார்கள். இயற்கைக்கு அப்பால் அல்ல..!//

இயற்கை என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? இயற்கைக்கு அப்பால் என்றால் என்ன?

//

கேள்வியே அடிப்படையில் ஒரு பெருவெடிப்பில் உருவான அகிலத்தில் டார்வினின் கோட்பாடு.. பூமிக்குள் மட்டும் சரி வந்ததா என்பதுதான். ஏன் இதே கூர்ப்பு.. பிற இடங்களில்.. இல்லாமல்.. போனது..???! //

கூர்ப்பு பூமியில் நிகழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன.வேறு இடங்களிலும் அவ்வாறே நிகழ்ந்துள்ளதா இல்லையா என்று தெரியாத போது வேறு இடங்களில் நிகழவில்லை என்று சொல்ல முடியாது.பெரு வெடிப்பின் பின் உருவான ஒவ்வொரு கோளும் மண்டலங்களும் ஏன் வெவ்வேறானவையாக இருக்கின்றன? வேவ் வேறானவற்றில் இருந்து வெவ்வேறான விளைவுகளே வெளி வரும்.எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.பூமியில் ஏற்பட்ட சூழல் உயிரிகள் உருவாவதற்குத் தகுந்ததாக இருந்தது.

//அறிவியல் லாமார்க்கின் கொள்கையையும் தான் கொண்டிருக்கிறது. கோட்பாடுகள் விதிகள் அல்ல. முடிந்த முடிவுகளும் அல்ல. டார்வினைக் கட்டிக்கொண்டே இருப்பதற்கு. அதைக் கடந்தும் போக வேண்டிய நிலை இருக்கிறது. //

டார்வினைக் கடந்து போவதற்கான அறிவியல் சான்றுகளோ கோட்பாடுகளோ இன்று வரை இல்லை.அப்படி இருந்தால் கடந்து போகலாம்.

//சூல் ஒரு தனிக்கலம் என்பதும்.. அதனுடன் வேறு கலங்கள் காணப்படுவதில்லை என்பதும்.. உண்மையில் சூல் அழிவடைவதால் இரத்தம் வருவதில்லை. மாறாக கருப்பையின் அக மேலணி அழிவடைந்து அடுத்த வட்டத்துக்கு தயார் ஆவதால்.. தான் அவ்வாறு நிகழ்கிறது என்பதும் அறிவியல் உண்மை//

மேலே சொன்னதற்க்கும்,

//அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது.//

என்று சச்சிதனந்தம் எழுதியதற்குமான வேறு பாடு என்ன என்பது எனக்கு விளங்கவில்லை? சூலும் அதன் கூட காணப்பட்ட சில கலங்களும் சிதைவடைந்து என்று சொல்வதற்கும், கருப்பையின் அக மேலணி அழிவடைவதற்கும் என்ன வேறு பாடு? அழிவடையும் அக மேலணி சூலுடன் வெளியேறுவது இல்லையா? அக மேலணி கலங்களால் ஆனது இல்லையா?

//இவ்வாறே சச்சிதானந்தம் அழகாக அறிவியல் சொற்களைக் கொண்டு புனையிடல் செய்திருக்கிறார்//

சச்சிதானதம் அவர்கள் எழுதியதில் சில தகவற் பிழைகள் இருக்கலாம், ஆனால் அந்தப் பிழைகளை வைத்துக் கொண்டு அவர் புனைவை எழுதுவதாக் கூறி விட முடியாது.ஏனெனில் அவரின் மையக்கருத்தை இந்த சிறு தகவற் பிழைகள் பாதிக்கப் போவதில்லை.

//அறிவியலையே சரியாக இனங்காட்டாத இக்கட்டுரை... எவ்வாறு மிக ஆழமான அறிவியலால் காணப்பட்ட வேண்டிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வலுவான கருத்துக்கு வலுச்ச்சேர்க்கும். எனவே கடவுள் நம்பிக்கையை கட்டுரையால் வெட்டி வீழ்த்துகிறேன் என்று விட்டு மக்களுக்கு அறிவியலைக் கூட தவறாக இனங்காட்டுதல்.. சரியான அறிவியற்பாதையன்று//

அறிவியலை எங்கே பிழையாக இனம் காட்டி உள்ளார்?

சரி சச்சிதானதால் மதத்தில் இருந்து மக்களை அறிவியலுக்கு அழைத்து வர முடியவில்லை, உங்களது சரியான அறிவியற் பாதை என்ன?

//இவ்வளவ்வற்றையும் விளங்கிக் கொள்ளத் தகுதியற்று கேள்வி கேட்பதில் பிரயோசனமில்லை.//

அரை குறையாக விளக்கம் இன்றி எழுதி விட்டுத் தப்பிக்க முடியாது.அரை குறைப் புரிதல்கள் கேள்வி கேட்டால் வெளி வந்து விடும். பூனை குட்டி வெளியில வரட்டும் என்பதற்காகத் தான் கேள்வி கேட்பது.

எனக்குத் தகுதி இருக்கா விளக்கம் இல்லையா என்பதை உங்களின் இனி வரும் பதில்களில் இருந்து கண்டு கொள்ளலாம்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூர்ப்பு பூமியில் நிகழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன.வேறு இடங்களிலும் அவ்வாறே நிகழ்ந்துள்ளதா இல்லையா என்று தெரியாத போது வேறு இடங்களில் நிகழவில்லை என்று சொல்ல முடியாது.பெரு வெடிப்பின் பின் உருவான ஒவ்வொரு கோளும் மண்டலங்களும் ஏன் வெவ்வேறானவையாக இருக்கின்றன? வேவ் வேறானவற்றில் இருந்து வெவ்வேறான விளைவுகளே வெளி வரும்.எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.பூமியில் ஏற்பட்ட சூழல் உயிரிகள் உருவாவதற்குத் தகுந்ததாக இருந்தது.

ஒரே ஒரு பெரு வெடிப்பில் இருந்து பிரபஞ்சம் தோன்றியதாக சொல்லப்படும் நிலையில்.. பூமியில் மட்டும் கூர்ப்புகள்.. நிகழ்ந்துள்ளன. ஆனால் பல கோடி நட்சத்திரங்களையும் கோள்களையும் கொண்ட இதர இடங்களில் உயிரினம் தோன்றவும் இல்லை.. கூர்ப்பு நடக்கவும் இல்லை.. அதற்கு சான்றில்லை என்பது ??? :lol: பிரபஞ்ச வெடிப்புக்குப் பின்னரான நிகழ்வுகள் எல்லாம் வெவ்வேறானவை என்றால் எப்படி எரிகற்கள் விண்கற்களில் பெறப்பட்ட மாதிரிகளில் பூமியை ஒத்த இரசாயனங்கள் காணப்பட்டுள்ளன. உயிரின் பெரும்பான்மைக் கூறான நீர் கூட இனங்காணப்பட்டுள்ளன.

உயிரியல் கூர்ப்பு இரசாயனக் கூர்ப்பின் தொடர்ச்சி என்பதாகத்தானே ஒபாரினின் உயிரின் உற்பத்தி சொல்கிறது. அப்படி இருக்க.. பூமியில் மட்டும்.. தேர்ந்தெடுத்த கூர்ப்பா நிகழ்ந்துள்ளது..????! இதைத்தானே மதவாதிகளும் சொல்கின்றனர். கடவுள் பூமியில் மனிதனைப் படைத்தார் என்று. நல்ல விண்ணானம் தான்..???! விஞ்ஞானம் அல்ல சச்சிதானந்தம் எழுதிக் கொண்டதும்..??! அதற்கு வழங்கப்படும் வியாக்கியானமும்.

இன்னும் சரிவர நிறுவ முடியாத நிலையில் இருக்கும் கோட்பாடுகளை முழுமை என்பதாக மக்களுக்குக் காட்டுவதே மிகத்தவறான அறிவியல் அணுகுமுறை. அதைச் செய்யும் சச்சிதானந்தம்.. ஏனைய இடங்களில் அறிவியல் தெரியாமலே அறிவியற் சொல் கையாடல் செய்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது..! :lol::lol:

Edited by nedukkalapoovan

ஏதோ விளங்காத பாசைல எல்லாம் கதைக்கிறீங்கள்? முதல்லை டாவின் கோட்பாடு என்றால் என்ன என்று விளங்குறமாதிரி சொல்லுங்கோவன்.. பிறகு எனக்குள்ள கிடக்குற சந்தேகங்களை ஒவ்வொண்டா கேக்கிறன்..!! :lol:

மதங்களுக்கு அறிவியற் சாயம் ஏன் பூசவேண்டும். மதங்களை ஆராய வெளிப்பட்டுத்தான் பகுத்தறிவு என்ற விடயத்தை கண்டுபிடித்தள்ளார்கள். சிரிக்கவேண்டிய விடயம். இவ்வாறான முட்டிக் கொள்ளும் அறிவியல் இல்லாத காலத்திலும் மதங்கள் மக்களை வழிப்படுத்தின. இப்போதும் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. மதம் ஒரு சமூகச் சட்டம். அதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆளையாள் மோதிக் கொள்கிறார்கள்.

அறிவியல் எங்கிருந்து தொடங்குகிறது? அதற்குத் தெளிவான விடைகளேதும் உண்டா? அறிவுதான் மதங்களையும் உண்டாக்கியது என்பது எனது கருத்து. மதங்களில் சொல்லப்படாத சமூக அறிவியற் கருத்துக்கள் ஏதும் உண்டா? தான் தெரிந்த அறிவு பற்றிச் சொல்லிவைத்தலைப் பின்பற்றாதவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிப்பட்ட நிலையில்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

அன்பே கடவுள் என்பதிலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதிலும் என்ன குறையுண்டு.? அவைகள் பிழையானவை என்றால் என்ன விதத்தில் என்று விளங்கப்படுத்துங்கள்.

அறிவியல் என்று கூறிக் கொண்டு உண்மையான வாழ்க்கையின் நடவடிக்கைகளை இழக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ விளங்காத பாசைல எல்லாம் கதைக்கிறீங்கள்? முதல்லை டாவின் கோட்பாடு என்றால் என்ன என்று விளங்குறமாதிரி சொல்லுங்கோவன்.. பிறகு எனக்குள்ள கிடக்குற சந்தேகங்களை ஒவ்வொண்டா கேக்கிறன்..!! :lol:

பூமியில் உயிர்கள் எல்லாம் ஒரே அடிப்படைக் கூறில் இருந்தே உருவாகின என்றும் அவை சிக்கல் தன்மை அடைந்தது என்பது இயற்கைத் தேர்வின் விளைவு என்றும் அதுவே உயிரினக் கூர்ப்பு என்றும் டார்வின் கூறியுள்ளார்.

அடிப்படையில் நாம் என்ன இப்பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காபன்.. நைதரசன்.. ஒக்சிசன்.. ஐதரசன் கொண்டு ஆக்கப்பட்ட இரசாயனப் பொருட்களே.

பூமியில் தோன்றிய இந்த இரசாயனங்கள் பிற கோள்களிலும் உள்ளன. விண்கற்களிலும் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் உயிரின் இருப்புக்கு இன்னும் சான்று கிடைக்கவில்லை. ஏன் இங்கு ஏற்பட்ட இரசாயனக் கூர்ப்பு.. (எளிமையான மூலகங்கள் சிக்கல் தன்மையான கூறுகளாகி.. அந்தக் கூறுகள் சேர்ந்து கட்டி உருவாக்கியதே ஓர் உயிரினமாகியுள்ளது.. பின்னர் அவையே சிக்கல் தன்மை வாய்ந்த உயிரினங்களாயின என்கிறார் பிரித்தானிய இயற்கையியலாளரான டார்வின்) பிற இடங்களில் ஏற்பட்டதற்கான சான்று இன்னும் கிடைக்கவில்லை.. இயற்கைத் தேர்வின் கீழ் ஏன் அச்சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தேர்வு செய்யப்படவில்லை.. செய்யப்பட வாய்ப்பிருக்கவில்லை என்பது.. டார்வினின் கொள்கையின் முன் உள்ள கேள்வியும் கூட..??!

அதுமட்டுமன்றி.. இன்றும் பூமியில் எளிமையான உயிரிகள் வெற்றிகரமாக வாழுகின்றன. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான அதே நிலையில் பக்ரீரியாக்கள் இன்றும் வாழ்கின்றன. அப்படி இருக்க எப்படி இயற்கைக்கு சிக்கல் தன்மையைக் கட்டி வளர்க்க.. தேர்வுகள் செய்ய.. தேவை ஏற்பட்டது..??! எளிமையாக 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் இயற்கையால் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக வாழ முடிந்த பக்ரீரியாக்கள் இருக்க.. டார்வின் இனங்காட்டும் அந்த அடிப்படை உயிரி ஏன் மனிதனாக சிக்கல் தன்மை அடைய வேண்டி வந்தது..????? பல தனிக்கல உயிரினங்கள் வெற்றிகர வாழ்க்கையை வாழும் நிலையில்.. அவற்றுக்கு ஏன் சிக்கல் தன்மையை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது..??! அதற்கான தூண்டல் என்ன..???! ஏன் அந்தச் சிக்கல் தன்மை இன்று அந்த எளிமையான அங்கிகளில் இருந்து இன்னொரு புதிய வகை மனிதனை உருவாக்க இயற்கை தேர்வு செய்யுதில்லை..??!

தக்கன பிழைக்கும் அல்லன மடியும் என்பதன் கீழ்.. இவ்வாறு எழுந்தமானமாக இயற்கைத் தேர்வின் கீழ் எளிமையான கூறுகளில் இருந்து சிக்கலான உயிரினங்கள் உருவானதாக டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால்.. அக்கோட்பாட்டுக்குப் பின்னால் பல துலங்க முடியாத கேள்விகள் மறைந்தே இருக்கின்றன. :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான் முதலில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

அதன் பின் டார்வினின் பரினாமக்கோட்பாட்டு பற்றிய கேள்விகளுக்குத் தாவலாம்.

இடையில் வந்து தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடயங்களை எழுதுபவர்கள் இவ்வாறான கருதாடல்களில் எந்தவிதப் பயனும் அற்ற விதத்தில் எழுதி தங்களது பொன்னான் நேரத்தை வீணாக்காமால், வன்னி பங்கருக்க நிக்கிற தங்கட லைனைக் கவனமாகப் பாதுக் கொள்ளும் படி கேட்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் Tamilsvoice

இந்தக்கட்டுரையை யாழில் பிரசுரித்ததிற்கு தங்களுக்கு வாழ்த்துக்கள். இப்படியான கட்டுரைகள் எமக்குத்தேவை. எதற்காக? இருட்டில் இருந்து வெளி வருவதற்கு. விஞ்ஞான வழியில் சிந்திப்பதற்கு.

மிகவும் சிறப்பான, அருமையான, உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்து சிந்திக்க வைக்கும் கட்டுரை. மேலும் தொடர் இருந்தால் தயவு செய்து இத்தளத்திற்கு அளியுங்கள்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? இயற்கைக்கு அப்பால் என்றால் என்ன?

இயற்கை என்பது அனைத்தும்..!

(மனிதன் வடிவமைத்துள்ள கணணி கூட இயற்கையின் கூறுகளின்றுதான் ஆக்கப்பட்டுள்ளது. மனிதனாக ஒரு அணுவை உருவாக்கியது கிடையாது. இயற்கையில் உள்ள அணுக்களையே கலந்தடித்து மனிதன் தனக்கு உபயோகமாக்கிக் கொள்கிறான். அது அவனின் திறமை. ஆனால் அவனால் இயற்கைக்குள் நின்றுதான் இன்று வரை செயற்பட முடிகிறது.)

கடவுள் என்பது இயற்கை..!

இயற்கைக்கு அப்பால் எதுவும் இல்லை. சூனியம்..! :lol:

சச்சிதானந்தம்.. பிரமாவை மனிதனாக சிந்தித்து வைத்துக் கொண்டு பிரமா படைக்கவில்லை என்று சொல்லிக் கொள்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன்.. பெருவெடிப்பு நிகழ்வதற்குரிய காரணிகள் எவ்வாறு எங்கிருந்து உருவாகின. அவ்வெடிப்புக்குரிய கூறுகள் எவ்வாறு தோன்றின..???! நைதரசன் அது இது என்று புலம்புகிறார்.. அந்த நைதரசன் எவ்வாறு உருவானது.. அதை உருவாக்கிய கூறுகளை உருவாக்கியது எது.. கூறுகளை உருவாக்கிய கூறை உருவாக்கியது எது..??! சக்தி என்றால் அந்தச் சக்தியை உருவாக்கியது எது..??!

அறிவியல் என்பது மரத்தின் உச்சியில் இருந்து ஆணி வேரைத் தேடிச் செல்வது போன்றது. மனிதன் இன்னும் மரத்தின் கிளைகளிலேயே தான் அறிவியல் ரீதியாக இயற்கையை விளங்கும் நிலையில் உள்ளான். இயற்கையின் ஆணி வேரை மனிதன் அறிவியல் கொண்டு இன்னும் விளங்க முடியவில்லை.

அடிப்படையில் சக்திதான் திணிவை ஆக்குகிறது என்றால்.. அந்தச் சக்தியின் மூலம் எது..???! எப்படி அந்த மூலச் சக்தி உருவானது..???! அதையே கடவுள் எங்கின்றனர் ஒரு பகுதியினர்.. இன்னொரு பகுதியினரோ சக்தி என்கின்றனர். ஆனால் அடிப்படையில் இருவருக்குமே அது எப்படி உருவானது.. சக்தி என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை..!

இதற்குள் சச்சிதானந்தம்.. அரைகுறை அறிவியலால்.. அவியல் செய்வது.. அறிவியல் அல்ல..! அறிவியல் என்ற உச்சரிப்பின் கீழ் அவர் செய்யும் அறிவியல்லாத பித்தலாட்டம்.

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான் முதலில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

அதன் பின் டார்வினின் பரினாமக்கோட்பாட்டு பற்றிய கேள்விகளுக்குத் தாவலாம்.

இடையில் வந்து தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடயங்களை எழுதுபவர்கள் இவ்வாறான கருதாடல்களில் எந்தவிதப் பயனும் அற்ற விதத்தில் எழுதி தங்களது பொன்னான் நேரத்தை வீணாக்காமால், வன்னி பங்கருக்க நிக்கிற தங்கட லைனைக் கவனமாகப் பாதுக் கொள்ளும் படி கேட்கப்படுகிறார்கள்.

வன்னி பங்கருக்குள்ள மக்கள் அவதியுறுகிறார்கள் என்பதற்காக, எழுதப்படும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமில்லையே.. அங்க வன்னியில் சனம் பரிதவிக்கையில் இந்தக் கருத்தாடலுக்கே அவசியமில்லையே.. டார்வின் கோட்பாட்டை முன்வைத்து இங்கே கருத்தாடல் நிகழ்கிறதென்றால்.. முதலில் அந்த டார்வின் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்திவிட்டு கருத்தாடலைத் தொடர்வதுதான் முறை.. அல்லது டார்வின் கோட்பாடு தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இக் கருத்தாடல் என தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தால்.. என்னைப் போன்ற கோட்பாடு தெரியாதவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. :lol:

வன்னி பங்கருக்குள்ள மக்கள் அவதியுறுகிறார்கள் என்பதற்காக, எழுதப்படும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமில்லையே.. அங்க வன்னியில் சனம் பரிதவிக்கையில் இந்தக் கருத்தாடலுக்கே அவசியமில்லையே..

டார்வின் கோட்பாட்டை முன்வைத்து இங்கே கருத்தாடல் நிகழ்கிறதென்றால்.. முதலில் அந்த டார்வின் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்திவிட்டு கருத்தாடலைத் தொடர்வதுதான் முறை.. அல்லது டார்வின் கோட்பாடு தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இக் கருத்தாடல் என தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தால்.. என்னைப் போன்ற கோட்பாடு தெரியாதவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. :lol:

வன்னியில் மக்கள் பரிதவிகிறார்கள் என்பதால் நீங்கள் யாழ்க் களத்திற்க்கு வராமால் படிக்கமால் எழுதாமல் இருகிறீர்களா? இங்கே பகுத்தறிவைப் பற்றி எழுதப்படும் கருத்துக்களுக்கு மட்டும் வந்து ஏன் வன்னியில் சனம் கஸ்ட்டப்படுதாம் என்று எழுதுவதன் உண்மையான் நோக்கம் என்ன? வன்னியில் சனம் கஸ்ட்டப்படுகிறதாம் என்று பதை பதைப்பவர் உண்மையில் அந்த மக்கல் பற்றிச் சிந்திப்பார் எனில் அதற்க்கான நடவடிக்களைச் செய்வதற்க்கு வன்னிக்குச் செல்ல வேண்டும்.யாழ்க் களத்தில் வந்து மினக் கடக்கூடாது.அவ்வறு மினக் கெட்டுக் கொண்டு இவ்வாறு எழுதுபவர்களின் கரிசனை என்பது போலியானது.

டார்வினின் கோட்பாடு பற்றி நெடுக்கலபோவான் விளக்கி உள்ளார்.அது பற்றி மேலும் தகவல்கல் அறிய இணையத்தை நாடலாம்.

இந்தத் தலைப்பில் திரு சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையில் அறிவியற் புனைவுகள் இருப்பதாக நெடுக்கலபோவான் எழுதினார் .முதலில் அது உண்மைதான் என்று பார்த்து விடுவோம்.அதன் பின்னர் வேறு கருதாடலுக்குச் செல்லலாம். நான் நெடுக்கலபோவானுக்குச் சொன்னதை உங்களுக்கானதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

டார்வினின் கோட்பாடு பற்றிய பல நியாயமான கேள்விகளை நெடுக்கலபோவான் எழுதி உள்ளார்.இவற்றிற்கான பதில்கள் இருக்கின்றன ஆறுதலாகவும் விரிவாகவும் எழுத நேரம் வேணும்.அலுவலகத்தில் இருப்பதால் இப்போது எழுத முடியாது.ஆதாரங்களுடன் எழுத நேரம் வேணும்.

வன்னி பங்கர் கதையை இங்கு கொண்டு வந்ததே தாங்கள்.. அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன்.. ஏதாவது ஒரு கருத்தாடல் தங்களுக்கு எதிராக திசை திரும்புகிறதென்றவுடன் தாயகத்தையும் அந்த போட்ட விளைவுகளையும் புகுத்தி கருத்தை திசை திருப்புவது எனது செயலல்ல.. மேலே நான் கட்டம் போட்டுத்தான் பதில் எழுதியுள்ளேன்.. அந்தக் கட்டத்துக்குள் தாங்கள் எழுதிய கருத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.. நீங்கள்தான் பங்கர் லைனுக்கு இங்கே லைன் கொடுத்திருக்கிறீங்கள்.

ஓ இப்ப விளங்குது பிரச்சினை.

வழக்கமா பகுத்தறிவு என்று எதாவது தலைப்பை கண்டதும் இல்லை நாரதர் என்று கண்டதும் இடையில வந்து சம்பந்தா சம்பந்தம் அற்று எழுதும் இருவர் வந்து எழுதினார்கள்.அதற்கான பதில் தான் வன்னி பங்கர் லையின் கதை.இபோது அந்தக் கருதுக்கள் இரண்டும் தூக்கப்பட்டு விட்டதால் உங்களுக்கு நான் எழுதினதன் அர்த்தம் விளங்கவில்லை. :lol:

இயற்கை என்பது அனைத்தும்..!

(மனிதன் வடிவமைத்துள்ள கணணி கூட இயற்கையின் கூறுகளின்றுதான் ஆக்கப்பட்டுள்ளது. மனிதனாக ஒரு அணுவை உருவாக்கியது கிடையாது. இயற்கையில் உள்ள அணுக்களையே கலந்தடித்து மனிதன் தனக்கு உபயோகமாக்கிக் கொள்கிறான். அது அவனின் திறமை. ஆனால் அவனால் இயற்கைக்குள் நின்றுதான் இன்று வரை செயற்பட முடிகிறது.)

கடவுள் என்பது இயற்கை..!

கடவுள் என்பது இயற்கை என்று எங்கே கூறப்படுள்ளது? கடவுள் தான் இயற்கை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள்?

சச்சிதானந்தம்.. பிரமாவை மனிதனாக சிந்தித்து வைத்துக் கொண்டு பிரமா படைக்கவில்லை என்று சொல்லிக் கொள்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன்.. பெருவெடிப்பு நிகழ்வதற்குரிய காரணிகள் எவ்வாறு எங்கிருந்து உருவாகின. அவ்வெடிப்புக்குரிய கூறுகள் எவ்வாறு தோன்றின..???! நைதரசன் அது இது என்று புலம்புகிறார்.. அந்த நைதரசன் எவ்வாறு உருவானது.. அதை உருவாக்கிய கூறுகளை உருவாக்கியது எது.. கூறுகளை உருவாக்கிய கூறை உருவாக்கியது எது..??! சக்தி என்றால் அந்தச் சக்தியை உருவாக்கியது எது..??!

நீங்கள் அப்படியாயின் இவை எங்கிருந்து வந்தது என்று சொல்கிறீர்கள்? பிரம்மாவா இவற்றைப் படைத்தார்?

அறிவியல் என்பது மரத்தின் உச்சியில் இருந்து ஆணி வேரைத் தேடிச் செல்வது போன்றது. மனிதன் இன்னும் மரத்தின் கிளைகளிலேயே தான் அறிவியல் ரீதியாக இயற்கையை விளங்கும் நிலையில் உள்ளான். இயற்கையின் ஆணி வேரை மனிதன் அறிவியல் கொண்டு இன்னும் விளங்க முடியவில்லை.

அடிப்படையில் சக்திதான் திணிவை ஆக்குகிறது என்றால்.. அந்தச் சக்தியின் மூலம் எது..???! எப்படி அந்த மூலச் சக்தி உருவானது..???! அதையே கடவுள் எங்கின்றனர் ஒரு பகுதியினர்..

இன்னொரு பகுதியினரோ சக்தி என்கின்றனர்.

நீங்கள் எழுதியதை மீள வாசிதுப் பாருங்கள், மூலச் சக்தியைக் கடவுள் எங்கின்றனர் ஒரு சாரார், மறு சாரார் சக்தி என்கின்றனர்.இரண்டு பேரும் ஒன்றையல்லவா சொல்கின்றனர்? இங்கே சக்தி என்று நீங்கள் சொல்வது எதை அதனை முதலில் வரயறை செய்யுங்கள்.

ஆனால் அடிப்படையில் இருவருக்குமே அது எப்படி உருவானது.. சக்தி என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை..!

இதற்குள் சச்சிதானந்தம்.. அரைகுறை அறிவியலால்.. அவியல் செய்வது.. அறிவியல் அல்ல..! அறிவியல் என்ற உச்சரிப்பின் கீழ் அவர் செய்யும் அறிவியல்லாத பித்தலாட்டம்.

சச்சிதானந்தம் செய்யும் அரைகுறை அறிவியல் என்ன என்று கேட்டேன்.அதற்க்கு சூலகங்கள் பற்றிய உதாரணத்தைக் கூறினீர்கள்.அதில் அவர் ஒன்றும் தவறாகச் சொல்லவிலையே என்று சுட்டிக் காட்டினேன் .அது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.மீண்டும் சச்சிதானந்தம் அரை குறை அறிவியல் என்று சொல்கிறீர்கள்.

ஒருவர் சொல்வது பிழையென்றால் அது எங்கே எது பிழை என்று சொல்ல வேண்டும்.எழுத மாற்றாக ஆதராம் அடிப்படை எதுவுமற்று குற்றச் சாட்டுக்களை வீசுவது அவதூறு எனப்படும்.

மதங்களுக்கு அறிவியற் சாயம் ஏன் பூசவேண்டும். மதங்களை ஆராய வெளிப்பட்டுத்தான் பகுத்தறிவு என்ற விடயத்தை கண்டுபிடித்தள்ளார்கள். சிரிக்கவேண்டிய விடயம். இவ்வாறான முட்டிக் கொள்ளும் அறிவியல் இல்லாத காலத்திலும் மதங்கள் மக்களை வழிப்படுத்தின. இப்போதும் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. மதம் ஒரு சமூகச் சட்டம். அதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆளையாள் மோதிக் கொள்கிறார்கள்.

அறிவியல் எங்கிருந்து தொடங்குகிறது? அதற்குத் தெளிவான விடைகளேதும் உண்டா? அறிவுதான் மதங்களையும் உண்டாக்கியது என்பது எனது கருத்து. மதங்களில் சொல்லப்படாத சமூக அறிவியற் கருத்துக்கள் ஏதும் உண்டா? தான் தெரிந்த அறிவு பற்றிச் சொல்லிவைத்தலைப் பின்பற்றாதவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிப்பட்ட நிலையில்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

அன்பே கடவுள் என்பதிலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதிலும் என்ன குறையுண்டு.? அவைகள் பிழையானவை என்றால் என்ன விதத்தில் என்று விளங்கப்படுத்துங்கள்.

அறிவியல் என்று கூறிக் கொண்டு உண்மையான வாழ்க்கையின் நடவடிக்கைகளை இழக்க வேண்டுமா?

உண்மையான வாழ்க்கை என்றால் என்ன?

மதங்கள் எங்கனம் அதற்குத் துணை நிற்கின்றன?

அன்பே கடவுள் எனில் , அன்பு எவர் மேல் காட்டப்பட வேண்டியது?

கடவுளுக்குக் கோவிலும் வணக்கமும் பூசையும் புனஸ்காரமும் கொடியும் கோபுரமும் எதற்க்கு?.மதச் சண்டைகளும் மதத்தால் மக்களை அடக்குவதும் கொல்வதுவும் எதற்கு?

மதங்கள் மக்களை வழி நடாத்த கூடியன வென்றால் ஏன் அரசும் சட்டமும் போலிசும் நீதிமன்றங்களும் சிறையும் தண்டனையும்?

  • தொடங்கியவர்

நன்றி சாண்டில்யன்

நாரதர் நீங்கள் கல்லில் நார் உரிக்கிறீர்கள்

இவர்களைத் திருத்த முடியாது இவர்கள் தூங்குபவர் போல் நடிப்பவர்கள்

இங்கு ஒரு சிலர் எப்போதும் எந்த தலைப்புக்கும் எதிர்வினைக் கருத்தெழுதி மற்றவர்களை அறிவிலிகள் என்று சொல்லிக்கொண்டு

தாங்கள் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

சச்சிதானந்தம் செய்யும் அரைகுறை அறிவியல் என்ன என்று கேட்டேன்.அதற்க்கு சூலகங்கள் பற்றிய உதாரணத்தைக் கூறினீர்கள்.அதில் அவர் ஒன்றும் தவறாகச் சொல்லவிலையே என்று சுட்டிக் காட்டினேன் .அது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.மீண்டும் சச்சிதானந்தம் அரை குறை அறிவியல் என்று சொல்கிறீர்கள்.

நான் உதாரணத்துக்காக ஒரு தவறை இனங்காட்டிய பின்னும்.. தவறாகச் சொல்லவில்லை என்று சொல்லும் போது.. உங்களிடம் சரக்கு இல்லை என்பது புலனாகிறது. நீங்கள் சச்சிதானந்தை நம்புவதே மேல். அதற்காக மக்கள் எல்லோரும் அவரின் புனை கட்டுரையை நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை.

சச்சிதானந்தம் குறிப்பிடுவது போல.. சூல்.. அதனைச் சூழ உள்ள கலங்கள் உடைந்து இரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பது.. அறிவியல் உலகில் மனித உயிரியலில் கண்டுபிடிக்கப்படாத சச்சிதானந்த கோட்பாடு என்று கொண்டு அதனை தமிழர்கள் படித்துப் பயன்பெறட்டும். அறிவியல் என்று அதனை இனங்காட்டாதீர்கள். அது தமிழர்களில் அறிவியல் அறிந்தவர்களையும் முட்டாள் ஆக்கிவிடும்..! :unsure:

உண்மையில் கருக்கட்டாத தனிக் கல முட்டை சிதைவடைந்து மீள அகத்துறிஞ்சப்பட.. கருப்பைச் சுவரின் அக மேலணி கருப்பையை அடுத்த மாதவிடாய் வட்டத்துக்கு ஏற்ப சீர் செய்யும் பொருட்டு சிதைவடைவதாலேயே அந்த மேலணிக்கு குருதி வழங்கும் குருதிக் கலங்கள் உடைவதால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. மேலணியின் சிதைவடையும் கூறுகளும் வெளியேறுகின்றன. கருக்கட்டப்பதாட முட்டைக்கும் கருப்பை மேலணிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது..! :o

If the ovum is not fertilized within the period it dies and is reabsorbed by the woman’s body. The body prepares itself for the implantation of the fertilized egg with the change of the uterine lining and stays ready for about two weeks which is the maximum time for a fertilized egg to travel up the uterus and implant itself on it’s walls. If fertilization does not occur, the lining of the uterus is shed automatically, again beginning the process of the menstruation cycle.

http://www.meditests.com/understanding-menstrual-cycle.html

மேலும்.. இயற்கை.. இறைவன்.. சக்தி தொடர்பில் முன்னர் பல விவாதங்களில் உங்களுக்குப் போதிய அளவுக்கு விளக்கம் தந்திருக்கிறேன். அவற்றை மீளப் படியுங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாண்டில்யன்

நாரதர் நீங்கள் கல்லில் நார் உரிக்கிறீர்கள்

இவர்களைத் திருத்த முடியாது இவர்கள் தூங்குபவர் போல் நடிப்பவர்கள்

இங்கு ஒரு சிலர் எப்போதும் எந்த தலைப்புக்கும் எதிர்வினைக் கருத்தெழுதி மற்றவர்களை அறிவிலிகள் என்று சொல்லிக்கொண்டு

தாங்கள் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள

உண்மையான வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்வதென்பது இலகுவான விடயமல்ல. மனிதனுடைய வாழ்க்கை எந்த இடத்தில் திசை திருப்பப்படும் என்பதை ஒருவரும் அறியார். எத்தனையோ சந்தர்ப்பங்கள் மனிதனை வந்தடைந்தாலும் அவன் வெளியில்லிருந்து பெற்ற அறிவுதான் வாழ்க்கைப்பாதையை முடிவு செய்கிறது.

"இன்னா செய்தாரை ஒறுத்தற்கால் அவன் நாண

நன்னயம் செய்துவிடல்"

இதுதான் உண்மையான வாழ்க்கை " ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு " என்பதும் அதுதான்.

மதங்கள் எங்கனம் அதற்குத் துணை நிற்கின்றன?

மதங்கள் கூறும் கருத்தக்களில் நின்று இன்றுவரை வெளிப்பட்ட நிற்பவர்கள் யார்? யேசு சொன்னார், நபிகள் சொன்னார், வாசகர் சொன்னார் என்றெல்லாம் நல்வழிப்படுத்தம் கருத்துக்கள் சமூக நன்மைக்காக வழங்கப்பட்டுள்ளதே. அது சரி அறிவியல் விஞ்ஙானக் கருத்துகள் சமூக நன்நடத்தைக்காக கூறியுள்ள கருத்துக்கள் என்ன வென்று ஒருக்கால் சொல்லுங்களேன்?

அன்பே கடவுள் எனில் , அன்பு எவர் மேல் காட்டப்பட வேண்டியது?

அன்பை மற்ற உயிர்களிடத்தில் காட்டுங்கள். அந்தக் கருத்தில் தவறில்லை. அதைப் பேணத் தவறுபவர்களிடமே தவறுண்டு. பகுத்தறி இதற்குத் துணை வராதோ?

கடவுளுக்குக் கோவிலும் வணக்கமும் பூசையும் புனஸ்காரமும் கொடியும் கோபுரமும் எதற்க்கு?.மதச் சண்டைகளும் மதத்தால் மக்களை அடக்குவதும் கொல்வதுவும் எதற்கு?

மதங்கள் மக்களை வழி நடாத்த கூடியன வென்றால் ஏன் அரசும் சட்டமும் போலிசும் நீதிமன்றங்களும் சிறையும் தண்டனையும்?

அது தேவையில்லை என்பதும் தற்போதைய நிலையில் எனக்கம் உடன்பாடுதான். ஆனால் போலீசும் நீதிமன்றங்களும் இல்லாதிருந்த காலத்தினைச் சிந்தித்தப் பாருங்கள். கோயில்கள் இத்தனை பங்குகளையும் ஆற்றியுள்ளது. கோயில் சமூகத்திற்காக நிறுவப்பட்ட ஒன்றுதான். அது இன்று கள்ளப் புத்தி கொண்டவர்களின் இடமாக மாறிவிட்டது.

என்னிடமும் ஒரு கேள்வியுண்டு.

பகுத்தறிவு பேசுபவர்களால் ஒரு கோயில் கட்டுவதைக் கூட தடுத்த நிறுத்த முடிகிறதா? கோயில் என்ற சொன்னாலே வீட்டில் பகுத்தறிவு பேசும் கணவன் ஒருபுறம். கடவுள் என வழிபடும் மனைவி கணவனையும் மீறி கோயில் பக்கமே சாய்கின்றாள். மனைவிக்காக என்று கூறி கணவனும் பின் தொடர்கின்றான்.

ஓ இப்ப விளங்குது பிரச்சினை.

வழக்கமா பகுத்தறிவு என்று எதாவது தலைப்பை கண்டதும் இல்லை நாரதர் என்று கண்டதும் இடையில வந்து சம்பந்தா சம்பந்தம் அற்று எழுதும் இருவர் வந்து எழுதினார்கள்.அதற்கான பதில் தான் வன்னி பங்கர் லையின் கதை.இபோது அந்தக் கருதுக்கள் இரண்டும் தூக்கப்பட்டு விட்டதால் உங்களுக்கு நான் எழுதினதன் அர்த்தம் விளங்கவில்லை. :unsure:

:o மன்னிக்கவும் நாரதர்!

அட தூக்குறதுதான் தூக்குறாங்க.. உருப்படியாய்த் தூக்குங்கப்பா.. அரைகுறையாத் தூக்கிக் காட்டி மனுசரை அந்தரப்பட வைக்கிறியள்.. :D:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.