Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரித்திரியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரித்திரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எரித்திரியா அல்லது எரித்திரிய அரசு ஒரு கிழக்காபிரிக்க நாடாகும். இதன் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடலால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும் யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்குழுமமும் அனீசுத் தீவுகளின் சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா 1993 மே 23 இல் ஐநாவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது.

வரலாறு

எதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது. 1885ம் ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ப் பிரபுக்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்கு செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்தாலி செங்கடலில் உள்ள தனது வெவ்வேறு நிலப்பரப்பை ஒருங்கிணைத்து எரித்திரியா என்ற பெயரில் ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கியது. 1896 ஆம் ஆண்டு இத்தாலி அண்டை நாடான எத்தியோப்பியா மீது படையெடுக்க எரித்திரியாவை ஒரு களமாகப் பயன்படுத்தியது. ஆனால் இத்தாலி மேற் கொண்ட தாக்குதலை எதியோப்பியா வெற்றிகரமாக முறியடித்தது. இத்தாலிப்படை தோல்வியை தழுவியது. அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் தோல்வி இத்தாலியின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது.

1936 ஆம் ஆண்டு மீண்டும் இத்தாலி எரித்திரியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்திரியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி போரில் வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அபிசீனியா, (ஐரோப்பியர்கள் எரித்திரியாவை இப்படித்தான் அழைப்பார்கள்) எரித்திரியா, சோமாலிலாந்து ஆகிய மூன்றும் சேர்ந்து "இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

இரண்டாவது உலகப்போரை அடுத்து இத்தாலியின் காலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றி மன்னர் ஹெயிலி செலாஸ்சியை மீண்டு எத்தியோப்பாவின் மன்னன் ஆக்கியது. 1952 இல் ஐநா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டு வந்தது. எரித்திரியாவின் விடுதலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்திரியாவிற்கு ஒரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது எரித்திரியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.

எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம்

1962இல் மன்னர் ஹேயிலி லொஸ்சி ஏரித்தியா நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அதனை எத்தியோப்பியவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார். இது தான் ஏரித்தியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்தது. 1974ம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் சுகந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது. மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஐிஸ்ட்டு ஹேயிலி மரியம் தலைமையில் இயங்கியது. 1960களில் ஏரித்தியாவின் விடுதலைப் போராட்டம் ஏரித்தியவின் விடுதலை முன்னனி தலைமையில் நடந்தது. 1970ல் இருந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னனி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1970ம் ஆண்டு கடைசிப்பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுகளுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி செயல்ப்பட்டர். இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது. 1977ல் இப்எல்எப் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் "இபிஎல்எப் மட்டுமே ஏரித்திய மக்களின் ஏகப்பிரதிநிதி ஆவர். அந்த அமைப்போ எரித்திய மக்களின் சார்பில் பேசவல்ல சட்டபூர்வமான அமைப்பு என அறிவித்தது.

1977இல் எத்தியாப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால் அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான் வழியாக கொண்டு சென்று குவித்தது. இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது. 1978 மற்றும் 1986 காலப்பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டு முறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியல் முடிந்தன. இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கொரிலா தாக்குதல்களையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற் கொண்டது. 1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கும் முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படைகள் எதிர்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்த்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டை நாடான சுடானுக்கு ஓடித்தப்பினார்கள்.

1982இல் எத்தியோப்பியா 6 வது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற் கொண்டது. எத்தியோபபிய படையில் 120 000 ஆயிரம் படையினர் இருந்தனர். இதற்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூடப்பட்டது. 1984 மே மாதத்திலும் 1986இலும் அஸ்மேரா என்றா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி ஊடுருவித்தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதக் களஞ்சியங்களும் எரி பொருள் சூதங்களும் ஏரியூட்டப்படடன. 1980ல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தை தாக்கி கைப்பற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

பேச்சுவார்த்தை

எரித்திரியா - எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. அதற்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது. 1991 மே மாதம் மெங்கிஸ்து அரசு கவிண்டது. மே நடுவில் மெங்ஐிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு காப்பந்து அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாப்வேயில் அரசியல் புகலிடம் கோரினார். மே மாத கடைசியில் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட நான் போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றின. எத்தியோப்பிய படைகளைக் களத்தில் புறமுதுகு கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மே 1991 இல் இபி எல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை நிறுவியது. அரசுத் தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையஸ் அவர்கள் நியமிக்கப்பட்டர். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசமையாக மாறியது.

எரித்திரியாவிற்கு விடுதலை

1993 ஏப்ரலில் 23-25 நாட்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு அய்யன்னா கண்காணிப்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரலில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள். எரித்தியா மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24இல் அதிகாரபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

இன்று எங்களிடம் எங்களுடைய தாய் மண்ணின் மூன்றில் ஒரு பகுதி முழுமையான நிர்வாகப் பகுதியாக இருக்கின்றது. ஆனால் எரித்திரிய விடுதலைப் போராளிகள் தங்களுடைய நிலத்தை அதாவது முழுமையாக மீட்பதற்கான அந்தக் கடைசித் தாக்குதலை மேற்கொண்ட போது மிகச் சிறிய நிலப்பரப்புத் தான் அவர்களுடைய கைவசம் இருந்தது.

அந்த மிகச் சிறிய நிலப்பரப்பிலிருந்து தங்களுடைய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருடைய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர். தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரிப் படைகளைச் சிறைப் பிடித்தனர்.

அவர்களுடைய பல நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஆட்டிலறிகள் மிகப் பெரும் போர்க் கலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று.

எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு உருவானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் அவர்கள்

முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியவை

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அங்ககிருந்தும் இங்கிருந்தும் அடிக்க வருபவர்களெல்லாம் அடித்து ஓய்ந்தபின் ஈழத்திலும் இதுவே நடக்கும். ஈழம் இல்லை அடக்குமுறை உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் இதுதான் நடக்கும்.

"உரிமைபோர் உடைந்ததாய் உலகில் இல்லை ஒரு உவமை:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நூனாவிலான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.