Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான மாதிரி கடிதம்

Featured Replies

To: cmcell@tn.gov.in, cmsec@tn.gov.in

Cc: av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com, thirumaa@hotmail.com, news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv

அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே,

தமிழினத் தலைவரும் தமிழினக் காவலருமாகிய மாண்புமிகு முனைவர் கருணாநிதி அவர்களே,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் புலம் பெயர் தமிழனின் கண்ணீர் மனு!!!!

பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.

தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் - உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கேடுத்து உரைப்போம். .

நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.

இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ..................

நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்

புலம் பெயர் ஈழ தமிழன்

நண்பர்களே....

தயவுசெய்து இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாருங்கள்.....

நான் இங்கு எனது நண்பர்களை ஒருங்கிணைத்து பல ஈமெயில்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.

குறிப்பாக ஊடகங்களையும், தமிழ்நாட்டையும் குறிவைத்து அனுப்புங்கள்....

நன்றி.

இந்த முகவரி யாருக்கென்று சொல்லமுடியுமா, தயவுசெய்து.

imtc1974@yahoo.com
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தாயக உறவுகளே விரைவாக செயல்படுங்கள் நான் இணைந்த நாள் முதல் உங்களிடம் இதைதான் கேட்கிறன் எம் மக்களை காப்பாற்றுங்கள் முக்கியமான மனிதாபிமான அலுவலகங்களை முற்கையிடுங்கள் அமைதிவழி போராட்டங்களை அதி விரைவாக முன்னேடுங்கள்...... பல பேர் சேர்ந்து இணைய அஞ்சல்களை மனிதாபிமான செயற்பாட்டாளர், அரசியல் பிரமுகர்கள், பிரபல பத்திரிகைகளை நேரில் சந்தித்து அவலங்களை எடுத்துக்கூறி பிரசுரமாவதற்கான வழிவகைகளை முன்னேடுங்கள்... எங்களை காப்பாற்றுங்கள்....

உலக தமிழினத் தலைவரும்,

தமிழினக் காவலருமாகிய,

மாண்புமிகு முதல்வர்,

கலைஞர் கருணாநிதி அவர்களே,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் ஈழத் தமிழனின் கண்ணீர் மனு!!!!

"யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்"

முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி ஓடிச் சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை.பதுங்கு குழிகளே கல்லறைகளாகிவிட்டன ஐயா.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் - உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கெடுத்து உரைப்போம்.

கலைஞரே எம் காவல் தலைவரே,ஐயா

நீங்கள் எங்களுக்காக ஆட்சி இழந்து சிறை சென்ற பெரும் தலைவர். இன்று கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ஐயா

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

உங்கள் பெயர்

நன்றி www.TamilOosai.com

http://tamiloosai.com/index.php?option=com...8&Itemid=75

எம் அன்பிற்கினிய மக்களே இபொழுதே மின்னஞ்சல் அல்லது தொலைநகல் அனுப்புங்கள்

தொலைநகல் விரும்பத்தக்கது

கலைஞர் தொலைநகல்:0091 44 281 11133

கலைஞர் மின்னஞ்சல்: cmcell @ tn . gov . in ( CMCELL @ TN . GOV . IN )

கலைஞர் இருப்பிடம் : 00 91 44 281 15225

கலைஞர் அலுவலகம்: 00914425672345

  • கருத்துக்கள உறவுகள்

கருணானிதியையும் இந்தியாவையும் விட்டு விட்டு நாம் ஐரோப்பிய வட அமெரிக்க திசையில் செல்ல வேணும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். கோபப் படாமல் யோசித்துப் பாருங்கள். இத்தனை துயரையும் இந்தியா பின்னின்று நடத்துகிறது. பதவியே பெரிதென்று எங்கள் பிரச்சினையை ஊறுகாய் மாதிரி வைத்துக் கவிதை கடிதம் எழுதுகிறார் கருணாநிதி. தயை கூர்ந்து இனி தொப்புள் கொடி முல்லைக் கொடி கதையக் கொஞ்சம் தூக்கிப் போட்டு விட்டு யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அல்லது யார் இலங்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய நிலையில் இருக்கிறார்களோ அவர்களிடம் தான் போக வேணும். இந்தியா நாளைக்கே போரை நிறுத்து , ஆயுதம் தர மாட்டேன் என்றால், பாகிஸ்தானிடம் போக இலங்கை தயாராகவே இருக்குது. எங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் பயன் படுத்துவோம்.

கருணானிதியையும் இந்தியாவையும் விட்டு விட்டு நாம் ஐரோப்பிய வட அமெரிக்க திசையில் செல்ல வேணும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். கோபப் படாமல் யோசித்துப் பாருங்கள். இத்தனை துயரையும் இந்தியா பின்னின்று நடத்துகிறது. பதவியே பெரிதென்று எங்கள் பிரச்சினையை ஊறுகாய் மாதிரி வைத்துக் கவிதை கடிதம் எழுதுகிறார் கருணாநிதி. தயை கூர்ந்து இனி தொப்புள் கொடி முல்லைக் கொடி கதையக் கொஞ்சம் தூக்கிப் போட்டு விட்டு யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அல்லது யார் இலங்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய நிலையில் இருக்கிறார்களோ அவர்களிடம் தான் போக வேணும். இந்தியா நாளைக்கே போரை நிறுத்து , ஆயுதம் தர மாட்டேன் என்றால், பாகிஸ்தானிடம் போக இலங்கை தயாராகவே இருக்குது. எங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் பயன் படுத்துவோம்.

இல்லை....நாளைக்கே இந்தியா போரை நிறுத்து என்று இலங்கையை கேட்டுக்கொண்டால் மேற்குலகமும், அமெரிக்காவும் அதனையே வலியுறுத்தும். இந்தியா இந்த விடயத்தில் எப்படி நடந்து கொள்கின்றதோ அதனையே மேற்குலகமும் சர்வதேசமும் பின்பற்றும். இப்போதைக்கு மேற்குலகம் இலங்கை அரசின் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், தெற்கில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் என்பனவற்றை வைத்துக் கொண்டே இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமே தவிர யுத்த மீறல்களை வைத்துக் கொண்டு அல்ல. அப்படி ஒரு மேற்குலகம் யுத்த நிறுத்த மீறல்களை வைத்து தலையிடும் சூழ்நிலை வந்து விடக் கூடாதே என்று தான் பிரணாப் அதனை முளையிலேயே கிள்ளி விட இன்று இலங்கை வருகின்றார்

குமுதம் செய்தி பகுதியில் இருந்து...............

உலகத்தமிழர்களின் கண்ணீர்க் கடிதம் : ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை

கொழும்பு : இலங்கையில் நடைபெற்றுவரும் போரில், குண்டு வீச்சில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுமாறு ஆயிரக்கணக்கான உலகத் தமிழர்களின் கதறல் கடிதங்கள், இ-மெயில் மூலம் தமிழகத் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தினம் தினம் பீரங்கி தாக்குதல்கள். விமானங்கள் மூலம் தாக்குதல்கள். அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர் அப்பாவித் தமிழர்கள். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் அவதியடைந்துவரும் நிலையில், அவர்களைக் காப்பாற்றுமாறு ஆயிரக்கணக்கான உலகத்தமிழர்கள் இ-மெயில் மூலம் கண்ணீர் மல்க உலகத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாக செயல்பட்டு போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு உயிர் பிச்சை அளிக்குமாறு அவர்கள் மன்றாடி உள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் இருப்பதால் இந்த கடிதத்தின் நகலை அனுப்ப வேண்டாம் என்றும், ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் முதலமைச்சர் கருணாநிதியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது, கடிதத்தைப் படிக்கும் அனைவரையும் நெகிழச் செய்வதாக அமைந்துள்ளது. இதேபோன்ற நூற்றுக்கணக்கான கடிதங்கள் நமது குமுதம் இணையதளத்திற்கும் வந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.