Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள்

Featured Replies

களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள்.

சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால்... பல உண்மைகளை புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகள் தாம் இவ்வாறான இக்கட்டான நிலைமையை அடைவதற்கு ஒருபோதும் தாங்களாகவே இடமளிப்பவர்கள் அல்லர். புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தினை பூநகரிக்கு முன்பாகவே தடுத்திருக்க முடியும். தமது பெருநிலப்பரப்புகளை தக்கவைத்து இருந்திருக்கவும் முடிந்திருக்கும். ஆனால் அதற்கான மிகப்பலமான எதிர்ப்புக்களை அவர்கள் காட்டியிருக்கவில்லை. அப்படியிருக்க, புலிகள் படையினரை இவ்வளவு தூரத்திற்கு முன்னேற அனுமதித்தது ஏன்?

இக்கேள்விக்கு இராணுவ ரீதியிலான பல பதில்கள் இருந்தாலும், அரசியல் ரீதியிலான காரணங்களே அடிப்படையாக இருக்கின்றதாக புலப்படுகின்றது.

ஏனெனில், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகள் அரசியல் நகர்வுகளிலேயே சிரத்தையெடுத்து வந்திருந்தனர். முன்னர், சந்திரிக்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாமாக விலகி மூன்றாம் கட்ட ஈழப்போருக்குள் புலிகள் நுழைந்ததனால் சர்வதேசத்தின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தனர். அதே தவறை புலிகள் இம்முறையும் இழைத்திருக்கவில்லை. மகிந்த அரசுதான் சமாதான உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தாங்கள் அதை மதித்து நடந்து வருவதாகவே புலிகள் கூறிவருகின்றனர்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். தமிழீழ நிலப்பரப்பில் எழுபது சதவீதமான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தினைக் கூட மீளக் கைப்பற்றும் வல்லமையை பெற்றிருந்தனர் புலிகள்.[அப்போதும் அதை தடுத்திருந்தது இந்திய அரசுதான்] இவ்வாறு மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்த புலிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரை முடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும்போது சிங்கள அரசை நம்பிப் போயிருக்கவில்லை. சர்வதேசம் தங்களுக்கு நியாயமான தீர்வொன்றை தருவதற்கு முன்வரும் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள்.

ஆனால் நடந்தது தலைகீழாகவே இருந்தது. சிறியளவிலான அதிகாரப்பகிர்வுக்குக் கூட சிங்கள அரசு தயாராய் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க, மறுபக்கத்தில் புலிகளை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்கள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு சர்வதேச நாடுகள் பலவும் உடந்தையாக இருந்தன. அதில் முக்கியமாக, கருணாவை புலிகளிலிருந்து பிரித்ததில் இந்தியாவின் "றோ" அமைப்பு பிரதான பங்கு வகித்ததை குறிப்பிட முடியும். ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு புலிகளை தடை செய்திருந்தது. தமிழர் தரப்பு சர்வதேசத்திடமிருந்தும் முற்றுமுழுதான ஏமாற்றத்தையே கண்டிருந்தது. மான்புமிகு தியாகங்களினால் ஈட்டப்பட்ட மாபெரும் இராணுவரீதியான வெற்றிகள் கூட தமிழருக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தர முடியாமல் வீணாகிப் போயின.

எனவேதான் , நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகளின் குறி இராணுவரீதியான வெற்றிகளிலிருந்து விலகி "சர்வதேச ஆதரவு" என்ற ஒன்றின் மீதே குறியாய் இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான விளைவுகளாய்தான் தற்போதைய நிலைமைகள் தொடர்கின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப்படுகின்ற விடயங்கள் அனைத்துமே உண்மையிலேயே புலிகளின் இராஐதந்திர காய்நகர்த்தல்களுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துவரும் முக்கியமான அம்சங்கள்.புலிகள் தமது இராணுவ வெற்றிகளைவிட சர்வதேச ரீதியிலான இராஐதந்திர வெற்றிகளே தமது இலட்சியமான தமிழீழம் எனும் தனிநாடு மிகவிரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இம்முறை தமிழர்தரப்பு தமது களத்தினை பிரதானமாக சர்வதேசத்திலேயே தொடங்கியிருக்கின்றது. "மக்களின் உணர்ச்சிமிக்க எழுச்சிகள் எப்போதும் இழப்புக்களினால் ஏற்படும் தாக்கங்களிலிருந்தே உருவாகும். இழப்புக்கள் அதிகமாகும் போது அது புரட்சியாகவும் மாறும்". அதற்கு ஏதுவாக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் அமைந்து வருகின்றன. புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் பின்வாங்கல்களை தமது மாபெரும் வெற்றிகளெனக் கருதி வெற்றி மமதையில் கண் மண் தெரியாமல் அப்பாவி மக்களை கொன்று குவித்து மிகப்பெரும் இனவழிப்புப் போரையே சிங்கள அரசு நடாத்தி வருகின்றது.

அகதிகளாகி அல்லற்படும் மக்களை அநியாயமாக கொன்றொழித்து வருகின்றது. அம்மக்களின் துயரங்களை வாயினால் சொல்ல முடியாது. எழுத்துக்களினால் வரித்திட முடியாது. காட்சிகளால் காண்பித்துவிட முடியாது.அந்தவலிகளை அந்த இடத்திலிருந்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், உலகத்தமிழருக்கு அவ்வலியின் கொஞ்சமேனும் புரிய ஆரம்பித்தது. வீறுகொண்டு பொங்கியெழுந்தார்கள். தற்போது பாதுகாப்பு வலயம் என்ற சிங்கள அரசின் மரணப்பொறிக்குள் அகப்பட்டிருக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேலான தம் உறவுகளை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆக்ரோஷமாய் கிளர்ந்தெழுந்திருக்கின்றார

தமிழீழம் மலர இந்தியாவில் புலிகள் மீதான தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்..... அதற்க்கு தமிழ்நாட்டு தமிழர்கள் காலமறிந்து ஒன்றுபட வேண்டும்....

இலையேல் போராட்டம் இன்னும் பல வருடங்கள் நீண்டு செல்லும்.....

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகளுக்கு பெரும் கவசமாக விளங்கும் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனுப்புவதன் மூலம் தம்மை தனிமை படுத்துபவர்களாக தான் தோன்றுகிறது. உ+மாக யாழ்ப்பாணத்தை எடுத்தால் புலிகள் கால் பதிப்பது எவ்வளவு கடினமானது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். இது இந்திய, இலங்கை இராணுவ பலத்தால் புலிகளை இலகுவாக அழிக்க வழி கோலும் போல உள்ளது. இது எனது தனிப்பட்ட ஆதங்கம். கட்டுரையாளர் விடை தருவாரா?

இந்தியா எமக்கு ஒரு போதும் உதவ போவதில்லை. தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் எமது நேச சக்திகள். இதுவும் எனது தனிப்பட்ட கருத்து.

புலம் பெயர்ந்த நாடுகளில் இவ்வளவு போராட்டம் நடாத்தியும், கொத்து கொத்தாக மக்களை கொல்லப்பட்டும் உள்ள நிலையில் ஐ.நா போன்ற அமைப்புக்கள் இன்னும் புலிகளை ஆயுதத்தை போட சொல்வது எதனை காட்டுகிறது.

புலிகள் அழிந்தால் எமது விடுதலைப் போராட்டமும் முடிவுக்கு வரும். இன்னும் சில வருடங்களில் எமது இனம் எமது நாட்டில் இருந்த அடிச்சுவடு கூட இராது

உறவுகளே! ஓயாத அலைகள்-3 இன் மூலம் பெற்ற வெற்றிகள் தமிழருக்கான தீர்வை பெற்றுத்தரவில்லை என்பது உண்மை. அவ்வெற்றிகள் வீணாகிப் போனாலும், தோல்விகள் இழப்புக்கள் என கருதப்படும் இன்றைய நிலைமைகள் நமக்குச் சார்பான விளைவுகள் பலவற்றினை உருவாக்கப் போகின்றது என்பது திண்ணம்.அதனை இப்போதே உணர முடிகின்றது. அன்று சர்வதேசத்தில் ஏற்படாத சலசலப்பினை இன்று அவதானிக்க முடிகின்றது.கலங்கித் தெளியும் அனைத்தும்.

களங்களுக்கு ஏற்றாற்போல்தான் போர்வடிவங்களும், போரிடும் முறைகளும், வியூகங்களும் மாறி மாறி அமையும். யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தினைப் போலுள்ள மற்றைய பிரதேசங்களுக்குமான வியூகங்கள் , போர்முறைகள் நமது திறனுக்கு அப்பாற்பட்டு நமது தலைமையினால் திட்டமிடப்படும்.

ஐந்து பேருடன் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதே யாழ்ப்பாணத்தில் இருந்து, வளர்ந்து இன்று இவ்வளவுக்கு உலகறிய திகழ்கின்றது.

ஆரம்பநிலைக்கு போனாலும் அழிய மாட்டோம்.

இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து போராட தயராய் இருக்கின்றது [தன்மானம் இழக்காத] தமிழினம் .

கவலை வேண்டாம் உறவுகளே!

தர்மந்தன்னை சூது கவ்வும், பின்னர் தர்மம் வெல்லும்!!!

Edited by பருத்தியன்

இந்தவிடயம் உங்களால் நன்கு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது பருத்தியன். கடந்தகால விடுதலைப்புலிகளின் வெற்றிகள் யாவும் பயங்கரவாதமாகவே காட்டப்பட்டன. ஆனால் இன்றைய அரச பயங்கரவாதம் விடுதலைப்புலிகளின் பின்னடைவுநிலை ஓரளவாவது எமது இனத்தின்பக்கம் பார்வையைத் திருப்ப வைத்துள்ளது.

ஆனாலும் இன்னமும் முழுஅளவிலான பரிதாபத்தை அல்லது ஈடுபாட்டை அதுகாட்டுவதற்குப் பின்னிற்கிறது. காரணம் கடந்தகால நிகழ்வுகளே. என்ன நடக்கும் என்று தீர்மானித்து தமது செயற்பாட்டை நடத்தம் வல்லாதிக்க சக்திகள், அழிவைத் தவிர வேறெதுவும் நடைபெறாததைக் கண்டு திகைத்து நிற்கின்றன. மக்களின் அழிவிற்காகவே தாம் துணைநிற்கின்றோம் என்பதை அவை இப்போது ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து போராட தயராய் இருக்கின்றது [தன்மானம் இழக்காத] தமிழினம் .

ஆயிரம் வருடமா..? இப்படியே போனால் ஆறு வருடத்தில் எம்மினம் தாயகத்தில் இருக்காது.

ஏற்கனவே பெருந்தொகையான மக்கள் தமிழீழ பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டார்கள் (50% இலும் அதிகம். (1983-90 காலப்பகுதியோடு ஒப்பிடும் போது)). வன்னி மக்களும் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டார்கள். சிங்களக் குடியேற்றங்கள் இனி சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். முஸ்லீம்களின் இனப்பெருக்க விகிதம் சொல்லி வேலை இல்லை. எனவே விடுதலைக்கு தளம் அமைத்துக் கொடுக்கவேண்டிய மக்களின் எண்ணிக்கை பலம் மிகக்குறைந்து விட்டது. யாழ்ப்பாண மக்களில் விடுதலைக்கு முனைப்பாகச் செயற்பட்ட பலரை இராணுவமும் ஒட்டுக் குழுக்கழும் கொன்றொழித்துவிட்டன. மிகுதி இருப்பவர்களில் பலர் பயந்தவர்களாகவும் விடுதலை உணர்வற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். தென் தமிழீழ மக்கள் கருணா பிரிவின் பின் மிக உடைந்து ஏதோ நிம்மதியா வாழ்ந்தாச் சரி என்னும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

ஆக புலத்தில் மட்டுந்தான் எழுச்சி கொண்டு நிற்கின்றார்கள். ஆனால் என்னதான் புலத்தில் எழுச்சி கொண்டு நின்றாலும் போராடும் நிலத்தில் இருப்பதுபோல் வராது.

எனவே இலக்கை அடைவதில் ஏற்படும் காலதாமதங்கள் தாயகத்தில் எம்மினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும்.

Edited by காட்டாறு

நீங்கள் சொல்லுவது சரி....தற்போதைய சூழ்நிலையில் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உலகே! உனக்கு கண்ணில்லையா? எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா??

உலக மக்கள்தான் மக்களா??? தமிழீழ மக்களென்ன கற்களா???? "

எந்த ஒலிப்பேளையில் இடம்பெற்ற பாடல் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது உங்கள் யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருக்கிறதா?

சிநேகிதன்! நீங்கள் இந்த இணைய இணைப்பிற்கு சென்றீர்களானால் இந்தப் பாடலை இலகுவாக தரவிறக்கம் செய்யலாம். நன்றி.eelam songs

go 2 the page then click the Eelam songs -> Eelam songs (collections)

in there 19th song.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகளுக்கு பெரும் கவசமாக விளங்கும் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனுப்புவதன் மூலம் தம்மை தனிமை படுத்துபவர்களாக தான் தோன்றுகிறது. உ+மாக யாழ்ப்பாணத்தை எடுத்தால் புலிகள் கால் பதிப்பது எவ்வளவு கடினமானது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். இது இந்திய, இலங்கை இராணுவ பலத்தால் புலிகளை இலகுவாக அழிக்க வழி கோலும் போல உள்ளது. இது எனது தனிப்பட்ட ஆதங்கம். கட்டுரையாளர் விடை தருவாரா?

இந்தியா எமக்கு ஒரு போதும் உதவ போவதில்லை. தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் எமது நேச சக்திகள். இதுவும் எனது தனிப்பட்ட கருத்து.

புலம் பெயர்ந்த நாடுகளில் இவ்வளவு போராட்டம் நடாத்தியும், கொத்து கொத்தாக மக்களை கொல்லப்பட்டும் உள்ள நிலையில் ஐ.நா போன்ற அமைப்புக்கள் இன்னும் புலிகளை ஆயுதத்தை போட சொல்வது எதனை காட்டுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=56994

உங்கள் ஆதங்கத்திற்குரிய பதில் இங்குள்ளது!

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.