Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராஜீவ்- கொலை அல்ல, மரணதண்டனை!

Featured Replies

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள்: மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் - காங்கிரஸ் முழக்கம்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு - மார்க்சிஸ்டு முழக்கம்; சகோதர யுத்தம், சர்வாதிகாரி - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேசவிரும்புகிறேன்.

நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது, நடந்தால் வலிக்கிறது, அசைந்தால் வலிக்கிறது. கீறிவிட்டு அதை ஆற்றவேண்டும். யாரும் நாம் முயற்சிக்கவில்லை. நாம் அந்தப்புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? எப்பொழுதும் சொல்வதுண்டு. ராஜீவ் காந்தி கொலையல்ல, மரண தண்டனை, அது கொலை என்ற சொல்லால் சொல்லக்கூடாது என்று ------- யார் அந்த ராஜீவ் காந்தி? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற நான், அதை விளக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறார்களா? அந்த இடத்தில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா, காங்கிரஸ் தலைமையில்? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள்? காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிடமொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப்பார்க்கிறான், இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் காங்கிரசுக்காரர்கள். காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமக்கு, தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஏதும் தடையமே காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழி தீர்மானம் வந்தபோது சரிபகுதி வாக்குகள், இந்திக்கு ஆதரவாக, இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள், காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை அளித்துத்தான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும், நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. இது கள்ள ஓட்டு போல, தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள். இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார், நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசினார் நேரு. பெரியார் சொல்லுவார், முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதியவர். ஆனால் அவர் சொன்னார், நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, 1951-யில் சொன்னவர், 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று. பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள் என்று கடிதம் எழுதியவர்.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் ------------ 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதியவர். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

நம்ம ராஜீவ் காந்தியைப் பற்றிப் பேசுவதானால் சொல்லுவோம். ராஜீவ் காந்தி யார்? ஒரு வேளாண்மை செய்பவனுக்கு, விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் அவன் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிர்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக்கொள்வோம், ராஜீவ் காந்தியும் எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

அல்லது அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? -------- என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டார். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்ப்போம், கட்டபொம்மன், சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று சொல்லுவான். இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமாக அல்ல. அறநெறிக்கு புறம்பானவன் என்பது ஹர்சரத் சிங் என்கிற இந்திய நாட்டின் படைத் தளபதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா(அல்லது இன் சிறீலங்கா)’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன, நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகம் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம், அதைப் படித்துப்பாருங்கள். அதில் பல செய்தி, அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார். செப்டம்பர் 16-ஆம் நாள் அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். 14-க்கும் 15-க்கும் இரவில் சந்திக்க வருகிறார், சந்திக்கப் போகிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்குச் சொல்கிறான், அந்தச் செய்தியை தொலைபேசியில் சொல்கிறான். இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு என்று சொல்கிறான். அவர் மறுக்கிறார். நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் மேல் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் சொல்கிறார், தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார், மறுத்துவிடு என்று சொல்லிவிடு, முடியாது, அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு முடியாது என்று சொல்கிறார்,

இது நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது என்று அவன் சொல்கிறான். எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். நூல் வந்திருக்கிறது. இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. எனில் அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் அப்போது சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான், அவரை கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்.

ராஜீவ் கொலைக்கும் அப்படி பரிந்துரை செய்கிறது ஜெயின் ஆணையம். ஜெயின் ஆணையம் சொன்ன பரிந்துரையின் இடைக்கால அறிக்கை வந்தவுடன், முன்பு இருந்த தி.மு.க அரசையும் குற்றம் சொல்கிறது இவன் தான் ராஜீவ் காந்தி கொலைக்கு என்று, தி.மு.க. அமைச்சரவையில் இருந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்று காங்கிரசு சொன்னது. தலைமை அமைச்சர் அவர்களை நீக்க முடியாது என்று சொன்னார், அந்த இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் அமைக்கப்பட்ட ஆணையம் குற்றம் சொன்ன ஒருவரை தனது கட்சிக்கு பொது செயலாளராக நியமிக்கிறார். அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். அறிக்கையையே வைக்கவில்லை நாடாளுமன்றத்தில். தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி. ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போனவன், இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இவர் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்லத்தான் பயன்பட்டது. அந்த அமைதிப்படை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் 22 ஆண்களுக்கு பின்னடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் சொல்லுகிறார். சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம். இந்த காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக உயிர்தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள்? இது வரை! இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்திய ------ கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா? சீன நாடு அங்கே கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என்னாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தாய், இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நலனுக்கெதிராக நீ இருந்தாய். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய், நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், காரணம், ஒரு ராஜீவ் காந்திக்கு வருகிற ஏக்கம், ஆறாயிரம் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே, ஆயிரம் பெண்களுக்கு கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே, வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லி சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவ்வளவு கூட்டு இருந்து, இவ்வளவு நாள் கட்சி நடத்துகிறாயே இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். அவர் மறப்போம் மன்னிப்போம், தன்னுடைய மகனைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் நிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம், ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் ஏற்று பிரபாகரன் சொன்னார், ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம், இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன் என்று சொன்னார். நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா? இப்படிச் சொல்லித்தானே ஆயுதங்களை கொடுத்தார், தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார், ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். இரக்கம் இருக்கிறவன், சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார், முத்துக்குமார் தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அறத்திற்கே அன்பு சார்ப என்ப என்று திருக்குறளை நினைவூட்டுகிறார், வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம். அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்,

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா! நீ சொல்லுகிறது எல்லாம் எவ்வளவு, இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? பேசுகிறான். இலங்கையில் அடித்தவன் ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், கப்பற்படை வீரன் இந்நேரம் செத்துப் போயிருப்பான். அவன் கேட்டான் சொன்னான், நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது என்று சொன்னான். கேட்டாங்க அவனை, சொன்னான், அதை குற்றமென்று சொல்லவில்லை. ஆனால் அங்கே செத்திருப்பான் அல்லவா, இவங்க சொல்கிறான் அல்லவா, நாங்கள் ஆயுதம் கொடுக்கவில்லை என்றால் ஈரான் கொடுத்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும், இவன் கொடுக்கிறானோ கொடுக்கவில்லையோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் சொல்கிறோம், அவன் கனமாக அடித்த்திருந்தால் கொன்று இருப்பான், இங்கே கொல்லாமல் விட்டிருந்தால் பாகிஸ்தான்காரன் கொன்றிருப்பான், பஞ்சாப்காரன் கொன்றிருப்பான் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான் என்று சொல்கிறாயே, நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து அவன் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்க

தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியர்கள் ஏன்றுமே ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை இந்தியராகவே கருதுவதில்லை.

உண்மை எல்லாம் சொல்லக்கூடாது அதுவும் இந்தியாவில் இருந்து கொண்டு சொல்ல கூடாது, அதுவும் தமிழன் எல்லாம் சொல்லப்படாது... கொளத்தூர் மணி அண்ணையையும் தூக்கி உள்ளை போடச்சொல்லி சோனியா காங்கிரஸ் காறர் கூவப்போறாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எல்லாம் சொல்லக்கூடாது அதுவும் இந்தியாவில் இருந்து கொண்டு சொல்ல கூடாது, அதுவும் தமிழன் எல்லாம் சொல்லப்படாது... கொளத்தூர் மணி அண்ணையையும் தூக்கி உள்ளை போடச்சொல்லி சோனியா காங்கிரஸ் காறர் கூவப்போறாங்கள்...

அதுக்கு முதல் அவற்றை காரை அவற்றை வீட்டில வைச்சே எரிப்பாங்கள். அதுக்குப்பிறகுதான் கைதும், மயிரும் மண்ணாங்கட்டியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எல்லாம் சொல்லக்கூடாது அதுவும் இந்தியாவில் இருந்து கொண்டு சொல்ல கூடாது, அதுவும் தமிழன் எல்லாம் சொல்லப்படாது... கொளத்தூர் மணி அண்ணையையும் தூக்கி உள்ளை போடச்சொல்லி சோனியா காங்கிரஸ் காறர் கூவப்போறாங்கள்...

இரவு முழுவதும் போலீசார் முயற்சி:இன்று காலை கொளத்தூர் மணி கைது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4257

பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கைது

சேல‌ம், திங்கள், 2 மார்ச் 2009( 10:47 IST )

தே‌சிய ஒருமை‌‌ப்பா‌ட்டு‌க்கு‌ம், பொது அமை‌தி‌க்கு ப‌ங்க‌ம் ‌விளை‌வி‌‌க்கு‌ம் வகை‌யி‌ல் பே‌சியதாக கூ‌றி பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை காவ‌ல்துறை‌யின‌‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

கடந்த மாத‌ம் 26ஆ‌ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அவ‌ர் பேசியதாக ‌திண்டுக்கல் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ந்த நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளன‌ர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவரை கைது செ‌ய்த கா‌வல‌ர்க‌ள் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றனர்.

கொளத்தூர் மணி கைது செய்ததை அறிந்த பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோ‌ர் அவரது வீட்டு முன்பு திரண்டு காவ‌ல்துறையை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

http://tamil.webdunia.com/newsworld/news/t...090302008_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை,நீதி,நியாயம்,தர்மம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கணும் வெளியில சொல்லக்கூடாது,இந்தக்காலம் கலிகாலம் மறந்திடாதேங்கோ

பேருக்குதான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு... மற்றும் படி கொடுங்கோல் ஆட்ச்சிதான்....

பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி இன்று கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லி்ல் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கொளத்தூர் மணி, இந்திய இறையாண்மைக்கும், சட்டங்களுக்கும் விரோதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று மேட்டூர் சென்ற திண்டுக்கல் போலீஸார், கொளத்தூர் மணியை அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்து திண்டுக்கல் கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கொளத்தூர் மணி சிறையில் அடைக்கப்பட்டார்.

-thatstamil-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.