Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க மிச்சிகனில் தமிழர்களின் அதிரடி போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது கவனயீர்ப்பு நிகழ்வினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்ததால், சிங்களவர்களுடைய வெற்றிவிழா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

‘Sinhala Terror Government,’

‘Rajapakse a war criminal,’

‘President Obama, help the Tamils,’

‘UN, save the Tamils,’

‘LTTE, our freedom fighters,’

‘Prabhakaran, our national Leader,’

‘Media break the silence'

ஆகியவாறு கோஷங்கள், சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தும் முகமாக உரக்க கோஷங்களை எழுப்பியபடி இவ் ஆர்ப்பாட்டத்தினை தமிழ் மக்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது எழுப்பட்டு பிற மக்களின் கவனத்தினை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினால் இங்கு நடைபெறவிருந்த சிங்கள மக்களினால் மேற்கொள்ளப்படவிருந்த வெற்றிவிழா இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.4tamilmedia.com/www2/index.php/...0-09-39-41.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திடீரென்று ஒழுங்கு செய்யப்பட்டதென்றாலும் சிங்களவனின் வெற்றிக்கொண்டாட்டத்தை நிறுத்திய எங்கள் உறவுகளுக்கு மிக்க நன்றிகள். இப்படியாக சிங்களவனின் அனைத்து பரப்புரைகளையும் முடக்குமளவுக்க எங்கள் உறவுகள் இப்ப ஒன்றாக சேர்ந்துள்ளது போல் என்றைக்குமே ஒன்றாக இருக்கவேண்டும். விலகியிருப்போரும் இனிவரும் போராட்டங்களில் சேரவேண்டும் இது எங்கள் கடைசித்தருணம்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கந்தப்பு பங்கு இவ் ஊர்வலத்தில் பங்கு பற்றியதாகவும் 20 சிங்களவர்கள் வரையில் கலந்து கொண்டதாகவும் எம்மவர் 500 பேர் வரையில் கலந்து கொண்டு எமது கோசங்களை எழுப்பினர். முக்கியமான விடயம் சிங்களவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்த ஊடக பிரிவினர் எமது ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்தனர். நன்றி சிங்களவர்களே இப்படி தொடர்ந்து செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். :rolleyes:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது கவனயீர்ப்பு நிகழ்வினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்ததால், சிங்களவர்களுடைய வெற்றிவிழா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி உறவுகளே .......

மிக்சிகனிலும் இன்னும் கொஞ்ச தமிழ் குடும்பங்கள் போயிருக்கலாமே ........

யாழ் கள கந்தப்பு பங்கு இவ் ஊர்வலத்தில் பங்கு பற்றியதாகவும் 20 சிங்களவர்கள் வரையில் கலந்து கொண்டதாகவும் எம்மவர் 500 பேர் வரையில் கலந்து கொண்டு எமது கோசங்களை எழுப்பினர். முக்கியமான விடயம் சிங்களவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்த ஊடக பிரிவினர் எமது ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்தனர். நன்றி சிங்களவர்களே இப்படி தொடர்ந்து செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். :rolleyes:

நுணாவிலானின் சிரிப்பை பார்க்க கந்தப்புவை நேரில் கண்டுள்ளார் போலுள்ளது . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கந்தப்பு பங்கு இவ் ஊர்வலத்தில் பங்கு பற்றியதாகவும் 20 சிங்களவர்கள் வரையில் கலந்து கொண்டதாகவும் எம்மவர் 500 பேர் வரையில் கலந்து கொண்டு எமது கோசங்களை எழுப்பினர். முக்கியமான விடயம் சிங்களவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்த ஊடக பிரிவினர் எமது ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்தனர். நன்றி சிங்களவர்களே இப்படி தொடர்ந்து செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். :rolleyes:

500 பேர் கலந்து கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 150 தமிழர்களே கலந்து கொண்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன். விடுதலைப்புலிகளை முற்றாக நேற்றைய தினத்துக்கு முன்பாக அழித்துவிடலாம் என்று நினைத்து ஏற்கனவே இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருக்கலாம். நாங்கள் 8.30க்கு அங்கு சென்றிருந்தோம். சிங்களவர்கள் 9.30க்கே வந்தார்கள். அவர்கள் 2 மணித்தியாலத்தின் பின்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு செல்ல நாங்களும் சென்று விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய கங்காரு , அமெரிக்கா மட்டும் பாய்ந்து விட்டது .

வாழ்த்துக்கள் கந்தப்பு . :rolleyes:

உணர்வாளர்களே வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினால் இங்கு நடைபெறவிருந்த சிங்கள மக்களினால் மேற்கொள்ளப்படவிருந்த வெற்றிவிழா இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக இருக்கிறது. எனெனில் சிங்களவர்களின் நிகழ்ச்சி முடிய , அமெரிக்கா சிறுவர்களின் இசை நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. அதாவது சிங்களவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் அங்கு நிகழ்ச்சியை நடாத்தினார்கள். எங்களது முயற்சியினால் தான் அவர்களின் நிகழ்ச்சி தடைப் பட்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி.

அதன் பிறகு சிங்களவர்கள் உள்ளே சென்று இரத்ததான நிகழ்வில் இரத்தம் கொடுத்ததாக அறிந்தேன்.

சிங்களவர்கள் 'இராசீவ் கொலையைச் செய்தவர்கள் புலிகள், 1000க்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற புலிகள், கதிர்காமரைக் கொன்ற புலிகள், அல்கைடாவுக்கு பயிற்சி அளித்தவர்கள் புலிகள், மக்கள் வாழும் இடங்களில் உலகில் தற்கொலைத்தாக்குதலை அறிமுகப் படுத்தியவர்கள் புலிகள், சிறுவர்களை படைகளில் சேர்ப்பவர்கள் புலிகள்' என்று அங்கு முழக்கமிட்டார்கள்.

அத்துடன் அவர்கள் வெற்றிவிழா கொண்டாடியதாகத் தெரியவில்லை. புலிகளை அழிக்க உதவும் படித்தான் போராட்டம் நடாத்தினார்கள்.

மிக்சிக்கன் ஊடகமொன்று இவ்வாறு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

Sri Lankan, Tamil Tiger protesters draw Capitol police sniper teams

A screen shot of a sniper's nest at the state Capitol this morning.

LANSING — The Michigan State Capitol is pretty used to various rallies and protests. From the tea party protests a few weeks ago, to gay pride rallies, to gathers of organized labor, anti-war activists and white nationalists.

But staffers at the Capitol on Wednesday morning were greeted by not only a protest by Sri Lankan Tamil Tigers, but Michigan State Police sniper teams monitoring the situation.

About 100 people gathered to protest or voice their support for the government of Sri Lanka and the South Asian island nation’s ethnic Tamil minority, whose rebel force, the Tamil Tigers have been engaged in a bitter fight for control of the ethnic Tamil homeland.

When Michigan Messenger called the Capitol Committee offices, which is responsible for events scheduling of the Capitol lawn, staffers said the protest was called Friends of the Globe, Support Sri Lanka. The protest was scheduled from 9 a.m. to 11:30 a.m.

But questions about the police sniper unit were referred to the Michigan State Police Capitol post operations office.

Lt. Jerry Alliare from the state police said at first he was unaware of sniper units being in place. “We have some folks down there kind of monitoring the situation. I am not sure of their total roll.”

When Alliare was told there was a Twitter picture of the unit, and asked why the unit was in place, he responded: “I don’t know. We just kind of have the resources they request.”

A legislative staffer who spoke with the state police sniper unit, but did not wish to be named because they were disclosing security information, said the unit was there because of fears of potential trouble.

“The group is known for their violent protests and terrorism,” the staffer said, who said the state police had blocked the foot bridge between the Capitol and other state office buildings. The source also said the unit had originally been on the Governor’s Capitol office balcony but was moved.

http://michiganmessenger.com/17963/sri-lan...ce-sniper-teams

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விடயம் சிங்களவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்த ஊடக பிரிவினர் எமது ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்தனர். நன்றி சிங்களவர்களே இப்படி தொடர்ந்து செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். :rolleyes:

கிழே உள்ள இணைப்பில் அந்த புகைப்பிடிப்பாளர் படம் பிடிப்பதைக் காணலாம்.

http://www.tamilnaatham.com/photos/2009/ap...sing_USA10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.