Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி!

[ Sunday, 08 February 2009, 07:11.11 AM GMT +05:30 ]

'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்...', 'என் வானிலே...', 'தெய்வீக ராகம்...','ஆயிரம் மலர்களே...', 'இரு பறவைகள்..', 'காதல் ஓவியம்...'

நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை.

இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது.

கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் படுவதாக விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் அவரது திரையுலக மறுபிரவேசம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் பாட வருகிறார்.

சேவலுக்குப் பிறகு, ஜின்னா தயாரிக்கும் சரவெடி என்ற புதிய படத்துக்காக, 'எனக்குள் எவனோ அவனே இவனோ...விரும்பி அழைத்தேன்...திரும்பி நடந்தான்...' என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலை கபிலன் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு புதிய வண்ணம் தந்த ஜாம்பவான் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை இயக்குகிறார்.

ஜென்சியை மீண்டும் பாட வைத்தது பற்றி டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறியதாவது:

சரவெடி படத்துக்காக கபிலன், ஒரு மென்மையான பாடலை எழுதியிருந்தார். அந்த பாடலை, காதல் ஓவியம்... போன்ற இனிமையான பாடல்களை பாடிய ஜென்சி பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் சொன்னேன்.

அவரும் ஆர்வமாகிவிட, இருவரும் சேர்ந்து அவரை தேட ஆரம்பித்தோம். அவர் துபாயில் இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஒரு மலையாள பாடகர் மூலம் அவருடைய முகவரியும், டெலிபோன் எண்களும் கிடைத்தன. நாங்கள் அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, ஜென்ஸியே எடுத்துப் பேசினார்.

எங்களின் விருப்பத்தை தெரிவித்ததும், 'கடைசியாக நான் பாடி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என் குரல் எப்படி இருக்குமோ... ரசிகர்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ...' என்று தயங்கினார். மெட்டைக் கேளுங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்... என்றோம் நாங்கள். அதன் பிறகே அவர் செனனை வந்தார்.

மெட்டைக் கேட்டதும் அவருக்கும் பிடித்துவிட்டது. பாட சம்மதித்து, இப்போது பாடியும் கொடுத்துவிட்டார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 2 மணி நேரம்தான், என்றார் ஜான்.

ரொம்ப ஆர்வமா இருக்கில்ல... ஆனா இன்னும் இரண்டு மாதம் வெயிட் பண்ணனும் பாட்டைக் கேட்க!

http://www.viduppu.com/view.php?2a24OTZ4b4...2j5iG0cc3rhYAde

நன்றி உங்கள் தகவலுக்கு. எனது அபிமானப்பாடகிகளில் ஒருவர். இளையராஜாவையே தன் திறமையால் ஆச்சரியப்படுத்தியவர்.

ஒரு சிறு குறிப்பு: 'ஒரு இனிய மனது இசையை' பாடலை பாடியது சுஜாதா, ஜென்ஸி அல்ல.

ஆக்கா மீண்டும் அவர் குரலா, காத்திருந்து பார்ப்போம், அவர் குரல் எப்படி வந்திருக்கின்றது என்று, எனக்கு பிடித்தமான அவரின் குரலினை மீண்டும் கேட்கப்போகின்றேன் என்பதில் சந்தோசம் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

படம் : ஜானி (1980)

பாடகர் : ஜென்சி

இசை அமைப்பாளர் : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

வருடம் : 1980

நடிகர்கள் : ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமேன்பது ...முடிவில்லாதது

வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசைஎன்றானது

ஆஹா .. எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்

என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் ..

இணைந்தோடுது ..இசை பாடுது ....

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே ..சுவையூட்டும் வண்ணமே ..மலர்ந்த கோலமே

ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே அனலின் தாகமே

ஆஹா..பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே

கவி பாடுங்கள் உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவயதில் பார்ப்பவை மற்றும் கேட்பவை அவைகள் நல்ல / கெட்ட சம்பவங்களோ அல்லது நினைவுகளோ மனதை பாதிப்பவையாக இருந்தால் அவை அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிடும் அப்படியான நினைவுகளில் ஜென்சியின் குரலும் ஒன்று.

எனது அபிமான ஏன் உயிரான இசையமைப்பாளர் என்று சொல்லக் கூடிய இளையராஜாவின் இசையை மிகவும் மெருகூட்டிய ஓர் அற்புதமான பாடகி. பொறுத்திருந்து பார்ப்போம் அவரின் குரலை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி ஜென்சி அந்தோனி தமிழில் ஏறத்தாள 25 திரைப்படங்களுக்கு சுமார் 30 வரையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்பாடல்களைத் தனியாகவும் வேறு முன்னணிப் பாடகர்களான பாலா, ஜானகி, சைலஜா, இளையராஜா, கங்கை அமரன் மற்றும் ஜேசுதாஸ், வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மலேசிய வாசுதேவன் ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார். இவரின் இனிமையான குரல் வளம் ஒருபுறமிருக்க இவரின் குரல் சிறிதேவியின் குரலுடன் ஒத்ததாக இருந்ததால் அந்தக் காலத்தில் ஜென்சியின் பாடல்கள் இளையோர் மட்டங்களில் பெரிய புகழைப் பெற்றது.

http://img3.imageshack.us/my.php?image=jencybigxt8.jpg

Edited by vanangaamudi

இளையராஜாவே ஒரு பேட்டியில் தன்னிடம் புதிதாக அறிமுகமான பாடகிகளில் தன்னை தங்கள் திறமையால் உடனேயே கவர்ந்தவர்களாக ஜென்ஸியையும் சித்ராவையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜென்ஸிக்கு இசை ஆசிரியர் வேலை கிடைத்ததால் தான் அவர் தன் தந்தையின் ஆலோசனைப்படி பாடுவதை நிறுத்தியாக குறிப்பிட்டதாக ஞாபகம்.

சுஜாதாவும் இளையராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிதான். இவரும் மலையாளி என்பதால் பாடும்போது மலையாளம் வீசும் தமிழ் தென்படுகிறது "ஒரு இனிய மனது" பாடலின் போது. சுஜாதாவின் மகள் ஸ்வேதாவே ஒரு நிகழ்ச்சியில் இந்த பாடலைப்பாடும்போது தனது தாயார் பாடிய பாடலைப்படுவது பெருமையாக உள்ளதென குறிப்பிட்டார். சுஜாதாகூட கணவரின் வேலைமாற்றம் காரணமாக வேறு ஊர்களுக்கு சென்றதால் பாடுவதை நிறுத்தியிருந்தார். மீண்டும் ரகுமானால் ரோஜா படத்தில் திரை இசைக்குள் நுழைந்தார். எனவே ஜென்ஸியின் மறுவரவும் வெற்றிகரமாக அமையட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வரு வதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.

`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' என்று இதயச்சுவர் முழுவதும் எப்போதும் எதிரொலித்துக்கொண் டிருக்கும் ஜென்ஸியின் கந்தர்வக் குரல்.

மயங்க வைத்த அந்தக் குரலை திடீரென்று காணோம். எங்கே ஜென்சி என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. அவர் கேரளா சென்று எர்ணாகுளத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

``இப்போதும் என்னை நலம் விசாரித்து ஏகப்பட்ட போன் கால்கள். பாசத்தைக் கொட்டிப் பேசும் தமிழ் ரசிகர்களை மறக்கவே முடியாது. இந்தப் பெருமை எல்லாம் இளையராஜா சாருக்குத்தான் சேரும்.'' மலையாளம் கலந்த மழலைத் தமிழில் சிலிர்க்கிறார் ஜென்சி.

``எட்டு வயசிலேயே பாட ஆரம்பிச்சிட்டேன். அண்ணன் கிடார் வாசிக்க, நான் பாடினால் அக்கம் பக்கம் உள்ளவங்க அப்படியே சொக்கிப் போயிடுவாங்க. ஸ்கூல் படிக்கிறப்ப பாட்டுப் போட்டியில நான்தான் ஃபர்ஸ்ட். அப்பவே ஜானகி அம்மா கையில பரிசு வாங்கினேன். '' என்று சொல்லும்போது ஜென்சியின் கண்களில் பரவசம் படருகிறது.

``இது எப்படி அமைஞ்சதுன்னே தெரியல. ராஜா சார் பாடல்களை செலக்டிவா எனக்குக் கொடுத்தார். முதன்முதலா சினிமா பாடலா `வேளம்பல்' என்கிற மலையாள படம். எம்.கே.அர்ஜுன்தான் மியூசிக். மகாகவி வயலார் எழுதிய பாட்டுதான் நான் பாடினேன். எங்கேயோ என் குரலைக் கேட்டு ஜேசுதாஸ் அண்ணா என்னை ராஜா சார் முன்னால கொண்டு போய் நிறுத்தினார். ``இந்தப் பொண்ணு குரலைக் கேட்டுப்பாரு''ன்னு சொன்னார். `உனக்குப் பிடிச்ச பாட்டை பாடும்மா'ன்னு ராஜா சார் சொல்ல, `அன்னக்கிளி உன்னைத் தேடுதே'ன்னு நான் பாடி முடிக்கிறதுக்குள்ள `நாளைக்கு ரெக்கார்டிங்... வந்து பாடிட்டுப் போம்மா'ன்னு சொல்லிட்டார். எனக்கு கால் தரையில படல.'' என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பாடலாகப் பாட ஆரம்பிக்கிறார்.

``காதல் ஓவியம்... பாடும் காவியம்... ராஜா சாரோடு சேர்ந்து பாடினது. அப்றம் ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும், இதயம் போகுதே... கீதா... சங்கீதா, மீன் கொடி தேரில்... எல்லாப் பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சாங்ஸ். அப்ப டெக்னாலஜி இல்லாததால சின்ன தப்பு பண்ணினாலும் முதலிலிருந்தே பாடணும். பாடி முடிச்சதும் ராஜா சார் எப்போ வெரிகுட் சொல்வார்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். ஆனா சொல்லமாட்டார். `நீ பாடியதை நீயே கேட்டு சரி பண்ணு'னு சொல்லிட்டுப் போயிடுவார். இதுதான் அடுத்தடுத்து என்னை வளர்த்துக்க உதவுச்சு'' என்கிறார். இன்னும் அதே மயக்கும் குரல்.

``சரி, திடீரென்று ... போய்விட்டீர்களே என்ன ஆயிற்று?''

``ஆமாம். குடும்பச் சூழ்நிலை தான். கேரளாவிலேயே இருக்க வேண்டியதாயிற்று திருமணம் நடந்ததால் பொறுப்புகளும் கூடிவிட்டது. அதனால் பாடல் உலகத்தைவிட்டு விலகி விட்டேன்.''

மீண்டும் சினிமாவில் பாடணும்னு ஆசை வரலையா?'

``வந்துச்சு. ராஜா சாரை சந்திச்சு மறுபடியும் பாட ஆசைப்படுறேன்னேன். பிரசாத் தியேட்டருக்கு காலை 8 மணிக்கு வந்திடுன்னார். இரவெல்லாம் மறுபடியும் பாடப்போற சந்தோஷம். ஆனா என் மகன் நிதினுக்கு திடீரென்று குளிர் ஜுரம் வந்துடுச்சு. விடிந்ததும் விஜயா ஹாஸ்பிட லுக்குத் தூக்கிட்டுப் போனோம். அதுல எல்லாம் மறந்துபோச்சு. பத்து மணிக்குதான் ஞாபகம் வந்து, டாக்ஸி பிடிச்சு பிரசாத் ஸ்டுடியோ போனேன். ஆனா ஏற்கெனவே அந்தப் பாடலை ஜானகி அம்மா பாடிட்டு வெளியே வந்தாங்க. நான் ஸ்டுடியோ ஹால்லயே நின்னுட்டிருந்தேன். ராஜா வெளியே வந்து, ``இப்பதான் வந்தியா'' என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டார். நான் எதையும் சொல்ல முடியாம அப்படியே திரும்பிட்டேன்.

இது நடந்து 15 வருஷமாயிடுச்சு.

எப்பவாவது பாட கூப்பிடுவார்னு ப்ராக்டீஸ் செய்துகிட்டேயிருக்கேன். இப்போ மலையாள ஆல்பங்களில் பாடிட்டிருக்கேன். என் கணவர் தாமஸ் டெல்லியில பிஸினஸ் பண்றார். நுபியான்னு ஒரு பொண்ணு, மகன் மரைன் என்ஜினீயர். எல்லாருமே என் பாடலை ரசிக்கிறாங்க. சந்தோசமா போகுது வாழ்க்கை.''

இப்போ வாய்ப்புக்கேட்கலையா?

``எண்பதுகளில் நான் பாடிய பல பாடல்களுக்கு கீ போர்டு வாசிச்ச பையன்தான் ஏ.ஆர்.ரகுமான். பெரிய ஆளாயிட்டார். அவர் இசையில பாடணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் யார்கிட்டேயும் போய் சான்ஸ் கேட்பது என் குழந்தைகளுக்குப் பிடிக்கல. அதனால இங்கேயே இருந்துட்டேன்'' என்று சொல்லிவிட்டு, பாட ஆரம்பிக்கிறார்.

``மயிலே... மயிலே... உன் தோகை எங்கே...''

அதே மலைச்சாரலில் பனிக் காற்றில் பயணிக்கத் தொடங்குகிறது மனது!.

kumudham

thanks

நன்றி நுணாவிலான் - நல்ல கட்டுரை. இது பேட்டியாக இல்லாமல் கட்டுரையாக உள்ளதால் எழுதியவர் தந்து கருத்துக்களையும் சேர்த்து எழுதும் போது தவறு (ஒரு இனிய மனது பாடலைப்பற்றி) செய்துவிட்டார்.

கவிக்குயில் படத்தில் சுஜாதா காதலோவியம் என்றொரு அருமையான பாடலைப்பாடியுள்ளார். கேட்டுப்பாருங்கள் - சுஜாதாவின் இளவயது குரல் எப்படி இருந்ததென்பதற்காக - இதுவரை கேட்கவில்லை அல்லது அண்மையில் கேட்கவில்லை என்றால் மட்டும். கீழ் ஸ்தாயில் பாடும் போது சுஜாதாவின் குரலும் ஜென்ஸியின் குரலும் எளிதாக அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கும். ஜென்ஸியின் குரல் சுஜாதாவின் குரலைவிட மெல்லியதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.