Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன்

இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே.

நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி).

நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து.

நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல்

நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள்.

அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம் போல ´ட்டினார்கள். அரச சபையில் கூத்தாடியவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஏனென்றால், அவர்களுக்கு வந்த வருமானம் மற்றவர்களை விடக் கூடியது. கொடுத்தவன் அரசனல்லவா? ஆலயங்களில் ஆடத் தொடங்கியவுடன் இவர்களுடைய நிலையும் தரமும் மக்களால் மதிக்கப்பட்டன. இவர்களை சின்ன மேளம் என்று கூடச்சொல்லுவார்கள்.

காலம் மாறி, சமுதாயம் முன்னேற்றம் அடைய, தெருக்கூத்துக்கள் மேடைக் கூத்தாகியன. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதும், மேற்கத்திய நாடுகள் திரைப்பட நுணுக்கங்களை ஆராய்ந்து, கண்டு பிடித்து, கூத்துக்களை திரைப்படமாக எடுக்கத் தொடங்கினார்கள். அதாவது பேசாத திரைப்படங்கள். இதற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று பேசும் படம் திரை அரங்குகளில் வரத் தொடங்கியது. இதற்கும் மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. நாகரீக வளர்ச்சியோடு, கூத்தாடிகள் என்ற பெயர், நடிகர்கள் ஆகியது.

உழைக்கும் தொழிலாளிக்கும், பணம் படைத்தவர்களுக்கும், ¶ய்வு நேர களிப்பாட்ட நிகழ்ச்சியாக திரை அரங்கு மாறியது. பணம் படைத்தவர்கள் அதை ஒரு தொழிலாக மாற்றி வியாபாரச் சந்தை ஆக்கினார்கள். நடிகராவதற்குத் தேவையாக இருந்தது ஒரு சில தரங்கள் மட்டுமே. அதாவது, அழகு, மொழி, பேச்சுத்திறன். காலமடைய சண்டை பிடிப்பதற்குரிய பாவனை காட்டும் திறமையும் தேவையாக இருந்தது.

ஒரு சில அரசியல்வாதிகளின் சிந்தையில் திரையை ஏன் தங்களுடைய அரசியல் லாபத்திற்கு பாவிக்கக் கூடாது என்ற கேள்வி பிறந்தது. தங்களுடைய அரசியல் சிந்தனைகளையும், எண்ணங்களையும் பரப்புவதற்கு திரையைப் பாவிக்கத் தொடங்கினார்கள். இதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் பெரும் கைகளாக இயங்கினார்கள். நாளடைவில், இந்த அரசியல்வாதிகள் பிரபல்யமாகி அரசியலுக்குள் நுழைந்தார்கள். திரைப்படங்கள் பிரபல்யமாகியதும், நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து, அவர்களும் பணம் படைத்தவர்களாகினார்கள். ஒரு சிலர், பணத்தை வர்த்தகத்திலும், தொழில் சாலைகளிலும் முதலீடு செய்தார்கள். மற்றவர்கள்???--- இதில், நாங்கள் அவதானிக்கவேண்டியது என்ன? திரையில் அரசியல் சிந்தனைகளையும், எண்ணங்களையும் பரப்புவதற்கு நடித்த நடிகர்கள் சிந்தனை எப்படி மாறியது. நாமேன் அரசியலுக்குள் நுழையக்கூடாது. நுழைந்தார்கள். நுழைந்து தங்களுடைய பண பலத்தை மேலும் பன் மடங்காக்கினார்கள். பின்பு திரைப்பட கலாச்சாரமே மாறியது. அரசியலுக்குள் நுழைவதற்காகவே ஒரு சிலர் திரைக்குள் நுழையத் தொடங்கினார்கள். இதிலும் மிகவும் கேவலமான ஒன்று. பிற மாநிலத்திலிருந்து, தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தமிழகத்தையே ஆளவேண்டுமென்று கனாக் காணத்தொடங்கினார்கள். இதற்கு தமிழகம் வாழ் மக்கள் துணை போகத்தொடங்கினார்கள். பிற மாநிலத்தில் வாழும் மக்கள் கலாச்சாரம் என்ன கூறுகின்றது - அரசியல்வாதியாக வேண்டுமா? தமிழகத்திற்கு போ...

படிப்பறிவே இல்லாதவர்கள் கூட தமிழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். இன்று தமிழக திரையை ஆண்டுகொண்டிருப்பவர்கள் கன்னடாவிலும், ஆந்திராவிலும், மலையாளத்திலும், மும்பாயிலுமிருந்து வந்தவர்கள்தான். மும்பாய் தெருவிலிருந்து பிடித்து வந்தவர்கள் கூட தமிழகத் திரையில் பிரபல்யம். ஏன் - அவர்கள் நிறம் + ஆபாசம். மக்களுக்கு ஆனந்தம். ஆனால் பறி போவதென்ன? தமிழக மக்களுகைய, கலாச்சாரம், ஆட்சி, மொழி, சுதந்திரம், பொருளாதாரம். ஒரு சில இன்றய தமிழ் தொலைக்காட்சியிலும், தங்லிஷ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, இம் மொழிகள் வரத் தொடங்குகின்றன.

உண்மையான அரசியல்வாதிகளும் செய்வது என்ன? நடிகர்களை தங்களுடைய கட்சியில் சேர்க்கின்றார்கள். ஏன். அப்பொழுதுதான் தங்களுடைய கட்சிக்கு வாக்கும், MLA க்களும் கூடுமென்று. இந்தப் பாரளுமன்ற அங்கத்தவரின் கல்வி, சிந்தனைத் திறமைகள் யாது என்று கேட்டால் – NIL. அதாவது ஒன்றுமில்லை: சுன்னம்.

மக்களுக்காகவே கண்ணியத்தோடும், கடமையோடும், உண்மையாகத் தங்களை அர்ப்பணிப்பு செய்த / செய்கின்ற நடிகர்கள் யார்? அவர்கள்தாம் நகைச்சுவை நடிகர்கள். ஏன்? மக்களை திருப்திப்படுத்தி, சந்தோஷத்தோடும், உடல் நலமுடையவர்களாக வாழ வைக்கின்றார்கள். இவர்களைத் தான் நாம் வாழ்த்தவேண்டும்.

கதாநாயகனாக நடிப்பவர்கள் பொய் வேடம். இவர்களுடைய கலாச்சாரம். எத்தனை மனைவிமார் என்றால்தான் இவர்கள் தரத்தில் உயர்ந்தவர்கள். உண்மைகளை மறைத்து வாழ்வது பொய் வாழ்க்கை. பண + நாய் + அகத்தினில் வாழ்பவர்கள் சாக்கடைகளை நாம் மறைக்கலாமா? அது சமுதாயத்திற்கு கூடாது அல்லவா?

பிற மாநிலத்திலிருந்து தமிழகத் திரைக்கு வந்து, பண + நாய் + அகத்தினுள் நுழைந்து, அதன் மூலம் சன + நாய் + அகத்தினுள் நுழைய பேராசை கொண்டுள்ளவர்களை அடையாளம் காணுங்கள். இவர்களை விரட்டுங்கள்.

தமிழகத்தை ஆளுவதற்கு தமிழகத்தில் ஒரு தமிழன் இல்லையா?

ஈழத் தமிழர்களுடைய நிலையைப் பற்றி ஆராய்ந்தால்;-

ராமேஸ்வரத்தினில், ஈழத் தமிழனுக்காக மேடையில் முழங்கிய மன்சூர் அலிகான் தரம் உயர்ந்தது.! தமிழனே அல்லாத, தமிழரை ஆளப் பேராசை கொண்டுள்ள விஜயகாந்த் எங்கே.

அன்று தொட்டு இன்று வரையில் ஈழத் தமிழனுக்காக குரல் கொடுக்கும் பாரதிராஜா தரம் உயர்ந்தது.! கன்னடத்திலிருந்து தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்து ஈழத் தமிழனின் பணத்தை உறுஞ்சுகின்ற, தமிழனை ஆள நினைக்கின்ற, படிப்பறிவில்லாத கூலி ரஜனிகாந்த் எங்கே.

ராமேஸ்வரத்தினில், ஈழத் தமிழனுக்காக மேடையில் கண்ணீர் விட்டு அழுது கலங்கிய வடிவேலு தரம் உயர்ந்தது.! தமிழனே அல்லாத, ஈழத் தமிழனின் பணத்தை உறிஞ்சுகின்ற அர்ஜுன் எங்கே.

ராமேஸ்வரத்தினில், ஈழத் தமிழனுக்காக மேடையில் முழங்கிய சுனாமிகள் அமீர், சீமான், சேரன்கள் தரம் உயர்ந்தது.! தமிழனே அல்லாத, ஈழத் தமிழரின் பணத்தை உறுஜ்சுகின்ற அஜீத்குமார், விஜயகுமார்கள் எங்கே.

ஈழத் தமிழர்களே, தமிழகத்தின் இன்றய நடிகர்களுக்கு தீனி போட்டு வளர்த்தது யார் - ஈழத் தமிழர்கள்.

தமிழகத்தின் இன்றய நடிகர்கள் பணநாயகங்களாவதற்கு யார் காரணம். ஈழத் தமிழர்கள்.

ஏன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு AUD டாலர் = 30 X ஒரு ரூபாய் (இந்திய)

ஏன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு US டாலர் = 60 X ஒரு ரூபாய். (இந்திய)

ஏன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு UK பவுண் = 100 X ஒரு ரூபாய். (இந்திய)

சிந்தியுங்கள். தமிழகத்தின் இன்றய நடிகர்கள் பணம் இல்லையென்றால் எங்கே இருப்பார்கள். கல் உடைப்பார்களா, இல்லை வாகனம் ஔட்டுவார்களா?

நன்றி, வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

சாண்டில்யன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதில் தமிழ் எங்கே வந்தது? தமிழ் நடிகர்களாக இருக்கும் எல்லோரும் கலந்து கொண்டார்களா? தமிழை தாய் மொழியாக கொள்ளாத நடிகர் ஜீவா கலந்து கொள்ளவில்லையா? M.G.R தமிழர் இல்லையே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாண்டில்யன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதில் தமிழ் எங்கே வந்தது? தமிழ் நடிகர்களாக இருக்கும் எல்லோரும் கலந்து கொண்டார்களா? தமிழை தாய் மொழியாக கொள்ளாத நடிகர் ஜீவா கலந்து கொள்ளவில்லையா? M.G.R தமிழர் இல்லையே..

வணக்கம்

கட்டுரையின் தலைப்பு - நடிகர், திரை அரங்கு, தமிழினம்.

ஆமாம், MGR, தமிழர் இல்லை. எதற்காக, இன்று ஜெ. அரசியலில் இருக்கின்றார். MGR ஐ வணங்கியவர்கள் இன்று ஜெ பின்னால். வராத தமிழர்களை, கருணாவோடும், டக்ளஸ் ஔடும் ஒப்பிடுவோமா. தமிழனின் குறைபாடே (weakness) அதுதான்.

தமிழகத்தைக் குறைகூறாது ஈழத்தமிழர்களாகிய நாம் அறிவோடு நடக்கலாமே. நடிகர்களைப் பணநாயகங்களாக்கியது யார்?

ஒருவருமே நடிக்க முடியாது என்று பின் வாங்கியபோது ஜீவா - இரமேஸ்வரம்/தலைமன்னார் 9 மைல் படத்தில் நடிக்கவில்லையா?

நாம் கூறுவது என்னவென்றால், தமிழகத்தை ஆளுவதற்கு, தமிழகத்தில் தமிழன் இல்லையா?

ஈழத் தமிழர்கள் இந்த நடிகர்களுக்குத் தீனி போடுவதைக் குறைக்கலாமே.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

கலைஞர்கள் அரசியல்வாதிகள் அல்ல.

அவர்கள் திரையில் பேசும் கருத்துகள் அவர்களது கருத்துகளும் அல்ல.

அவை அந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் கருத்துகள் மட்டுமே.

அதை எழுதும் கதாசிரியரின் எண்ணங்கள்.

பலர் அதன் வேறுபாட்டை புரிந்துகொள்ளமால்

அந்த நடிகர்கள் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வாழ்கையிலும் இருப்பார்கள் என்பது

பார்வையாளனின் முட்டாள்தனம்.

படத்தில் வில்லன்கள் எல்லாம்

அவனது வாழ்வில் மிக நல்ல மனிதர்கள்.

படத்தில் மட்டுமே அவன் வில்லனாக வருகிறான்.

உணர்ச்சி பொங்கும் பேச்சுகள் கைதட்ட வைக்கும்.

ஆனால் அடுத்த நகர்வை தடுத்துவிடும்.

அதை சீமான் அமீர் மற்றும் வைகோவால் ஏற்பட்டுள்ளது.

பொங்கி எழுந்த அலை சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலர் மனதில் தாமும் கைதாவோமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ எமக்கு ஆதரவானவர்

சீமான் எமக்கு ஆதரவானவர்

அமீர் எமக்கு ஆதரவானவர்

ஆனால் அவர்களது பேச்சுக்கள்

இந்தியாவுக்கு அச்சுறுத்தலை உருவாக்க வழி செய்துள்ளது.

இது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.....

இந்தியாவை எம்பக்கம் திருப்பவேண்டிய கூட்டத்தில்

இந்தியாவை பிளவுபடுத்தும் கருத்துகள் எதிர்விளைவுகளையே உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து தா.பாண்டியன் அப்படி பேசியிருக்க வேண்டாம் என வேதனைப்பட்டுள்ளார்.

இதில் சேரனது பேச்சு யதார்த்தமானது.

இலங்கை தமிழர் பிரச்சனை தீரும்வரை

யாருக்கும் வாக்களிக்கமாட்டோம் என்று சொல்லுங்கள் எனும் பேச்சு

அனைவரையும் நிச்சயம் சிந்திக்கவைக்கும்?

வாக்கு கிடைத்தால்தான் அரியாசனம் ஏறலாம்.

அது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

இது நல்லதொரு ஆரம்பம் .......

அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.

எந்தவொரு கலைஞனும்

கலைசேவை செய்யவோ அல்லது

அரசியல் செய்யவோ வருவதில்லை.

அவனது முதல் கனவு தானும் நடிக்க வேண்டும்.

இயக்க வேண்டும் அல்லது கதை எழுதவேண்டும் என்பதே?

உண்மையான தேசப்பற்றுள்ள கலைஞர்கள்

நாடகங்களையும் , வீதி நாடகங்களையும் போட்டுக்கொண்டு

உலகத்தின் கண்களுக்கு தெரியாமல் செத்துப்போகிறான்.

(அன்பே சிவம் படத்தில் பார்க்கலாம்.)

நடிகர்கள்

திரையில் வருவதுபோல்

உண்மை வாழ்விலும் இருத்தல் வேண்டும் என்பது

எமது அறியாமையே அன்றி வேறில்லை.

தற்போது உருவாகியிருக்கும்

எம் சார்பான அனுதாப பார்வைகளை

குருடாக்கிவிடாதீர்கள்.

அதற்காக நாம் வெகு உயிர்களை இழந்து நிற்கிறோம்.

எதிரிகள் கூட மனமிரங்கி நிற்கும் வேளையில்

மேலும் எதிரிகளை உருவாக்காதீர்கள்.

நமது உறவுகள் வாழவேண்டும்.

தயவுசெய்து மெளனமாக இருங்கள் அது போதும்.

இது உங்களிடம் வைக்கும் வேண்டுதல்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அஜீவன்

தங்களுடைய தொனி சர்வாதிகாரத்தைப் பிரதிபலிக்கின்றது.

“”கலைஞர்கள் அரசியல்வாதிகளில்லை.”” தமிழகத்தைப் பார்த்துமா இப்படித் தோன்றுகின்றது.

கட்டுரையில் கூறியபடி, எழுத்தாளர்களின் கருத்துக்களை மக்களுக்கு நடித்துக்காட்டிய நடிகர்கள் அரசியலுக்கு வரவில்லையா?

“”நடிகர்கள்

திரையில் வருவதுபோல்

உண்மை வாழ்விலும் இருத்தல் வேண்டும் என்பது

எமது அறியாமையே அன்றி வேறில்லை””

இதுதான் என்னுடைய கருத்தும். தாங்கள் திசை திருப்புவதாகவே எமக்குத் தோன்றுகின்றது. நான் உண்மையைக் கூறும் பொழுது, தங்களுடைய கருத்துப்போலக் கூறுகின்றீர்கள். தாங்கள் மேலே கூறியவற்றை நம்புகின்ற தமிழர்கள்தான் அதிகம். அதுதான் தமிழினத்தின் மடமை.

கலைஞர்கள் கலைஞர்களாக இருக்கவேண்டும். அரசியலுக்கு வரக்கூடாது. ஆனால் அவர்களை அரசியலுக்குள் நுழைப்பது யார்? விடை தங்களுக்குத் தெரியும்.

தமிழகத்தின் மாற்றங்கள் தங்களுக்கு புரியவில்லையா?

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

தமிழ்படங்களில் தமிழ்சினிமாத்துறையில் எவர் இருந்தாலும் பரவாயில்லை தமிழர்களை இழிச்சவாயர்களாகவும் ஏமாற்றலாம் என்னும் எண்ணமும் பணம் மட்டுமே குறிக்கோளாகவும் தமிழர் எக்கேடு கெட்டுப்போணால என்ன எண்ணும் கொண்டவர்களை தமிழ்மக்கள் அடையாளம் கண்டு அவர்களை ஆதரிக்காமல் அவர்கள் படங்களில் ஈடுபாடுகாட்டமல் விட்டால் அவர்கள் ஒன்றில் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்..

அதனை விட்டு தனிப்பட்ட முறையில் எதிர்ப்புக்களை தெரிவித்து தமிழின பகைவர்களை வளர்க்கக்கூடாது. இது என் தாழ்மையான அபிப்பிராயம்..

தமிழ்பற்று கிரமாப்புறங்களில் இருந்து சரியான தெளிவுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்டால் நகரங்கள் எல்லாம் நாளடைவில் எங்கும் தமிழ்பரவி தமிழிங்கிலிஸ் ஒழியும்..தமிழ்னாடு தமிழர்களுக்கே என உருவாகும். எதிர்கால சந்ததியினர் இலக்குவைக்கப்படவேண்டும்..தகு

ந்த

உதவிகள் வழஙவேண்டும்..

இவற்றின் மூலம் திரையுலகில் என்ன எல்லாத்துறைகளிலும் தமிழ் உணர்வு ஏற்படும்..தமிழில் பேசினால் வெட்கம் என்னும் என்று என்னும் ஒரே இனத்தின்(அதாவது தனது தாய் மொழியில்-மூத்த குடியினம் இலத்தீன் சமஸ்கிருதம், கிரேக்க என அழிந்த மொழிகளுக்கு முன் பிறந்த மொழி- பெருமைப்பட வேண்டிய இனம்) அன்னியர்களல் ஆற்றுவெள்ளத்தில் இழுத்து செல்வது தெரியாமல் இருக்கும் இனம் எல்லா வழிகளிலும் காப்பற்றப்படவேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது மாற்றப்பட்டு

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அதன் பின்னே யாதும் ஊரே...

வணக்கம் அஜீவன்

தங்களுடைய தொனி சர்வாதிகாரத்தைப் பிரதிபலிக்கின்றது.

“”கலைஞர்கள் அரசியல்வாதிகளில்லை.”” தமிழகத்தைப் பார்த்துமா இப்படித் தோன்றுகின்றது.

கட்டுரையில் கூறியபடி, எழுத்தாளர்களின் கருத்துக்களை மக்களுக்கு நடித்துக்காட்டிய நடிகர்கள் அரசியலுக்கு வரவில்லையா?

“”நடிகர்கள்

திரையில் வருவதுபோல்

உண்மை வாழ்விலும் இருத்தல் வேண்டும் என்பது

எமது அறியாமையே அன்றி வேறில்லை””

இதுதான் என்னுடைய கருத்தும். தாங்கள் திசை திருப்புவதாகவே எமக்குத் தோன்றுகின்றது. நான் உண்மையைக் கூறும் பொழுது, தங்களுடைய கருத்துப்போலக் கூறுகின்றீர்கள். தாங்கள் மேலே கூறியவற்றை நம்புகின்ற தமிழர்கள்தான் அதிகம். அதுதான் தமிழினத்தின் மடமை.

கலைஞர்கள் கலைஞர்களாக இருக்கவேண்டும். அரசியலுக்கு வரக்கூடாது. ஆனால் அவர்களை அரசியலுக்குள் நுழைப்பது யார்? விடை தங்களுக்குத் தெரியும்.

தமிழகத்தின் மாற்றங்கள் தங்களுக்கு புரியவில்லையா?

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

வணக்கம் சாண்டில்யன்

ஒருவன் பசியோடு இருக்கிறான்.

அவனுக்கு தேவை உணவு

அதற்கு தேவை ஒரு வேலை

அதில் வரும் ஊதியத்தை கொண்டு உணவருந்துகிறான்.

பின்னர் அந்த வேலையில் பரீட்சையமான பின்

அதை தான் ஏன் செய்யக்கூடாது என நினைக்கத் தொடங்குகிறான்.

அது அவன் ஒரு தொழில் தொடங்க அடித்தாளமிடுகிறது இல்லையா?

நாங்கெல்லாம் அகதியா வந்தோம்

புலத்தில

இன்றைக்கு நம்மவர் முன்னேற்றத்தை எப்படி பார்க்கிறீங்க?

அகதியா அடைபட்டு இருந்திருந்தா....?

அதேமாதிரி

அவன் நாட்டில் அவன் நினைப்பதில் தவறில்லை.

பலர் சினிமாவுக்குள் தொலைக்காட்சிக்குள் புதைந்துபோயிருக்கிறார்கள்..

.

அவர்களுக்கு அதைவிட வேறு உலகம் தெரியாது.

பல கோடி மக்களில்

சில ஆயிரமே சினிமாவால் வாழ்கிறது.

அடுத்த மக்கள் எப்படி வாழ்கின்றனர்?

அடுத்த தொழில் துறைகளையும் சற்று பாருங்கள்?

திறமையுள்ளவன் உரமுள்ளவன் வளர்கிறான்.

அடுத்தவன் உதிர்கிறான்.

இல்லையென்றால்

வேறு பாதையில் முன்னேறுகிறான்.

கோடம்பாகத்து தெருக்களில்

சினிமா கனவுகளோடு திரிபவர்களிடம் கேளுங்கள்

நீ அரசிலவாதியாகணுமா? சினமா சான்சுவேணுமா? என்று

அரசியலாவது கிரசியலாவது

ஒரு சீனிலா வந்தா போதும் சார் என்றுதான் பதில் வரும்.

இதுவே யதார்த்தம்.

கலைஞர்கள் அரசியலுக்கு போனால்

அவர்கள் ஆட்சி காலத்தில் மட்டுமே வாய்ப்புண்டு.

இல்லை என்றால் கட்சி பணிதான்

பட்டினிதான் :lol:

Edited by AJeevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குகூ

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி.

ஆனால்!

“”அதனை விட்டு தனிப்பட்ட முறையில் எதிர்ப்புக்களை தெரிவித்து தமிழின பகைவர்களை வளர்க்கக்கூடாது. இது என் தாழ்மையான அபிப்பிராயம்””

தனிப்பட்ட கருத்துக்கள் என்று கூறுகின்றீர்கள். மேலே கூறப்பட்டது தங்களுடைய தனிப்பட்ட கருத்தல்லவா? தனிமனித சுதந்திரம் இல்லையென்று கூறுகின்றீர்களா? தமிழீழத்தில் தனிமனிதனுக்கு சுதந்திரம் இல்லையென்று கூறுகின்றீர்களா?

எமக்கு மடைமைத்தனம் இல்லையென்றால், இன்று கருணா, டக்ளஸ், இப்படி பத்துக்கும் மேலான துணைக்குழுக்கள் தோன்றியிருக்குமா?

கருத்துக்களை கூறும் முன்னர் யாம் சிந்திப்பது வழக்கம்.

வணக்கம் அஜீவன்

தங்களுடைய---

“”உணர்ச்சி பொங்கும் பேச்சுகள் கைதட்ட வைக்கும். ஆனால் அடுத்த நகர்வை தடுத்துவிடும். அதை சீமான் அமீர் மற்றும் வைகோவால் ஏற்பட்டுள்ளது. பொங்கி எழுந்த அலை சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மனதில் தாமும் கைதாவோமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது””

ஈழத்தமிழருடைய 175 வருட மடமைத்தனம் இன்று ஈழத்தமிழரை எங்கு விட்டிருக்கின்றது?? பத்துக்கும் மேலான ஒட்டுக்குழுக்கள் எப்படித் தோன்றியன. விடை??

சீமான், அமீர் பேச்சுக்களைக் குறை கூறுகின்றீர்கள். காரணகர்த்தாக்கள் யார்??

நாமே எத்தனையோ அறிவற்ற செயல்களைச் செய்திருக்கின்றோம். என்ன தெரியவில்லையா?? சிந்தியுங்கள்.

தாங்கள் எமது கருத்துக்களை வாசித்துச் சிந்தியுங்கள். தமிழகத்தினில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது. சினிமாக்காரங்கள் சண்டை போடுகின்றார்கள், ஈழப் பிரச்சனையை ஒட்டி.

நான் அகதியாக வரவில்லை. நாட்டை விட்டு வெளியேறி 41 வருடம். இடையில் 8 வருடம் யாழில் வசித்தேன். புலம் பெயர்ந்த நாம் என்ன செய்கின்றோம். கேளிக்கைகளும், அரங்கேற்றங்களும், இப்படி எத்தனையோ. தங்களுக்குத் தெரியவில்லையா, புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் எப்படி வாழுகின்றார்கள் என்று. எதற்கும் ஒரு நொய்தான (flimsy) விடை வைத்திருக்கின்றார்கள்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டியன் சொல்வது போல, நாங்கள் யாரை நம்பிப் போராட்டத்தைத் தொடங்கினோம். நடிகர்களையும், இந்திய அரசியல்வாதிகளையும் தானே? எம் மக்களையோ எம்மையோ நம்பி இது தொடங்கவில்லை. அவ்வாறு இருக்கின்றபோது, நடிகர்களும், இந்திய அரசியல்வாதிகளும், முக்கியமாக நடிகர்கள் ஆதரவு தராவிட்டால் எம் எதிரிகளை எப்படிப் பறந்து பறந்து அடிப்பது? ஒரே பிஸ்டலால் நூற்றுக்கணக்கான இராணுவத்தை டப்பு, டப்பு என்று சுட முடியும்? எனவே அவரின் நடிகர்கள் மீதான கோபம் நியாயமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டில்யன், நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், கையேந்தி நிற்கவே வேண்டும் இந்தியாவிடம் எதுவும் சொல்லக் கூடாது என்ற நிலையை இந்திய அடி வருடிகள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. சிறைக்குப் போகிற அளவுக்கு சீமானும் அமீரும் எதுவும் சொல்லவில்லை என்று இங்கே இருக்கிறவர்களுக்கு ஒப்புக் கொள்ளும் மனம் வரவில்லைப் பார்த்தீர்களா? அவர்களால் அடுத்த படி தடைப்பட்டு விட்டதாம், என்ன ஒரு இந்திய விசுவாசம்? அடுத்த படி எதனால் தடைப் பட்டது என்று தமிழ் நெற்றிலும் இன்றைய தினக்குரல் கேலிச் சித்திரத்திலும் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். பழ நெடுமாறன் உண்ணா நோன்பு இருந்த போது தானும் சாட்டுக்கு உண்ணா நோன்பு இருந்து கெடுத்த கருணாநிதி இந்த முறையும் தமிழக அரசியல் சாரா தமிழ் நடவடிக்கையாளர்களின் எழுச்சியை தானும் வெகுண்டெழுவது போன்று காட்டித் தண்ணீரூற்றி அணைத்தார் என்பதே உண்மை. இப்படி நான் எழுதுவதை இன்னும் கொஞ்ச நேரத்தில் யாழ் நிர்வாகமே அகற்றி விடக் கூடும். அது தான் நாம் யாரைத் தலையில் தூக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவின்றி இருக்கிறோம் என்பதற்கு அடையாளம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜஸ்டின்

தங்களுடைய கருத்திற்கு நன்றிகள். நீங்கள் கூறியவை மிகவும் சரி. ஆனால், எமது சமுதாயத்தில் அறியாமையோடு வாழும் மக்கள் அதிகம். ஆனால், தாங்களும் அரசியல் பேசவேண்டும் என்று வருவார்கள். உதாரணத்திற்கு, சில நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழரின் சபைகளின், சங்கங்களின், குழுக்கழின் தலைமைப்பீடம் மிகவும் வலிமை அற்றது. ஆனால், தாங்கள்தான் முன்னுக்கு நிற்கவேண்டுமென்று நிற்பார்கள். சிந்தனையற்ற செயல்கள்தான் அதிகம். வரிசைப்படுத்திக் கூறலாம். ஆனால், வெளிப்படையாக களத்தினில் கூற இயலாது.

மேடையில் முழங்காவிட்டால் அவர் சரியில்லை.

முழங்கினால், அடுத்த படி தடைப்பட்டுவிட்டது.

நாம் என்ன சொல்வது.

தலைவர், கருணாநிதியின் செயல்கள் சிந்தனையோடு செயல்பட்ட செயல்கள். அதிகமானவருக்கு விளங்காத செயல்கள். அவரின் செயல்கள் என்னதான் செய்தாலும், செயலின் குவிமையம், அவரைப்பற்றித் தெரிந்தவர்களுக்குத்தான் விளங்கும். இதனால், எமக்கு லாபம் ஒன்றுமேயில்லை. தமிழகத்தில் நடப்பவைகளை மிகவும் கவனமாக, step by step அவதானித்தால் / படித்தால், விளங்கும்.

விஜயகாந்த், தனது கட்சி அங்கத்தவர்கள், ஈழத்தமிழரின் அவலைகள் தீரும்வரை கறுத்த badge அணியவேண்டுமென்று கட்சி அங்கத்தவரைக் கேட்டுள்ளார். இது அவருடைய அரசியல் சாணக்கியம். அப்பொழுதுதான் அவருடைய கட்சி / வாக்கு, வலிமை / மொத்த எண்ணிக்கை தெரியுமல்லவா?

வணக்கம் தூயவன்

“”சாண்டியன் சொல்வது போல, நாங்கள் யாரை நம்பிப் போராட்டத்தைத் தொடங்கினோம். நடிகர்களையும், இந்திய அரசியல்வாதிகளையும் தானே? எம் மக்களையோ எம்மையோ நம்பி இது தொடங்கவில்லை. அவ்வாறு இருக்கின்றபோது, நடிகர்களும், இந்திய அரசியல்வாதிகளும், முக்கியமாக நடிகர்கள் ஆதரவு தராவிட்டால் எம் எதிரிகளை எப்படிப் பறந்து பறந்து அடிப்பது? ஒரே பிஸ்டலால் நூற்றுக்கணக்கான இராணுவத்தை டப்பு, டப்பு என்று சுட முடியும்? எனவே அவரின் நடிகர்கள் மீதான கோபம் நியாயமானது””

தங்களுடைய மேற்கூறிய கருத்துக்களுக்கு நன்றி.

நடிகர்களை நம்பித்தான் எமது போராட்டம் தொடங்கியதென்று யான் கூறவில்லை. ஆனாலும், ஈழத்தமிழரின் தீனியில் பணநாயகங்களாகியவர்கள் இன்று ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டார்களா? கவலை தெருவித்திருப்பார்களா? ஈழத்தமிழரின் அழிவை தங்களுடைய அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். காரணம்;- பிற மாநிலத்தினிலிருந்து தமிழகத்திற்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு தமிழனைப்பற்றி என்ன கவலை? சொகுசான சென்னையில் ஒரு நாள் உண்ணா விரதம்? காந்தி அடிகள் அடிபட்டு, வதைபட்டு, சுதந்திரம் எடுத்துக் கொடுத்த நாடு எந்நிலையில் பார்த்தீர்களா?

நெஞ்சு பொறுக்குதில்லை ஐயா!

தமிழகத்தை ஆளுவதற்கு தமிழகத்தினில் ஒரு தமிழனில்லையா என்பது எமது முதற்கேள்வி? அடிப்படைக் காரணத்தைத் தமிழக மக்கள் விழிப்புணர்வோடு உணரவேண்டும். அம்மையார், ஜெ. ஈழத்தினில் ஒட்டு மொத்தமாக எல்லாத்தமிழரையும் ரா. அளித்தாலும் ஒரு சொட்டுக்கண்ணீர் விடமாட்டார். முவ்வேளை உணவையும் அருந்தி உறங்குவார்.

எமது போராட்டம், இந்தியாவை நம்பித்தான் தொடங்கியது என்று யாரவது கூறினால், அதிலேயே, முதற்படியிலேயே, நாம் தவறிவிட்டோம் என்பது எமது தாழ்மையான கருத்து.

MGR ம் இந்திரா காந்தி அம்மையாரும், ஈழ நாடு உதிக்கவேண்டுமென்று உதவி புரியவில்லை. இதில்தான் எமது அரசியல் சாணக்கியமும், ராஜதந்திரமும் பிழைத்தது. மிகுதி தங்களுக்கு விளங்கும்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.