Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

இதுவரை எல்லா மாற்று கருத்து காரரும் புலிகள் சுட்டவை எண்ட சொல்லி கொண்டிருந்தவை அனால் இபப் சிலரின்ரை பெயர்களை இப்ப சொல்லியிருக்கிறதாலை இனி அவை தங்களுக்கு தெிஞ்சமாதிரி கை கால் வைச்சு புலிகள் தான் செய்தவை எண்ட போகினம் இனி கனக்க அரசியல் அட்டாவதாணிகளிண் பேனைகள் தங்களினத துப்புத்தலக்கும் பணியை செவ்வன செய்ய சாத்திரி ஆவனை செய்துள்ளிர்கள்.

இனி கனக்க அரசியல் அட்டாவதாணிகளிண் பேனைகள் தங்களினத துப்புத்தலக்கும் பணியை செவ்வன செய்ய சாத்திரி ஆவனை செய்துள்ளிர்கள். தொடரட்டுக்கம் துப்புப்பணி.

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சாரைக் காண முடியவில்லையே விரதத்தில் நிற்கிராறா?

நவராத்திரி வீட்டுப்புசைக்கும இன்ரு விசயதசமிக்கும் சாத்திரிக்கு சாத்திரம் பார்கிற வேலைகுடவாக இருக்கமெல்லே கறுப்பி அதுதூன் காணல்லப்போலை.

சாத்திரி நேற்றைய மிச்சக்கடலை அவல் இருந்தா இங்காலம் அனுப்பும்

மேற்கோள்:

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

மாயாவி எழுதியது

மாயாவி அவர்களே அந்த காலப்பகுதியில் இருந்த மற்றவர்களை கேட்கவேண்டியதில்லை அதுதான் நானும் அந்த காலப்பகுதியில் அங்கு இருந்தேன் என்று முதலே கூறியுள்ளேன் அதைவிட நான் கேட்டதற்கான பதில் எதையும் நீங்கள் தரவில்லை உங்களை இங்கு நான் முத்திரை எந்த இடத்திலும் குத்தவில்லை எனவே ஏன் சுட்டவர் என்று நிங்கள் சொல்லும் புலிஇயக்க உறுப்பினரின் பெயரையே இங்கு தாராளமாக குறிப்பிடலாமே

ஆனால் புலத்தில் ராஜினி சம்பந்தபட்டவர்கள் புலிகளின் சாளி என்பவரும் இவர் மானிப்பாயை சேர்ந்தவர் அதனால் எனக்கு இவரை நன்கு தெரியும் . மற்றவர் செங்கதிர் என்று இன்னொரு பெயரையும் மாறி மாறி சொல்லி வரகிறார்கள் அததான் நீங்கள் தெரிந்தவரின் பெயரையும் கூறுங்கள் என்று கேட்டேன் இதற்காக இனி நான் போய் அந்த நேரம் வைத்தியராய் இரந்தவர் எல்லாரையும் தேட முடியாது தெடுவது கடினம் எனவேதான் உங்களை கெட்கிறென்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே.. ரஜனி திரணகம தமிழ் பெண்ணாக பிறந்தாலும் ஒரு சிங்களத்தி. அவளை ஆர் போட்டிருப்பார் என்டு உமக்கு தெரிந்தே இருக்கும். வீண் கதை பேசி மக்களுக்கு ரஜனியை நல்ல தமிழ் மகளாக காட்ட வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே..

:roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே.. ரஜனி திரணகம தமிழ் பெண்ணாக பிறந்தாலும் ஒரு சிங்களத்தி. அவளை ஆர் போட்டிருப்பார் என்டு உமக்கு தெரிந்தே இருக்கும். வீண் கதை பேசி மக்களுக்கு ரஜனியை நல்ல தமிழ் மகளாக காட்ட வேண்டாம்.

நீர் ராஜனியின் கொலைக்கு புலிகளில் பழி போடுகின்றவர்களுக்கு ஒத்து ஊத வேண்டாம். மேலும் சாத்திரி இங்கே, ராஜனி நல்லவரா, கெட்டவரா என்று கூடச் சொல்லவில்லை. கொலை செய்தது, புலிகள் என்ற வாதத்தைத் தான் மறுதலிக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

எனவே, எதற்கெடுத்தாலும் புலிகளில் பழி போடுவதும், அப்படி போட்ட பின், தமிழனின் வீரமாகப் பெருமிதப்படுத்துவதையும் நிறுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும். யார் யாரோ செய்கின்ற கொலைகளுக்கு பழி போட புலிகளா கிடைத்தார்கள்.

நீர் ராஜனியின் கொலைக்கு புலிகளில் பழி போடுகின்றவர்களுக்கு ஒத்து ஊத வேண்டாம். மேலும் சாத்திரி இங்கே, ராஜனி நல்லவரா, கெட்டவரா என்று கூடச் சொல்லவில்லை. கொலை செய்தது, புலிகள் என்ற வாதத்தைத் தான் மறுதலிக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

எனவே, எதற்கெடுத்தாலும் புலிகளில் பழி போடுவதும், அப்படி போட்ட பின், தமிழனின் வீரமாகப் பெருமிதப்படுத்துவதையும் நிறுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும். யார் யாரோ செய்கின்ற கொலைகளுக்கு பழி போட புலிகளா கிடைத்தார்கள்.

:lol::lol::lol::lol::lol: விசயம் தெரிஞ்ச ஆக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழபோராட்டத்தில்எனது(பொய் )சாட்சியம் தொடர் பாகம்7

சுபத்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்க பட்டதும் அவர் அந்த வேலையை செய்து முடிக்க தங்களது திருநெல்வேலி முகாமிலிருந்து நான்கு பேரை தெரிவு செய்து பொறுப்பை ஒப்படைக்கிறார். எங்கும் சந்திக்கு சந்தி இந்திய இராணுவத்தின் காவலரண்கள் ரோந்துகள் ஒட்டுக்குளுக்கனான ஈ.என்.டி.எல்.எவ். மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ். முகாம் என்று உயர் பாது காப்பு பகுதியாக மாறியிருந்த திருநெல்வேலியில்.1989 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ந் திகதி காலை வழைமை போல தனது கடைமைகளிற்காக ராஜினி தன்னுடைய சைக்கிளில் யாழ் பல்கலை கழகம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்.

அப்போது நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியது அவரிற்கு எதிரே இரண்டு சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் அவரை கடந்து ஒரு சைக்கிள் செல்ல ராஜினியை கடந்து பினேசென்ற சைக்கிளில்முன்னிற்கு இருந்தவன் ஒரு பெரிய துப்பாக்கியை சாரத்தால் சுத்தியபடி வைத்திருந்தான்.

மற்றைய சைக்கிள் அவரிற்கு எதிரே நிக்க அந்த சைக்கிளில் முன்இருந்து வந்த ஒருவன் தனது கைத்துப்பாக்கியால் முதலில் ராஜினியை நோக்கி சுட சைக்கிளை ஓட்டிவந்தவனும் ராஜினியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டான் .ராஜினி அந்த இடத்திலேயே இறந்து போனார்.

இப்போ பெருக்கி பிரித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் யார் ராஜினியை கொன்றார்கள் என்று.ராஜினி கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சிறிதரனிற்கு தலை சுற்றியது காரணம் அவரிற்கு தெரியும் அடுத்த தலை தன்னுடையததான் என்று. என்ன செய்யலாமென யோசித்தவர். இந்தியபடை காலத்தில் யாழ் அசோகா விடுதிதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைமை முகாமாகவும் அன்றைய வடகிழக்கு முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்ட வரதராஜபெருமாளின் அலுவலகமாகவும் இயங்கிவந்தது.

எனவே;ஈ.பி. ஆர். எல்.எவ். வுடன் தொடர்புடைய ஒரு வைத்திய சாலை ஊழியரை அவசரமாக அசோகா விடுதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வந்து சந்திக்கும்படி அழைப்பும் கிடைத்தது.அந்த ஊழியரையும் அழைத்துக்கொண்டு அசோகா விடுதிக்கு அரக்கபரக்க ஓடினார் சிறீதரன்.அவரை மட்டும்பரிசோதனைகளின் பின்னர் உள்ளே அழைத்தனர் உள்ளே போனவரிற்கு வரதராஜபெருமாள் வணக்கம் சொன்னார்.சிரமப்பட்டு சிரித்தபடி சிறீதரனும் வணக்கம் சொல்லி எதிரே அமர ஏளனமாக பார்த்தபடியே வரதராஜபெருமாள் சொன்னார். பாருங்கள் எத்தனையாயிரம் படை எவ்வளவு ஆயுதங்கள் உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்கள் பக்கம்.

முழத்திற்கு முழம் சந்திக்கு சந்தி எங்கள் ஆட்கள் வடக்கு கிழக்கு எங்கும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள். இன்னமும் சில சில்லறை புலிகளே மிச்சம் சல்லடை போட்டு தேடி அழித்து அந்த புலிளை புதைத்த இடத்தில் புல்லுமுளைக்கவிடுவோம்.ஆனால

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கதைத்தால், அவ்விடயம் உண்மையாகி விடும் என்று தான் ராஜன் கூல் தொடக்கம் சிறிதரன் வரைக்கும் நினைக்கினம் போல!

ஆனர்ல, முன்பு சந்திரிக்கா ஆட்சியில் இந்த அடிவருடிகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை மகிந்த கொடுக்கவில்லை போலிருக்கின்றது. காலைவாரிப் பிழைக்கும் கூட்டத்தை வைத்து தன் காலை வாரிவீட்டால் என்ன செய்வது என மகிந்தவும் ஆவதானமாக இருக்கின்றார் போலும்.

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: எனக்கு இதை விட ஒன்டும் செய்ய முடியாது. இதற்கு மேல் எழுதுவதுக்கும் எனக்கு அனுமதி இல்லை. தயவு செய்து வரலாறு எழுத கூடிய திறமை படைத்த அண்ணன்மார் எல்லாம் சரியான முறையில் தகவல்கலைப் பெற்று எழுதுங்கள். ஒன்றும் அறியா இளைய பிள்ளைகளுக்கு தவறான தகவல்களை கொடுப்பது முறையல்ல. சரியான முறையில் பாவிக்க படாத குண்டுகள் எப்போதும் எம்மையே அழிக்கும். மறந்து விட வேண்டாம். இதற்காக சாத்திரியார் எழுதிய அவ்வளவு விடயமும் தவறல்ல. அல்லது அவர் எழுதிய அந்த விடயங்கள் பற்றி எனக்கு தெரியாது. அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசகன் யார் உங்களை எழுதவிடாமல் தடுத்தது தாராளமாய் வரலாற்றில் தெரிந்தவற்றையும் நீங்கள் எழுதலாம். அல்லது நான் மேலே எழுதிய ராஜினி பற்றிய தகவல் உங்களிற்கு தெரிந்திரந்தால் அல்லது நேரில் பாத்திருந்தால் எனக்கு தனிமடல் மூலம் அறிய தாருங்கள் அதை செய்தவர்வர்களின் பெயர் விபரங்கள் தெரிந்திருந்தாலும் தெரியத் தரவும் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்

என்ன சாத்திரியார் உங்கட வேவு வேலையை நீங்கள் கைவிடுகிறதா இல்லைப்போல கிடக்கு.... :wink: :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை நான் வேவு பாக்கவில்லை தெரிந்தவற்றை ஆதாரத்துடன் எழுதுகிறென் ஆனால் வாசகன் அண்ணாதான் ஏன் அண்ணா என்றேனென்றால் அவர்தான் என்னை இங்கு தம்பி சாத்திரி என்று அழைத்தார் அப்ப அவர் எனக்கு அண்ணா தானே எனவே எனக்கு இந்த வருடகடைசியில் வயது 40 ஆகிறது அப்ப அவரிற்கு என்னைவிட ஒண்று அல்லது இரண்டு வயதாவது கூட இருக்கும் எனவே என்னை விட அனுபவவும் கூடுதலாகவே இருக்கும்.எனவே எங்கள் வரலாறு பற்றிய அனுபவங்களும் என்னைவிட ஒருபடி கூடுதலாக இருக்கும் அதுதான் நானும் தெரிந்து கொள்ள அவற்றை சொல்லசொல்லி கேட்டேன் வாசகன் அண்ணாவிற்கு சொல்வதென்னவென்றால் நான் யரிழிலும் சரி மற்றும் வேறு தளங்கள் பத்திரிகைகளிலும் எழுதிவிட்டு ஒழிபவனோ அல்லது ஒழிந்திருந்து எழுதுபவனொ அல்ல எனவே உங்கள் கருத்துகளை எனக்கு தாராளமாக தெரிவிக்கலாம் எனது சொந்த பெயர் சிறீ எனது ஊர் மானிப்பாய் வசிப்பது பிரான்ஸ் தொ. பே இலக்கம் 0033611149470 நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் சாத்திரியண்ணா தொலைபேசி இலக்கம்! களத்தில் உண்மை தெரிந்த வாசனால் பதில் எழுத முடியாதா என்ன?

உங்களுக்கு 40 வயது எனும் போது நீங்கள் என்னை விட சில ஆண்டுகள் மூத்தவரே உங்களை தம்பி என்று விழித்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். எனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விடயம் பற்றி மேலும் கதைப்பதை தவிர்க்கிறேன். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலை நான் வேவு பாக்கவில்லை தெரிந்தவற்றை ஆதாரத்துடன் எழுதுகிறென் ஆனால் வாசகன் அண்ணாதான் ஏன் அண்ணா என்றேனென்றால் அவர்தான் என்னை இங்கு தம்பி சாத்திரி என்று அழைத்தார் அப்ப அவர் எனக்கு அண்ணா தானே எனவே எனக்கு இந்த வருடகடைசியில் வயது 40 ஆகிறது அப்ப அவரிற்கு என்னைவிட ஒண்று அல்லது இரண்டு வயதாவது கூட இருக்கும் எனவே என்னை விட அனுபவவும் கூடுதலாகவே இருக்கும்.எனவே எங்கள் வரலாறு பற்றிய அனுபவங்களும் என்னைவிட ஒருபடி கூடுதலாக இருக்கும் அதுதான் நானும் தெரிந்து கொள்ள அவற்றை சொல்லசொல்லி கேட்டேன் வாசகன் அண்ணாவிற்கு சொல்வதென்னவென்றால் நான் யரிழிலும் சரி மற்றும் வேறு தளங்கள் பத்திரிகைகளிலும் எழுதிவிட்டு ஒழிபவனோ அல்லது ஒழிந்திருந்து எழுதுபவனொ அல்ல எனவே உங்கள் கருத்துகளை எனக்கு தாராளமாக தெரிவிக்கலாம் எனது சொந்த பெயர் சிறீ எனது ஊர் மானிப்பாய் வசிப்பது பிரான்ஸ் தொ. பே இலக்கம் 0033611149470 நன்றி

தொலைபேசி இலக்கம் தந்து விட்டிங்க சாத்திரி சார். இனி உங்க வீட்டு தொலைபேசி எப்போதும் அடிச்சபடிதான் இருக்கபோகுது ஒவ்வொருமுறையும் அடிக்கும்போது எங்கே நான் தான் அடிக்கிறேனா எண்டு நினைக்காதிங்கோ நான் அடிக்க மாட்டன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கட்டும் கறுப்பி தொலை பேசியடிச்சு நாலு பேர் நாலு திட்டு திட்டினாத்தான் எனக்கு நித்திரை வரும் இல்லாட்டி எனது மனது கவலைப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பராஜா புனைந்ததை சாத்திரி விடுவிக்கிறார். சாத்திரி புனைவதை யார் விடுவிப்பதோ?!

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நீர் முயற்சிக்கலாமே! இல்லாவிட்டால், புனைவு என்ற வார்த்தையைப் பாவித்து, புஸ்பராசா விட்ட புழுகோடு ஒப்பீடு செய்யாதீர்.

நன்றிகள் சாஸ்திரி, தொடருக்கு...

இதில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ரஜனி திரணகம கொல்லப்படுவதற்கு முன் சில நாட்களாக இந்திய இராணுவம் மற்றும் ஈ.பி.ஆர்.அல்.அப் உடன், அவர் கொண்டிருந்த பாரிய முரண்பாடுகள், அக்காலத்தில் நடந்து கொண்டிருந்த மனித உரிமை மீறல்களுக்கான குரல்களை அடக்கப் பலியாக்கப்பட்டவரே ரஜனி திரணகம!

இக்கொலையை இன்று வரை புலிகள் தலையில் போட இவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் நிர்மலா எனும் ரஜனியின் சகோதரியே! புலிகளுடன் இந்தியாவில் இருந்த காலத்தில் புலிகளின் மகளிர் கட்டமைப்பு பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்படுமென நம்பியிருந்த இவருக்கு ஏமாற்றம் கிடைத்ததும் மற்றும் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலும் கொதிப்படைந்திருந்த நிர்மலாவிற்கு, களம் அமைத்துக் கொடுத்தது லண்டன் வருகையே!!

தனது தனிப்பட்ட கோபத்துக்கு, சகோதரியின் கொலையை தொடர்ந்து பாவிக்கத் தொடங்கினார். தொடர்ந்தும் கொண்டிருக்கிறார் ....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சாத்திரிக்கு கறுப்பி போண் பண்ணாமல் விட்டால் சரி....இல்லன்னா முனிஸ் ஒட தூக்கம் போய்டும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கட்டும் கறுப்பி தொலை பேசியடிச்சு நாலு பேர் நாலு திட்டு திட்டினாத்தான் எனக்கு நித்திரை வரும் இல்லாட்டி எனது மனது கவலைப்படும்

நீங்க தான் மத்தவயள திட்டிறதா கேள்விபட்டேனே

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சாத்திரிக்கு கறுப்பி போண் பண்ணாமல் விட்டால் சரி....இல்லன்னா முனிஸ் ஒட தூக்கம் போய்டும்... :lol:

மூனிஸ் ஒட தூக்கம் போகாது சுண்டல் சார்.

சும்மா சும்மா சாத்திரி சாரை விரட்டத்தான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 8

இந்தவாரத்தொடர் நிர்மலா பற்றியது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் இருந்து சிறிது விலகிசென்றாலும் இன்றைய காலத்தின் மற்றும் இன்றைய இளம் புலம் பெயர் சந்ததியினரிற்கு சில விடயங்களையும் தெழிவு படும்தும் நோக்கத்திற்காகவும் எழுதப்படுகிறது ராஜினியின் சகோதரி நிர்மலா இவரது கணவர்பெயர் நித்தியானந்தன் நிர்மலா நித்தியானந்தன் என்கிற பெயர் 82 களில் இலங்கையில் பத்திரிகைகளில் பிரபல்யமாக அடிபட்ட பெயர்

போராளிகளிற்கு உதவினார்கள் என்பதாலும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்கிற காரணத்ததால் இலங்கையரசால் சிறையிலடைக்கப்பட்டு 83 யூலை படுகொலைகளில் வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி பின்னர் அங்கு உயிர் தப்பியவர்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றபட்ட பொழுது இவர்களையும் மட்களப்பு சிறைக்கு மாற்றினார்கள் அங்கு 23ந்திகதி செப்ரெம்பர் மாதம் 83 ஆண்டு உள்ளிருந்த பல இயக்கங்களையும் சார்ந்தவர்களால் மட்டகளப்பு சிறை உடைக்கபட்டு பலர் தப்பியோடினார்கள்

அதில் நித்தியானந்தனும் தப்பிக்கொள்ள இந்நத சிறையுடைப்பு சிறையிலிருந்த ஆண்கள் தாங்கள் மட்டும் தப்பியோடும் நோக்கில் உடைக்கபட்டதால் சிறையின் பெண்கள் பகுதியிலிருந்த பெண்களையோ நிர்மலாவையோ அவர்களால் மீட்க முடியவில்லை தப்பியோடி வெளியில் வந்தவர்களிற்கு அந்த நேரம் புளொட் மற்றும் ஈபிஆர்எல் எவ் அமைப்பினர் உதவி செய்து அவர்களை இந்தியா தமிழ் நாட்டிற்கு தப்பிசெல்ல உதவினார்கள்.

பின்னர் தாங்கள் தான் அந்த சிறையை உடைத்தது என புளொட்டும் ஈபி யும் பின்னர் மாறி மாறி உரிமை கோரி கொண்டனர். இது இப்படியிருக்க 84ம் புலிகள் மட்டகளப்பு சிறையை உடைத்து நிர்மலா மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரிற்கு புலிகள் அமைப்பினரே உதவிகள் செய்து புலிகள் அமைப்பின் ஆதரவு ஏடான விடுதலைப்புலிகள் என்கிற பத்திரிகையை நிருவகிக்கும் பொறுப்பும் இவரது கணவன் நித்தியானந்தத்துடன் இணைத்து வழங்கப்பட்டது.

இதே காலகட்டத்தில் புலிகள் அமைப்பு பெண்கள் படைப்பிரிவை கட்டியமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர் அப்போது புலிகள் இயக்கத்தில் அதிகளவு பெண்கள் இணைந்திருக்காத காலகட்டம் எனவே புதிதாய் போராளிகளை இணைக்கவும் ஏற்கனவே இணைந்த போராளிகளிற்கு அரசியல் மற்றும் போராட்டம் பற்றிய தெளிவூட்டல்கள் என்பனவற்றை வழங்க புலிகளின் தலைமை முடிவுசெய்து அதற்கான பொறுப்பை திருமதி அடேல் பாலசிங்கத்திடம் அந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது.

இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

பெண்ணிய எண்ணக்கரு தொடர்பான தெளிவான முரண்பாடு இருவரது எண்ணப்போக்கிலும் காணப்பட்டது.பிரபாரகரனுடைய சித்தார்ந்த பார்வையில் நிர்மலாவினது பெண்விடுதலைப்பார்வை ஒர் அச்சடித்த மேற்குல பெண்விடுதலைப் பார்வையாக இருந்ததேயன்றி உண்மையாக விடுதலை வேண்டி நின்ற தமிழ்பெணகளை இனம்கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை.

எனவே பெண்கள் பிரிவை கட்டியெழுப்பும் எந்தவொரு பொறுப்பையும் நிர்மலாவிடம் கொடுக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருக்கவில்லை" . இப்படி எழுதியிருக்கிறார்.அதைவிட புலிகள் அமைப்பில் ஆயுதம் தாங்கிய முதல் பெண் போராளி என்று பார்த்தாலும் கூட அது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே. தனக்கு பதவிகள் பொறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலைகட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது

இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தொடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பொறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடொன்றிக்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நோக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.

ஊகூம் ஒண்றும் நடக்கவில்லை அதுமட்டுமல்ல ஒரு விடுதலைப்போராட்டத்தை கட்டுக்கோப்புடன் உறுதியாக கொண்டு நடாத்தகூடிய வல்லமை ராகவனிடம் இல்லையென்பது ராகவனுக்கே தெரியும் அதுமட்டுமல்ல நிர்மலாவின் பேச்சைகேட்டு யாரும் அவரை நம்பி பின்னால் போகிற நிலைமையிலும் இருக்கவில்லையென்பதும் உண்மையே . எனவே இவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பிய படி விரும்பிய இடத்திற்கு சென்று அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர இயக்கத்தின் தலைமை வழியனுப்பி வைத்தது.

இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள் தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டதொடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.

கூடவே சேர்ந்து வேறு பலபுலத்து புலியெதிர்பு காரர்களையும் நிர்மலா ஒண்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள். மீண்டும் புஸ்பராசாவின் புத்தகத்தை தட்டுவோம்.அதில் பத்மநாபாவை மட்டுமல்ல இந்திய படை காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சராய் இருந்த வரதராயபெருமாள்பற்றி பக்கம் 326 ல் இப்படி சொல்கிறார் வடகிழக்கிற்கு முதலமைச்சராக வரும் எல்லா தகுதியும் கொண்ட ஒரவரையே பத்மநாபா முதலமைச்சராக்கினார்்

இப்போது இருக்கும் அத்தனை அரசியல் வாதிகளிற்கும் சவால்விட கூடிய கூர்மையான அறிவுத்திறண் கொண்டஒரு இளம் அரசியல் வாதியாக அவரைப்பார்த்தேன் எங்களது மக்களிற்காக ஜெனரல் கல்கத்தடன் அவர் எவ்வளவோ வாதாடினார். சந்தேகம் கொள்பவர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் அவரை அரசியல் களத்தில் விட்டுப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று சவாடல் விட்டு அவர் சார்ந்திருந்த ஈ பி அர் எல் எவ் இயக்கத்தை பற்றி அவர் வைக்கின்ற புழுகு பூக்களை வைக்க எமது காதின் அளவு போதாது. அதேநேரம் ஒரு கணிசமான தொகை உறுப்பினர்களையும் பலத்தையும் கொண்டிருந்த அதே நேரம் எண்பதுகளின் முக்கியமான 5 இயக்கங்களின் வரிசையில் இருந்த ஈபிஆர் எல் எவ் இயக்கத்தை பற்றி ஆகா ஓகொ என்று புகழ்ந்தவரால் அந்த இயக்கம் இயங்கிய காலத்தில் இலங்கை அரசபடைகளிற்கெதிராக உருப்படியாக செய்த ஒரு தாக்குதலை கூட அவரது புத்கத்தில் விபரிக்க முடியவில்லை

காரணம் அப்படி எந்த தாக்குதல்களுமே அந்த இயக்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.ஆனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

ஆனா நான் இருக்கும் நாட்டில் இருக்கும் ஒருவர் சொன்னார் முதல் சிறை உடைப்பின் போது நிர்மலாவை விட்டுவிட்டர்கள் என்றும் ஆனா புலிகள் அதேமாதிரி தாக்குதலை நடத்தி நிர்மலாவுக்கு உயிர் பிச்சை கொடுத்து இந்தியா அனுப்பியது என்றும் யாரோ ராகவன் என்பவருக்க்கும் நிர்மலாக்கும் சம்திங் சம்திங் எல்லாம் வந்ததாகவும் நித்தியானந்தன் நல்ல ஒரு அறிவிப்பளர் என்றும் பிரபாகரன் மீது ந்லல மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்றும் இதனால் பல பிரச்சனைகளுக்கு புலிகள் முகம் கொடுத்த போது தான் நிர்மலாவின் நடத்தையையும் கருத்தில் கொண்டு தான் அவாவையும் ஓரங் காட்டினார்கள் என்று சொன்னார்கள்

ராகவனும் தலைவர் பிரபாகரனோடு நடப்பாக இருந்தாலும் ந்நிர்மலாவின் இன்பத்தின் இம்சைக்குல்ளே உள் வாங்கப்பட்டார் என்று சொன்னார்கள் இதை சொன்னது

லண்டனில் இருக்கும் முன்னால் யாழ் இந்து கல்லுரியின் மாணவனும் லெப் கெண்ல ராதா அண்ணாவுடன் படித்த நன்பர் என்ற ஜூட் என்பவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.