Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிவினையைத் தூண்டியதாக இயக்குநர்கள் சீமான்- அமீர் கைது

Featured Replies

நிஜமாவா சொல்றீங்க 4 லட்சம் தமிழர்கள் கனடாவில் உள்ளனரா??? :wub:

வேலவன்! இந்த 4 இலட்சம் என்ற கணக்கெடுப்புக்கூடச் சரியானதல்ல. உண்மையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் 4 இலட்சம்பேர் கனடாவுக்கு வந்துள்ளதாகத்தான் புள்ளிவிபரம் கூறுகிறது. இதில், கனடாவிலேயே பிறந்து வளர்ந்த அவர்களுடைய சந்ததி உள்ளடக்கப்படவில்லை.

அப்போ 4 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றனரா???

வேலவன்! இந்த 4 இலட்சம் என்ற கணக்கெடுப்புக்கூடச் சரியானதல்ல. உண்மையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் 4 இலட்சம்பேர் கனடாவுக்கு வந்துள்ளதாகத்தான் புள்ளிவிபரம் கூறுகிறது. இதில், கனடாவிலேயே பிறந்து வளர்ந்த அவர்களுடைய சந்ததி உள்ளடக்கப்படவில்லை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் ஏன் கனடாவை விட்டுட்டியள்? அங்கை தானே 4 லட்சம் இருக்கு?

அப்ப கனடாவில??? ஏன் கேக்கிறனெண்டால்... புலம்பெயர் ஈழத்தமிழரில அரைவாசிப்பேருக்கு மேல கனடாவிலதான் இருக்கிறதாச் சொல்லுறாங்கள். நானறிஞ்சவரை ஒருத்தருக்குப் போட்டியாய் இன்னொருத்தர் 24 மணிநேர தொடர் நிகழ்ச்சியள, அதுவும் ஒரே நேரத்தில போட்டிபோட்டுக்கொண்டு நடத்துறதுதான் இப்ப நடக்குது. +

என்ன செய்வது கனடாவில் இருக்கும் ஈழவர்கள் ஈர விறகுகளாக உள்ளார்களே! அவைகளும் எரியும் நாள் தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது கனடாவில் இருக்கும் ஈழவர்கள் ஈர விறகுகளாக உள்ளார்களே! அவைகளும் எரியும் நாள் தொலைவில் இல்லை.

வாசகி கனடாவில் ஈரமில்லா விறகுகள் நிறைய இருக்கின்றன. ஆனால் பத்தவைக்க ஒரு தீக்குச்சி தான் இல்லை.

தீக்குச்சிகளாய் இருக்கவேண்டிய தமிழர் பிரதிநிதிகள் என்று இருப்பவர்கள் தடைச் சட்டங்களுக்குப் பயந்தும், தூரநோக்கின்மையாலும், சுயநல நோக்கங்களுக்காக்வும் தப்பித் தவறியேனும் எரிந்துவிடக் கூடாதென்று குளிர் சாதனப் பெட்டிக்குள் தங்களை தாங்களே பூட்டி வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகி கனடாவில் ஈரமில்லா விறகுகள் நிறைய இருக்கின்றன. ஆனால் பத்தவைக்க ஒரு தீக்குச்சி தான் இல்லை.

தீக்குச்சிகளாய் இருக்கவேண்டிய தமிழர் பிரதிநிதிகள் என்று இருப்பவர்கள் தடைச் சட்டங்களுக்குப் பயந்தும், தூரநோக்கின்மையாலும், சுயநல நோக்கங்களுக்காக்வும் தப்பித் தவறியேனும் எரிந்துவிடக் கூடாதென்று குளிர் சாதனப் பெட்டிக்குள் தங்களை தாங்களே பூட்டி வைத்திருக்கிறார்கள்.

எதுக்கும் கனடாப் பிரதிநியை உரசிப்பாருங்கோ. ஒரு குச்சி காணும்தானே!

எதுக்கும் கனடாப் பிரதிநியை உரசிப்பாருங்கோ. ஒரு குச்சி காணும்தானே!

சுயாதீனமா எரியக்கூடிய தீக்குச்சிகளை எரியவும் விடமாட்டார்கள். அப்படி எரிந்தாலும், ஏதாவது சாட்டுச் சொல்லி மட்டந்தட்டிப் போட்டுவிடுவார்கள். எல்லாம் தமிழ்த் தேசியத்தின் உண்மையான விசுவாசிகள் தாங்கள்தான் என்பதைக் காட்டும் தூய நோக்கம் தான். முதலில் இவர்களிடமிருந்து தமிழ்த்தேசியத்தைக் காப்பாற்றவேண்டும்.

ஒரு சீமான் கைது செய்யப்பட்டால் ஆயிரம் சீமான் அமீர் வைகோ போன்றவர்கள் உருவாவர்கள் என்பதை ஏன் ஜெயலலிதா அரசு அறிய மறுக்கின்றது. கைது என்ற பெயரில் தன் தலையிலேயே அரைத்துக்கொள்கின்றுது. எமக்கான வெற்றியே இதுதான். . இதிலிருந்துதான் எம் விடுதலைக்கான தீ இன்னும் பெரிதாக எரியப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், எமக்குக் கிடைத்திருக்கும் கிடைத்தற்கரிய உடன் பிறப்பு. இவர் போல் தெளிவும் உறுதியும் உள்ள ஒரு தமிழக உறவை இதுவரை கண்டதில்லை. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உணர்வும் ஆத்திரமும் எவரையும் கட்டிப் போட்டு விடும். அவரின் பல பேச்சுக்களை நான் முன்னர் கேட்டு வியந்திருக்கிறேன். ஆனால் அந்த "ராமேஸ்வரப் பேச்சு" என்னை வெகுவாகப் பாதித்து விட்டது. இதுவரையிலும் குறைந்தது 5 அல்லது 6 முறையாவது திருப்பித் திருப்பிக் கேட்டுவிட்டேன். ஆனால் அதன் பாதிப்புக் கூடுகிறதே ஒழியக் குறையவில்லை.

ஈழத்தமிழனை தனது சகோதரனைப் போலவும் , ஈழத்துத் தாயை தனது தாயாகவும், தங்கையாகவும் உணர்ந்து ஆவேசத்துடன் பேசிவரும் இந்த மனிதனுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் ?! வெறுமனே நன்றி என்ற வார்த்தை என்ன செய்துவிடப்போகிறது. மவுனம் தான் இப்போதைக்கு முடிந்தது !!!!!கண்கள் மட்டும் குளமாக !!!!!!!

இப்போதுதான் தெரிகிறது தமிழகத்தில் நாம் பல நெஞ்சங்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்பது !!!!!!

நீ நீடுழி வாழவேண்டும் !!!வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா டைரக்டர்கள் சீமான்&அமீர் கைது

சென்னை, அக்.25&:விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக டைரக்டர்கள் சீமானும், அமீரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் குலைக்கும் வகையிலும், பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் ‘கியூ‘ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய கண்டன பேரணியில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் பேசிய பேச்சும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்களையும் கைது செய்யவேண்டும் என்று ஏற்கனவே சில அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் ‘கியூ‘ பிரிவு போலீசார், சென்னை கே.கே.நகரில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டுக்கும், வளசரவாக்கத்தில் உள்ள டைரக்டர் சீமான் வீட்டுக்கும் சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ள சென்று இருந்தனர்.

இரவு 7.30 மணியளவில் டைரக்டர் அமீர் அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது தயார் நிலையில் இருந்த ‘கியூ‘ பிரிவு போலீசார் டைரக்டர் அமீரை கைது செய்து காரில் ஏற்றினார்கள். பின்னர் அவருடன் வளசரவாக்கத்தில் உள்ள டைரக்டர் சீமான் வீட்டுக்கு சென்றனர். சீமான் அப்போதும் வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் அவர் வந்தபோது, அவரையும் போலீசார் கைது செய்தனர்.

சற்று நேரத்தில் சீமானின் வீட்டுக்கு டைரக்டர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், விக்ரமன், லிங்குசாமி, செல்வமணி, எழில், சண்முகசுந்தரம், கரு.பழனியப்பன், சேரன், ராம், ஜெகன், மூர்த்தி, பாலாஜி சக்திவேல், கவிஞர் நா.முத்துகுமார் மற்றும் ஏராளமான உதவி டைரக்டர்கள் குவிந்தனர்.

இரவு 9.15 மணியளவில் டைரக்டர்கள் அமீரையும், சீமானையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள் இருவரிடமும் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள கியூ பிரிவில் வைத்து விசாரணை நடந்தது. இரவு அங்கே அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

போலீசார் கைது செய்து அழைத்து செல்லும்போது டைரக்டர் அமீர் கூறும்போது, ‘‘தமிழர்களுக்காக குரல் கொடுத்தேன்.‘‘ தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன். எத்தனை முறை வேண்டுமானாலும் அதற்காக சிறை செல்வேன் என்று குறிப்பிட்டார். டைரக்டர் சீமான் கூறும்போது, எங்களை கைது செய்வதற்காக தூண்டியது யார் என்பது அடையாளம் தெரிந்துவிட்டது. என்று கூறினார்.

டைரக்டர்கள் அமீரையும், சீமானையும் கைது செய்தது ஏன் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி (சட்டம்&ஒழுங்கு) கே.பி. ஜெயின் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:&

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத்தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக 19.12.2008 அன்று ராமேசுவரத்தில், ‘‘தமிழ் திரை உலக தமிழின உணர்வுக்குழுவின்‘‘ சார்பில், பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

அப்பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய அரசின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் பேசினார்கள்.

அவர்களது பேச்சுக்கள் சட்டவிரோதமாக இருந்தபடியால், இது குறித்து, 24.10.2008 ராமநாதபுரம் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை இ.பி.கோ. 124&ஏ (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுமை வகையில் பேசுதல்), 153 (ஏ) (1) (பி) (பிரிவினைவாதத்தை தூண்டுதல்) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவு 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் அடிப்படையில் திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு டி.ஜி.பி. கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.

விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயாதீனமா எரியக்கூடிய தீக்குச்சிகளை எரியவும் விடமாட்டார்கள். அப்படி எரிந்தாலும், ஏதாவது சாட்டுச் சொல்லி மட்டந்தட்டிப் போட்டுவிடுவார்கள். எல்லாம் தமிழ்த் தேசியத்தின் உண்மையான விசுவாசிகள் தாங்கள்தான் என்பதைக் காட்டும் தூய நோக்கம் தான். முதலில் இவர்களிடமிருந்து தமிழ்த்தேசியத்தைக் காப்பாற்றவேண்டும்.

நக்கீரரா இப்படிக் கதைப்பது!

களத்தில் இறங்கிய பிறகு

கைகளைக் கட்டிப்போடுவதும்

அவிழ்த்து விடுவதும் தமிழ்த்தேசியம்தாங்கோ.

அவனின்று அணுவும் அசையாது பாருங்கோ.

ஒரு சீமான் கைது செய்யப்பட்டால் ஆயிரம் சீமான் அமீர் வைகோ போன்றவர்கள் உருவாவர்கள் என்பதை ஏன் ஜெயலலிதா அரசு அறிய மறுக்கின்றது. கைது என்ற பெயரில் தன் தலையிலேயே அரைத்துக்கொள்கின்றுது. எமக்கான வெற்றியே இதுதான். . இதிலிருந்துதான் எம் விடுதலைக்கான தீ இன்னும் பெரிதாக எரியப்போகின்றது.

புதிய பரணீயாக உங்களைப் பார்க்கின்றேன். எங்களுக்குள் இருக்கும் எங்கள் எதிர்ப்பாளர்களை எதிரிக்கு அடையாளம் காட்டாமல் இருப்பதே என்னைப் போன்ற சிவ்வவர்களால் செய்யக்கூடிய அதிகூடிய உதவி.

தமிழக மக்களிடையே ஜெயா மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பு கூடுகிறது.........

சீமான் மீது அனுதாபமும் ஈழத்தமிழர் ஆதரவும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

வழமையாக இப்படியான கைதுகள் கலைஞர் மீதுதான் கோபத்தை தெளிக்கும் ஆனால் இது ஜெயா மீது திருப்பி விடப்பட்டு இருக்கிறது...!!

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய சீமான், அமீர் இருவரையும் 9ம் திகதிவரை சிறையில் அடைப்பு

நேற்று இரவு கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான் மற்றும் அமீர் அவர்களை காவல்துறையினர் இன்று காலை சென்னையிலிருந்து 7.15 மணி விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்தனர். தகவல் அறிந்த பெரியார் திராவிடர்கழகத்தின் மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழர்கள் இயக்குநர்கள் அமீர் & சீமானை இராமேசுவரத்துக்கு அழைத்து செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் நடுவணரசைக்கண்டித்தும் முழக்கமிட்டுக்கொண்டே வாகனத்தில் வந்தார்கள்.

இத்தகவல் அறிந்த விடுதலைச்சிறுத்தைகள் , தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் பல தமிழின உணர்வாளர்களும் இணைந்துகொண்டனர்.

காலை உணவினை காவல்துறையினரும் இயக்குநர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பரமக்குடியில் உள்ள ஒரு விடுதியில் முடித்த பின்னர் இராமேசுவரம் நீதிமன்றத்துக்கு 11.30 மணியளவில் கொண்டுசெல்லப்பட்டனர்.

நீதிமனறத்திற்கு முன்பாக அனத்து தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரண்டு நிற்கின்றனர்.

இந்நிகழ்வினை மதுரை தோழர் முருகேசன் , தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் இராமநாதபுரம் தோழர் நாகராசன் போன்றோர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இயக்குநர் அமீர் மற்றும் சீமானை நவம்பர் 9 ஆம் திகதிவரை மதுரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது காவல்துறையினர், இருவரையும் மதுரை சிறையில் அடைக்க வாகனத்தில் கொண்டு செல்லுகின்றனர். நீதிமன்றத்தின் வெளியே குழுமி இருந்த பொதுமக்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் இந்திய நீதிமன்ற நடுவரைக்கண்டித்தும் முழக்கமிட்டனர்.

www.tamilwin.com

Edited by THEEPAN0007

கைகளைத்தான் கட்டிவைத்திருக்கின்றார்கள். உதடுகள் திறந்துதான் இருக்கின்றது. அவர்களின் பேச்சுக்களிற்கு தடை இல்லை. அதுதூன் எமது மூச்சாக இன்று இருக்கின்றது. ஆகவே கவலை இல்லை அவர்கள் நான்கு சுவற்றுக்குள் இருந்தாலும் எமக்காக பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

அலையைத்தான் அடக்கயிருக்கின்றார்கள் கடல் அப்படியேதான் இருக்கின்றது. நாளை சுனாமியே தோன்றும் அப்போது என்ன செய்யப்போகின்றது இந்திய அரசு. . .

புரியவில்லை நண்பரே. . நான் என்றும் பழையவன்தான் . .

QUOTE (Paranee @ Oct 24 2008, 09:44 PM)

ஒரு சீமான் கைது செய்யப்பட்டால் ஆயிரம் சீமான் அமீர் வைகோ போன்றவர்கள் உருவாவர்கள் என்பதை ஏன் ஜெயலலிதா அரசு அறிய மறுக்கின்றது. கைது என்ற பெயரில் தன் தலையிலேயே அரைத்துக்கொள்கின்றுது. எமக்கான வெற்றியே இதுதான். . இதிலிருந்துதான் எம் விடுதலைக்கான தீ இன்னும் பெரிதாக எரியப்போகின்றது.

புதிய பரணீயாக உங்களைப் பார்க்கின்றேன். எங்களுக்குள் இருக்கும் எங்கள் எதிர்ப்பாளர்களை எதிரிக்கு அடையாளம் காட்டாமல் இருப்பதே என்னைப் போன்ற சிவ்வவர்களால் செய்யக்கூடிய அதிகூடிய உதவி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரணீ...

ஆயிரம் யானை கொன்றால் பரணி. உங்கள் எழுத்தில் பரணி பாடக்கூடியளவுக்கு வீரியம் கண்டேன். அதனால் மெய்சிலிர்த்தேன். அந்த சிலிர்ப்பு பதிவாக வந்து விழுந்தது. தவிர வேறு ஒன்றும் இல்லை.

நிற்க,

அசித்,அர்சுன் போன்றோர் எங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் நாம் ஒவ்வொருவரும் அவர்களை இரகசியமாகப் புறக்கணிப்போம். புறக்கணியுங்கள் என்று அறௌகூவல் விடுத்தோ, புறக்கணிக்கின்றோம் என்று பகிரங்கப் படுத்தியோ, அவர்களுடைய இரசிகர்களான ஈழ இந்திய தமிழாதராவாளர்களை நாம் ஏன் இழக்க வேண்டும். இருவருக்காக பலரை இழப்பது தேவைதானா? ஒரு உதாரணத்துக்கு சொகிறேனே தவிர உங்கள் மற்றைய திரிக்கான பதிலாகக் கொள்ளாதீர்கள்.

நன்றி வாசுகி

ஒன்று தெரியுமா ? எம் உறவுகளை தட்டி எழுப்பினால்தான் எழும்பிக்கொள்வார்கள். இல்லாவிட்டால் அவன் செய்யட்டும் நான் பிறகு செய்கிறேன் என்று இருப்பார்கள். ஏன் நாமும் அப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தேன் அதுதான் அந்த புறக்கணிப்பு. இந்திய ரசிகர்கள் தற்போது திருந்திவிட்டார்கள். அவர்களிற்கு தெரியும் எல்லாமே . . எம்மவர்கள்தான் இன்னும் உறக்கநிலையில். . ஒரு கை தட்டினேன் பல கைகள் சேருகின்றன. ஒரு நடிகரிற்கான எதிர்ப்பு மற்றையவர்களையும் சிந்திக்க வைக்கும். அதுதான் எமக்குத்தேவை. உறங்கியது போதும். உணவின்றி உடையின்றி மழை வெயிலின் மத்தியிலும் பாறையிலும் மோசமாக வாடும் எம் உறவுகளை எண்ணிப்பாருங்கள். எல்லாம் தோன்றும்.

குறிப்பாக குறுக்காலபோவன் இணைத்த ஒரு இணைப்பு என்னை முழுமையாகவே பாதித்து விட்டது. அந்த இணைப்பில் இருந்த படங்கள் என்னை செருப்பால் அடிக்காத குறையாக அடித்துவிட்டது. காரணம் அது என்சகோதரியோ தங்கையே ஏன் எனது மகளாககூட இருக்கலாம். எமக்கா தங்கள் ஆசை பாசம் உணவு எல்லாம் மறந்து போராடி இன்று கொடிய அரக்கர்களால் இந்த நிலை. . நாம் இங்கே உண்டு உடுத்து படம் பார்த்து தண்ணி அடிச்சு சந்தோசமாக எந்த யோசனையும் இல்லாமல் திரிகின்றோம்.

நாளை ஈழம் கிடைக்கும்போது அந்த மண்ணில் கால்பதிக்க மனம் ஏவுமா ? என்ன செய்தோம் நாம். காசு கொடுத்தால் மட்டும் எதுவும் நடைபெற்று விடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சோதரர்களை தவறாக சொல்வதாக எண்ண வேண்டாம். காவேரியை தரமாட்டோம்; ஒகேனக்காலை ஒத்துக்கொள்ள மாட்டோம் என்ற மாதிரியான தம் தேவைகளை தட்டிப்பறிக்கும் இந்திய இறையாண்மை கேள்விக்குறி ஆக்கும் போதெல்லாம் தலைவன் வழி என்று அவர்கள் திரண்டு நிற்கும் தமக்குள் பிளவுண்டு நிற்கும் அவர்களா எமக்காக தமது ஆதர்ச நாயகர்களை எதிர்ப்பவர்களை ஆதரிக்கப்போகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் செய்வது போல் அவர் வராவிடிட்டால் என்ன நாம் செய்வோம் என்ற நிலையில் உள்ள இரசிகனை நமது கல்வீச்சுகள் என் தலைவனை தூசிப்பவர்களை நாம் ஆதரிப்பதா என்று எண்ண வைக்க மாட்டாதா?

இப்பக் கூடப் பாருங்கள் சீமானின் கைதில் உண்மை தமிழின விசுவாசி; கலைஞரின் விசுவாசத்தால் தமிழின விசுவாசி ஆனவர்கள் என்ற உடைவு அங்கே ஏற்பட நிகழ்தகவுண்டா இல்லையா? இதனால் எமக்கான உறுதுணை குறைகிறதா இல்லையா?

Edited by வாசகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.