Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தமிழன் ...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் தமிழ் நாட்டு இந்தியர்களிடம், மொழி வெறியை மீண்டும் தூண்டும் விதமாகவும், ஈழ பயங்கரவாதிகளிடம் பரிவை ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகள் எழுதப்படுவது வருத்தமளிக்கிறது.

இந்தப் பதிவுகளைப் படித்து ஒன்றும் நமது இந்திய சகோதரர்கள் எதுவும் செய்துவிட மாட்டார்கள்தான் என்றாலும் இப்படியும் சில பேர் பேசிவருவது எதில் கொண்டு போய் விடுமோ. எந்தப் பிராந்திய உணர்வும் பிரிவினையில்தான் கொண்டு போய் விடும். அதனால் இந்த உணர்வுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுவேதே தேசத்தின் நலனுக்கு உகந்தது.

இன்று தமிழன், தமிழினம் என்று பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். மொழி என்பது கருத்தைக் கொண்டுசெல்லும் ஒரு கருவிதானே. அது தேசபக்தியின் வழியில் குறுக்கே நிற்கலாமா? அடுத்து பிரதமராகப் போகும் அத்வானிஜி மொழிவெறியைத் தூண்டுபவர்கள் மீது பொடா போன்ற கடுமையான இன்னொரு சட்டத்தை இயற்றி இவர்களை அடக்க வேண்டும்.

இன்று இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்களிடம் ஒன்று கேட்கிறேன். யாரிந்த இலங்கைத் தமிழர்கள்? இலங்கை என்ற இன்னொரு தேசத்தில் வசிப்பவர்கள். நமக்கும் இவர்களுக்கும் என்ன இருக்கிறது. ஒரே மொழியை பேசுகிறோம் என்பதைத் தவிர?

இன்னும் சொல்லப் போனால் நமது தேசத்தலைவரைக் கொன்றவர்கள். இந்தப் பாதகச் செயலையும் இவர்கள் நியாயப்படுத்தும் அளவுக்கு இன்று வந்து விட்டார்கள். நமது இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களைக் கேள்வி கேட்கிறார்கள். நமது இந்திய இராணுவம் எதைச் செய்தாலும் நமது நலன்களுக்காகத்தான் செய்யும் என்பதை ஒவ்வொரு இந்தியனும் நன்கு அறிவான். இலங்கையில் ஈழத்தமிழர்களை இந்திய இராணுவம் கொன்றது என்பவர்கள், இந்தியாவில் தமிழ் நாட்டுத் தமிழர்களிடம் அப்படி என்றாவது நடந்து கொண்டதா என்று கேட்கிறேன்.

தமிழ் மானில இந்தியர்கள் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மௌனமாக ஆதரவளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய அரசும் நமது தேசத்திடம் விளையாட்டுக் காட்டியவர்களுக்கு நல்ல பாடத்தை அமைதியாக புகட்டும்.

இப்பொழுது இலங்கைப் பிரச்சினைக்கு வருவோம். அது வேறு தேசத்துப் பிரச்சினை; நாம் அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை என்றாலும், நமது நாட்டின் நலனை முன்னிட்டு சில விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டி இருக்கிறது.

முதலில் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக்காரணமே இலங்கைத்தமிழர்கள்தான். எப்படி என்று சொல்லுகிறேன்.

கம்யூனிசம் எப்படி விதேசி கொள்கை, இந்த மண்ணுக்கு ஒட்டாத கொள்கை என்று கூறுகிறோமோ அதே போலவே சுதந்திரம், சமத்துவம், தனி மனித உரிமை, பேச்சுரிமை போன்றவையும் விதேசிக்கொள்கைகள்தான். வெள்ளைக்காரர்கள் வந்ததால் இப்படி எல்லாம் ஒன்று இருக்கிறது என்ற அளவில்தான் நமது மக்களுக்குத் தெரியும். நமது சட்டங்களிலும் இதைப் பற்றியெல்லாம் இருக்கிறதே ஒழிய இவை நடைமுறையில் காவல் துறையாலோ, அரசு எந்திரத்தாலோ செயல் படுத்தப் படுவதில்லை; மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவ்வளவுக்கு நல்லவர்கள் நமது தெற்காசிய மக்கள்.

அப்படிப்பட்ட தெற்காசிய மக்களில், இந்த ஈழத்துத் தமிழர்களும் காஷ்மீரத்து மக்களும் மட்டும் வேறுபட்டவர்கள். இவர்களுக்கு தேவையில்லாத கலக உணர்ச்சி (சுதந்திர உணர்ச்சி என்று சொல்லுகிறார்கள்) இருக்கிறது.

இலங்கை அரசாங்கமும் நமது இந்திய அரசாங்கத்தைப் போலவே ஒரு நல்ல அரசாங்கமாகும். இந்திய அரசாங்கம் நம்மனைவரையும் எப்படி சகோதரர்களாக நினைத்து நடத்துகிறோதோ அப்படித்தான் இலங்கை அரசாங்கமும் மக்களை நடத்துகிறது. நடத்தியது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் கலக உணர்ச்சியினால் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிட்டார்கள்.

இந்தக் கலக உணர்ச்சியினால்தான், ஐரோப்பா இத்தனை நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நாம் ஒரே நாடாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறோம்.

இந்த ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் நம்மை விட முன்னோக்கிச் சென்றுவிட்டாலும், பண்பாடு, கலாச்சாரம், ஆன்ம பலம் ஆகியவற்றில் பின் தங்கிக் கிடப்பதும் இந்தக் கலக உணர்ச்சியாலும் சுதந்திர உணர்ச்சியாலும்தான். இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அது ஒரு அகவய உணர்வு.

குறுகிய உணர்ச்சிகளுக்கு அகப்படாமல், ஒவ்வொருமுறை "உலகச் செய்திகளில்" ஈழத் தமிழர்களும், போராளிகளும் கொன்றொழிக்கப்படும் போதும், அதை எதிர்த்து எதையும் செய்யக்கூடாது, முனகக்கூடக் கூடாது. அது தேசத்தின் நலனுக்கு எதிராகிவிடும் என்று தேசபக்தியின் உச்சத்துக்கே சென்று விட்ட தமிழனின் மன உறுதியை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

தேசத்தின் ஒருமைப்பாட்டின் தேவையை ஒவ்வொரு தமிழனும் நன்கு அறிவான். அது இல்லாவிட்டால் நமக்கு சிம்ரன், ஜோதிகா, நயந்தாரா கிடைத்திருப்பார்களா? இல்லை கர்னாடகத்திலிருந்து காற்றுதான் வந்திருக்குமா? இது ஒரு எளிய உதாரணம்தான். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டுக்கு சிறுபாதகத்தை ஏற்படுத்தினாலும் இந்தத் தமிழின உணர்ச்சி அழிக்கப்பட வேண்டியதுதானே.

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது! இத்தகைய தேச பக்தியைத் தூண்டும் வகையில் இந்தியர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது. தமிழனும், டெல்லிக்காரனும் எப்படி சகோதர்கள் ஆனார்கள். இருவரும் பேசும் மொழி, உடை, உணவு எல்லாம் வேறு. வெள்ளைக்காரர்கள் "இந்தியர்கள்" என்று சொல்லி விட்டுப் போனார்கள் என்பதற்காக மட்டுமா நாம் ஒரே நாடாக இருக்கிறோம்.

இல்லை... இல்லை... இந்தப் புண்ணிய தேசத்தின் மக்களுக்கு என்று ஒற்றுமை இருக்கிறது. இதை வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு தேசபக்தர் கண்டுபிடித்ததாக ஒருமுறை விஜய் டி.வி.யில் சொன்னார்கள். அதாவது அந்த தேசபக்தர் இரயிலில் இந்தியா முழுவதும் பயணம் செய்வாராம். இந்தியா முழுவதும் பார்த்தாராம், காலையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் காலைக் கடன் செய்கிறார்களாம், திறந்த வெளியில், பின்னர் வெறுங்கையால்தான் கழுவுகிறார்களாம். இதைக் கேட்ட பொழுதில் எனக்குள் எழுந்த சிலிர்ப்பு அடங்க வெகு நேரம் ஆனது. அது ஒரு அகவய உணர்வு.

இது மட்டும்தான் என்று இல்லை. சமீபத்தில் சிறீமான் ஜெயமோகன் தனது பதிவில் இன்னொரு காரணத்தைக் கண்டு சொல்லி இருக்கிறார். அதாவது இந்தியா முழுவதும் இருக்கும் பிச்சைக்காரர்கள் குறுகிய மொழி எல்லைகளைக் கடந்து தேசம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் இந்தியாவின் ஆன்மிகத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாடு அவசியமாகிறதாம்.

இதே கேள்வியை ஒரு ஐரோப்பிய அறிவாளி பொருளாதாரக் காரணங்கள், நிர்வாக நடைமுறை, மக்களின் அடையாளங்கள், மொழி, பொதுக்கருத்துப் பகிர்மானத் தளம் போன்ற குறுகிய எண்ணங்களுடன் அணுகியிருப்பார். ஆனால், நமது சிறீமான் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அதை ஆன்மிகத் தளத்தில் அணுகி இருக்கிறார் பாருங்கள். அங்குதான் இந்தியன் நிற்கிறான். ஆன்மிகத் தேவைக்கு அரசு எதற்கு என்று கேட்கக் கூடாது. அது ஒரு அகவய உணர்வு. உணர்ந்தால்தான் புரியும்.

http://suresh--jeevanandam.blogspot.com

இந்தியதமிழன் என்ற இந்த தலைப்பை எதிர்கின்றேன்

தமிழக உறவுகள் நம்முடன் உனர்வால் ஒன்றுபட்டவர்கள் நமக்குள் கருணா ஆனந்த சங்கரி போல ஒரு கேனைதான் இதனன எழுதியது தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழா, உன் நாட்டுக்காறன் தான் உனக்கு தண்ணி தரமாட்டன் என்கிறான், உன் மத்திய அரசுதான் உன்னை ஏன் நாயே என்றும் கேட்க்க மறுக்கிறான், உன் கடற்படை தான் தமிழக மீனவரை அயல்நாடு சுட்டாலும் ஏனென்று கேட்க மறுக்கிறான். என்ன கதைக்கிறாய் தேசபக்க்தியென்று? சுதந்திரமாய் பேச நாதியில்லாத நாட்டில்லிருந்துகொண்டு?

யதார்த்தமான உண்மை, ஏன்றைக்கும் இந்தியா என்று ஒர் நாடு இருந்தில்லை, எப்படி இலங்கை உருவாக்கப்பட்டதோ அவ்வாரே இந்தியாவும் உருவாக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பித்தனின் கருத்துக்கள் இரட்டை அர்த்தம் பொதிந்ததாகவும்,சில இடங்களில் நகைச்சுவையுடன் கூடிய கிண்டலாகவுமே எனக்கு படுகிறது

இந்திய ஒற்றுமை இல்லாவிடில் அயல் மாநிலத்தில் இருந்து காற்று வருமா? சிம்ரன் நயன் தாரா ஜோதிகா கிடைத்திருப்பார்களா?

என வினவுவது பாராட்டிற்கு பதில் கிண்டலடிப்பதாகவே தெரிகிறது. கடைசி மூன்றுபந்தியினை கூர்ந்து வாசியுங்கள் ,மிக அருமையான விளக்கம்

அன்புறவுகள் எப்பொருள் யார் வாய் கேட்பினும் .........

நிதானம் அற்ற தாக்குதலால் பிரயோசனம் எதுவுமிலை

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைகளை எழுதிவிடுவதால் எந்த பயனுமில்லை. அதை யாராவது வாசித்த அதன் உள்ளடக்கம் யாருக்காவது போய்சேர்ந்தாலே அது பயனுடையதாகும். கட்டுரையின் தலைப்புத்தான் கட்டுரையை திரும்பிபார்க்க வைக்கும் பின்பு தொடரும் அறிமுக தலைப்புகள் பின்தொடர வைக்கும். ஆகவே சில தலைப்புகளும் அறிமுக தலைப்புகளும் சிலரை சீண்டுவதி;ல்லை. அவ்வாறனவர்களை எவ்வாறு சீண்டலாம் என்ற கேள்வியின் பதிலே மேலே உள்ள பதிவு. அவருடைய எண்ணங்களும் காரணங்களும் கடைசியில்தான் கேள்வியாகி நிற்கின்றன. ஆகவே மேல கருத்து எழுதிய சகஉறவுகள் மீண்டு ஒரு முறை இதைவசிக்க வேண்டி நிற்கிறீர்கள்.

  • 2 weeks later...

கண்டிப்பாக பித்தன் அவர்கள் பல்பொருள் பொதிந்த நகை உணர்வுடனேயே இதனை எழுதி இருக்கிறார்....

பித்தனின் கருத்துக்கள் புரிந்த்துணர்வில்லாத தேசபக்தி பாராட்டும் சராசரி சாமான்யனின் வாத வடிவில் அதை எல்லி நகையாடும் விதமாக அமைந்த்துள்ளது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழா, உன் நாட்டுக்காறன் தான் உனக்கு தண்ணி தரமாட்டன் என்கிறான், உன் மத்திய அரசுதான் உன்னை ஏன் நாயே என்றும் கேட்க்க மறுக்கிறான், உன் கடற்படை தான் தமிழக மீனவரை அயல்நாடு சுட்டாலும் ஏனென்று கேட்க மறுக்கிறான். என்ன கதைக்கிறாய் தேசபக்க்தியென்று? சுதந்திரமாய் பேச நாதியில்லாத நாட்டில்லிருந்துகொண்டு?

இதுவே எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் ஒருமைப்பாட்டின் தேவையை ஒவ்வொரு தமிழனும் நன்கு அறிவான். அது இல்லாவிட்டால் நமக்கு சிம்ரன், ஜோதிகா, நயந்தாரா கிடைத்திருப்பார்களா? இல்லை கர்னாடகத்திலிருந்து காற்றுதான் வந்திருக்குமா? இது ஒரு எளிய உதாரணம்தான். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டுக்கு சிறுபாதகத்தை ஏற்படுத்தினாலும் இந்தத் தமிழின உணர்ச்சி அழிக்கப்பட வேண்டியதுதானே.

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது! இத்தகைய தேச பக்தியைத் தூண்டும் வகையில் இந்தியர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது. தமிழனும், டெல்லிக்காரனும் எப்படி சகோதர்கள் ஆனார்கள். இருவரும் பேசும் மொழி, உடை, உணவு எல்லாம் வேறு. வெள்ளைக்காரர்கள் "இந்தியர்கள்" என்று சொல்லி விட்டுப் போனார்கள் என்பதற்காக மட்டுமா நாம் ஒரே நாடாக இருக்கிறோம்.

இல்லை... இல்லை... இந்தப் புண்ணிய தேசத்தின் மக்களுக்கு என்று ஒற்றுமை இருக்கிறது. இதை வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு தேசபக்தர் கண்டுபிடித்ததாக ஒருமுறை விஜய் டி.வி.யில் சொன்னார்கள். அதாவது அந்த தேசபக்தர் இரயிலில் இந்தியா முழுவதும் பயணம் செய்வாராம். இந்தியா முழுவதும் பார்த்தாராம், காலையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் காலைக் கடன் செய்கிறார்களாம், திறந்த வெளியில், பின்னர் வெறுங்கையால்தான் கழுவுகிறார்களாம். இதைக் கேட்ட பொழுதில் எனக்குள் எழுந்த சிலிர்ப்பு அடங்க வெகு நேரம் ஆனது. அது ஒரு அகவய உணர்வு.

இது மட்டும்தான் என்று இல்லை. சமீபத்தில் சிறீமான் ஜெயமோகன் தனது பதிவில் இன்னொரு காரணத்தைக் கண்டு சொல்லி இருக்கிறார். அதாவது இந்தியா முழுவதும் இருக்கும் பிச்சைக்காரர்கள் குறுகிய மொழி எல்லைகளைக் கடந்து தேசம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் இந்தியாவின் ஆன்மிகத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாடு அவசியமாகிறதாம்.

இதே கேள்வியை ஒரு ஐரோப்பிய அறிவாளி பொருளாதாரக் காரணங்கள், நிர்வாக நடைமுறை, மக்களின் அடையாளங்கள், மொழி, பொதுக்கருத்துப் பகிர்மானத் தளம் போன்ற குறுகிய எண்ணங்களுடன் அணுகியிருப்பார். ஆனால், நமது சிறீமான் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அதை ஆன்மிகத் தளத்தில் அணுகி இருக்கிறார் பாருங்கள். அங்குதான் இந்தியன் நிற்கிறான். ஆன்மிகத் தேவைக்கு அரசு எதற்கு என்று கேட்கக் கூடாது. அது ஒரு அகவய உணர்வு. உணர்ந்தால்தான் புரியும்.

http://suresh--jeevanandam.blogspot.com

ச்சா, என்ன ஒரு யதார்த்தம்!!!!

சிரித்து நீண்ட நாட்களாகிவிட்டது, விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமெடி தமிழனே தொடர்க உனது காமெடியை..... :huh::wub::o

[ஃஉஒடெ நமெ='வன்னி' டடெ='Jஅன் 24 2009, 06:00 PM' பொச்ட்='483286']

தமிழா, உன் நாட்டுக்காறன் தான் உனக்கு தண்ணி தரமாட்டன் என்கிறான், உன் மத்திய அரசுதான் உன்னை ஏன் நாயே என்றும் கேட்க்க மறுக்கிறான், உன் கடற்படை தான் தமிழக மீனவரை அயல்நாடு சுட்டாலும் ஏனென்று கேட்க மறுக்கிறான். என்ன கதைக்கிறாய் தேசபக்க்தியென்று? சுதந்திரமாய் பேச நாதியில்லாத நாட்டில்லிருந்துகொண்டு?

[/ஃஉஒடெ]

மிகச்சரியாக சொன்னீர்கள் இதையெல்லாம் தட்டி கேட்க்கவேண்டியவர் தமிழக முதலைச்சர்கள் தான் இவர்களே சுத்த தமிழர்கள் இல்லயே, முற்றிலும் சுயனவாதிகளகாவும் இருக்கிறார்களேஎன்ன செய்வது ?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.