Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 ஆவது நாளாக செங்கல்பட்டு மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர்.

chenagalpattu4.JPG

அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டு வரும் 12 மாணவர்களுக்கும் வைகோ பொன்னாடை போர்த்தினார். உண்ணாநிலை இருந்து மயங்கி விழுந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் கெம்பு குமார், ஆறுமுக நயினார் ஆகியோரை நேரில் சென்று வைகோ பார்த்தார்.

நன்றி: சங்கதி

Edited by suriyan

கூடப்பிறந்த ஈனப்பிறவிகளும்... தமிழைப்பேசிக்கொண்டு தாய் கொல்லப்படுவதனை இரசிக்கும் ஜென்மங்கள்இருக்கும்உலகில்... ஈழத்தமிழனுக்காய்.. மிகக்கொடிய இன்னல்களை ஏற்றுப்போராடும்..எங்கள் அன்பு உறவுகளே.. மறக்கோம் உங்கள் ஈகத்தை.. நன்றி

எங்களுக்கு இருக்கும் சோகங்கள் போதும்... தங்களை வருத்தி தமிழர் களின் சோகத்தை இன்னும் கூட்ட வேண்டாம்... நிறுத்த சொல்லுங்கள் இந்த பட்டினி போராட்டத்தை...

உணர்ச்சிகளை காட்டவேண்டிய எம் இனம் மறந்து இருக்கின்றது. அண்டை நாட்டு உறவுகளே உயிரையும் துறக்க துணிந்துவிட்டார்கள். தயவுசெய்து இந்த உண்ணா நோன்பினை கைவிடுங்கள். காரணம் உங்கள் உயிர் எங்களிற்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

மாணவச் செல்வங்களே உங்களின் அறவழி போராட்டத்துக்கு இந்த தமிழீழ தமிழன் தலைவணங்குகின்றேன்! உங்கள் ஆதரவுக்காக என் மனம் திறந்த நன்றிகள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சையை இந்தியாவுக்கு பேச மட்டும்தான் பிடிக்கும் அதனால்தான் காந்தியைக்கூட அவர்கள் வைத்திருக்க விரும்பவில்லை.

கறையான்கள் புற்றெடுக்க விச அரவங்கள் குடிபுகுந்தமாதிரி இந்தியா பெற்ற சுதந்திரத்தை ஆள மானிடதர்மத்தின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் படையெடுத்தன. இந்த கொடுமையின் பலாபலன்களை இந்தியா மட்டும் அல்ல அண்டை அயலும் அநுபவிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் உணர்வுதனைக் கண்டு உருகுகின்றோம்,

பசித்தீ குளித்து சாவில் இருந்து எமைக் காக்கும் உங்கள் அன்பு,

வல்லுலகின் பாராமுகத்தால் எம் கண் தொடுக்கும் கண்ணீரை காயவைக்கின்றது.

நேரத்துளி எல்லாம் சா பயம் சுமக்கின்ற நாம், எமக்காய் நீங்கள் சுமக்கின்ற வலியைக் கண்டு

உயிர் வாடுகின்றோம்.

நமக்காய் நாம் வாழவேண்டும் என்பதை விட

நீங்கள் காட்டும் அன்பினால் எம் இலட்சியத்தை பற்றியிருக்கும் கரங்கள் மேலும் உரம் பெறுகின்றது.

உங்கள் அன்பின் எல்லை காட்டி எங்கள் உள்ளதிற்கு கிடைத்த மலர்ச்சியை

உங்கள் சாவால் பறித்துவிடாதீர்கள் எங்கள் உயிரின் வாசங்களே!

பாரதமாதா என்கிறோம்...

காந்தியோடு கருணையும் மறைந்துவிட்டதா என்ற கேள்வியை இந்த உறவுகளில் மேல்கூட காட்டாஅரசியல் பாராமுகங்கள் கேட்கத்தூண்டுகிறது.. இவர்கள் உடல்நலன் வேண்டியாவது ஆட்சியாளர்கள் யாராவது நிறுத்தக்கோரவில்லை என்பது வேதனை

7வது நாள் - மேலும் 4 மாணவர்கள் மயக்கம்

இலங்கை தமிழர்களுக்காக, செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உண்ணாவிரதம் 7வது நாளை எட்டியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் ஏற்கனவே இருண்டு மாணவர்கள் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 4 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேடையில் இன்னும் 8 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் போராட்ட பந்தலிலேயே சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மருத்துவமனையில் இருக்கும் மாணவர்களை நடிகர் வடிவேலு, இயக்குனர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கவுதம் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 4 மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்கள், உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்றார்கள்.

அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் 8 மாணவர்களிடமும், உண்ணாவிரதத்தை நிறுத்தும் படி கேட்டனர். அதற்கு அவர்கள், "யார் சொன்னாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது, இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே, போராட்டத்தை கை விடுவோம் என்று கூறினார்கள்.

நக்கீரன்

செங்கல்பட்டு மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டம் தமிழுணர்வாளர்களின் வற்புறுத்தலால் இன்று நிறைவு

[ புதன்கிழமை, 28 சனவரி 2009, 07:30.28 PM GMT +05:30 ]

இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டி உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழுணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஏழாம் நாளாகிய இன்று போராட்டத்தினை நிறைவு செய்தனர்.

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் (22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்காம் நாளாகிய 25.01.2009 அன்று கெம்புக்குமார் மற்றும் ஆறுமுக நயினார் ஆகிய இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கும் போராட்டத்தினை தொடர்ந்தனர்.

ஏழாம் நாளாகிய இன்று(28.01.2009) அதிகாலை 5 மணிக்கு காவல்துறை மிரட்டி கைதுசெய்கிறோம் என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவைத்தனர்.ஆனால் அந்த மாணவர்கள் சிகிச்சை பெறும் மருந்து ஊசிகளை பிடிங்கி எறிந்தனர். அங்கேயும் உண்ணாநிலையை தொடர்ந்தனர்.

இத்தகவலறிந்த செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு வந்து அம்மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மருத்துவமனைக்கு வெளியில் ஒன்று கூடி ஈழத்தமிழருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

அதன் பின்னர் தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவராக வந்து அம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கல்பாக்கம் பாவலரேறு தமிழ்வழி தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகள் வந்து மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்து போரைநிறுத்தக்கோரியும் தலைவர் பிரபாகரன் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து போராடுவதாக உறுதியளித்ததன் பேரில் உண்ணாநிலைப் போராட்டத்தினை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தினை முடித்துவைத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விவரம்:

1) திருமுருகன்

2) இராச்குமார்,

3) மணிவேல்

4) விசயகுமார்

5) இராசா

6) பிரவீன்

7) முனீசுகுமார்

8) ஆறுமுகநயினார்

9) சுரேசு

10) கெம்புக்குமார்

11) பிரபு

12) மூர்த்தி

13) இராசதுரியன்

14) முஜீபீர் ரகுமான்

இம்மாணவர்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் கடைசி வரை தகவல்தொழில்நுட்பத்துறை மாணவர்கள் செந்தில் , அருண்சோரி , சிறிராம் , பெரியார் திராவிடர்கழகத்தின் ஆ.பாரதிராசா , காஞ்சிபுரம் மக்கள் மன்ற மகளிர் மகேசு , இராஜேசுவரி , தமிழ்மகிழ்நன் (த.ஒ.வி.இ) , செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

இந்த மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டு: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 22ம் தேதி துவங்கினார்கள். இதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ள 8 மாணவர்கள் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என தெரிவித்தனர்.

இதையடுத்து உணணாவிரத இடத்துக்கு சென்ற போலீசார் 8 மாணவர்களையும் அலேக்காக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது சில மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் மாணவர்கள் சுய நினைவுக்கு வந்ததும், குளுகோஸ் குழாய்களை பிடுங்கி எறிந்து விட்டனர். சிகிச்சையை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.

மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலையில் அவர்கள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

உண்ணாவிரதத்தில் சேலம் மாணவர்கள் ..

இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் நாட்டாண்மைக் கழக அலுவலகம் முன்பு பந்தல் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக 3 நாட்களுக்கு முன்பு கெம்புகுமார், ஆறுமுக நயினார், ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று திருமுருகன், துரியன் ஆகிய இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். அனைவரும் செங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்று மேலும் 2 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடிகர்கள் வடிவேலு, மனோபாலா, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, ஷரவண சுப்பையா, கெளதமன் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு விரைந்து வந்து மாணவர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் பரிவுடன் பேசிய அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாணவர்கள், யார் சொன்னாலும் கைவிட மாட்டோம். ஒரு வேளை எங்களைப் பின்பற்றி மாணவர்கள் யாரேனும் உண்ணாவிரதத்தில் குதித்தால் அவர்கள் நலன் கருதி நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று கூறி விட்டனர்.

முன்னதாக திரையுலகினர் கருப்புச் சட்டையுடன் செங்கல்பட்டு பஸ் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் வடிவேலு கூறுகையில், இந்த மாணவர்களை பாராட்டுகிறேன். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசும், தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.கே.செல்வமணி ஆவேசத்துடன் பேசுகையில், இங்கிருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த திரையுலகையும் திரட்டி மிகப் பெரும் போராட்டததை நடத்துவோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...their-fast.html

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தமிழ் நாட்டு சகோதரர்கள் தமது உயிரையே துச்சமாக மதித்து உண்ணா விரதத்தில் ஈடுபடும் சகோதரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.