Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • தொடங்கியவர்

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் துயிலுமில்லம் சிரமதானம்

மாவீரர் நாளை முன்னிட்டு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தொடர்ச்சியான சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

18ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் ஒழுங்கு படுத்தலில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்கள், தலைவர், கிளை முகாமையாளர்கள், சங்கப்பணிப்பாளர்கள், கரைத்துறைப்பற்று பிரதேசசபை செயலார், உப அலுவலக பொறுப்பதிகாரிகள், பணியாளர்கள், சிற்றூளியர்கள், முல்லை மேற்கு முல்லை கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள், பணிப்பாளர்கள், அங்கத்தவர்கள், முள்ளியவளைக் கோட்டத்திற்குட்பட்ட மனிதவள அலுவலர்கள், முள்ளியவளை வருவாய்ப் பகுதியினரென நூற்றுக்கணக்கானோர் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • தொடங்கியவர்

வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்

p4vt4.png

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

p1by3.png

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

p2qn1.png

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

தனது விடுதலைக்காக சிறிய இனமான தமிழினம் இந்தப் பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது.

மாவீரர்களே உங்கள் ஈகத்திற்கு தலை வணங்கி

உமது கனவுக்கான பயணத்தில் இன்னும் உறுதியாய் கைகோர்க்கின்றோம்

தாய் மண்ணிற்க்காகவும் எமக்காகவும் வித்தாகிப்போன மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, விரல்கள் நடுங்குகின்றன..

"காவியமான நாயகர்களே எங்கள் காவலரண்களே....கார்த்திகைப் பூக்களே'...

எங்கள் கண்ணீர் பூக்களோடு வீர வணக்கங்கள்'..

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் இல்லை!

துடிக்கின்றது மனம்.

வெடிக்கின்றது இதயம்.

இவ் இழப்புக்கள் யாருக்காக?

புரிகின்றதா எங்களுக்கு?

புரிந்தும் புரியாமல் வாழ்கின்றோமா?

யாழில் கருத்துக்கள் எழுதவும், செய்திகளை ஒட்ட மட்டுமா எங்களால் முடிகிறது?

இதற்கு ஆக்கபூர்வமான செயலில் இறங்க ஏதாவது முயற்சித்தோமா? அல்லது இனிமேலாவது முயற்சிப்போமா?

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் செயற்பாடுகள் மக்களால் முன்னெடுப்பு

நவம்பர் - 27 மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் நினைவுகொள்வதற்கேற்ப வன்னியெங்கும் மாவீரர் தின முன்னேற்பாட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரதான வீதியகள், பிரதான சந்திகள், நகரங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் என்பனவற்றில் மாவீரர் நினைவுப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர் நினைவு வளைவுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.

மாவீரர் நினைவு நாள் செயற்பாடுகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், போராளிகள், பாடசாலை சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் உணர்வுபூர்வமாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிந்தது. மாவீரர்நாளை முன்னிட்டு பல தரப்பட்டவர்களாலும் பொதுப்பணிசார் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல இடங்களில் குருதிக்கொடை, சிரமதானப் பணி என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மக்களிற்காகவும் எம் மண்ணிற்காகவும் தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். தமிழின வீரத்தின் அழிக்கமுடியாத அடையாள சின்னங்கள் நீங்கள்

மாவீரர்கள்

தமிழின வீரத்தின் அடையாளசின்னங்களே

தமிழனுக்காக மீளாத்துயில் கொண்டீரோ

முழங்குகிறது எம் படை உம் பெயர்சொல்லி

முடித்திடுவோம் உம் சபதம் எம் மனங்களில் ஏந்தி

வீரர்களே உங்களுக்கு நிகர் கண்டதில்லை இப் பூமியிலே

உங்கள் உடல் தான் கல்லறையிலே புகழ் வானளவிலே

ஈழத் தாய்களின் வயிற்றில் நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள்

அப்பொழுது நாங்கள் போராடுகிறோம் நீங்கள் ஓய்வெடுங்கள்

Edited by suppannai

  • தொடங்கியவர்

தேசவிடுதலைப் போரில் வித்தான மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

தேசவிடுதலைப்போருக்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வன்னி மண்ணெங்கும் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகள் நேற்று முன்தினம் கற்சிலைமடு, முத்துஐயன்கட்டு வலதுகரை பாடசாலைகளிலும் இதேபோல், நேற்று வள்ளிபுனம் வட்டம், தேவிபுரம் ‘ஆ' பகுதியிலும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்றையதினம் வட்டக்கச்சிக் கோட்டம், கல்மடுநகர் அ.த.க பாடசாலைப் பகுதியிலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மூங்கிலாறு வட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நேற்று முன்தினம் உடையார்கட்டு ம.வி.யில. இடம்பெற்றுள்ளது. இம் மதிப்பளிப்பு நிகழ்வுகளில் போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடினர்.

www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு ஆரம்பம்

தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றல் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் ஓழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றது. கடும் மழை பெய்து கொண்டிருக்கின்ற வேளைகளிலும் பொது மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

www.sankathi.com

Edited by THEEPAN0007

தாயகத்தில தமிழருக்கு ஒரு விடிவு பிறக்கவேணும் எண்டு, தங்கட வாழ்க்கையை, சுகங்களை தியாகம் செய்த நண்பர்கள், கூடப்படித்தவர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஊரார், மற்றும் முகம் அறியாத உறவுகளிற்கும், போரில இடையில அகப்பட்டு மடிந்த மக்களிற்கும் இதயபூர்வமான அஞ்சலிகள்! தாயகத்தில இருக்கிற மக்களுக்கு விரைவில ஒரு விடிவு பிறக்க பிரார்த்தனைகள்!

தன்னினத்திற்காக

தன்னுயிர் ஈந்த

தன்மாணத் தியாகிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.