Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து

Featured Replies

புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து

பேட்டியினை முழுவதுமாக வாசிக்கும் போது, அண்மையில் நான் வாசித்த சிறந்த புலம் பெயர் எழுத்தாளரின் பேட்டியாக இவரின் பேட்டி காணப்பட்டது. கனடாவில் வசிக்கும் இவரின் கருத்துகள் ஈழத்து தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அனைவரினதும் ஆசைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கின்றனர். புலம் பெயர் நாடுகளில் தமிழ் படிக்கும் இளைய தலைமுறை பற்றிய இவரின் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை

இந்த பேட்டி, இம்மாத தீராநதியில் இருந்து நன்றியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது

=======================================================

அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும்.

அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்து நடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரும் ஒரு நவீன பாணர்தான். ஊர் ஊராகச் சென்று பாடிய பாணர்கள்போல தேசம் தேசமாக சுற்றி மானுடத்தைப் பற்றி பேசுகிறார். இதுவரை கட்டுரைகள் `சிறுகதைகள்' நேர்காணல்கள் விமர்சனங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல் `உயிர்மை' வெளியீடாக இந்த டிசம்பரில் வருகிறது. ஐ.நா.வில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் தற்போது ஓய்வில் கனடாவில் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

தற்போது இலங்கையில் தமிழ்ப் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்குப் போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ்ப் புத்தகங்கள் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். அந்த சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்துப் போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்

ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. `இங்கே இப்பொழுது தமிழ்ப் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது? என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப்படுத்த முடியாது. யாராவது தமிழ்ப் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Tஎர்ரொரிச்ம் ஈன்வெச்டிகடிஒன் Dஇவிசிஒன்) கொண்டு போவார்கள். அப்படிப் போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.

அந்த நண்பர் இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம். ஆனால், மனைவி வன்னியைச் சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீஸாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வர முடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.

ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?

சமீபத்தில் கனடா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது

என்பது எவ்வளவு பெரிய விஷயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை. இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தன் வாழ்நாள் சேமிப்பைச் செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.

ஒன்றைப் பதிப்பித்தால்தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தைப் படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்துப் பேசினார். அவர் எல்லா தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறு மாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை. எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.

ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தில் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?

நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களைப் படிப்பேன். அந்த நாட்டு எழுத் தாளர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி வலுப் பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தி லிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ்ப் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.

சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ. போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலக நாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு.

தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள். அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் உருவாகியவர்கள்தான்.

இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Hஅல்f ஒf அ யெல்லொந் ஸுன் புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டொலர்கள். நாவல் அருமையான நாவல். ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்கச் சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றைத் தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

இதைத்தான் நான் திருப்பித் திருப்பிச் சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்குத் தெரிய வருவதில்லை. காரணம், அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.

போருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது. போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்குப் புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

1995-ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவின் ஓர் அங்கமாக வாழ்வதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980-ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.

1962-ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993-ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ (20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம். ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.

உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களாதேஷ். 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமட் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களாதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுமாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா. சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் `இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசும்போது cஒன்ச்டிடுடிஒனல் டெமொcரcய் என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின் அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேட்டி அருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.