Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகெங்கும் பலமான மக்கள் ஆதரவு பெற்றிருக்கும் அமைப்பு எவ்விதம் தடை செய்யப்பட முடியும் ? - சர்வதேச ஊடகங்கள் வியப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் ஆரம்பித்து, உலகெங்கும் விரிவு பெற்றுள்ள ஈழத்தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் கண்டு சர்வதேச மீடியாக்கள் வியப்படைந்துள்ளன. உலகெங்கும் ஒரு கொடியின் கீழ் பல்லாயிரக்கணக்கில் திரளும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பு எவ்விதம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருத முடியும், எனக் கேள்வி எழுப்பியுள்ளன. உணர்வெழுச்சியுடன் உலகெங்கும் திரண்ட தமிழ்மக்களின் போராட்டங்களையும், அதன் பின் பொதிந்திருக்கும் உண்மைநிலையையும் சர்வதேச மீடியாக்கள் தங்கள் பதிப்பக்களில் பகிரத் தொடங்கியுள்ளன.

ஆரம்பிக்கபட்டு மூன்று நாட்களாகியும். ஆரம்பத்திலிருந்த அதே உணர்வெழுச்சியுடன் தொடரும் போராட்டங்கள் கண்டு உலக மக்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன், இப் போராட்டம் குறித்து அறியும் ஆவலும் பெற்றுள்ளார்கள். மீடியாக்களின் முக்கியத்துவம் பெறும் காரணத்தினால் பல அரசியற் பிரமுகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இவற்றைவிட இப்போ முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் அவதானிக்கப்படும் மேலும் பலவிடயங்கள் உலக மக்களையும், மீடியாக்களையும், கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்திற்கான அழைப்பு ஏதும் இன்றி தன்னெழுச்சியாக மக்கள் தொடர்ந்து கலந்து கொள்வதும், இதற்கான ஏற்பாட்டாளர்கள் என்று சொல்வதற்கு அமைப்பாக யாரும் இல்லாத போதும், மாணவர்கள் இயல்பாக ஒருங்கிணைந்து செயற்படுவதும், இருபத்தினான்கு மணிநேரமும் தொடர்ந்து அவர்கள் இயங்குவதும் மிக முக்கியமான அம்சமாகும். மேலும், இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்த அனுபவமேதும் பெற்றிருக்காத இளைய சமூகம், போராட்ட நிகழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப துரித கதியில் ஒழுங்கமைந்து செய்ற்படுவதும், காவற்துறை அதிகாரிகளையும், ஊடகங்களையும் கவர்ந்திருக்கிறது.

இலண்டன் பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் போராட்டத்தை ஸ்கை நியூஸ் அவ்வப்போது நேரலை செய்து வருகிறது.

அதனை இந்த இணைப்பில் காணலாம்

மக்கள் போராட்டங்கள் குறித்த செய்திகள் இங்கே தொகுக்கப்படுகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிக்கேட்டுக்கொண்டே இருக்காமல் 'தடையை நீக்குங்கள்"

இப்படிக்கேட்டுக்கொண்டே இருக்காமல் 'தடையை நீக்குங்கள்"

அதற்கு, நாங்கள் தொடர்ந்தும் தெருவில் நிற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் ருச்சியவும் சீனாவும், ஐநா பாதுகாப்பு குழுவில் இலங்கை பற்றி விவாதிக்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணமாக அவர்கள் சொன்னது, இது ஒரு உள்நாட்டு பிரச்னை . இதனால் சர்வதேசத்துக்கு எந்த அச்சுரதலும் இல்லை என்பது தான். அவர்களின் நோக்கம் இலங்கை பிரச்சனையில் ஐநா தலையிட கூடாது என்பதாக இருந்தாலும், அவர்களின் கூற்று படியே பார்த்தாலும் , சர்வதேசத்துக்கு எவ்வித அச்சுருதலும் தராத புலிகள் இயக்கத்தை சர்வதேச நாடுகள் தடை செய்வது எந்த விதத்தில் நியாயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு, நாங்கள் தொடர்ந்தும் தெருவில் நிற்கவேண்டும்.

அதைக்கூடச்செய்யாவிட்டால் பிறகு நாம் எல்லாம் தமிழர்கள் என்று சொல்வதே வீண் !

உலகெங்கும் பலமான மக்கள் ஆதரவு பெற்றிருக்கும் அமைப்பு எவ்விதம் தடை செய்யப்பட முடியும் ? - சர்வதேச ஊடகங்கள் வியப்பு

யார் வியப்படைந்தார்கள் என்று சொன்னால் அதாவது எங்கு உந்தச் செய்தி வந்தது என்று சுட்டிக்காட்டினால் நல்லது. உப்படித்தான் காலாகாலமாக அரைவேக்காடுகள் சுயஇன்பம் கண்டு அந்த சுயஇன்ப மாயைக்குள்ள சனத்தையும் சேர்த்து வைச்சிருந்தவை. 4tamilmediaவும் தாங்க சுய இன்பம் காணேல்ல எண்டு நிரூபிப்பினம் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் ஒன்றுசேர்வதுகண்டு தமிழன எதிரியானவன் மிரட்சியடைகிறான். இவனது அண்மைக்கால உளரல்களிலிருந்தே அவ்விடையம் வெளிப்படுகின்றது. இதனுடன் புலமபெயர் சமுதாயம் திருப்தியுற்று எதிர்காலத்தில் எம்மைநாமே வியந்து காலப்போக்கில் நாம் வாழாவிருந்துவிடுவோம் எனும் கணிப்பதனில் உலக வல்லரசுகளது ஊதுகுழல்களாகிய செயதித்தொடர்வு சாதனங்கள், முருகதாஸ் அவர்களது ஈகையை செய்தியையே வெளிவிடாது வாழாவிருந்துவிட்டு, வேடிக்கை பார்த்து விட்டு இப்போது மட்டும் கரிசனையுள்ளோர் போல் பிராந்திய வல்லரசுகளில் காலஅட்டவணைக்கேற்றாற்போல் கருத்துகளை வெளியிடுகிறர்கள். இவர்களது மயக்கும் வார்தைதணை நம்பி கடந்தகாலம் போல் கள்ளுண்ட வண்டுகளாக ஓய்து கிடந்தோமானால் ஈழத்தில் ஓர் தமிழுயிரும் மிஞ்சாதன்றோ!

பிரித்தானியா, பிரிந்தே இருந்து முழுமையான உரிமைகளுடன் வாழ்ந்துவந்த எம்மை எமது விருப்பம் அறியாது இணைத்து விட்டே நாடேகினர். இருமனங்களமறியாது இணைத்த நீயே இப்போது பிரித்துவிடு என உலகின் ஜனநாயகத்தை உதாரணமாகக் கொண்டதும், உலகின் பழமைவாய்த பாராளுமன்ற அமைப்பானதுமான பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தமிழினம் வோண்டி நிற்கின்றது. இப்பெரெளுர்ச்சியை அடியொற்றி உலகில் எங்கெல்லாம் வாழ்கிறாணே அங்கெல்லாம் தமிழன் வெகுண்டெளும் நேரம் இப்போது வந்து விட்டது. இதன் முடிவுரையாக தமிழீழத்தின் மலர்வு எமை அண்மித்து விட்டது. இப்போது இறுக்க மூடப்பட்டிருந்த கதுவுகள் ஒவ்வென்றூக திறபட ஆரம்பித்து விட்டது. இத்துடன் ஓய்து விடாதே தமிழா.... புலம்பெயர் தேசத்தில் நீ செய்கின்ற புரட்சி யாழ்குடாநாட்டிற்கு எப்போது பரவுகிறதோ, அப்போது தான் நீ வெற்றி பெறுவாய் என்பதை நீ எண்ணிக்கொள்.

மொட்டைத்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாய் நீ நினைத்துவிடாதே எமது விடுதலை விருட்சத்தின் பெரும் நெருப்பு அங்கேதான் கனன்று கொண்டிருக்கின்றது. அங்கு ஊமையாக உறங்கிக்கிடக்கும் எரிமலையை பிரளயமாக மாற்றும் பூகம்பமாக நீயே இருக்கப் போகின்றாய். பல்லாயிரக்கணக்கான மாவீரர்களது ஆகுதீகள் இன்னமும் அணைந்து விடவில்லை. புலம்பெயர் தேசத்தில் இருந்து நீகொடுக்கும் புரட்சிப் பூவை கரத்தினில் பற்றிட அவை காத்திருக்கின்றன.

யாழ்மண்ணில் தான் தமிழீழத்தின் வாயிற்கதவு திறந்து கொள்ளும். அதுமட்டிற்கும் புலம்பெயர் தேசத்து தமிழுறவே ஓய்துவிடாதே நல்லதேரு புலரும் வேளையில் நானும் வருவேன் லண்டன் மாநகரம் நோக்கி, அவ்வேளையில் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமழினமும் என்னுடன் சேர்ந்தேவருவார்கள்.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பலலட்சம் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து தொடர்சியாக தமது போராட்டத்தினை முன்னெடுக்கம் நாள் அண்மித்து விட்டது. எமது தேசியத்தை முதன்முதலில் ஐரோப்பாவில் தடைசெய்தது பிரித்தானியாவே ஆகவே தொடங்கிவைத்தவன் எவணே அவனே இப்புதிரின் முடிச்சினையும் அவிழ்த்து விடவேண்டியவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வியப்படைந்தார்கள் என்று சொன்னால் அதாவது எங்கு உந்தச் செய்தி வந்தது என்று சுட்டிக்காட்டினால் நல்லது. உப்படித்தான் காலாகாலமாக அரைவேக்காடுகள் சுயஇன்பம் கண்டு அந்த சுயஇன்ப மாயைக்குள்ள சனத்தையும் சேர்த்து வைச்சிருந்தவை. 4tamilmediaவும் தாங்க சுய இன்பம் காணேல்ல எண்டு நிரூபிப்பினம் என நம்புவோம்.

நண்பரே!

நேற்றைய நிகழ்வுக்ள் தொடர்பாக பிபிசி , சிஎன்என், ஸ்கை நியூஸ், உட்பட மேலு பல சர்வ தேச ஊடகங்கங்களில் வெளியான செய்திகளி்ன் தொகுப்பாக எழுதப்பட்ட செய்தியது. நாம் வாசித்த அந்தச் செய்திகளிலெல்லாம் இந்த விடயம் தொனித்திருந்ததையே அவ்வாறு குறிப்பிட்டிருந்தோம். நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக இதற்கு குறிப்பாக ஒரு ஊடகத்தை அடையாளங்காட்டுவதிலும் பார்க்க நாம் வாசித்த ஊடகங்கள் சிலவற்றின் இணைப்புக்களையும், வாசகங்களையும், இங்கு உதாரணங் காட்டுவது பொருத்தம். இவற்றுக்கு மேலாகவும் பல ஊடகங்களில் இந்தத் தொனிப் பொருள் இருந்தது என்பதும் உண்மையே. உதாரணத்திற்கு தற்போது தரக் கூடியவை இவை மட்டுமே.

http://www.amnation.com/vfr/archives/012930.html - view from the right

"Organisers of the demonstration failed to give notice--required by law--and protesters have been carrying the emblem of the Tamil Tigers, banned in the UK and the EU as a terrorist organisation. But there have been no arrests so far, Scotland Yard said.

A police spokeswoman added: 'Police are continuing to attempt to negotiate with the organisers of the demonstration to facilitate their protest and to minimise disruption to all of London's communities.'

http://www.independent.co.uk/news/world/as...ue-1665261.html - enfield indipendent

"The Tigers still receive significant support from outside Sri Lanka "

http://www.thestar.com/News/GTA/article/614201 = The Star

"Support for the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is riding a wave of new militancy among young Tamils and second-generation Tamil Canadians as the civil war carnage escalates in the Tamil region of northern Sri Lanka."

இதைவிட வேறு சில ஊடகங்களிலும், சிங்கள இணைய உரையாடற் தளங்களிலும், இந்த ஆச்சரியம் எதிர்மறையாகக் கூட எழுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த வியப்பு என்பது ஒன்றுதானே..? வஞ்சிக்கப்பட்ட எம் இனத்துக்கு நம்பிக்கை ஊட்டுவதாக நமது ஊடகங்கள் இருக்க வேண்டுமென்பது நமது கொள்கையும் விருப்புமா உள்ளது. அதற்காக பொய்புனைந்து தரும் எண்ணம் நிச்சயமாக இல்லை.

நன்றி.

4tamilmedia Team

Edited by forlov

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடே...

இங்க எழுதற அளவுக்கு உங்களுக்கு எல்லாம் நேரம் கிடைக்குதா.

மன்னியுங்கோ மக்களே..

எனக்கு நேரமில்லை...இதோ இயற்கை கடமைகளை முடித்து விட்டு தேசியக் கடமைக்காக வீதிக்குப் போகப் புறப்பட்டு விட்டேன்.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து தேசிய கொடியின் தடையை அகற்ற வழி செய்வோம்.. மிகுதி தன்பாட்டில் நடக்கும்..

எம்மினத்தை இரசாயன நச்சுக்களால் அழித்து ஒழிக்கவெளிக்க பேய்களின் முகமூடிகளைக்கிழிபோம்..

மிகுதி மக்களை காப்பாற்ற இன்றே செயல்படுவோம்..ஒற்றுமையாக....

எமது போராட்டத்தின் விளைவு எல்லா ஊடகங்களும் கண்ணைத்திறந்துள்ளன.. இது எமது வெற்றியின் ஒரு படிக்கல்..

எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லாவகை திட்டங்களையும் செயல்படுத்துவோம்...

இது தான் கடைசி சந்தர்ப்பம்... நழுவ விட வேண்டாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.