Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுக்கு வழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 119

XP‘s Alternate System Information

உங்கள் கணனியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சம்பந்தமான தகவல்களை ஓரிரு கீளிக்கில் பார்க்க கூடியதான வசதி XP யில் உள்ளது. வழமையாக நமது கணனியின் தகவல்களை பெறுவதற்காக போவது Start-->All Programs--> Accessories-->System Tools-->Syatem Information என்றவழியில் ஆகும்.

ஆனால் எக்ஸ்பி இன் Help and support என்ற பகுதியில் உங்கள் கணனியின் தகவல்களை பெறுவதற்கு மாற்று வழியொன்று உள்ளது. இதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.

1. Start --> Help and Support

2. திறக்கப்படும் ஜன்னலில் Pick A Task என்னும் பகுதியில் Use Tools To View Your Computer Information And Diagnose Problems என்ற வரியை கிளிக் பண்ணவும்.

3. திறக்கப்படும் Tools ஜன்னலில் My Computer Information என்பதை கிளிக்பண்ணவும்.

4. My Computer Information என்னும் ஜன்னலின் வலது பக்கத்தில் கீழ்க்காணும் தெரிவுகள் காணப்படும். ஒவ்வொன்றையும் கிளிக்பண்ணி எவ்வளவு தகவல்கள் காணப்படுகின்றன என பார்க்கவும். அது மாத்திரமல்ல வேறு தகவல்களுக்கு வேண்டிய லிங்குகளும் அங்கே உண்டு.

1.View general system information about this computer

2.View the status of my system hardware and software

3.Find information about the hardware installed on this computer

4.View a list of Microsoft software installed on this computer

  • 2 weeks later...
  • Replies 358
  • Views 138.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 120

Delete a Folder in Yahoo! Mail

யாஹு, ஹொட்மெயில் போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்களின் வரவு பெட்டியில் (inbox) இல் சாதாரணமாக 500 கடிதங்கள் வரை காணப்படுவது சகஜம். இதில் கடிதங்களை தேடி எடுப்பதற்கு சுலபமாக அவற்றை வகைப்படுத்தி வெவ்வேறு போல்டருக்குள் பலர் போட்டு வைப்பதுவும் உண்டு. நீங்கள் வகைப்படுத்த விரும்பின் உ.ம்: உங்கள் மனைவியின் கடிதங்களை ஒரு போல்டருக்குள் இட்டு வைக்க விரும்பின் அக்கடிதங்களின் இடதுபுறமுள்ள சிறிய பெட்டியினுள் Tick போட்டுவிட்டு. பட்டியலின் மேலே உள்ள Move (ஹொட்மெயிலில் "Put In Folder")என்ற பட்டனை கிளிக்பண்ண வரும் Drop down menu வில் New Folder ஐ தேர்வு செய்தவுடன் பெயர் வைக்கும்படி கேட்கும். பின்னர் அதற்கு ஒரு பெயர் கொடுத்தவுடன் அத்தனை கடிதங்களும் அந்த போல்டருக்கு நகர்த்தபடும். இப்படி நீங்கள் பல போல்டர்களை உருவாக்கி வைப்பது தேடுவதற்கும் பதில் எழுதுவதற்கும் வசதியாக அமையும். உருவாக்கப்படும் போல்டரை இடதுபுறம் போல்டர் வரிசையின் அடியில் காணலாம்.

ஆனால் இந்த போல்டர்களை வேண்டும்போது எப்படி அழிப்பது என்பது பலருக்கு தெரியாத விடயம். யாஹுவில் எப்படி அழிப்பது என பார்ப்போம். முதலில் அழிக்கவேண்டிய போல்டரை திறந்து அதிலுள்ள எல்லா கடிதங்களையும் அழியுங்கள். அதன் பிற்பாடு இடது பக்க மேல் மூலையிலுள்ள Mail என்ற Tab ஐ கிளிக்பண்ணவும்.(Hotmail லில் "Manage Folders")விரியும் பட்டியலில் Folder ஐ தெரிவு செய்யவும். இப்போது போல்டர்களின் பட்டியல் தென்படும். Delete, Rename என்ற தேர்வுகள் காணப்படும். Delete ஐ கிளிக்பண்ண அந்த போல்டர் அழிந்துவிடும். நாங்கள் உண்டாக்கிய போல்டர்களை அழிக்க முடியுமே தவிர Defaut போல்டர்களாகிய (Inbox, Draft, Sent ஆகிய 5 யும்) அழிக்கமுடியாது.

நன்றி.

ஹார்மெயிலில் வரும் மின்னஞ்சல்கள் தானாகவே(வேறு மென்பொருட்கள் பாவிக்காமல்) குறிப்பிட்ட குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் போகச் செய்யமுடியுமா?

  • தொடங்கியவர்

நன்றி.ஹார்மெயிலில் வரும் மின்னஞ்சல்கள் தானாகவே(வேறு மென்பொருட்கள் பாவிக்காமல்) குறிப்பிட்ட குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் போகச் செய்யமுடியுமா?

முடியும் சூட்டி ! ஹாட்மெயிலிலும் முடியும் யாஹுவிலும் முடியும். Filter என்ற வசதியை பயன்படுத்தி வரும் கடிதங்களை தெரிவுகட்டி குறிப்பிட்ட போல்டருக்கு அனுப்பும்படி செய்யமுடியும். ஹாட்மெயிலில் இப்படி:

Options-->Mail-->Custom Filters-->New Filters இங்கு தெரிவு செய்யவேண்டிய இமெயிலின் அனுப்புவரின் முகவரியை Header என்ற பெட்டியில் கொடுத்து இடவேண்டிய போல்டரின் பெயரையும் கொடுத்தால் போதும். முகவரி மாத்திரம் அல்ல இமெயிலின் எந்த பகுதியிலும் உள்ள எந்த சொற்தொடரையும் வைத்து தெரிவு செய்யச்சொல்ல கூடிய வசதி Filter ல் உண்டு.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 121

வெப்தள அறிமுகம்

செய்திகள், ஜோதிடம், விளையாட்டு, சினிமா, தகவற்தொழில்நுட்பம், சமையல், நகைச்சுவை, ஆகிய பகுதிகளை தன்னகத்தே கொண்டு MNS இன் வெப்பக்கம் தமிழில் வெளிவருகின்றது,. இவ்வெளியீடு தமிழுக்கு பெருமை தருவதாக உள்ளது. தமிழில் உலக செய்திகளையும் சமையல், சினிமா, தகவல்தொழில் நுட்பம் ஆகியன சம்பந்தமான பல கட்டுரைகளை நாள்தோறும் வாசித்து அறிந்து கொள்ளலாம். ஒருமுறை சென்று பாருங்கள். திராவிட மொழிகள் நான்கோடு ஹிந்தியும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்தியாவில் இருந்து வெளிவருகிறது. இந்தியாவில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளதை மேற்குலக தொழிலதிபர்கள் நன்றாக பயன்படுத்த முற்படுகிறார்கள் போலுள்ளது.

http://content.msn.co.in/Tamil/Default.htm

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தேவகுரு அண்ணா

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 122

சீனாவில் கணனி உற்பத்தி - தனது சொந்த CPU மற்றும் Linux இயங்குதளத்துடன்.

தனது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட Cpu மற்றும் கட்டற்ற இயங்குதளமாகிய Linux நிறுவப்பட்ட கணனிகளை விற்பனைக்கு விட உள்ள செய்தி நிச்சயமாக Intel மற்றும் Microsoft நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தாமல் இருக்கமுடியாது.

உற்பத்தி நிறுவனமாகிய Lemote Technilogy இன் முகாமையாளர் Wu Shaogang அவர்களின் கூற்றின்படி சீனாவின் ஆராய்ச்சி சாலைகளில் வளர்த்து உருவாக்கப்பட்ட Processor கள் பொருத்தப்பட்ட, 80 கணனிகளைக்கொண்ட முதற்தொகுதி பாவனையாளர்களிடம் பரீட்சிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இக்கணனிகளில் பொருத்தப்பட்ட Godson 11 E என்ற Processor Chip வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக அது சார்ந்த சந்தையில் ஒரு போட்டியை ஏற்படுத்தப்போகிறது.

சீனாவின் புது வருட பிறப்போடு Jiangsu மாகாணத்தை தளமாக கொண்ட Lemote Technilogy நிறுவனம் இன்னொரு 1000 கணனிகளை உள்ளூரிலேயே விற்பனைக்கு விடவுள்ளது. இக்கணனிகள் 40 GB ஹாட் டிறைவையும் 256 MB நினைவகத்தையும் Linux இயங்கு தளத்தையும் கொண்டது. சீனாவில் இதன் விலை RMB1,599 ($200) ஆகும். மொனிட்டர் மற்றும் கீபோட், மவுஸ் இவைகளையும் சேர்த்தால் $250 முடியும். இலவச இயங்குதளம் சேர்கப்பட்டுள்ளதால் விலை பரவாயில்லை. சந்தையில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் Institute of Computing Technology (ICT) என்ற நிறுவனத்தால் 2001 ம் ஆண்டில் CPU வின் ஆராய்ச்சியும் வளர்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டு முதலில் Godson I என்ற சிப் 2002 ல் வெளிவந்த்து. அதை தொடர்ந்து Godson II B, Godson II C and Godson II E என்ற சிப் கள் வெளிவந்தன. கடைசியாக வெளி வந்த மாடல் முந்தைய மாடல்களிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்துடன் வேலை செய்யக்கூடியது.

இந்த கணனி உருவாக்கம் சீனாவில் 1986 ல் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சீனாவின் இந்த அதிசய வளர்ச்சியும் கணனி உற்பத்தியும் ஏற்கனவே கணனிகள் நிறைந்துள்ள உலக சந்தையில் மேலும் கணனிகளை குவித்து சீன பொருட்களின் ஆகிரமிப்பை மேலும் அதிகரிக்கப்போகிறதா? IBM (now Lenovo), Dell, Hewlett-Packard ஆகிய நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்க போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by E.Thevaguru

இதை எப்படி குறுக்குவழி எனக் கருதுவது???

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 123

16 பிட், 32 பிட், 64 பிட் மென்பொருள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இவை என்ன?

குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு டேட்டா பரிமாறப்படுகிறது அல்லது அலசப்படுகிறது என்பதை வைத்துத்தான் இந்த எண்களை கூறுவார்கள். 32 பிட் Processor என்றால் ஒரே நேரத்தில் 32 bit களில் வரும் டேட்டாவை Processor கையாளும். Bit என்பது Binary Digit என்பதை குறிக்கும். அதாவது 1 அல்லது 0 வைக்குறிக்கும். 32 பிட் புறோசசரினால் 0 இலிருந்து 4,294,967,295 (232)வரையும் 64 பிட் புறோசசரினால் 0 இலிருந்து 18,446,744,073,709,551,615 (264) வரையான இலக்கங்களை மாத்திரம் கையாளமுடியும்.

கேள்வி என்னவெனில் 64 பிட் Processor சாதரண பவனையாளர்களுக்கு தேவைதானா என்பது? ஏனெனில் இந்த 64 பிட் Processor களால் பயனடைபவர்கள் பெரிய கல்வி நிலையங்களும், பெரிய கணக்குக் செய்பவர்கள், பென்னம்பெரிய database களை வைத்துருப்பவர்கள் மட்டுமே. AMD Athlon 64-bit processor பின்நோக்கிய ஒத்திசைவு செயற்பாடுடையது. (backward compatible). பெடும்பலான 32 பிட் அப்பிளிகேஷன்கள் 64 பிட் இயங்குதளங்களில் சரியாக வெலை செய்வதில்லை.

64 பிட் ஆப்பரேடிங் சிஸ்டம், அப்பிளிகேஷன்கள் இனமும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. எனவே சாதரண பாவனையளர்கள் 32 பிட் சாமான்களுடன் நின்று கொள்வது நன்று.

16 பிட் அப்பிளிகேஷன்கள் மற்றும் மென்பொருட்கள் விண்டோஸ் 3,0 மற்றும் 3.1 இயங்கு தளங்களில் பாவிப்பதற்கு தயாரிக்கபட்டாவையாகும். 32 bit அப்பிளிகேஷன்கள், மென்பொருட்கள் விண்டோஸ் 95, 98, NT, 2000 ஆகியவைகளில் பாவிப்பதற்கு தயாரிக்கப்பட்டவையாகும்.

microprocessor:
indicates the width of the registers. A 16-bit microprocessor can process data and memory addresses that are represented by 16 bits.

bus:
indicates the number of wires in the bus. A 16-bit bus transmits 16 bits in parallel.

graphics device:
such as a scanner or digital camera : specifies the number of bits used to represent each pixel.

operating system:
refers primarily to the number of bits used to represent memory addresses. Windows 3.x is a 16-bit operating system, whereas Windows 95 and Windows NT are 32-bit operating systems.

expansion board:
refers to how much data can be sent to and from the card in parallel. 8-bit cards are sometimes called half-size cards whereas 16-bit cards are referred to as full-size cards

Edited by E.Thevaguru

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 124

பிரிண்டரில் ஒவ்வொரு பக்கமாக நிறுத்தி நிறுத்தி பிரிண்ட் எடுப்பது எப்படி?

MS Word ல் தயாரித்த 15 பக்கங்களைக்கொண்ட கட்டுரை ஒன்று என்னிடம் உள்ளது. பிரிண்டரில் தொடராக 15 பக்கங்களை ஒரேயடியாக பிரிண்ட் எடுக்காமல் நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு பக்கங்களுக்கிடையிலும் கம்பியூட்டர் காத்திருந்து நான் பேப்பரை வைத்து அச்சிடும் வசதி உள்ளதா?

ஆம் முடியும். File மெனுவில் Page Setup என்பதை தேர்வு செய்து Paper என்பதை தேர்வு செய்து பின் Paper Source என்ற பகுதியில் First page, Other Page என்பதில் Manual Feed என்பதை தேர்வு செய்து OK செய்துவிடின் அச்சு எடுக்கும்போது முதலில் Insert Paper என்றும் பின் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பேப்பரை சொருகி OK பண்ணினால் ஒவ்வொரு பக்கமாக அச்சாகும்.

  • 1 month later...

குறுக்குவழிகள் - 125

Thumbnails and File Names

கேள்வி: அண்மையில் சுற்றுலா சென்றேன். அதன்போது எடுத்த படங்களை எனது கணனியில் சேமித்திருந்தேன். நேற்று திறந்து பார்த்தபோது படங்களின் கீழ் காணப்பட்ட பெயர்கள் மறைந்து விட்டிருந்தது. ஆனால் Views-->List க்கு போனால் பட்டியலில் பெயர்கள் காணப்படுகிறது. Thumbnail View ல் பெயர்கள் மறைந்துள்ளது. இதை மீண்டும் எப்படிதோற்றுவிப்பது என தெரியவில்லை.

பதில்: இது விண்டோஸின் அம்சம் அல்லது வசதி. சுவரில் உள்ள ஆழியைப்போல் படங்களின் கீழுள்ள பெயர்களை ON, OFF பண்ணமுடியும். படங்களை திறந்து வைத்துக்கொண்டு Standard Buttons Tool Bar ல் வலது தொங்கலில் காணப்படும் View Icon னின் Drop Down Menu ல் List அல்லது Details என்பதை கிளிக் பண்ணவும். இப்போது படங்களின் பட்டியல் தெரியும். மீண்டும் அதே Drop Down Menu விற்கு போய் Shift Key ஐ அழுத்திக்கொண்டு Thumbnail அல்லது Filmstrip ஐ கிளிக்பண்ணவும். இப்போது படங்களின் மறைந்த பெயர் காணப்படும்.

List அல்லது Details View வில் நின்றுகொண்டு shift key ஐஅழுத்திக்கொண்டு Thumbnail அல்லது Filmstrip ல் கிளிக்பண்ணி படங்களில் கீழுள்ள பெயர்களை மறைக்கவும் தோற்றுவிக்கவும் முடியும்.

நீங்கள் தவறுதலாக கீகளை அழுத்தியதன் காரணமாக பெயர்கள் மறைந்திருக்கவேண்டும்

Edited by Nepolean

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 126

Desktop Icon களில் காணப்படும் அம்புக்குறிகளை நீக்கி Desktop ஐ அழகு படுத்த !

பல புறோகிறாம்கள் நிறுவப்படும்போது அவைக்குரிய Shortcut Icon கள் Desktop ல் போடப்படுகின்றன. இந்த Icon களை Shortcut Icon என அடையாள படுத்துவதற்க்காக இடது பக்க கீழ் மூலயில் ஓர் அம்புக்குறி இடப்படுகின்றன. Icon களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். றிஜிஸ்ரியில் மாற்றம் செய்வதனூடாகவே இதை செய்ய முடியும்.

மாற்றம் செய்வதன்முன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்

Start -->Run--> Regedit> HKEY_CLASSES_ROOT என்பதன் இடது பக்கம் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணி விரிக்கவும்- கீழ்நோக்கி போய் LNKFILE என்னும் போடரை ஒருமுறை கிளிக்பண்ணவும் அடுத்து வலது பக்கம் IsShortcut என்று காணப்படும் Value ஐ கிளிக்பண்ணி Delete பண்ணவும். கம்பியூட்டரை Reboot பண்ணவும்.

அம்புக்குறிகள் இன்றி திரை அழகாக தென்படும்

நன்றி அண்ணா.உங்கள் குறுக்கு வழிகள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

குறுக்குவழிகள் - 126

Desktop Icon களில் காணப்படும் அம்புக்குறிகளை நீக்கி Desktop ஐ அழகு படுத்த !

மாற்றம் செய்வதன்முன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்

எப்படி export பண்ணுவது என்று சொல்வீர்களா?

கலை நேசன் இது பெரிய கஸ்டமில்லை .... தேவகுரு அண்ணா சொன்னது போல செய்யுங்க

டொச் ல பிசி வச்சிருக்குறவர்கள் இப்படி போங்க ..... ( எல்லாம் ஒண்டுதான் ) B)

Start க்கு போய் அங்கிருந்து -> Ausführen என்பதை கிளிக் செய்து அதில் "regedit" என்று குடுத்து தேடுங்கள் பிறகு ஒரு Fenster வரும். அதில "HKEY_CLASSES_ROOT" எண்டு இருக்கும் +ல் கிளிக் செய்யுங்க ... அதுக்குள் inkfile யும் இருக்கும். ( நல்லா தேடுங்க )

untitledoq6.png

inkfile கண்டுபிடிச்சு அதில கிளிக் செய்ய " IsShortcut " என்று இருக்கு பெயரை அழியுங்கள் பிறகு ஒருக்கா Neustart பண்ணிட்டு வந்து பாருங்க Desktop அழகா இருக்கும் ...... :P

Edited by அனிதா

  • தொடங்கியவர்

அனிதா குஞ்சு ! படத்துடன் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி

ஆனாலும் அண்ணா கேட்ட கேள்விக்கு விடை கொடுக்கவில்லையே!

எப்படி Export பண்ணுவது?

குழறுபடி ஏற்பட்டால் மீண்டும் அந்த கீயை அதே இடத்தில் முன்பிருந்தமாதிரி நிறுவிக்கொள்ளலாமல்லவா!

ரிஜிஸ்றியில் மாற்றம் செய்யுமுன் எக்ஸ்போட் பண்ணி சேமிப்பது நல்ல பழக்க மாயிற்றே!

உங்க கையாலேயே அதையும் எழுதிவிடுங்க..

Edited by E.Thevaguru

ம்ம்ம்ம நல்ல பழக்கம் தான். :lol:

ஒகே எப்படி Export பண்ணுதெண்டால்..... நீங்க inkfile கண்டுபிடிச்ச பிறகு அந்த inkfile ல வச்சு மவுஸ்ல (எப்படி சொல்லுவது) இடதுபக்க கிளிக் செய்ய அதுல Exportieren எண்டு இருக்கும் .அதை கிளிக் செய்யுங்க பிறகு அது எங்க பதியப் போறீங்க எண்டு கேக்கும் . உங்களுக்கு விருப்பமான இடத்தில் விடுங்க. (திருப்பி குழறுபடி வந்தால் மீண்டும் பதிய வேண்டுமல்லவா ஹிஹி )

ஒகே.... சரியா தேவகுரு அண்ணா ? :lol:

Edited by அனிதா

சொல்லித்தந்த அனிதாவுக்கும்,ஊக்குவித்த தேவகுரு அண்ணாவிற்கும்

நன்றிகள். :lol:

  • தொடங்கியவர்

கலைநேசன்1 !

கொஞ்சம் விபரமா தெரிந்துகொள்ளுங்க !

இதை கிளிக்பண்ணி படித்துபாருங்க !

http://www.petri.co.il/before_you_begin.htm

  • 2 months later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 127

“Shared Documents” போல்டர் என்பது என்ன? இதன் பயன் யாது?

My Documents, My Pictures, and My Music என்ற போல்டர்கள் தனியாளினது. கம்பியூட்டரில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் பிறிது பிறிதாக இருக்கும்.

“Shared Documents” போல்டர் அதற்கு எதிரானது. கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் பொதுவானது. மகன் தனது கணக்கு பயிற்சிகளை செய்துவிட்டு இதில் போட்டு வைக்க தகப்பன் பார்த்து திருத்தி வைக்கலாம். அல்லது தாய் குடும்ப படங்களை இதில் போட்டு வைக்க மற்ற எல்லோரும் பார்த்து மகிழலாம். பொதுவானது என்பதால் இந்த போல்டருக்கு, ஒரு டிரைவ்க்கு அல்லது பார்ட்டிஷனுக்கு உரிய அந்தஸ்து அளிக்கப்பட்டு சமமாக “My Computer” window வினுள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனி ஒருவர் பாவிக்கும் அல்லது ஒரே ஒரு கணக்கு வைத்திருக்கும் கணனியில் இது தேவையற்ற ஒன்றாக கருதப்படுகின்றது. இதை சாதாரணமாக அழித்துவிடமுடியாது. றிஜிஸ்ரியினுள் சென்று மாற்றம் செய்வதனால் மாத்திரம் நீக்கமுடியும். விரும்பியவர்கள் இப்படி செய்து நீக்கலாம்.

1. றிஜிஸ்ரி எடிட்டரை திறக்கவும் (Regedit.exe).

2. கீழே குறிப்பிட்டவாறு உப Key க்கு செல்லவும்: HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\MyComputer\NameSpace\DelegateFolders

3. (DelegateFolders என்ற கீயை அவசர தேவையின் நிமித்தம் சேமித்து கொள்ளவும்.)

4. {59031a47-3f72-44a7-89c5-5595fe6b30ee}. என்ற key ஐ கண்டு பிடிக்கவும்

5. அதில் வலது கிளிக் செய்து Delete ஐ அழுத்தவும். றிஜிஸ்ரி எடிட்டரை மூடவும்.

6. கம்பியூட்டரை Reboot பண்ணவும்.

றிஜிஸ்ரி எடிட்டரை இயக்கி பழக்கமில்லாதவர்கள் இதை செய்ய முயற்சிப்பது நல்லதல்ல.

நான் இந்த அழிப்பு வேலைகளிற்கு போகமாட்டேன். தேவையில்லாத சோலி. Shared Documents இல் நான் ஒருபோதும் எதையும் போட்டு வைப்பதில்லை. எப்பவும் அது empty ஆக இருக்கும்.

  • 3 months later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 128

VideoReDo Plus 2.5.4.507

வீடியோ எடிட்டர் ஆகிய இந்த மென்பொருள் தங்கள் கம்பியூட்டரில் தொலைக்காட்சி அலைவரிசையை பார்ப்பவர்களுக்கும் அல்லது DVD றெக்கோட்டரில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து DVD யில் உள்ள VOB கோப்புக்களை கணணிக்கு மாற்றி அதில் தவிர்க்க முடியாமல் நிகழ்ச்சிகளுடன் பதிவு செய்யப்பட்ட விளம்பரங்களை அகற்றி ஒரு தரமான DVDஐ தயாரிக்க விரும்புபவர்களுக்கு வேண்டிய ஒரு நேர்த்தியான மென்பொருள்.

றேடியோவில் நாம் Tuning, Fine Tuning செய்வதுபோல் இதிலும் இரண்டு Slider களுண்டு. வெட்டவேண்டிய விளம்பரத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் துல்லியமாக கண்டுபிடிப்பதற்கு இந்த Slider கள் உதவுகின்றன. வீடியோவில் பெரும்பாலும் விநாடிக்கு 24 Frame களாவது ஓடும். ஒவ்வொரு Frame ஐயும் தனித்தனியாக பார்த்து வேண்டியதை அறுவை செய்து கொள்ளலாம். மிக வேகமாக Trimming, Cutting & Joining செய்து முழுமையாக அல்லது ஏதாவது ஒரு பகுதியை சேமிக்கக் கூடிய வசதி இதில் உள்ளது.

தானாக இயங்கி விளம்பரங்களை வெட்டி நீக்கும் வசதியும் உண்டு. பணம் கொடுத்து வாங்க வேண்டும். திறமையுள்ளவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள்லாம். விபரம் அறிய

http://www.videoredo.com/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 129

FreeCell

விண்டோஸ் பொதியுடன் வந்து பிரபல்யமாகிவிட்டது தனியொருவர்க்கான இந்த விளையாட்டு. இளைஞர்களுக்கு பொழுதுபோக்கை தருவதோடு முதியவர்களுக்கு அவர்களின் ஞாபக சக்தியை கூர்மைப்படுத்த உதவுகிறது. பழகிய ஆரம்பநாட்களில் மீண்டும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற தூண்டுதலை தரும். ஆரம்பத்தில் நீங்கள் தோற்றுப்போவீர்கள். போகப்போக வெல்லும் திறமை தன்பாட்டில் வந்து சேரும்.

கிளிக் பண்ணவும் Start -->All Programs-->Games--> FreeCell இப்போது பச்சை நிற பெட்டி ஒன்றை காண்பீர்கள். இடதுகை மேல் மூலையில் Game என்பதை கிளிக்பண்ணி மீண்டும் New Game என்பதை கிளிக்பண்ணவும். இப்போது இடது பக்கமாக 7 கடதாசிப்படி நான்கு வரிசைகளில் (மேலிருந்து கீழ்) 28 ம் அதற்கு அடுத்தாற்போல் 6 கடதாசிப்படி அடுத்த நான்கு வரிசைகளில் (மேலிருந்து கீழ்) 24 கடுதாசியுமாக 52 கடுதாசிகள் முழுமையாக திறந்தபடி காணப்படும்.

வலதுமேல் மூலையில் காணப்படும் நான்கு சதுரங்களையும் Home Cell என்று அழைப்பார்கள். ஒரே இனத்தை சேர்ந்த கடதாசிகளை A,1,2,3,4,5,6,7,8,9,10,J,Q,K என்ற ஒழுங்கின்படி ஒவ்வொரு பெட்டியில் அடுக்கவேண்டும். கடதாசி கூட்டத்தில் நான்கு இனம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே 4 இனத்தையும் இந்த 4 பெட்டியிலும் மேலே கூறப்பட்ட ஒழுங்கின்படி அடுக்கி முடித்தால் நீங்கள் வென்றதாக கருதப்படுவீர்கள். இலக்கம் ஒழுங்காக ஏறுவரிசையாக இருந்தாலும் இனம்மாறி அடுக்கமுடியாது. இந்த Home Cell ல் அடுக்கிய கடதாசியை திரும்ப எடுக்கமுடியாது

இடதுகைமேல் மூலையில் காணப்படும் நான்கு சதுரங்களையும் Free Cell என்று அழைப்பார்கள். இந்த ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொரு கடதாசியை விளையாட்டின் போது தேவைக்கேற்ப வைக்கலாம். திரும்ப எடுத்து அடுக்கு வரிசைக்கோ அல்லது Home Cell க்கோ மாற்றலாம்.

அடுக்கு வரிசையிலும் கடதாசிகளை இடம்மாற்றி அடுக்கலாம். ஆனால் Home Cell லில் அடுக்கியதற்கு எதிர்மாறாக K,Q,J,10......2,A என்ற இறங்கு வரிசையிலும், கலர் மாறியும் அடுக்கவேண்டும். ஒரு சிவத்த கடதாசிக்கு மேல் சிவப்பையோ அல்லது கறுத்த கடதாசிக்கு மேல் கறுப்பையோ அடுக்கமுடியாது. அதாவது ஒரு சிவத்த 8 க்கு மேல் ஒரு கறுத்த 8 ஐ அடுக்க முடியாது ஆனால் கறுத்த 7 ஐ அடுக்கலாம். அதன் மேல் சிவத்த 6 ஐ அடுக்கலாம்.

Home Cell லில் அடுக்கும்போது A யிலிருந்துதான் தொடங்கவேண்டும். ஆனால் அடுக்குவரிசையொன்று காலியானால் இடையிலிருந்தும் தொடங்கலாம். ஆனால் மேற்பந்தியில் கூறப்பட்ட ஒழுங்கு இருந்தால் போதுமானது. விளையாடிப்பாருங்கள்.

அடுக்கு வரிசையில் காணப்படும் 52 கடதாசிகளையும் A,1,2,3,4,5,6,7,8,9,10,J,Q,K என்ற ஒழுங்கின்படி இனம்மாறாது 4 Home Cell லிலும் அடுக்கி முடிப்பதுதான் விளையாட்டின் நோக்கம்

விளையாட்டா? தேவருகு அண்ணை நீங்களுமா? அப்ப உங்களுக்கும் நல்லாத்தான் பொழுதுபோகும். :icon_idea:

  • 1 month later...
  • தொடங்கியவர்

இனையத்தில் Active @Undelete என்ற மென்பொருளை தேடினேன். இப்படி

(Active@_UNDELETE_Enterprise_Edition_v5.5.000_-_BootCD_Windows_PE_2.0_Vista_based_[h33t]_[Original])

கிடக்க கண்டு தரவிறக்கம் செய்தேன்.

activeund55ene1.rar

activeund55ene2.rar

activeund55ene3.rar

இப்படியாக ஏழு rar கோப்புக்கள் கிடைத்தன. அத்தோடு

active_undelete_ene_logo.jpg

active_undelete_win.jpg

என இரண்டு JPG கோப்புக்களும் கிடைத்தன.

இன்னொரு Key உள்ள txt பைலும் கிடைத்தது.

பின்னர் முதலாவது rar பைலை unzip பண்ணியபோது UNDELETE-NET-Setup.exe என்ற பைல் கிடைத்தது (முதலாவது rar பைலை unzip பண்ணியபோது மற்றய ஆறு பைல்களும் இணைக்கப்பட்டு unzip பண்ணுபட்டிருக்கவேண்டும்)

இந்த பைலை இரட்டை கிளிக்பண்ண கம்பியூட்டரில் install பண்ண பார்க்கிறது.

ஆனால் இது BootCD_Windows_PE_2.0_Vista_based என்று தரவிறக்கிய முதலாவது பைல் சொல்கிறது. (மேலே பார்க்கவும்) எந்த வெப்தளத்திலிருந்து தரவிறக்கினேனோ அதிலும் அப்படியே கூறப்பட்டிருந்த்து. [Active@ UNDELETE Professional & Enterprise installation packages contain a CD/DVD ISO image that you can burn to get a bootable CD or DVD with a lightweight version of Windows Vista running in RAM (WinPE 2.0) ]

கேள்வி: அப்படியெனில் முதலாவது rar பைலை unzip பண்ணியபோது iso பைல் கிடைக்காமல் exe பைல் கிடைத்தது. ஏன்?

கிடைத்த exe பைலை BootCD ஆக எப்படி Burn பண்ணிக்கொள்வது அல்லது ஏதாவது converting செய்ய வேண்டிமா?

  • தொடங்கியவர்

பல மணித்தியாலங்கலள் ஆராய்ச்சி செய்து களைத்து, பின்பு கிடைத்த exe பைலை நிறுவி பார்ப்போம் என முயற்சித்த போது தேடியது கிடைத்தது.

முதலாவது rar பைலை unzip பண்ணியபோது UNDELETE-NET-Setup.exe கிடைத்து என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதை இரட்டை கிளிக் செய்தபோது கம்பியூட்டரில் install செய்யவா என கேட்டது. சரி என்ன நடக்கிறது பார்ப்போம் என பொறுத்து பார்த்தேன். Installation wizard தோன்றியது. அதன் பின்பு I accept the agreement என வந்ததிற்கு ஆம் என கிளிக்செய்தேன். அதன் பின்பு நான்கு தெரிவுகள் தந்தது அதில் ஒன்றாக Bootable win CD/DVD ISO image என்று காணப்பட்டது. அதை மாத்திரம் Tick செய்து அந்த image ஐ கணணியில் நிறுவி பின் அதை CD யில் Burn கொண்டேன். இலை மறை காய் ஆக கிடந்ததை கண்டு பிடிக்க பல மணித்தியாலங்கள் செலவழிந்தது.

Edited by E.Thevaguru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.