Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!

- ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி.

யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார்.

''ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?''

''யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில்தான், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். எந்தப் பெண்ணும் தனியாக நள்ளிரவிலும் வீதிகளில் நடந்து செல்லலாம். குற்றச் செயல்கள் நடவாத அமைதிப் பிரதேசமாக அது இருந்தது. சிங்கள அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டது தவிர, வேறு பாதிப்புகள் அப்போது இல்லை. 1985-ல் இருந்து மின்சாரம் கிடையாது. இருட்டில் வாழ்ந்து பழகிவிட்டது.

சந்திரிகா ஆட்சியின்போதுயாழ்ப் பாணத்தை ராணுவம் கைப்பற்றியது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மக்களை ஒடுக்கமான இரும்புக் கம்பிகளுக்குள் போட்டு அடைத்துவிட்டது ராணுவம். தொப்பி அணிந்துகூட சாலையில் நடக்க முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் கொடுத்தார்கள். சோடா, ஃபேன்ட்டா பாட்டில்களைப் படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள். அவையும் சில மாதக் காட்சிகள்தான். யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பத்திரிகையில் வந்த செய்தி குறித்து அந்த மக்களிடம் கேட்டேன். 'உதட்டில் உள்ள சந்தோஷம் அது. உள்ளத்து நெருப்பை அவர்கள் உணரவில்லை' என்று ஒரு பெண் சொன்னாள்.''

''கிழக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்கவும் அங்கு பல்வேறு நலத் திட்டங்களை இலங்கை அரசு செய்ய ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''

''அங்கு நடப்பது அரசாங்கம் அல்ல. ஒரு பொம்மை ஆட்சி. நாங்கள் நல்லது செய்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகச் சில திட்டங்களைச் செய்கிறார்கள். காலங்கள் ஓடும்போது, இதுவும் நிறுத்தப்படும். இந்துக்களின் மனதைக் காயப்படுத்தும் காரியங்கள் திட்டமிட்டு நடக்கின்றன. புத்த கோயில்கள் கட்டப்படுகிறது. தமிழ் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை வைக்கிறார்கள். முஸ்லிம்கள் வசம் இருந்த வயல்கள் பறிக்கப்பட்டு அவை சிங்களக் குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. இதுதான் அவர்களின் செயல் திட்டங்கள். இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் நலத் திட்டங்கள்.

நீங்களே அங்கு சென்று பாருங்கள்... 'எவள் தமிழ்ப் பெண், எவள் சிங்களப் பெண்' என்றே தெரியாது. சிங்களப் பெண்ணைப் போல உடையுடுத்தி, அவள் பயன்படுத்தும் அதே மாதிரியான பேக் போட்டுக்கொண்டு பொட்டு வைக்காமால், சிங்களம் பேசி வாழ எம் மக்கள் பழகிக்கொண்டார்கள். தமிழச்சி என்ற அடையாளத்தை இழந்து, சிங்களப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொண்டால்தான் நிம்மதி என்று தமிழ்ப் பெண் நினைக்கிறாள். இதுவா நாங்கள் கேட்ட வாழ்க்கை? இதற்காகவா போராடினோம்?

''இது போன்ற நிலைமைகளை நாடாளுமன்றத்தில் பேசினீர்களா?''

''அது அவர்கள் நாடாளுமன்றம். அங்கு தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியாது. பேச விட மாட்டார்கள். எனக்குத் தெரிய, தமிழ் எம்.பி. யாராவது பேசினால் ஹெட் போனை பொருத்திக்கொள்ளவே மாட்டார்கள் பல சிங்களத் தலைவர்கள்!''

''ஒரு எம்.பி-யாக ராஜபக்ஷேவைச் சந்திக்க முடியாதா?

''தமிழின அழிப்பைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக சிங்கள மக்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் அங்குள்ள தலைவர்கள். தமிழனுக்கு எதிரான எந்த அநீதிக்கும் அங்கு நீதி கிடைக்காது. எதை வைத்து ராஜபக்ஷேவை நம்ப முடியும்?''

''இன்று வன்னியில் நிலைமை என்ன?''

''வன்னிப் பகுதிகளில் திடீரென 1,000 கிலோ எடையுள்ள குண்டுகள் விழுந்து 30 அடி ஆழத்துக்குக் கிணறுகள் போல பள்ளம் பறிக்கும். கிளாஸ்டல் வகை குண்டுகள் குறிப்பிட்ட உயரம் வரை தாழ்ந்து வெடித்துச் சிதறும். வானத்தில் எந்த விமானம் பறந்தாலும் அங்குள்ள மக்கள் பதறுகிறார்கள்.

ஓமந்தைதான் ராணுவத்தின் செக் போஸ்ட். அதைத் தாண்டி ராணுவத்தால் வர முடியாது. வீடு வாசலை இழந்த மக்கள், காட்டுக்குள் பதுங்கி பிளாஸ்டிக் ஷீட் அடித்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு பிளாஸ்டிக் ஷீட்டை செக் போஸ்ட்டில் அனுமதிப்பதில்லை. வன்னிக்குத் தேவையான பொருட்களில் இதுவரை அரைப் பங்குதான் வந்திருக்கிறது. கடைசிக் காலாண்டுக்கான மருந்து இதுவரை வரவே இல்லை. மலேரியாவுக்கான மருந்து, கடந்த 11 மாதங்களாக வரவில்லை. அதனால் 44 பேர் மருந்து இல்லாமல் இறந்து போனார்கள். விஷ நாய்க் கடிக்கு மருந்து இல்லாமல் 84 பேர் இறந்துள்ளார்கள். போரில் சாவது பாதி, போர்ச் சூழல் கொல்வது மீதி!''

''இந்த மக்களுக்காகத் தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதே. அவை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்ததா?''

''எம் மக்களுக்கு சமீப காலத்தில் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல் தமிழகத்தில் எமக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களும்தான்.''

''இது இன்னும் எத்தனை நாளைக்கு?''

''இப்போது விளிம்பு நிலையில் நிற்கிறோம். யாழ்ப்பாணத்து எம்.பி-யான நான், கடந்த 2 ஆண்டுகளாக அங்கே செல்ல முடியவில்லை. ராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிவநேசன் எம்.பி. தனது வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சியை இன்னமும் எவராலும் மறக்க முடியவில்லை. அங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

பிப்ரவரி மாதத்துக்குள் புலிகளை அடக்கிவிடப் போவதாக ராணுவம் சொல்கிறது. அவர்கள், இப்படிப் பல தடவைகள் நாள் குறித்திருக்கிறார்கள். அதை எம்மக்கள் முறித்திருக்கிறார்கள். விடியல் தூரத்தில் இல்லை என்று மட்டும்தான் இப்போது எங்களால் சொல்ல முடியும்!''

விகடன்

''இது போன்ற நிலைமைகளை நாடாளுமன்றத்தில் பேசினீர்களா?''

''அது அவர்கள் நாடாளுமன்றம். அங்கு தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியாது. பேச விட மாட்டார்கள். எனக்குத் தெரிய, தமிழ் எம்.பி. யாராவது பேசினால் ஹெட் போனை பொருத்திக்கொள்ளவே மாட்டார்கள் பல சிங்களத் தலைவர்கள்!''

இதிலிருந்து இவர் பேசினதேயில்லை என்று தெரியுது. எதுக்காக இவர்களை மக்களுக்காக தேர்வு செய்கிறார்கள்?

பாராளமன்றத்தில் பேசினால் உங்களுக்கு எல்லாம் அள்ளி தந்து விடுவார்களா? உயிர் தான் போகும்?

பாராளமன்றத்தில் பேசினால் உங்களுக்கு எல்லாம் அள்ளி தந்து விடுவார்களா? உயிர் தான் போகும்?

இவங்கலெல்லாம் எமது சமூகத்துக்கு செய்யப் போறண்டுதானே போறவை. சம்பளத்துக்கும் கெளரவத்துக்குமா போறவை. சும்மா கதிரையை சூடாக்காம வீட்டில நிக்க வேண்டியதுதானே? உயிர் ஒருநாள் போகமலா இருக்கப் போகுது?

அதை தான் டக்லஸ் செய்கின்றாரே பிறகு எதற்கு இவர்களும்.இப்படி சொல்லி சொல்லி எல்லோரையும் எதிரிகள் ஆக்குங்கள் பிறகு சிறப்பு பட்டமாக துரோகி முத்திரையும் குத்துங்கள்.

பாராளமன்றத்தில் இவர்கள் என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலிருந்து இவர் பேசினதேயில்லை என்று தெரியுது. எதுக்காக இவர்களை மக்களுக்காக தேர்வு செய்கிறார்கள்?

இவங்கலெல்லாம் எமது சமூகத்துக்கு செய்யப் போறண்டுதானே போறவை. சம்பளத்துக்கும் கெளரவத்துக்குமா போறவை. சும்மா கதிரையை சூடாக்காம வீட்டில நிக்க வேண்டியதுதானே? உயிர் ஒருநாள் போகமலா இருக்கப் போகுது?

தலைவன் நீங்கள் பல விடயங்களின் அவசரப்படுகின்றீர்களோ என்று தோன்றுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த கதி என்ன? அப்படி அவர்கள் பேசினால் அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உங்களாலே அல்லது அவர்கள் பேசவில்லை என்று குற்றம் சாட்டும் எவராலும் வழங்க முடியுமா?

இவர்கள் மக்களுக்காக பேச வேண்டும் என்று எதிர் பார்க்கும் நீங்கள் அந்த மக்களுக்கான பணியை நீங்கள் வாழும் நாடுகளில் செய்கின்றீர்களா?

தலைவன் நீங்கள் பல விடயங்களின் அவசரப்படுகின்றீர்களோ என்று தோன்றுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த கதி என்ன? அப்படி அவர்கள் பேசினால் அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உங்களாலே அல்லது அவர்கள் பேசவில்லை என்று குற்றம் சாட்டும் எவராலும் வழங்க முடியுமா?

இவர்கள் மக்களுக்காக பேச வேண்டும் என்று எதிர் பார்க்கும் நீங்கள் அந்த மக்களுக்கான பணியை நீங்கள் வாழும் நாடுகளில் செய்கின்றீர்களா?

அந்த பெண்மணி மிகவும் உணர்வுள்ளவர்.

நாங்கள் எல்லாரும் ஊர் முழுக்க இழுத்துச்சென்ற பொங்குதமிழ் வண்டி அந்த பெண்மணியின் பெரும் பங்கின் அவதரிப்புதான்.

விடுதலைபுலிகள் யாழ் விட்டு வெளியேறியதன் பின் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய மக்கள் சக்தி ஒன்று கூடல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணை பற்றி ஒரு பெண்ணே அறிவாள் .........

உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு !

- ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி.

யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார்.

'' ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?''

'' யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில்தான், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். எந்தப் பெண்ணும் தனியாக நள்ளிரவிலும் வீதிகளில் நடந்து செல்லலாம். குற்றச் செயல்கள் நடவாத அமைதிப் பிரதேசமாக அது இருந்தது. சிங்கள அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டது தவிர, வேறு பாதிப்புகள் அப்போது இல்லை. 1985-ல் இருந்து மின்சாரம் கிடையாது. இருட்டில் வாழ்ந்து பழகிவிட்டது.

சந்திரிகா ஆட்சியின்போதுயாழ்ப் பாணத்தை ராணுவம் கைப்பற்றியது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மக்களை ஒடுக்கமான இரும்புக் கம்பிகளுக்குள் போட்டு அடைத்துவிட்டது ராணுவம். தொப்பி அணிந்துகூட சாலையில் நடக்க முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் கொடுத்தார்கள். சோடா, ஃபேன்ட்டா பாட்டில்களைப் படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள். அவையும் சில மாதக் காட்சிகள்தான். யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பத்திரிகையில் வந்த செய்தி குறித்து அந்த மக்களிடம் கேட்டேன். 'உதட்டில் உள்ள சந்தோஷம் அது. உள்ளத்து நெருப்பை அவர்கள் உணரவில்லை' என்று ஒரு பெண் சொன்னாள்.''

விகடன்

அதற்கு முன்மாதிரியாக , யாழ் . பாராழுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் பேட்டியை பதிந்தமைக்கு நன்றி கறுப்பி .

தமிழ் எம்பிக்கள் பேச முற்படும் போது சபை வெறிச்சோடுகின்றது. அல்லது நாலுகால் பிராணிகளைப் போல் ஊளையிட்டு அவமானப்படுத்துகின்றார்கள். அல்லது புலி முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றனர். மரணமும் பரிசாகக் கிடைக்கின்றது. இதற்கு மேல் என்ன செய்ய முடியும். நாளும் பொழுதும் இவர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் கேட்பது யார்? மஹிந்தவின் கால் நக்கும் தமிழர்கள் சொல்வதையே புறக்கணிக்கும் போது இவர்கள் எம்மாத்திரம்.

ஜானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் தலைவரான பிரபாகரனை சிங்களம் ஒருநாளும் பிடிக்கமுடியாது

திங்கள், 12 ஜனவரி 2009, 08:33 மணி தமிழீழம்

இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் தமிழ் இனத்தை சிங்கள அரசு அழித்துவருகிறது. வன்னி பகுதியில் உள்ளவர்களை புலிகளாகவே பாவிக்கிறது. என தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத் மாவட்ட பா.உ பத்மினி சிதம்பரநாதன்.

இந்தியாவின் சென்னைக்கு சென்றுள்ள அவர் குமுதம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தாதவது

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள ராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு லட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது.

தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப்பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப்பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன்மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை.

யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை ராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக' இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

*''கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?"

அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.

*''மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?"

அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள ராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?

*''ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?"

இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.

*"பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?"

ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.

*''தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?"

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகமா அறிவித்திருந்தாரே!''

தமிழர் பகுதியில் சிங்கள ராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?``அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.

*''பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?"

கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள ராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள ராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு லட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.''

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.