Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்படும் மக்கள்

Featured Replies

மட்டக்களப்பில் இன்று கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்த துணைப்படைக் கருணா குழு உறுப்பினர்கள், மக்களை பலவந்தமாக இழுத்துச் செல்வதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழ் மக்களிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஆதரவுக் குரல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துணைப்படைக் கருணா குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் கண்டனப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், சிறீலங்கா படையினரது உதவியுடன் துணைப்படைக் குழுவினர் ஆயுத முனையில் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர்.

மக்களை இழுத்துச் செல்ல ஊர்தி செலுத்துனர்கள் தமது ஊர்திகளை வழங்க மறுத்த காரணத்தினால், கண்டி, மத்துகம போன்ற பிரதேசங்களில் இருந்து சிங்கள உரிமையாளர்களின் ஊர்திகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் துணைப்படைப் பிள்ளையான் குழுவுடன் முரண்பட்டுள்ள கருணா குழுவினர், அம்பாறையில் இனியபாரதி குழுவினரது துணையுடன், அம்பாறையில் மக்களை தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டிருந்தனர்.

துணைப்படைக் குழுவிற்கு அஞ்சி ஒரு சிலர் அவர்களது கட்டளைக்குப் பணிந்த போதிலும், ஏனைய பலர் ஓடி ஒழித்திருப்பதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் சிலர் தமிழர் பிரதேசங்களில் இருந்து முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குச் சென்று ஒழித்துக்கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாக, தமிழ்நாடு மக்களிற்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிராக துணைப்படைக் கருணா குழுவினால் நடத்தப்படும் இன்றைய கண்டனப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கருணா குழுவினால் இன்று பொதுமக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

துணைப்படைப் பிள்ளையான் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள கருணா, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சியின் பெயர், சின்னம் என்பவற்றை இன்று அறிவிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

பிள்ளையான் குழுவின் பெயரிலுள்ள புலி என்ற சொற்பிரயோகம், சின்னம் என்பவற்றை நீக்கி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் துணைப்படைக் கருணா குழுவிற்கு சூட்டப்படலாம் என எமது கொழும்புச் செய்தியாளர் நேற்று தெரிவித்திருந்தார்..

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இப்படிச் சொல்லுறீங்க..

சிங்களப் பேரினவாத அரச ஊடகம்.. இப்படிச் சொல்கிறது..

Over 20,000 persons at anti-Tamil Nadu rally in Batticaloa

Over 20,000 people have gathered for the anti- Tamil Nadu protest rally at Weber Ground, Batticaloa organized by the TMVP. Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan and party leader MP Vinayagamurthy Muralitharan are also at the rally despite their initial reservations about the event.

டெயிலிமிரர்

எனக்கோ 1988 சின்ன வயது ஞாபகங்கள் மனதோடு தோன்றி மறைகின்றன. வரதராஜப் பெருமாள் யாழ் மத்திய கல்லூரி மைத்தானத்துக்குள் கூட்டம் போட தயாராகிறார். மூலைக்கு மூலை இந்திய இராணுவம் பதுங்கி நிற்க.. திடீர் என சந்திக்கு சந்தி முளைக்கும் ஒட்டுக்குழுவினர்.. வீதியால் போய் வரும் மக்களின் அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக் கொண்டு அவற்றை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்து வாங்கிச் செல்லவும் என்று மிரட்டுகின்றனர். மக்களும் வேறு வழியின்றிப் போயினர்..

ஆனால்.. அன்றைய பிற்பகல்.. ஆகாசவானி.. செய்தியில்.. வரதராஜப் பெருமாளை ஆதரித்து மக்கள் பெருமளவில் ஒன்று கூடினர் என்று சொன்னார்கள். சென்னை வானொலி மாநிலச் செய்தியும் அதை பிரதி பண்ணத் தவறவில்லை.

இதையெல்லாம் கேட்டபோது.. என்ன அநியாயமடா இது என்று தோன்றியது. அப்போ அது புது அனுபவம். இப்போ அதுவே பழக்கப்பட்டுப் போய்விட்டது.. எனக்கும் தான் மக்களுக்கும் தான்..!

இதில் மக்களைக் குறைகூறிப் பயனில்லை.

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஓ! இது தான் நடுநிலை டெய்லிமிரரின் மாற்றுக்கருத்தா???

ஆனால் இந்த நடுநடிப்பு டெய்லிமிரர் தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி பற்றி மூச்சு கூட விடவில்லை.

அப்ப இண்டைக்கு தமிழோசையும் கதறும் எண்டுறீங்க <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! இது தான் நடுநிலை டெய்லிமிரரின் மாற்றுக்கருத்தா???

ஆனால் இந்த நடுநடிப்பு டெய்லிமிரர் தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி பற்றி மூச்சு கூட விடவில்லை.

வெற்றிவேல் டெயிலிமிரர் சொன்னது தவறல்ல. அங்கு people (மக்கள்) கூடவில்லை.persons (ஆட்கள்) கருணா ஆட்கள்.. பிள்ளையான் ஆட்கள்.. இராணுவ சிவிலுடை ஆட்கள்.. சிங்களக் காடை குடியேற்ற வாசிகள்.. மற்றைய ஒட்டுக்குழு ஆட்கள்.. கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆட்கள் கூடினர் என்று தானே சொல்லி இருக்கினம். உண்மையை மறைமுகமாகச் சொல்லி இருக்கினம்..! <_<

Edited by nedukkalapoovan

சிங்களவர்களையும் அழைத்து வந்ததாக நான் அறிந்தேன்.

நெடுக்ஸ்

இதில் மக்களைக் குறைகூறிப் பயனில்லை. மக்கள் நேசித்தவர்கள்.. மக்களை நிர்கதியாக விட்டிட்டு.. காட்டுக்க ஓடினதுதான் பிரச்சனை.. அவையும் தான் இதற்குப் பதில் சொல்லனும்..! அந்த மக்களுக்குத்தான் யார் துணை..??! மத்தளமாகி அடிவாங்கிக் கொண்டிருப்பதே அவர்களுக்கு பிழைப்பாகிப் போய்விட்டது.

உங்களின் இந்த கருத்துடன் 100 வீதம் உடன் படுகின்றேன்.கர்த்தால் என்று மட்டக்களப்பு நகரத்தில் அறிக்கை ஒன்று கிடைத்தால் 3 நாட்கள் என்றாலும் கடைப்பிடித்த மக்கள்.ஆனால் துப்பாக்கியுடனும் இரும்பு கம்பிகளுடனும்,பொல்லுகளுடனும?? திரிந்து ஒட்டுக்குழுக்கள் கடையை திறக்குமாறு அறிவித்தாலும் திறக்காத மக்கள் இவ்வளவு சென்றிருப்பார்கள் என்று நினைக்கவில்லை.ஆனால் அப்போது 3 கிலோமீற்றர் தொலைவில் புலிகள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் ஆனால் இப்போது......?

Edited by THEEPAN0007

வெற்றிவேல் டெயிலிமிரர் சொன்னது தவறல்ல. அங்கு people (மக்கள்) கூடவில்லை.persons (ஆட்கள்) கருணா ஆட்கள்.. பிள்ளையான் ஆட்கள்.. இராணுவ சிவிலுடை ஆட்கள்.. சிங்களக் காடை குடியேற்ற வாசிகள்.. மற்றைய ஒட்டுக்குழு ஆட்கள்.. கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆட்கள் கூடினர் என்று தானே சொல்லி இருக்கினம். உண்மையை மறைமுகமாகச் சொல்லி இருக்கினம்..! <_<

இதை நானும் அவதானித்தேன். இதை நாம் சொன்னால், விழித்துக்கொண்டு தலைப்பை மாற்றி விடுவார்களோ என்பதால் எழுதாமல் விட்டு விட்டேன்.

நீங்க இப்படிச் சொல்லுறீங்க..

சிங்களப் பேரினவாத அரச ஊடகம்.. இப்படிச் சொல்கிறது..

Over 20,000 persons at anti-Tamil Nadu rally in Batticaloa

Over 20,000 people have gathered for the anti- Tamil Nadu protest rally at Weber Ground, Batticaloa organized by the TMVP. Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan and party leader MP Vinayagamurthy Muralitharan are also at the rally despite their initial reservations about the event.

டெயிலிமிரர்

எனக்கோ 1988 சின்ன வயது ஞாபகங்கள் மனதோடு தோன்றி மறைகின்றன. வரதராஜப் பெருமாள் யாழ் மத்திய கல்லூரி மைத்தானத்துக்குள் கூட்டம் போட தயாராகிறார். மூலைக்கு மூலை இந்திய இராணுவம் பதுங்கி நிற்க.. திடீர் என சந்திக்கு சந்தி முளைக்கும் ஒட்டுக்குழுவினர்.. வீதியால் போய் வரும் மக்களின் அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக் கொண்டு அவற்றை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்து வாங்கிச் செல்லவும் என்று மிரட்டுகின்றனர். மக்களும் வேறு வழியின்றிப் போயினர்..

ஆனால்.. அன்றைய பிற்பகல்.. ஆகாசவானி.. செய்தியில்.. வரதராஜப் பெருமாளை ஆதரித்து மக்கள் பெருமளவில் ஒன்று கூடினர் என்று சொன்னார்கள். சென்னை வானொலி மாநிலச் செய்தியும் அதை பிரதி பண்ணத் தவறவில்லை.

இதையெல்லாம் கேட்டபோது.. என்ன அநியாயமடா இது என்று தோன்றியது. அப்போ அது புது அனுபவம். இப்போ அதுவே பழக்கப்பட்டுப் போய்விட்டது.. எனக்கும் தான் மக்களுக்கும் தான்..!

இதில் மக்களைக் குறைகூறிப் பயனில்லை.

நெடுக்காலபோவான்

இதுக்கெல்லாம் காரணம் கருணாநாய் என்று எல்லோருக்கும் தெரியுமே

அப்படி இருக்க இப்படி எழுதி இருக்கீங்க?

(நீங்கள் எழுதிய கருத்தைநீக்கீட்டீங்க என்மனதை விட்டு நீங்கவில்லை) <_<

எனக்கோ 1988 சின்ன வயது ஞாபகங்கள் மனதோடு தோன்றி மறைகின்றன. வரதராஜப் பெருமாள் யாழ் மத்திய கல்லூரி மைத்தானத்துக்குள் கூட்டம் போட தயாராகிறார். மூலைக்கு மூலை இந்திய இராணுவம் பதுங்கி நிற்க.. திடீர் என சந்திக்கு சந்தி முளைக்கும் ஒட்டுக்குழுவினர்.. வீதியால் போய் வரும் மக்களின் அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக் கொண்டு அவற்றை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்து வாங்கிச் செல்லவும் என்று மிரட்டுகின்றனர். மக்களும் வேறு வழியின்றிப் போயினர்..

ஆனால்.. அன்றைய பிற்பகல்.. ஆகாசவானி.. செய்தியில்.. வரதராஜப் பெருமாளை ஆதரித்து மக்கள் பெருமளவில் ஒன்று கூடினர் என்று சொன்னார்கள். சென்னை வானொலி மாநிலச் செய்தியும் அதை பிரதி பண்ணத் தவறவில்லை.

இதையெல்லாம் கேட்டபோது.. என்ன அநியாயமடா இது என்று தோன்றியது. அப்போ அது புது அனுபவம். இப்போ அதுவே பழக்கப்பட்டுப் போய்விட்டது.. எனக்கும் தான் மக்களுக்கும் தான்..!

இதில் மக்களைக் குறைகூறிப் பயனில்லை.

நெடுக்ஸ் நீங்கள் குறிப்பிட்ட வரதராஜபெருமாள் கூட்டத்திற்கு எங்கள் அம்மாவும் சில உறவினர்களும் சென்றார்கள். எப்படி தெரியுமா..?

வீட்டு விழா ஒன்றுக்காக யாழ்ப்பாண நகருக்கு புடவை எடுக்கச் சென்றவர்களை மிரட்டி வாகனத்தில் ஏற்றி ஊர்வலம் நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்றார்களாம். ஏற்கனவே மிரட்டி அழைத்து வரப்பட்ட மக்கள் அங்கு நின்றிருக்கிறார்கள். அங்கு வைத்து வலுக்கட்டாயமாக கைகளில் கோசங்கள் அடங்கிய போஸ்டர்கள் கொடுக்கப்பட்டதாம். பலரும் கூட்டத்தில் அதை கீழே போட்டு மிதித்து விட்டு சென்றார்களாம்.

காலையில் போன அம்மாவை காணாமல் நாங்கள் (தம்பி, தங்கை) அழுதது இப்பவும் நினைவு இருக்கு..

<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.