Jump to content

தெளிவு - உண்மைக் கதை


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தெளிவு

----------

துடியாய்த் துடிக்கிறார்.

இந்திய அமைதிப் படையின் ஷசெல்| தாக்குதலால் உடம்பெல்லாம் கிழிந்து போய் ஒரு கிழட்டு உயிர் சாவோடு போராடுகிறது.

உரும்பிராயில் எல்லோருடனும் 'நல்ல மனிதராய்' வாழ்ந்துவிட்ட ஒருவர்.

செல்வா காலம் - சிவகுமாரன் காலம் - பிரபாகரன் காலம் மூன்றையும் தன் நீண்ட நெடிய வாழ்வில் நேரில் கண்டு, வீறு மிக்க விடுதலைப் போரில் தன்னையும் எங்கோ சேர்த்துக் கொண்ட பெருமை.

நல்ல விடுதலை உணர்வாளர்.

அதிகம் பேசாத வாய்.

இத்தனை காலமும் சாவுக்குத் தப்பிய அந்த நல்லவர் இந்திய வெறிப்படையின் ஷ செல் | அடித்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்.

கண்களில் நீர் பொங்கப் பக்கத்து வீடுகளின் சிறுவர்கள் - இளம் பெண்கள் - பெரியவர்கள் - தாய்மார்கள் - இளைஞர்கள் எல்லோரும் வளைத்து நிற்கிறார்கள்.

உற்றுப் பார்க்கிறார்.

பேசத் தோன்றுகிறது.

" கடைசியாகச் சொல்லுறன்.... ஒருவரையும் நம்பாதீங்கோ. சிங்களவன் ஏசிக்கொண்டு எங்களை அழிச்சான். இந்தியா பாராட்டிக்கொண்டு அழிக்குது. தமிழர்களைத் தமிழர்கள் தான் காப்பாத்த வேணும்..... விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் நில்லுங்கோ...... "

எல்லோரும் அழுகிறார்கள்.

உரும்பிராயில் ஒரு நல்ல உயிர் அடங்கிற்று.

அடுத்த நாள் -

இளைஞன் ஒருவன் சாவீட்டில், பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்துச் சொன்னான்.

" பெரியவர் எங்களை உசுப்பி விட்டுப் போகிறார். "

-------------------------------------------------------------------------------------

" அம்மாளைக் கும்பிடுகிறானுகள் " உண்மைக் கதைத் தொகுதி - 1 நூலில் இருந்து . வெளியீட்டாளருக்கு - நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.