Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகள்

Featured Replies

பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள், குறிப்பாக போரால் புலம்பெயர்ந்த ஈழ, சோமாலிய, குர்திஸ் மக்கள், அவர்களது வாழ்க்கை,அவர்கள் தங்கள் தாயகத்துக்கு செய்ய முயலும் உதவி, புலம்பயர் இளம் சமுதாயம் சமூக கலாச்சார காரணிகளால் இரட்டை வாழ்க்கை முறை வாழவேண்டியுள்ளமை என பலவற்றை பற்றியும் பேசுகிறது. அதில் குறிப்பாக ஈழ விடுதலை போருக்கு அதிகம் ஆதரவு தருபவர்கள் யார்? தராதவர்கள் யார் என்பதையும் ஓரளவு வரையறுக்க முயல்கிறார்கள், 70 களில் புலம்பெயர்ந்த மத்திய நடுத்தர வர்க்க நீல பட்டி படித்த தொழிலில் உள்ளவர்களும் அவர்களது பிள்ளைகளும் விடுதலை போருக்கு ஆதரவு தருவதில் இருந்து விலகி நிற்க, 80 இன் பின் புலம்பயர்ந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள்.

Exile youth lead 'double lives'

She added that those middle-class professionals also tended to be quite disapproving of the LTTE and dissociated themselves from the refugees who came in the 1980s. In a polarised and politicised climate, this has presented quandaries for young middle-class Tamils.

http://news.bbc.co.uk/2/hi/uk_news/7760992.stm

இதே தான் நான் இருக்கும் இடத்தில் உள்ளதும். இங்கு உள்ளவர்கள் படித்த "மேதிகள்". அதனால் அவர்களுக்கு ஈழத்தில் என்ன நடந்தாலும் கவலை இல்லை. ஏன் என்றால் அவர்கள் போரால் இடம் பெயராத அறிவு கொழுந்துகள்.

UK Tamils polarised but powerful

http://news.bbc.co.uk/2/hi/uk_news/7742134.stm

Exiles wielding power from the UK

http://news.bbc.co.uk/2/hi/uk_news/7742638.stm

Edited by KULAKADDAN

இதுல சொல்லப்படுற தகவலுகள் சரியாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை குளக்காட்டான். குறிப்பாய் 1970 - 1980, 1980 - 1990, 1990 - 2000, 2000 - 2008 எண்டு பிரிச்சுப்பார்த்து இந்தக்கால கட்டங்களில வெளிநாடுகளுக்கு நகர்ந்த - குடியேறிய தமிழ் ஆக்களும் அவர்கள் தாயக போராட்டத்துக்கு கொடுக்கும் ஆதரவும் எண்டு ஆராய்ஞ்சால் அது சரியான முறையாக இருக்காது.

எனக்கு தெரிஞ்சு 2000 - 2008 இல வெளிநாடுகளுக்கு வந்த ஆக்களை விட 1990 - 2000 காலத்தில வந்த ஆக்கள் அதிக ஆதரவு கொடுக்கிறீனம் எண்டு சொல்லாம். ஒட்டுமொத்த குழுக்களையும் பார்த்தால் 1980 - 1990 காலங்களில வந்த ஆக்கள் அதிக ஆதரவு கொடுக்கிறீனம் எண்டு சொல்லலாம். இதற்கு முக்கிய காரணமாக நான் நினைக்கிறது என்ன எண்டால் அகதிகள் உருவாகியது, அதிக அளவில ஆக்கள் வெளிநாடுகளுக்கு போனது இந்தக்காலத்தில எண்டு சொல்லலாம். மற்றது வாழ்க்கையை இவர்கள் நிலைநிறுத்தியவர்கள்.. பெரும்பாலும் நிதி நெருக்கடிகள் இருக்காது. வாழ்வில Settle பண்ணி இருப்பீனம். மற்றவர்களை விட இவர்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்கலாம்.

பொதுவாக எண்டு பார்த்தால் எந்தக்காலத்தில வந்தார்கள் எண்டு பார்க்கிறதைவிட சிறீ லங்கா அரசினால் தமது வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆதரவை தாயக போராட்டத்துக்கு குடுக்கிறீனம் எண்டு நான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

Audio slideshow: Tamil dance in the UK

கோவில்களை மையமாக வைத்து பிரித்தானியா வாழ் தமிழர்கள் எவ்வாறு தமது சமயம் சார்ந்த இனம் சார்ந்த கலை கலாசார பண்பாட்டுக் கோலங்களை இளம் சந்ததிக்கு கடத்தி நிற்கின்றனர்.. தொலைந்து போன மரபுகளை மீட்டி நிற்கின்றனர் என்பதை சுருங்கக் கூறுகிறது கீழ்படி விபரணம்.

For Tamils in the diaspora, keeping alive cultural and artistic practices is of immense importance.

_45287552_45257371.jpg

Dance scholar Dr Ann David describes the Bharatnatyam dance learned by Tamil girls and how its re-emergence in temples has significance for those eager to preserve links with their cultural and religious heritage.

காணொளி விபரணம்: http://news.bbc.co.uk/1/hi/uk/7758870.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ டயஸ்பாரக்கள் தமிழை வளர்கீனமோ இல்லையோ நிச்சயமாக இந்து மதத்தையும் பாரத கலைகளையும் நல்லாவே வளர்க்கிறார்கள் இதனாலையே சிங்களவன் நாங்கள் இந்தியாவில இருந்து தான் வந்தனாங்கள் ஈழத்து பூர்வீக குடிகள் இல்லை என்று நல்லாவே விளம்பரபடுத்துகிறான்.

வெள்ளையும் அப்பிடித்தானே சொல்லுது. முந்தி கோவில்களில் தடை செய்த நடனம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் ஆர்வத்தால் மீண்டும் துளிர்விடுகுது எண்டு.

முந்தி ஏன் உந்த நடனம் கோவில்களில் தடை செய்யப்பட்டது எண்ட வரலாற்றை உந்த பிள்ளையளுக்கு சொல்லியிருப்பினமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ டயஸ்பாரக்கள் தமிழை வளர்கீனமோ இல்லையோ நிச்சயமாக இந்து மதத்தையும் பாரத கலைகளையும் நல்லாவே வளர்க்கிறார்கள் இதனாலையே சிங்களவன் நாங்கள் இந்தியாவில இருந்து தான் வந்தனாங்கள் ஈழத்து பூர்வீக குடிகள் இல்லை என்று நல்லாவே விளம்பரபடுத்துகிறான்.

அப்போ இந்தியாவில் இருந்து வந்த பெளத்த மதத்தை பின்பற்றுபவர்களும்.. ஈழத்துப் பூர்வ குடிகள் இல்லை என்று தானே சொல்லப்படனும்...!

அப்போ சிங்களவனும்.. சிறீலங்காவின் பூர்வ குடிகள் இல்லை.. என்பது நிரூபணமாகிறது அப்படியா..??!

புத்தன்.. உங்களுக்கு இந்துமதம் மீதும்.. கோவில்கள் மீதும் வெறுப்பு ஏற்படும் படி சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதற்காக வரலாற்றுப் பக்கங்களை நாம் மாற்றிட முடியாது.

ஈழ தமிழ் மக்கள் பாரம்பரியமாகவே இறை நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். எமக்கும் இந்திய தமிழ் மக்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிட முடியாது. நாம் பூர்வக் குடிகளாக இருப்பதற்கும்.. கலைகள் பரிமாறப்பட்டதற்கும் என்ன தொடர்பிருக்கிறது. கலைகள் காலத்துக்கு காலம் படையெடுப்புக்களால்.. அயல்நாட்டு மன்னர்களின் வருகைகளால்.. பரப்பட்டுள்ளன... ஆதிக்கம் பெற்றுள்ளன.

ஈழத்தில் உள்ள கோவில்கள் பல.. சோழர் காலத்துக் கோவில்கள். அதற்காக அதற்கு முன் வாழ்ந்த மக்கள் இறை வழிபாடு செய்யவில்லை என்றும் இல்லை. எமக்கும் தென்னிந்திய மன்னர்களுக்கும் இடையே பாரம்பரிய தொடர்பும் உறவாடலும் இருந்திருக்கிறது. அது கலைகளை பரப்பி இருக்கும். எனவே சில கோவில் வடிவமைப்புக்கள்.. பரதநாட்டியம் இவற்றைக் காட்டி எமது பூர்வீகத்தை நிராகரிக்க முடியாது..!

ஆனால் எமது பாரம்பரிய கலைகளை பரதநாட்டியம் பின் தள்ளுவது வருந்தத்தக்கதே. கோலாட்டம்.. மயிலாட்டம்.. காவடியாட்டம்.. பொம்மலாட்டம்.. போன்ற எமது சொந்தக் கலைகள்.. பரதநாட்டியம் அளவுக்கு தமிழர்களின் கலையாக அடையாளப்படுத்தப்படுவது.. தவறவிடப்பட்டு வருவதும் நன்றன்று..! அதற்காக.. கோவில்களை.. பரதத்தை குறை பிடிக்க முடியாது. இவற்றை பயில்விப்பவர்கள் தான்.. இனத்துவப் பற்றோடு.. கலைகளின் வகைகளை சரியாக இனங்கண்டு... இளம் சந்ததிக்கு.. எதிர்கால சந்ததிக்கு கடத்திச் செல்ல வேண்டும்.

ஆனாலும்.. உலகம்.. எதை அதிகம் எதிர்பார்க்கிறதோ.. அதையே மக்கள் பிரதிபலிக்க நினைக்கின்றனர். கலை வளர்ப்பை அல்ல. கலையை வளர்க்கிறம் என்று நாட்டியம் பழகுபவர்கள் வெகு சிலரே. அட அவன்ர பிள்ளை பழகுது என்று போட்டி பொறாமையில்.. வியாபார நோக்கில் கலை வளர்ப்பவர்களே நம்மவர்கள். அது பிபிசிக்கு தெரியாதது இப்போதைக்கு நல்ல விடயம்..! :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.