Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி இராஜினாமா?-சமாதானத்தில் இறங்கிய அமைச்சர்கள்

Featured Replies

இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர்.

முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது.

இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வருடன் நெடு நேரம் பேசிய பின்னரே அவர் தனது முடிவை அரை மனதுடன் கைவிட்டதாக திமுக மற்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றுதான் முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதுவரை அது சாத்தியப்படவில்லை. இதை பாமகவின் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் சுட்டிக்காட்டியது முதல்வரின் மனதை வெகுவாக பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள மறுக்கின்றனவே என்ற ஆதங்கத்தையும் அவர் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார்.

திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜிநாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்ததால், அதை "கண்துடைப்பு நாடகம்'' என்று பிற கட்சித் தலைவர்கள் சாடியதும் அவருக்கு வேதனையை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இக் காரணங்களால் அவர் இராஜிநாமா செய்ய முடிவெடுத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

Tamilwin

கலைஞர் அவர்களே! என்ன தான் உங்களின் பல்வேறு கொள்கைகளுடனும் அரசியல் அணுகுமுறைகளுடனும் நான் மிகவும் முரண்பட்டாலும்,

ஒரு நல்ல தமிழ் அறிந்த தலைவர் என்ற வகையில், நீங்கள் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தமிழீழம் விடுதலை பெறவேண்டும்

அந்த சுதந்திர தமிழீழத்தை நீங்கள் ஒரு தடவையாவது வந்து பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் என் மனதில் உள்ளது!

அடுத்து வருகின்ற தேர்தலில் இதை சிந்தித்து கூட்டணி அமைத்தீர்கள் என்றால் இது நிச்சயம் நிறைவேறும் என்பதே எனது நம்பிக்கை!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடா கலைஞரின் ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என பீப்பா [பாப்பா] மும்முரமாக திரிகின்ற போது கலைஞர் எடுத்த முடிவு வேதனையானது............... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்களே! என்ன தான் உங்களின் பல்வேறு கொள்கைகளுடனும் அரசியல் அணுகுமுறைகளுடனும் நான் மிகவும் முரண்பட்டாலும்,

ஒரு நல்ல தமிழ் அறிந்த தலைவர் என்ற வகையில், நீங்கள் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தமிழீழம் விடுதலை பெறவேண்டும்

அந்த சுதந்திர தமிழீழத்தை நீங்கள் ஒரு தடவையாவது வந்து பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் என் மனதில் உள்ளது!

அடுத்து வருகின்ற தேர்தலில் இதை சிந்தித்து கூட்டணி அமைத்தீர்கள் என்றால் இது நிச்சயம் நிறைவேறும் என்பதே எனது நம்பிக்கை!!!

அடுத்து வருகின்ற தேர்தலில் இதை சிந்தித்து கூட்டணி அமைத்தீர்கள் என்றால் இது நிச்சயம் நிறைவேறும் என்பதே எனது நம்பிக்கை!!!

ஈழத்தமிழர் விவகாரத்தில் முன்னர் காற்றுப்போயிருந்த கருணானிதி அவர்களின் நிலைமைமாறியது தமிழககட்சிகள் ஈழமக்களின் சார்பாக போரட்டங்களை முன்னெடுத்து சென்றது..அதன் பின் முன்னாள் பீப்பா ஊழல் பெருச்சாளி ஈழத்தமிழர் சம்பந்தமாக ஆதரவான அறிக்கைகளை தொடர்ந்து தானும் தன்னை தனது கட்சியும் தனித்துவிடுவோம் என்னும் பயத்தினால் சர்வகட்சி,சங்கிலி போரட்டம் என சும்மா தொடங்கினார்...பின் சர்வகட்சி மாகானாடிற்கு முன் இரவு கிடைத்த ஈழத்தமிழர் வன்னி நிலைமை சம்பந்தமான இறும்வெட்டு கிடைத்து உண்மையில் அதன் மூலம் அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்படுத்தியது. மாகா நாட்டில் மிக தெளிவாக பேசி தனது நடவடிக்கைகளை, தீர்மானங்களை மேற்கொண்டார்...

ஆனால் இவரின் இந்த நடவடிக்கைகள், இவரின்மேல் ஏற்பட்ட மதிப்பு செல்வாக்குகளை

பொறுக்காத பீப்பா மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி துள்ளிக்குதித்து இவரை பயப்படுத்தும் படியான அறிக்கைகளை விட்டது, இவரின் மேல் குற்றம்சாட்டும் கணைகளை ஏவிவிட்டது..

மிரண்டார் கருணானிதி..கைதுகள் செய்தார்... இந்திய மத்திய அரசு அமைச்சரிடம் சரணாகதி அடைந்தர்... எல்லாம் தலை கிழக நடந்தது... எல்லவற்றிற்கும் காரணம் இந்த அம்மதான்..

இவாவின் அசைவிற்கு எற்ப தான் தமிழக முதல்வரின் அச்சைவுகளும் இருக்கும்..பாவம் தமிழன் என எதவது செய்யப்போக அது அவரின் அரசியல் வாழ்வு பதவிகள் எல்லவற்றிர்கும் ஆபத்தகிவீடும் படி ஆட்டிபடைத்து கொண்டு இறுக்கிற...மறு பக்கம் மற்றைய கட்சிகள் சொன்னதை செயல்படுத்து என நெருக்கடி.. நிவாரணம்,பணம? உயிர் ஆபத்திலிருந்து காக்கும் போர்னிருத்தம? ஏற்கணவே பல முறை ஆட்சியை ஈழத்தமிழர் பிரச்சரனைகளினல் இஅழந்தவர்..மீண்டும்?.ஆகவே மத்திய அரசின் தாளத்திற்கு ஆடி தனது நிலையை உறுதிப்படுத்தி சில்லரை விடையஙளை செய்துகொண்டிருப்போம் என்றால் தமிழக மற்றைய கட்சிகள் கட்சிகள் சும்மாவிடுமா? அதாவது திரிசஙு நிலைமையில் குழப்பத்தில் சமாளிப்பு நிலைமையில் குழப்ப அரசியல் நிலைமையில் இருக்கிறார். பெருச்சாளிஅம்மா தான் இவரை கனவிலும் நினைவிலும் பயமுறுத்திகொண்டு இருக்கிறார்? இவரும் ஆதரவு என நம்மி தொடஙினது எல்லாம் தலை கீழக்கிவிட்டது.. இனி அடுத்த இறுவெட்டு, போரட்டம் ஈழத்தமிழ்மக்களின் உயிர் ஈழப்புகள் எதாவுது தற்காலிக மாற்றங்களை கொண்டு வரலாம்...? இருவரின் அரசியல் தமிழகத்தையும் ஈழமக்களின் வாழ்வு,சாவ நிலைமையும் ஆட்டிபடைத்து கொண்டு இருக்கிறது? :unsure:

தமிழகத்தில் மக்கள் இப்போது மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்ற பிரச்சனைகளால் கஷ்டப்பட்டுகின்றனர்..........

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில்....... ஈழப்பிரச்சனையை மட்டும் மனதில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்களா என்பது இன்னும் புதிராகவே உள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

p44sv8.jpg

அளவிட முடியாத பணிச் சுமையோ... மனச் சுமையோ ஏற்படும்போதெல்லாம் இலக் கியம் படைத்தோ, உடன்பிறப்புக்குக் கடிதம் தீட்டியோ தன்னை லேசாக்கிக் கொள்வதுதான் எங்கள் தலைவரது வழக்கம். ஆனால், கடந்த வியாழனன்று, அவருடைய சோர்வையும் சுமையையும் அவர் வெளியிட்ட அறிக்கை மூலம் அறிந் தோம்... மனம் மிக நொந்தோம்!'' - தயங்கித் தயங்கி நம்மிடம் பேசினார் தி.மு.க-வின் மூத்த அமைப்பாளர் ஒருவர். ''இலங்கைப் பிரச்னை குறித்து தலைவர் வெளியிட்ட அறிக்கை கடைசி நிமிடத்தில் மாற்றத்துக்கு உள்ளானது. அவர் சற்றே கோபம் தணியாமல் போயிருந்தாலும்... 'முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்' என்ற வார்த்தை களோடுதான் அந்த அறிக்கை வெளியாகியிருக்கும். அதனால் தமிழக அரசியலே திசை மாறியிருக்கும்!'' என்று சொல்லி நம்மை திடுக்கிடவும் வைத்தார் அவர்.

''ஏன்... ஏன்?'' என்ற நமது கேள்விக்கு, ''விவரமான வட்டாரங்கள்தான் உங்களுக்கு உண்டே... விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!'' என்றபடி வேதனையோடு அவர் நகர்ந்தார்.

விசாரித்தோம்..!

உறவுகள் உரசல்..!

சம்பவங்கள் நிறைந்த வியாழனுக்கு முந்தைய நாள்... நவம்பர் ஐந்தாம் தேதி... மகன் மு.க.தமிழரசின் 'மோகனா மோட்டார்ஸ்' என்ற மோட்டார் வாகன டீலர்ஷிப் நிலையத்தைத் துவங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. ஆச்சர்யமூட்டும் வகையில் வி.ஐ.பி-க்களின் அணிவகுப்போடு நடந் தது அந்த நிகழ்ச்சி. அதை முடித்துக்கொண்டு, சி.ஐ.டி. நகர் வீட்டுக்குத் திரும்பினார் அவர். புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நிறுவனத்தைப் பற்றி, அங்கே சில வாக்குவாதங்கள் நடந்ததாகச்

சொல் கிறார்கள் கட்சி வட்டாரத்தில். ஏகத்துக்கும் கேள்விகள் எழும்பியதாகவும், அளிக்கப்பட்ட பதில்கள் அமைதியை ஏற்படுத்தவில்லையென்றும் கூறப்படுகிறது. மீண்டும் கேள்விக் கணைகள் பாய... அப்செட்டான மனநிலையிலேயே இருந்த முதல்வர், அதே வருத்தங்களோடு அன்றிரவு தூங்கச் சென் றாராம்.

வேண்டும் நிம்மதி!

மறுநாள் பொழுது விடிந்ததும்... செய்தித் தாள் களில் கவனம் செலுத்திய முதல்வர், இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியாகியிருந்த சில செய்திகளால் அப்செட் ஆனாராம். கூடவே, அன்றைய 'முரசொலி' நாளேட்டில் வெளியான பெட்டிச் செய்தி அவர் கோபத்தை மிகக் கிளறிவிட்டதாகவும் தகவல். கடந்த இதழ் ஜூ.வி-யில் வெளியான டாக்டர் ராமதாஸின் பேட்டிக்கு ரியாக்ஷன் கொடுத்தது அந்தப் பெட்டிச் செய்தி. உடனடியாக நாளிதழின் நிர்வா கியை போனில் அழைத்தவர், ''நான் ஒருத்தன் இருக்கேன் என்பதே மறந்துவிட்டதா? பா.ம.க. உறவை பாதிக்கக்கூடிய சீரியஸான அந்த பெட்டிச் செய்தியை என் பார்வைக்கு காட்டிவிட்டு அச்சேற்ற வேண்டியதுதானே?'' என்று சீறித்தள்ளினாராம்.

அந்த மூடில் அவர் இருக்கும்போதே, கோபாலபுரம் இல்லத்திலும் சில குடும்ப விவகாரங்களை முன் வைத்து உறவுக்குள் உரசல் எழுந்ததாம். அதைத் தொடர்ந்து சில டெலிபோன் அழைப்புகளும், நேரடி விவாதங்களுமாக முதல்வரின் டென்ஷனை அதிகப்படுத்துகிற மாதிரியான விஷயங்கள் அங்கே அரங்கேறியதாகச் சொல்லப்படுகிறது. மாடியிலி ருந்து விறுவிறுவென கீழே இறங்கி வந்தவர், உரக்கச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு கார் ஏறிக் கிளம்பிவிட... 'முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவோடு கிளம்பிச் செல்கிறார்!' என்று காட்டுத் தீயாக எங்கிருந்தோ ஒரு தகவல் பரவத் தொடங்கியது. அதற்கு ஏற்றாற்போல், இலங்கைப் பிரச்னை தொடர்பாக மிகுந்த விரக்தியோடு அவர் வெளியிட்ட அறிக்கை வந்தது! அதுவும்கூட 'ரிவைஸ்டு' (திருத்தப்பட்டது) என்ற வாசகங்களோடு அரசால் வெளியிடப்பட... முந்தைய அறிக்கையில் உச்சகட்ட விரக்தியைக்காட்டி அது பிறகு திருத்தப்பட்டது என்றே அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்பட்டது.

'இலங்கை' இம்சை..!

கோட்டையிலிருந்து வீடு திரும்பும்போது, வழியெங்கும் ஒவ்வொரு அமைச்சருக்கும் போன் போட்டுப் பேசி வறுத்தெடுத்து விட்டாராம் முதல்வர். சமீப காலமாக அமைச்சர்கள் குறித்துக் கிளம்பும் பல்வேறு விதமான சர்ச்சைகள் குறித்து சுளீர்சுளீரென அவர்களிடமே கேள்விகள் போட்டாராம். ''எல்லாருடைய பாரத்தையும் நான்தான் சுமக்கணுமா? உங்களுக்குனு பொறுப்பே கிடையாதா?'' என்று தன் வேதனையை காரமான குரலில் கொட்டித் தீர்த்தாராம்.

காவேரிப்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு போன் போட்ட முதல்வர், 'அங்கே என்னய்யா பண்ணிகிட்டு இருக்கீங்க? இங்க ஊரே பத்திக்கிட்டு எரியுது? கவிஞர் தாமரை தெரியு மாய்யா? அந்த பொண்ணு என்னவோ வாய்க்கு வந்தபடியெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்னை பத்தி விமர்சிச்சிக்கிட்டு இருக்கு... நீங்களெல்லாம் பேப்பர் படிக்கிறீங்களா, இல்லையா? உடனே, புறப்பட்டு சென்னைக்கு வாங்க. அவங்க கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லி ஒரு அறிக்கை வந்தாகணும்...' என்று போனிலேயே உத்தரவு போட, பதறி அடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினாராம் துரைமுருகன். இலங்கைப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி... திரைத் துறையில் உள்ளவர்களும், கூட்டணியிலேயே உள்ள திருமா வளவனும் நடந்துகொள்கிற விதமும் முதல் வரை ஏகத்துக்கும் பொறுமை இழக்கச் செய்திருக்கிறது. தன் மீது மதிப்பு கொண்டவர்களேகூட இந்த அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிற மாதிரி பேசுகிறார்கள்... நடந்துகொள்கிறார்கள் என்பதில் அவர் மிகவும் நொந்து போயிருந்தார். அதுவும் சேர்ந்தே அவருடைய கோபமாக வெடித்திருக்கிறது என்கிறார்கள்.

காங்கிரஸ் குடைச்சல்!

டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை, தி.மு.க-வுக்கு ஆதரவாக இருப்பது போல் தோற்ற மளித்தாலும், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் இலங்கை விவகாரத்தை முன்வைத்துத் தருகிற நெருக்கடிகள் முதல்வரின் மனதை ரொம்பவே பாதித்திருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான சுந்தரம், அருள் அன்பரசு, பழனிச்சாமி ஆகியோர் பல இடங் களில் கூடிப்பேசி தி.மு.க. அரசுக்கு தொடர்ச்சியாகக் குடைச்சல் கொடுக்கத் திட்டமிடுகிறார்கள் என்ற தகவலும் அவருக்கு வந்து சேர்ந்ததாம். தமிழகத்தில் தற்போது ஈழத் தமிழர் பிரச்னையை வைத்து பாலிடிக்ஸ் செய்பவர்களை கடுமையாக விமர்சித் திருப்பதோடு, 'வரும் பத்தாம் தேதி கூடவிருக்கும் சட்டமன்ற தொடரில் விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் விமர்சித்துப் பேச இந்த எம்.எல்.ஏ-க்கள் திட்டம் போடுகிறார்கள். அதை டெல்லியிடம் பேசித்தான் அணை போடவேண்டும்' என்ற சிந்தனையும்கூட முதல்வரை சற்று பதற்றப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

ஆட்சி ஆபத்து!

''உள்கட்சி தேர்தல்கள் குறித்து தலைவருக்கு வந்து சேரும் தகவல்கள் பலதும் ரசிக்கும்படியாக இல்லை. பல ஊர்களின் நிலவரம் பற்றி பேராசிரியரும் கசப்பான சில தகவல்களை தலைவரின் காதில் போட்டபடி இருக்கிறார். இந்த நேரம் பார்த்து சட்டசபை கூடுவதும், அப்போது புதிய கலாட்டாக்களுக்கு அ.தி.மு.க. திட்டமிடுவதும் தலைவரின் பொறுமையை நிறையவே பதம் பார்த்துவிட்டது'' என்று சொல்லும் தி.மு.க. மேல்மட்ட நிர்வாகி ஒருவர், ''எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயாராகும் அ.தி.மு.க., இதற்கென சபாநாயகரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அதே வியாழனன்று சட்டமன்ற வளாகத்துக்கு வரப்போகும் தகவலும் முன்கூட்டியே முதல்வரை வந்தடைந்து, அவருடைய காலை நேரத்து மூடைக் கெடுத்துவிட்டது!'' என்கிறார்.

சபாநாயகர் ஆவுடையப்பன், அன்றைக்கு வள்ளியூரில் ஒரு நிகழ்ச்சியில் இருந்ததால், மனு கொடுக்க வந்த அ.தி.மு.க-வினர் திரும்பிப் போய் விட்டார்கள். என்றாலும், இக்கூட்டத் தொடரில் எப்படியும் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துவிடுவது என்று முனைப்புடன் இருக்கிறார்களாம்.

டெலிபோன் டேப் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை, மின்வெட்டுப் பிரச்னை, உத்தப்புரம் துப்பாக்கி சூடு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காடுவெட்டி குரு கைது, இலங்கைத் தமிழர் பிரச்னை, என்.கே.கே.பி.ராஜா மீதான நடவடிக்கை, விஜயன் கொலை விசாரணை, விலைவாசி உயர்வு, ரேஷன் அரிசி கடத்தல் புகார்கள் என்று சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளும் கிளப்பவிருக்கும் பிரச்னைகள் பற்றிய சிந்தனையிலும் முதல்வர் சூடாகியிருந்தார் என்று கூறப்படுகிறது.

அதோடு, தங்களுக்கு இவ்விஷயங்களில் முழு ஆதரவு கொடுக்குமாறு தி.மு.க-வுக்கு எதிர் வரிசையில் இருக்கும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து அ.தி.மு.க-வினர் ஆதரவு திரட்டி வருவ தாகவும் கூறப்படுகிறது. 'காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பன்னிரண்டு பேரை தங்கள் பக்கம் ஈர்க்க அ.தி.மு.க. பகீரத முயற்சிகள் செய்கிறது' என்று உளவுத் துறை அளித்த தகவலும் முதல்வர் வசம் இருக்கிறது. இதையெல் லாம் மனதில்கொண்டுதான், 'நம்பிக்கை யில்லா தீர்மான முயற்சியில் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது!' என்று கடந்த சில நாட்களாகவே தன் சகாக்களிடம் சொல்லி வந்தாராம் முதல்வர். அதற்கேற்ப, 'இன்னும் சில வாரங்களில் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்புவோம்...' என்று சமீபத்தில் திருவொற்றியூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மூத்த தலைவர் செங்கோட்டையன் பேசியதும் அவர் கவனத்துக்கு வந்தது என்கிறார்கள்.

சேனலிலும் எதிரொலி!

பொதுவாக, 'கலைஞர் தொலைகாட்சி'சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் 'ப்ரமோ' மற்றும் 'இசையருவி' சேனலுக்கான பாடல்களை முன்கூட்டி கருணாநிதி பார்வைக்கு அனுப்பி வைத்து அவர் அனுமதி பெற்றே வெளியிடுவார்களாம். வியாழனன்று இரவு இந்த வழக்கப்படி இவற்றை கருணாநிதி பார்வைக்கு அனுப்ப யத்தனித்தபோது, ''வேணாம்! விட்டுடுங்க... தலைவர் மூடு சரியில்லை... நீங்களே கவனமாப் பார்த்து போட்டுக்கோங்க!'' என்று முதல்வரின் வீட்டிலிருந்து சொல்லப்பட... ''என்னாச்சு தலைவருக்கு?'' என்று சேனல் வட்டாரத்திலும் கேள்விக்குறி எழுந்து நின்றது!

இத்தனைக்கும் மத்தியில், ''தி.மு.க. தலைவராக, முதல்வராக, குடும்பத்தின் தலைவராக கருணாநிதி சந்திக்காத சோதனைகள், நெருக்கடிகள் ஏது மில்லை! வியாழன் அதில் மற்றுமொரு நாளே'' என்ற உற்சாகக் குரல்களையும் கேட்க முடிகிறது!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.