Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிலவுப் பயணம் ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45126275_lunar_path466.gif

சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com

இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், பூமியில் அரிதாக காணப்படுவதும் ஆனால் அணுக்கரு மின் உற்பத்திக்கு பயன்படக் கூடியதுமான கீலியம் 3 சமதானி (Helium 3, isotope) சந்திரனில் அதிக அளவில் இருக்கிறதா என்று கண்டறிய முயல்வதுடன் சந்திரனைப் பற்றிய அங்குள்ள தரைத்தோற்றம் மற்றும் கனிமங்கள் தொடர்பிலான முப்பரிமான atlas ஒன்றை உருவாக்கத்தக்க வகைக்கு அனைத்துத் தகவல்களையும் திரட்டுவதுமாகும்.

சந்திராயன் -1, சந்திரனை 1000 தொட்டக்கம் 100 கிலோமீற்றர்கள் வரை மிக நெருங்கி அணுகி நீள்வட்டப் பாதையில் சுற்றி ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கும் அதேவேளை சந்திரனில் இறங்கு கலத்தை (Moon Impact Probe (MIP)) சந்திரனில் இறங்கி அதன் மூலம் சந்திரனின் வளிமண்டலம் மற்றும் தரைத்தோற்றம் பற்றிய ஆய்வுகளையும் செய்யவுள்ளது.

சந்திராயன் -1 திட்டம் மூலம் 2 ஆண்டுகள் காலத்துக்கு ஆய்வுகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திராயன் -1 கலத்தில் பல ஆய்வுநிலை உபகரணங்கள் அதன் ஆய்வுப் பணிக்காகப் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி உள்ளூர் உற்பத்திகளாகும். பிற வெளிநாட்டு உற்பத்திகளாகும். சந்திராயன் -1 தனி ஒரு சூரிய மின்கலத்தகடு கொண்டு சுமார் 700 Watts மின்னைப் பிறப்பித்து அதன் மூலம் இயங்கவுள்ளது.

சுமார் 78 மில்லியன் டாலர்கள் செலவில் செய்யப்படும் சந்திராயன் -1 ஆய்வுத்திட்டம் சில தரப்புக்களால் வரவேற்கப்படவில்லை. காரணம் இந்தியாவில் பல மில்லியன் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் பல கோடி டொலர்களை விழுங்கும் இத்திட்டங்கள் அவசியமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனினும் ஆசிய பிராந்தியத்தில் சீனா - ஜப்பான் - இந்தியா என்ற முத்தரப்பும் போட்டா போட்டுக் கொண்டு விண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருப்பது விண்வெளிக்கான போட்டா போட்டி மேற்குலகிடமிருந்து ஆசியாவின் கைகளுக்கு மாறிவிட்டதோ என்ற எண்ணத்தையே தோற்றிவித்துள்ளது.

எதுஎப்படி இருப்பினும்... இந்தப் போட்டா போட்டியால் அறிவியல் உலகுக்கு பல நல்ல சங்கதிகள் கிடைக்கும் என்பது மட்டும் தெளிவு.

மூலம்: http://www.kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், பூமியில் அரிதாக காணப்படுவதும் ஆனால் அணுக்கரு மின் உற்பத்திக்கு பயன்படக் கூடியதுமான கீலியம் 3 சமதானி (Helium 3, isotope) சந்திரனில் அதிக அளவில் இருக்கிறதா என்று கண்டறிய முயல்வதுடன் சந்திரனைப் பற்றிய அங்குள்ள தரைத்தோற்றம் மற்றும் கனிமங்கள் தொடர்பிலான முப்பரிமான atlas ஒன்றுக்கான அனைத்துத் தகவல்களையும் திரட்டுவதுமாகும்.

இந்தியாவின் நிலவுப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் .

சந்திரனில் பனி இருக்கிறதா , இல்லையா என்று ஆராய்வதற்கு முதல் , பக்கத்து மாநிலங்களில் வீணாக கடலில் போகும் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுத்தால் இன்னும் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

சந்த்ராயன் விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு சந்த்ராயன்௧ விண்கலத்தை ஏந்திக் கொண்டு இன்று காலை வெற்றிகரமாக விண்ணி்ல் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி௨ ராக்கெட்.

ஏவப்பட்ட 1,102வது வினாடியில் சந்த்ராயன் விண்கலத்தை அதற்கு உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது பிஎஸ்எல்வி.

சந்த்ராயன் விண்கலம் சிறப்பாக இயங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களும் அதன் சிக்னல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நிலாவை அடையும் இந்தியாவின் பயணத்தில் முதல் அடி மிக வெற்றிகரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

இப்போது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது சந்த்ராயன். நீள்வட்டப் பாதை என்பதால் இந்த விண்கலத்துக்கும் பூமியிலிருந்து இடையிலான குறைந்தபட்ச தூரம் (பெரிகே) 250 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் (அபொகே) 23,000 கிமீ ஆகவும் இருக்கும்.

இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமியிலிருந்து மேலும் தூரத்துக்கு தள்ளுவர் விஞ்ஞானிகள். இந்த ராக்கெட்டுகள் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மூலமாக, ரேடியோ சிக்னல்கள் மூலம் இயக்கப்படும்.

ராக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.

மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும்.

அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் சந்த்ராயன் ஈர்க்கப்பட்டு அதன் சுற்றுப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். இதையடுத்து நிலவுக்கும் சந்த்ராயனுக்கும் இடையிலான தூரம் 100 கி.மீயாக குறைக்கப்படும்.

1,380 கிலோ எடையுள்ள சந்த்ராயன்௧ விண்கலம் அடுத்த இரண்டாடுகள் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவும் தாமும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு விடயங்களிலும் நிரூபித்துக்கொண்டுவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் இஸ்ரோ விஞ்ஞானியான பொள்ளாச்சியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை.

இந்தியாவை உலக விண்வெளி அரங்கில் உயரிய இடத்தில் நிறுத்த உதவும் சந்திராயன் விண்கலம், இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்தோஷத்தே நாடே கொண்டாடி வருகிறது. இந்த சந்தோஷத்தின் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பதில் தமிழகமும் பெருமை கொண்டுள்ளது.

அவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திராயன் திட்டத்தின் இயக்குனராக செயல்பட்டவர்.

அண்ணாதுரை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மயில்சாமி. கோவை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரிகளில் படித்தவர் அண்ணாதுரை.

1982ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகப் பணியில் சேர்ந்தார்.

நிலாவுக்கு செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்ததும் இஸ்ரோ அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதற்காக முதலில் தனிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவிடம் சந்திராயன் விண்கலத்தை வடிவமைக்கும் பொறுப்பு விடப்பட்டது.

இதுதொடர்பான குழுவின் தலைவராக, திட்ட இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இதையடுத்து களத்தில் இறங்கிய அண்ணாதுரை, இரவு பகலாக தன்னை இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

விண்கலத்தின் முக்கிய பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இவரே தீர்மானித்தார். மொத்தமே ரூ. 386 கோடியில் சந்திராயனை அண்ணாதுரை தலைமயிலான குழு உருவாக்கியது.

இதுவே வெளிநாட்டில் தயாரிப்பதாக இருந்தால் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் இன்று கொடி கட்டிப் பறக்க முக்கிய காரணம் அப்துல் கலாம். அந்த வரிசையில் தற்போது சந்திராயன் பயணத்திற்கான பிள்ளையார் சுழியை இந்தியா போட முக்கிய காரணமாக அமைந்துள்ளார் தமிழரான அண்ணாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து அண்ணாதுரை கூறுகையில், எங்களது குழந்தை நிலவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் புன்னகையுடன்.

சந்திராயன் விண்கலத்தை நாம் ஏவி விட்டாலும் கூட அதன் பயணம் முழமையாக முடியும் வரை விஞ்ஞானிகள் பதை பதைப்புடன்தான் இருப்பார்கள். காரணம், சந்திராயன் பயணத்தின் தன்மை அப்படி.

இதுவரை நாம் புவி வட்டப் பாதை வரைக்கு மட்டும்தான் விண்கலங்களை அனுப்பியுள்ளோம். பூமியிலிருந்து நிலவு 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை சந்திராயன் திட்டமிட்டபடி படிப்படியாக கடக்க வேண்டும். எனவே இது சிக்கலான ஒன்றுதான் என்கிறார் பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநரான அலெக்ஸ்.

TamilnaduTalk.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tech1ko3.jpg

சந்திராயனின் பயணப்பாதை.

http://www.isro.org/chandrayaan-1/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிலவை நெருங்கும் சந்திராயன்:75,000 கி.மீ உயரத்தில்!

பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்௧ விண்கலம் தனது நிலவுப் பயணத்தில்20 சதவீதத்தை முடித்துள்ளது. தற்போது 75,000 கி.மீ. உயரத்தை நெருங்கியுள்ளது சந்திராயன்௧

இன்று காலை 5.48 மணி முதல் சந்திராயன் விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கப்பட்டது. 16 நிமிடங்களுக்கு இது இயக்கப்பட்டது. இதன் மூலம், சந்திராயன் விண்கலம், பூமியிலிருந்து 74 ஆயிரத்து 715 கிலோமீட்டர் தூரத்தை எட்டியது என்று இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்தார்.

இன்றைய செயல்பாடு ஒரு சாதனை அளவு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதுவரை இந்திய செயற்கைக் கோள்கள் அதிகபட்சம் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தைத்தான் எட்டியுள்ளன. முதன் முதலாக சந்திராயன்௧ விண்கலம் 75 ஆயிரம் கிலோமீட்டரை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில் இது முக்கிய சம்பவம். குறுகிய காலத்தில் இதை சாதித்துள்ளோம் என்றார்.

பூமியலிருந்து நிலா 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் சுற்றுப் பாதைக்கு நவம்பர் 8ம் தேதி சந்திராயன் ௧ செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து நிலவு 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

சந்திராயன்௧ விண்கலத்தில் அனைத்துப் பகுதிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் சந்திராயன்௧ விண்கலத்தின் உயரம் மேலும் அதிகரிக்கப்படும்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திராயன் அனுப்பிய படங்கள் - கலாம் மகிழ்ச்சி

பெங்களூர்: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் விண்கலம் முதன்முதலாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ள படங்களைப் பார்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு முன் பிஎஸ்எல்வி மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது சந்த்ராயன். இப்போது நிலவுக்கு பாதி வழியில் உள்ள சந்த்ராயன் பூமியை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்துள்ளது.

அதில் உள்ள டெர்ரைன் மேப்பிங் கேமரா (Tஎர்ரைன் Mஅப்பிங் Cஅமெர) முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது. இந்தப் படம் 19ம் தேதி காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அப்போது சந்த்ராயன் பூமியிலிருந்து 9,000 கி.மீ உயரத்தில் பறந்தது.

இதையடுத்து 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது. அப்போது அது பூமியிலிருந்து 70,000 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

இந்தப் படங்களை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காட்ட அவர் பெரும் ஆர்வத்துடன் அதைப் பார்த்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சந்திராயன் அனுப்பிய படங்களைப் பார்த்து சந்தோஷம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாதவன் நாயர் என்னிடம் காட்டிய படங்ள் மிகவும் சிறப்பானவை. துல்லியமாக உள்ளன.

ஒவ்வொரு இந்தியனும், இந்த வெற்றிக்காக பெருமைப்பட வேண்டும் என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் இருந்து 1 1/2 லட்சம் கி.மீ. தொலைவை சந்திராயன் அடைந்தது

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 22-ந் தேதி செலுத்தப்பட்ட `சந்திராயன்-1' செயற்கைக்கோள், நேற்று காலை 7 மணி அளவில் அடுத்த கட்ட சுற்றுப்பாதையை அடைந்தது. அதன்படி பூமியில் இருந்து 1 1/2 லட்சம் கி.மீ. தொலைவில் சுற்றத்தொடங்கியது. அந்த சுற்று வட்டப்பாதையில் பூமியை ஒரு முறை சுற்றுவதற்கு 73 மணி நேரம் பிடிக்கும்.

இந்தியாவின் 45 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு தொலைவுக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். திட்டமிட்டபடி சந்திராயன்-1 முன்னேறி வருவதால், நவம்பர் 8-ந் தேதி அன்று நிலாவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது, பூமியில் இருந்து சுமார் 4 லட்சம் கி.மீ., தொலைவில் சந்திராயன்-1 சுற்றத் தொடங்கும்.

http://www.tamilnews.dk/article/sciencenews/7273/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_45174838_spacecraft_orbits_466.gif

நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆள் இல்லாத சந்திராயன் -1 விண்கலம் கடந்த அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம் கிடைத்தது. இந்த நிலையில், தற்போது புவி ஈர்ப்பு விசைப் பகுதியைக் கடந்து நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் கட்டமைப்பின், சந்திராயன்-1 விண்கல கட்டு்பாட்டு மையத்தில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

நேற்று மாலை 4.51 மணியளவில், சந்திராயன் விண்கலத்தில் உள்ள திரவ எரிபொருள் என்ஜினை, 817 விநாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி, சந்திராயன் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தினர்.

மிக மிக கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பணி இது. கொஞ்சம் அழுத்தம் அதிகமானாலும் கூட விண்கலம் சேதமடைந்து விடும் என்பதால் மிக மிக கவனமாக இப்பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

திட்டமிட்டபடி இப்பணி முடிந்ததால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள நாடுகள் வரிசையில், இந்தியாவும் இணைந்துள்ளது.இதற்கு முன்பு அமெரிக்கா, சோவியத் யூனியன், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.

தற்போது சந்திராயன் விண்கலம் நிலவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீள்வட்டப் பாதையில் நிலவை சுற்றி வருகிறது சந்திராயன்-1. நவம்பர் 11ம் தேதி, சந்திராயன் -1 விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப், நிலவில் தரையிறங்கும்.

தகவல்: தற்ஸ்தமிழ்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.