Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றுமுதல் சிரித்து கொண்டேயிருக்கின்றாள்..

Featured Replies

'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு.

லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத குடும்பம். ஊரிலேயே முதன் முதலில் தொலைபேசி வைத்திருந்தவர்கள் என்பதால் 'போன்வீட்டுக்காரர்' ஆகிப்போன குடும்பம்.

'இவன் ராஜாவையும் எழுப்பணை. ராத்திரில வந்து கூப்பிடுறா என்ன பிரச்சனையோ' என மகனையும் எழுப்ப சொன்னபடி படி படுக்கையில் இருந்து எழும்பி வாசலுக்கு வந்தார் லதாவின் கணவர் திருநாவுக்கரசு.

'என்னக்கா ஏதும் பிரச்சனையோ? அத்தான் எங்கே' என வாய் கேட்க போன்வீட்டக்காவின் கணவரை திருநாவுக்கரசரின் கண்கள் தேடுகின்றன.

'அத்தான் சந்திப்பக்கமா போயிருக்கார் தம்பி..இவள் பிள்ளை..' அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் போன்வீட்டக்காவிற்கு குரல் அடைக்கின்றது.

பிள்ளை என சொன்னதுமே அவரின் ஒரே புதல்வி சாந்தனாவின் பிரச்சனை தான் என திருநாவுக்கரசுக்கு புரிந்தது.

'லதா இஞ்ச, அக்காவை வந்து கூட்டிகொண்டு உள்ளுக்கு வச்சிருங்கோ. தம்பி ராஜா சைக்கிள எடுடா'

அரைமணித்தியாலத்திலேயே மூன்று ஆண்களும் சாந்தனாவுடன் வீடு திரும்பினார்கள். மகளை கண்டதும் போன்வீட்டக்கா 'ஒண்டை பெத்து போட்டு நான் படுறபாடு..' என ஆரம்பிக்க,

'சரியக்கா காலையில கதைப்பம். பிள்ளைய கூட்டிக்கொண்டு போய் முதல்ல சாப்பாட்டை குடுத்து படுக்க வையுங்கோ' என திருநாவுக்கரசு கூற பெண்கள் அவரவர் வீட்டுக்குள் செல்கின்றனர்.

'குமாரண்ணை, நடுச்சாமத்தில் ஏற்கனவே பயந்து போன பிள்ளையை இன்னும் பேசி பயப்படுத்தாதிங்கோ. நாளைக்கு மத்தியாணம் பயணம் வேற' என சாந்தனாவின் தந்தைக்கு சமாதானம் சொன்னபடி தன் வீட்டுக்குள் நுழைந்தார் திருநாவுக்கரசு.

குமாரண்ணைக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் தான் சாந்தனா. காத்திருந்ததுக்கு கைமேல் பலனாக அழகும், அறிவும் உள்ள பெண்ணாக சாந்தனா பிறந்து வளர்ந்தாள். உயர்பள்ளியில் முதன்மை மாணவியாக பரீட்சையில் தேறும் வரை சாந்தனா சாதாரணமாக தான் இருந்தாள். கொழும்பிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைத்திருந்தது. அங்கு போய் தங்கள் பெண் சீரழிவதற்கு படிப்பே வேண்டாம் என முடிவு பண்ணியிருந்தார்கள் அவளை பெற்றவர்கள். அடுத்து சாந்தனாவின் திருமண பேச்சு எழுந்தது.

ஜெர்மனியில் உள்ள அத்தை மகனை சாந்தனா மணப்பதாக பெரியவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

பெரியவர்களின் முடிவு இப்படியிருக்க. சாந்தனாவின் முடிவோ நாட்டை பற்றியதாக இருந்தது. தன்னுடன் படித்த சீதா ஆசையாக கொழும்பிற்கு திருமணத்திற்கு வெளிக்கிட்டதும், பைத்தியமாக திரும்பி வந்ததும் சாந்தனாவை அதிகம் பாதித்துவிட்டிருந்தது. சீதாவின் மன அழுத்ததிற்கு காரணம் பலதும் ஊரில் சொல்லப்பட்டது. வவுனியாவில் உள்ள இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாமில் தான் தன் தோழிக்கு பிரச்சனை நடந்திருக்கு என சாந்தனாவுக்கு புரிந்தது.

புரிந்த நாள் முதல், சாந்தனாவின் மனம் வெகுவாக பாதிக்க ஆரம்பித்திருந்தது. தோழியை போல் ஆகுவதற்கா இந்த பயணம்? என் தோழியின் நிலைக்கு நியாயம் யார் தருவார்கள்? பூவாக இருப்பதால் தானே இத்தனை பிரச்சனை? புலியாக மாறிவிட்டால்? அம்மா, அப்பாவில் நிலை?; இப்படி பலதும் சாந்தனாவை குளப்பத்தில் ஆழ்த்தி என்ன செய்கின்றோம் எங்கு இருக்கின்றோம் என்பதையே மறக்க வைத்திருந்தது.

அன்றும் அப்படித்தான் வீட்டிற்கு பின் இருக்கும் கிணற்றடி ஒட்டில் உட்கார்ந்திருக்க, இவர்கள் ஊரெல்லாம் சாந்தனாவை தேடியிருக்கின்றார்கள்.

அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து, மதியமளவில் கொழும்பை நோக்கி சாந்தனாவின் பயணம் ஆரம்பிக்கின்றது. தடையேதும் இல்லாத பயணம் மெதுவாக இலங்கை இராணுவத்தினரின் முதல் தடுப்பு பகுதியில் தடுமாறுகின்றது.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் உடல்பரிதோதனை செய்வதற்கு வெவ்வேறு பகுதிகள் ஆண்களை ஆண் இராணுவத்தினரும், பெண்களை பெண் இராணுவத்தினரும் பரிசோதனை செய்தார்கள். புலிகள் குண்டோடு வந்துவிடுவார்களாம். கையால் ஒவ்வொருத்தரின் உடலை தொட்டு பார்த்தால் குண்டை கண்டு பிடித்துவிடலாமாம். சாந்தனாவின் முறை வந்த போது இருபகுதியும் ஒன்றாக்கப்பட்டிருந்தது. பரிசோதனை செய்து கொண்டிருந்தவர்கள் ஆண் இராணுவத்தினர். பரிசோதனை முடிந்த போது சாந்தனா எதுவும் பேசவில்லை, ஊருக்கு பைத்தியமாய் திரும்பிய தோழியை நினைத்து கொண்டார், பாவம் அவள் அன்னை தான் ஏனோ அழுது கொண்டிருந்தார்.

ஒவ்வொரு தடை முகாங்களாக கடந்து வவுனியாவில் இருக்கும் பூந்தோட்டம் அகதிமுகாமில் தஞ்சம் புகுந்தார்கள். கொழும்பிற்கு புகையிரதம் பிடிப்பதற்கு முன்னர் உள்ள தடை. சிலரின் நல்ல நேரம் இரு நாட்களில் "பாஸ்/Pass" என அழைக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கிடைத்துவிடும். சிலருக்கும் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிவிடும். பெயர் தான் பூந்தோட்டம், ஆனால் பலருக்கு அது மயானதோட்டம் தான்.

சாந்தனாவின் குடும்பமும் பூந்தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அடுத்த நாள் சோதனை என சொல்லி சிலரை அழைத்து சென்றார்கள். அதில் சாந்தனாவும், சாந்தனாவின் தந்தையும் அடங்குவார்கள்...

'இஞ்சரணை குமாரண்ணை வீட்டு பக்கம் சத்தமா கிடைக்குது..' இன்னொரு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த திருநாவுக்கரசு..

ஊரே போன்வீட்டக்கா வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தது. சீதாவும் வந்திருந்தாள். வீட்டின் முன் தாழ்ப்பாரத்தில் அழகாய் தூங்கி கொண்டிருந்த சாந்தனாவை பார்த்து சிரித்தாள்...சிரித்தாள்...அன்ற

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பெண்கள் மீதான இத்தகைய கொடுமைகள் தொடர்கின்றனவே தவிர குறைவில்லை. ஊரில் இராணுவத்தால் வெளிநாடு பெயரும் பெண்களுக்கு வரும் வழிகளில் புலத்தில் என கதைகளின் நீட்சி முடிவின்றித் தொடர்கிறது தூயா. ஊர்வாசம் கமழும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுறட்டும்.

நன்றி.

'இஞ்சரணை குமாரண்ணை வீட்டு பக்கம் சத்தமா கிடைக்குது..' இன்னொரு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த திருநாவுக்கரசு..

ஊரே போன்வீட்டக்கா வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தது. சீதாவும் வந்திருந்தாள். வீட்டின் முன் தாழ்ப்பாரத்தில் அழகாய் தூங்கி கொண்டிருந்த சாந்தனாவை பார்த்து சிரித்தாள்...சிரித்தாள்...அன்ற

நான் வந்து தலைப்பை பார்த்திட்டு..டு ஏதோ சிரிப்பு கதை எண்டு வாசிக்க தொடங்கினால்..இவளின் சிரிப்பை அறிந்த போது என்னால கொஞ்ச நேரம் சிரிக்க ஏலாம போச்சு..சு.. :)

அன்று முதல் சிரிக்கும் அவ்பாவையின் சிரிப்பை..பை...கதையாக்கி அதனை நகர்த்திய விதம் அருமை..மை. :lol: ம்ம் லோகத்தில சிரிக்கிற பலர் சந்தோஷமா இருக்கீனம் எண்டு நெனைத்து கொண்டிருந்தன்..ன் இந்த கதையை வாசித்தா பெறகு தான் அவைகுள்ளையும்..ம்.

பல கஷ்டங்கள் இருக்கிறது விளங்குது..து.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தமிழ்ப்பெண்கள் மீதான இத்தகைய கொடுமைகள் தொடர்கின்றனவே தவிர குறைவில்லை. ஊரில் இராணுவத்தால் வெளிநாடு பெயரும் பெண்களுக்கு வரும் வழிகளில் புலத்தில் என கதைகளின் நீட்சி முடிவின்றித் தொடர்கிறது தூயா. ஊர்வாசம் கமழும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுறட்டும்.

நன்றி.

புலம் பெயர் நாட்டிலும் என் பெண்கள் படும் அவலத்தை பற்றிய உங்கள் ஆக்கத்தை படித்தேன்.

மனது கனத்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கதைக்கு நன்றி தூயா. அரச படைகளின் பெண்கள் மீதான அட்டூளியங்கள், பலாத்காரங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நிஜக்கதை மனதைக் கனத்தது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஒரு தேர்ந்த கதையாயினி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இரு சோதனை நிரைகள் ஒன்றாக்கி சாவடிக்கும் சாவடிகளை சாடிய நீங்கள் அந்த இடத்தில் சாந்தனாவுக்கு சீதாவின் நினைவுதான் வந்தது என்று சொல்லி விட்டு சொல்லாமல் விட்ட சங்கதிகள் காய்ச்சிய ஈயங்கள். அப்போதே தெரிந்து விடுகிறது முடியாத நிஜங்களின் நிழல்கதையின் முடிவு.

பூந்தோட்டத்தை காதல் ரசமும் காம ரசமும் கலந்து பாயும் இடமாக சித்தரித்துள்ளன எங்கள் சங்ககால இலக்கியங்கள். அவை இன்று வல்லூறுகளின் பசிக்கு உணவு கொடுக்கும் வல்லுறவுகளுக்கு களமானது. கனக்கிறது மனது. சில காலங்களுக்கு என்னை எடுத்து சென்ற கதை. பாராட்டுகள் தூயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.