Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._eelamancommp3/

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்

காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை

நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்

காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்

ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Edited by kuddipaiyan26

  • Replies 181
  • Views 113.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    பாட‌லை கேக்க‌ https://voca.ro/mNAN1gtR4tT   நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /  https://voca.ro/jqv6QDW5fSY https://voca.ro/fKbes0CdvUe  இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளி

  • தமிழரசு
    தமிழரசு

    மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ie_03_trackmp3/

நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே

நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

மூத்தமகன் கிட்டு அவன் தோழர்

குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்

றொகானுடன் நாயகன் தூயவன்

நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால்

கனலான செய்தியில்

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்

நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி

உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன்

தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2)

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

கடலம்மா.....

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை

தாயகத் தாகம் தணிவதில்லை எந்த

தடையிலும் பயணம் நிற்பதில்லை(2)

எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா

எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

நினைவே நெருப்பாகும் - எங்கள்

நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...PR/04_trackmp3/

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ இந்தி

அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது

தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)

கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)

இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது

உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ

இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ngal_thalaivan/

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த

பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்

பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்)

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்

தமிழ் பகை முடித்தான்

பழம் தமிழ் பகை முடித்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்

படை துவக்கி வைத்தான்

புலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்)

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக

அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக

வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்

நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்

மேடையில் பேச ஏறியதில்லை

தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்)

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன்

இந்த பாட்டு வரி எழுதினது..சிறி அண்ணா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...r_paadal_track/

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

ஆஆஆஆஆஆ.........

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

[மறைந்திடுமோ உம் நினைவு

அழிந்திடுமோ உம் கனவு] 2

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

ஆஆஆஆ........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2

விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்

[எரிமலையாய் நாம் எழுவோம்

விடுதலைக்காய் தலை தருவோம்] 2

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

ஆஆஆஆ.........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்

புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2

பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர்

[கடமையினை நாம் மறவோம்

பயிற்சியினை நாம் பெறுவோம்] 2

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

ஆஆஆஆ.......

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....

இந்த பாட்டு வரி எழுதினது.. அருவி அண்ணா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._aalakkadalram/

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று

தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்

ஏறி கடல் வென்றதுண்டு

அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்

வேங்கை கடல் வீரர் இன்று

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற

இன்னல் இனி மேலும் இல்லை

புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ

பூமி தனிலேது தொல்லை

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்

காவல் இருக்கின்ற தம்பி

எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்

பகையை முடிப்பானே பொங்கி

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்

வழிதன்னில் வங்ககடல் நின்று படும்

கடல் புலிகள் எழுகின்ற போர்கள்

தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...QV9/recoding04/

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே

எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்

கவி பாடிடும் மாபெரும் பேரானான்

தேசத்தில் எங்கணும் நிலையானான்

விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்

பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்

தன்னின மானத்தை தான் மதித்தான்

பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)

இங்கொரு தாயகம் மூச்சென்றான்

தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்

வந்திடும் படைகளை வீச்சென்றான்

புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)

விடுதலைபுலிகளின் பலமானான்

தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்

படுகளம் மீதிலோர் புலியானான்

பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே

நீ எங்களின் வானத்து வளர்மதியே

இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்

தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)

இந்த பாட்டு வரி எழுதினது..சிறி அண்ணா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...lU/12_trackmp3/

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் instrumental Song http://www.imeem.com/people/N9xji6p/music/6CsSiuIC/inmp3/

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்

என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்

இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்

புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை

பூவாய் வளர்கிறோம்

கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை

ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்

காலம் வரையும் தோள்களில்

இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)

இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே

மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே

உறவினை வளர்ப்பார்கள்

இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி

எரிந்திட போவார்கள்

பாட்டும் கூத்தும் பகிடியுமாக

பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)

பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்

ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்

எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்

இந்த வேளையும் பகைவர் மிதினில்

எரியும் விருப்பினில் இருப்பார்கள்

அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்

முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)

வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்

எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

இந்த பாட்டு வரி எழுதினது..சிறி அண்ணா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...haajaka_mannin/

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்

சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா

போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்

புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்

நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே

நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்

நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்

சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்

தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்

நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்

ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்

அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்

உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த

ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்

அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே

பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்

போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்

மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி

மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/5HathFvT/track03/

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...avu_track_2mp3/

என்னடா தம்பி

என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்திவெளியில

எப்பியாண்டாம் நேற்றைய அடி கதிரவெளியில

வாகரை போடியார் சொல்லுறாரு அடியெண்டா அடியாம்

வழிசலுகள் வந்த பீரங்கி பொடியாம் பொடியாம்

என்னடா தம்பி கதைக்கிறானுங்க சந்திவெளியில

எப்பியாண்டாம் நேற்றையான் அடி கதிரவெளியில

[கொடிய சிங்களப் படைகள் ஊரச் சுத்துறானுகள்

கொட்டியா கொட்டியா எண்டு கனவில் கத்துறானுகள்] 2

[விடுதலைப் புலிய அழிச்சதாகத் துள்ளுறானுகள்

வெறுவாய்க்கு கெட்ட பொய் சொல்லுறானுங்க] 2

என்னடா தம்பி கதைக்கிறானுங்க சந்திவெளியில

எப்பியாண்டாம் நேற்றையான் அடி கதிரவெளியில

[காலங்காலமாக நம்மள அழிச்சவயெலவா

கழிசற நம்மட பெண்டுக உடம்பக் கிழிச்சவயெலவா] 2

[நாலஞ்சு கோவில பள்ளிய கூட இடிச்சவயெலவா

நம்மட பொடிய இவண்ட கதைய முடிச்சவயெலவா] 2

என்னடா தம்பி கதைக்கிறானுங்க சந்திவெளியில

எப்பியாண்டாம் நேற்றையான் அடி கதிரவெளியில

[முக்காவாசிப்பேர் சிங்களப் படைய விட்டிட்டுப் போயிட்டான்

முஸ்தபா சொல்லுறான் சிங்களப் படைக்கு புலிதானாம் சைதான்] 2

[அக்கா நேற்றுத்தான் கதிரவெளிப் பக்கம் போயிருக்கு

அவாவரட்டுண்டா தம்பி மறுகா இன்னும் கதையிருக்கு] 2

என்னடா தம்பி கதைக்கிறானுங்க ........

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...r_paadal_track/

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.

அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.

மானம் ஒன்றே

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா

அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா

மானம் ஒன்றே

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்

எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

மானம் ஒன்றே

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..

அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...

மானம் ஒன்றே

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..

நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

மானம் ஒன்றே

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...vaaividdu_peer/

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்

பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)

போற்றியே பாடிட மொழிகளில்லை

கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை

வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது

[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்

அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)

வேற்றுடலோடு இங்கு வாருங்கள்

உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)

விதியினை மாற்றிய புலியென்று

இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)

பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...Lss/recoding06/

நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா

நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2)

அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2)

உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2)

[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்

தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2)

கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2)

நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்

[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்

உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்] (2)

நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் (2)

புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்

[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்

புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்] (2)

நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் (2)

அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்

[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி

நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி] (2)

அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் (2)

எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._/thamizha_nii/

தமிழா! நீ பேசுவது தமிழா

அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்

அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்

என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்

இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை

'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை

இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை

இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?'

வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?'

துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'

தொலையாதா நம் தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரெண்டு' என்பதா?

கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?

கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?

கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா?'

பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸிடிக்கா?'

வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ai_eelam_songs/

நெஞ்சம் மறக்குமா

நெஞ்சம் மறக்குமா

நெஞ்சம் மறக்குமா

வல்வெட்டித்துறையில் நாங்கள்

வளர்த்த சிதை நெருப்பில்

பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்

படுத்ததை நெஞ்சம் மறக்குமா

படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா

ரகு நளன் பழனி

மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்

அன்பழகன் கரன் ஆனந்தகுமார் -(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்

இவர்களல்லவா"?

கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட

கதையைச் சொல்லவா?

தங்கத் தமிழீழ விடுதலை காண

நெஞ்சம் துடித்தாரே

சிங்கள இந்திய அரசுகள் சதியால்

நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்

போனால் பிடிப்பாராம்

இந்திய உதவி கொண்டே தமிழனின்

வாழ்வை முடிப்பாராம்

ஆழக்கடலில் போனபுலிகளை

பிடித்துச் சென்றாரே

அழகும் இளமையும் பொங்கும் வயதில்

துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை

பிடித்துச் சென்றாரே

அழகும் இளமையும் பொங்கும் வயதில்

துடிக்கக் கொன்றாரே

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...padai_kondump3/

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்

புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?

நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்

நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்

தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்

மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல

மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை

செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள

மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி

மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா

மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக

தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது

தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/U2-Jq8Yv/amp3/

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

கண்ணில் நீர்க்கோலம் ஆகின்ற நெஞ்சங்களே

நெருப்பாகி வாருங்களே நெருப்பாகி வாருங்களே

கருவேங்கை வெடியாகிப் போகின்ற நேரம்

காற்றிற்கும் விழியோரம் கசிகின்ற ஈரம்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

இமைமூடும் நேரத்தில் வெடியாகினார்

இதழோரம் சிரிப்போடு விழி மூடினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அழியாத வரலாறு உருவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

தெரியாத முகமாக நடமாடினார்

தெளிவான உணர்வோடு படமாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வெடியாகி தமிழீழ விடிவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

நடமாடும் தெய்வங்கள் இவராகினார்

நமதீழத் திருநாட்டின் கருவாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பலகோடி ஜென்மங்கள் குடியேறினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...yum_nerupilmp3/

எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி

பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி

தாக்கப்போகும் நாளில் மட்டும் எமக்குப் புதிய நீதி

கண்ணிமை திறந்தால் அதிலோ நெருப்பாறுகள் ஓடுமடா

எங்கள் அண்ணன் வழி எதுவாயினும் கருவேங்கைகள் பாயுமடா

எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்

வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்பு சொரிவோம்

எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்

எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்

விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்

உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்

உறவு வேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்

உயிரும் எமக்குப் பெரியதல்லடா

இது வரிகள் எழுதும் கவிதையல்லடா

எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

அழுது அழுது சிவந்த விழியில் நெருப்பு மூட்டு தமிழனே

உறங்கிக் கிடக்கும் உனது பொழுதை உதயமாக்கு தமிழனே

எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்

எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்

அதிக நாளிற்கிருக்க விடுதல் அழிவுதானே ஊரில்

புலிகளாகி எழுக எழுக எமது தாயைக் காப்போம்

புனிதப்போரில் இணைக இணைக புதிய வாழ்வு சேர்ப்போம்

சஞ்சலிக்கும் மனதை வெல்லடா

இது சாவுக்கான யுத்தமல்லடா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/ghjjbFSk/track02/

மாமலையொன்று மண்ணிலே இன்று

சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு

தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு

வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர

காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்

சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்

தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்

முதலோனின் நிழலாகி உறவாடினாய்

விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்

விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்

விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்

தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த

புயலுக்கும் அசையாத மலையாகினாய்

பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்

படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்

அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ

அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்

அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்

ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்

உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்

நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை

நெருப்பினில் பகைவிழும் உறுதி

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._kudu_kaddimp3/ :):D

சின்ன சின்ன கூடுகட்டி

நாமிருந்த ஊர்பிரிந்தோம்

தென்னிலங்கைப் பேய்களினால்

நாமிருந்த கூடிழந்தோம்

கண்களிலே நீர்வழிய

காலெடுத்து நாம் நடந்தோம்

செம்மணிக்கு வந்தபின்னும்

செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்

தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்

வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்

எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்

ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்

எனிலோ அழிவாய் தமிழா

வருவாய் வருவாய் புலியாய் வருவாய்

எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்

படையாய்த் தமிழா எழடா

பிரபாகரன் படையாய் நிமிர்வாய்

வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்

வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்

பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்

பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்

எனிலோ அழிவாய் தமிழா

வருவாய் வருவாய் புலியாய் வருவாய்

எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்

படையாய்த் தமிழா எழடா

பிரபாகரன் படையாய் நிமிர்வாய்

வருவாய் தமிழா உடனே

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...nknown_track_9/

ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து

ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று

ஆனையிறவிலே ஏறிடும்போதிலே

ஆகாயம் கைகளில் ஆடுதம்மா

உப்புக்கடலே உப்பளக்காற்றே

உம்மைத் தழுவுகின்றோம்

ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட

ஏனோ அழுகின்றோம்

வீடிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள்

வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்

போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லை

போறின் படையாகிப் புலியோடு நின்றவர்

எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும்

எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு கொடுத்தாய்

ஆவிஉடல் யாவுமுமக் காகக்கொடுத்தோம் -தம்பி

அச்சமின்றி உம்மருகில் என்றுமிருப்போம்

வாழ்வளித்த வன்னிமண்ணே உன்னைக் கொஞ்சவா -நாங்கள்

பட்டகடன் உந்தனுக்கு கொஞ்ச நஞ்சமா

காலெடுத்து வந்தபகை வென்றவீரரே - உங்கள்

கையெடுத்து முத்தமிட கையைத் தாருமே -

மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம் -எங்கள்

ஊரிலேறி வந்தபகை யாவும் துடைப்போம்

நாளை தமிழ் ஈழமென நம்பியிருப்போம் -அந்த

நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ideum_nerammp3/

கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்

காற்றிடை கலந்தவர் தானோ

கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்

காவியமானவன் தானோ

பொய்யாமொழியும் ரதனும் வரனும்

போனார் மீண்டும் வரவில்லை

மதனியும் விக்கியும் போயினர்

சுபாசும் எம்மிடம் வரவில்லை

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது -துறை

முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்

சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும்கரைந்ததது -பின்னர்

இடியினோடு பகைவன்ஏறும் கலங்கள் எரிந்தன

அழகுபூத்த எமதுஊரை அழிக்கநினைத்தவா -எம்மை

அகதியாக்கி தெருவினோரம் மழையில்நனைத்தவா

கடலின்புலிகள் உனதுநகரை கலக்கிமுடித்தனர் -படைக்

கலங்கள்மூன்றை உடைத்தபோது உடலும்வெடித்தனர்

தலைவன்வளர்த்த உறவைநினைத்து கடலில்குதித்தனர் -வெடி

தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்

தமிழர்தேசம் எழுகஎழுக என்றுஆடினர் -எம்

தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர்

அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்

அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும்அதுஇல்லை

கடலின்புலிகள் இருக்கும்வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு

கரியபுலிகள் வெடிக்கும்திசையில் பகைக்குஜெயமில்லை

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ada_thamilamp3/

சங்கு முழங்கடா தமிழா -இந்த

சாதனை பாடடா கவிஞா

சங்கு முழங்கடா தமிழா -இந்த

சாதனை பாடடா கவிஞா

பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே

பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்

நம்கையில் வந்ததடா -பகை

ஏவியபீரங்கி யாவுமே எங்களின்

காலிற் கிடக்குதடா -அட

பாயும் புலிகளின் கையில் எதிரியின்

பாசறை வீழ்ந்ததடா -காற்றில்

பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது

வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி

செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி

தங்குலமை இங்கு தோற்குமா -கரி

காலனின் சேனைகள் தோற்குமா -புது

விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி

வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்

பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர

பாகரன் காலமென்றாடுவோம்.

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._kaviyangalmp3/

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்

உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்

மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்

கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே

எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது

என்னவளம் இல்லை தமிழீழமதில்

ஏனஞ்சி வாழவேணும் சிங்களத்தில்

ஒன்றுபடு தமிழினமே போரிட நீ -இனி

ஓடட்டும் எதிரிபடை மண்ணை விட்டு

Edited by kuddipaiyan26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.