Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சாலை மறியலுக்கு பதிலாக புதிய வழிமுறைகள் கையாளப்பட வேண்டும்!

Featured Replies

வணக்கம்,

கவனத்தை ஈர்ப்பதற்காக சாலைகளை மறித்தோம். பெருந்தெருவை மறித்தோம். ஆனால் இதையே சோம்பேறித்தனமாக திருப்பித் திருப்பி செய்துகொண்டு இருக்கக்கூடாது. கவனத்தை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கையாள வேண்டும்.

ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்களை ஓரிடத்தில் ஒன்றுகுவித்து நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கால்கடுக்க நிற்கவைத்து கோசம் போடுவதைவிட... அந்த ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்கள் தொகையை சிறிய சிறிய குழுக்களாக வகுத்து அந்த நான்கு ஐந்து மணித்தியால நேரத்தில் வேறு ஏதாவது முறையில் கவனத்தை ஈர்க்க முயற்சிகள் செய்யலாம்.

தொடர்ந்து சாலைகளை மறியல்கள் செய்வது புத்திசாலித்தனமான கவனயீர்ப்பாக தெரியவில்லை. நாங்கள் creative ஆக இருக்கவேண்டும். எங்கள் போராட்ட வடிவங்களை மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் creativeஆன முறையில் தொடர்ந்து மாற்றவேண்டும். நாங்கள் சரியான tactics, strategiesஐ பயன்படுத்தாவிட்டால் நீண்டகால நோக்கில் எமது போராட்டங்களை செய்வது, அதில் வெற்றிபெறுவது முடியாத காரியமாக இருக்கும்.

சிந்தித்துப் பாருங்கள்! நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞ்சனின் கருத்தை வரவேற்கிறேன். கனேடிய மக்களும் இவர்களுக்கு இது தான் வேலையா ? என்பார்கள். சிந்திக்கவேண்டியவிடயம்.

Edited by நிலாமதி

அக்கா, அண்ணா இந்த றொரொன்றோ ஸ்டார் முன் பக்க கட்டுரையை வாசியுங்கள்:

http://www.thestar.com/article/635385

இந்த கட்டுரையில் இதன் ஆசிரியர் பாக்கிஸ்தான் நாட்டில் பிறந்தவர்.

இந்த கட்டுரையில் இங்குள்ள "இனவாதம்" மேலாக சாடப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏற்கனவே தாம் மேற்கொண்டு பெருஞ்சோலைகளை மறிக்க மாட்டோம் என சொல்லியுள்ளனர்.

Edited by akootha

தங்களின் கருத்து சரியானதாகவே கருதுகிறேன். போராட்டங்கள் மாற்றம்பெற வேண்டும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இப்போது ஒரு புதிய பரிமாணத்துக்குள் நகர்ந்து இருக்கிறது அதன் தேவையும் அதிரித்திருக்கிறது அதன் வேகத்தையும் பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்த வெண்டும். புலத்திலே உருப்பெற்ற தமிழீழக் கரு புலத்தாராலேயே பிரசவிக்கப்படவும் வேண்டும்

Edited by naaddan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தை முற்று முழுதாக எதிர்க்கிறேன். உங்கள் கருத்து என்பதற்காக அல்ல! போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய நேரத்தில் மாற்றாத நாம் தவறிழைத்துள்ளோம். இன்றும் சட்டத்தை பார்க்காது வீதி மறியலில் ஈடுபடும் நாம் அன்றும் அதை செய்திருந்தால் அநாமதேய உயிரிழப்புக்களை பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.

நாம் பெற்றது நல்ல பிள்ளைகள் என்ற பெயரை மட்டுமே! ஆனால் பத்தாயிரத்துக்கு மேற்ப்பட்ட எம் மக்களின்இ போராளிகளின் உயிர்களை காக்க தவிறிவிட்டோம்.

குற்றம் யார் செய்தார்கள் என்பதல்ல பிரச்சினை. பிரச்சினையின் வீரியத்தை இன்னும் அறியாமல் போராட்டம் செய்கின்றோம் என்பது தான் பிரச்சினை!

கடந்த மாவீரர் தின உரையில் தலைவர் சொன்னது இன்னும் பலருக்கு நினைவிருக்கின்றதோ இல்லையோ இளைஞர்கள் நமக்கு நல்ல நினைவிருக்கின்றது. இங்கு இருக்கும் சிலர் தாமும் செய்யாது செய்யும் இளைஞர்களின' நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போட்ட முட்டாள்களை புலம்பெயர் நாட்டில் தலைமையாக கொண்ட நாம் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

எம்மை நம்பியிருந்த எம்மக்களை எம் உறவுகளை எம் தேசத்தை காக்க தவிறி பெரியதொரு பழியை எதிர்காலம் எம்மீது சுமத்தியிருக்கின்றது.

இப்போது பேசுவதற்க்கு எதுகுமில்லை. ஓற்றுமைப்படா எம் எப்போது ஒற்றுமைப்படுமோ அப்போதே எம் எதிரியை எம்மைக் கண்டு அஞ்சுவான் அதுவரை குடும்பக்கதை கதைத்துக்கொண்டு பெரியவர்களும் ஏதாவது மதுக்கடையில் அல்லது கிளப்களில் இளைஞர்களும் போய் பொழுதைக்கழிக்க வேண்டியது தான்.

நாம் எல்லாம் வாயால் பேப்பரில் தமிழீழம் பற்றி பேசுவது முட்டாள்த்தனம் உளமார்ந்து செயற்ப்பட தயராகுங்கள்...!

இழந்ததை எண்ணி அழுவதை விட இழந்தவற்றை முடிந்தவரை மீட்க உறுதி எடுத்துக்கொள்வோம். கோஷ்டி மோதல்களும்இ அமைப்புக்கள் கூடி தமக்குள் பேசுவதையும் உடனே நிறுத்துங்கள்.

முள்ளிவாய்க்காலின் ஓரத்தே முணுகிக்கொண்டிருக்கும் 50000 உறவுகளின் அவலத்தைஇ உச்சக்கட்ட வலியை ஒருகணம் நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்.

உறுதியும் நம்பிக்கையும் எம் தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் தம் உயிரிலும் மேலான அன்பை பாசத்தை நேசத்தை காட்டும் தலமையைஇ போராளிகளைஇ தளபதிகளை கொண்ட நாம் தளத்தை போல் புலத்தை எப்போது ஆக்குவோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாலை ம‌றிய‌ல்க‌ளால் உள்ளூர் ம‌க்க‌ள் கோபம் கொண்டுள்ள‌ அதே வேளை எம் ப‌க்க‌ம் அவ‌ர்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்ற‌ன‌. இத்த‌ருண‌த்தைப் ப‌ய‌ன் ப‌டுத்தி எம் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றியும் நாம் என்ன இந் நாடுக‌ளிலிருந்து எதிர்பார்கின்றோம் என‌ விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டும்.

அத‌ற்கு ச‌ட்ட‌திட்ட‌ங்களுக்குட்ப‌ட

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்பது சரியானதே. ஆனால் இதுவரை திரும்பிப்பாராத ஊடகங்கள் இதனூடாகவே தமிழரை நோக்கி இழுத்துவரப்பட்டுள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மையும் கூட. இதனை நேற்று நடைபெற்ற பிராங்போட் தொடரூந்து மறிப்பும் தெளிவாக்கியுள்ளது. இதனையே தொடர வேண்டுமென்றல்ல. தொடர் போராட்டங்களை வௌ;வேறு விதமாக முன்னெடுப்பது ஒன்றே தமிழினத்தினது இருப்பை உறுதி செய்யும்.

எடுத்திற்காட்டிற்காக இணைத்துள்ளேன். 15இற்கு மேற்பட்ட ஊடகங்களில் தமிழினம் பற்றிய செய்திகள் பதிவாகியாகியுள்ளன.

Frankfurt:

Ruhrnachrichten:

http://www.ruhrnachrichten.de/nachrichten/.../art5192,564587

Die Zeit:

http://www.zeit.de/news/artikel/2009/05/17/2800510.xml

Spiegel:

http://www.spiegel.de/reise/aktuell/0,1518,625374,00.html

Sueddeutsche:

http://newsticker.sueddeutsche.de/list/id/644092

http://newsticker.sueddeutsche.de/list/id/644087

Die Welt:

http://newsticker.welt.de/?module=dpa&id=21272310

Focus:

http://www.focus.de/politik/ausland/frankf...aid_400117.html

http://www.focus.de/politik/ausland/konfli...aid_400126.html

Bild:

http://www.bild.de/BILD/news/telegramm/new...xt=8391082.html

NH24:

http://www.nh24.de/content/view/21511/9/

Netplosiv:

http://netplosiv.com/proteste-ueber-600-ta...-lahm-200926323

Die Presse:

http://diepresse.com/home/politik/aussenpo...;selChannel=103

DMM:

http://dmm.travel/news/artikel/lesen/2009/...m-gelegt-22308/

Der Newsticker:

http://www.dernewsticker.de/news.php?id=113486

hr-online:

http://www.hr-online.de/website/rubriken/n...cument_37024090

Ratingen:

Bild;

http://www.bild.de/BILD/regional/koeln/dpa...utobahn-52.html

Sueddeutsche:

http://newsticker.sueddeutsche.de/list/id/644122

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பெரும்பாலான அணுகுமுறைகளும் அவற்றின் பெறுபேறுகளான வெற்றி தோல்விகளும் காலம் காலமாக வரலாற்றில் இடம்பெற்று வருபவைதான். இதனால்தான் அரசியல் ஞானிகள் காலம்தோறும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இங்கு விமர்சிக்கப் படும் அணுகுமுறை ஒன்றும் வரலாற்றுக்கு புதிய நடவடிக்கையல்ல. அண்மைக்கால வரலாற்றில் துருக்கியின் கேடிஸ் மக்கள் கட்ச்சியான பி.கே.கே இதே அணுகுமுறையைத்தான் கையாளுகிறது. அந்த அமைப்பு மேற்குலகில் தடை பட்டதற்க்கும், மேற்குலகின் எதிர் நடவடிக்கைகளுக்கும் வெறுமனவே மேற்க்கு நாடுகளின் புவி அரசியல் நலன்களின் அடிப்படையிலான அணுகுமுறை மட்டுமே காரணம் என்று குருட்டுத் தனமாகப் புரிந்து கொண்டன. இதனால் கேடிஸ் போராளிகளின் ஆதரவு அமைப்புகள் மேற்குலகை அச்சுறுத்தும் தங்கள் பிழையான நடை முறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை. தங்கள் தரப்புத் அரசியல் இராஜதந்தர தவறுகளை அவர்கள் விமர்சிக்கவும் கண்டுகொள்ளவும் முயலவில்லை. ஒரு வன்முறை சார்ந்த இயக்கம் மேற்குலகிலும் வன்முறைக்கான வல்லமையை கொண்டிருந்தால், வன்முறை வழி முறைகளைக் கையாண்டால், தனது ஆதரவு வட்டத்தை மேற்க்கு நாடுகளில் பலப்பரீட்சை அடிப்படையிலான போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நசுக்கå படுகிற ஆபத்தை எதிர்நோக்கும் என்பதைத்தான் கடந்த காலத்தில் பி.கே.கே போன்ற அமைப்புகளின் வரலாறு எமக்குப் புலப்படுத்துகிறது. நாங்கள் அரசை நடத்தினாலும் இதுபோன்ற அணுகுமுறையைத்தான் கையாளுவோம். எங்கள் பிரச்சினைக்கு நாம் எங்கள் எதிரியார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவனுடன் நாமும் அவனும் வாழும் புவியியலில் மட்டுமே மோதலை வளர்க்கலாம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு அமைப்பு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏற்புடைய வகையில் காரியங்களை ஆற்றுவதையே சந்தேகக் கண்கொண்டு பார்பார்கள். இது இயல்பு. இந்த நிலையில் பலம் காட்டுவதையும் வன்முறைக்கான திறனை வளர்பதையும் வெளிப்படுத்துவதையும் எந்த ஒருநாடும் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் வரலாற்றின் பாடம்.

Edited by poet

  • தொடங்கியவர்

வணக்கம்,

இங்கு நான் மீண்டும் ஓர் கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். நாங்கள் வீதிமறிப்பில் ஈடுபடுவது போக்குவரத்தை முடக்கம் செய்வது அல்லது வேறுவகைகளில் சட்டத்திற்கு முரணாக கவனயீர்ப்பு செய்வதில் பிரச்சனை இல்லை. ஆனால்... நம்மவர்கள் கைது செய்யப்பட்டால்... போராட்டங்களை முன்னின்று செய்பவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்படும்போது... நீண்டகால நோக்கில் எங்கள் போராட்டங்களை இப்படியான கைதுகள், மற்றும் எங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எங்கள் எதிர்காலங்களை எப்படி பாதிக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

ஒருவர் கைது செய்யப்பட்டால்... பின்பு அவர்... பிணை மூலம் வெளியே வந்தாலும்... வெளியில் நடமாடுவதற்கு சட்டம் விதிக்கும் நிபந்தனைகள் மிகவும் இறுக்கமானவை. தவிர, நீண்ட காலத்தில் அந்தக்கைது அவரது வாழ்க்கையை பாதிக்கும். இது ஒட்டுமொத்தமாக நீண்டகால நோக்கில் எங்கள் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.

காவல்துறை எங்கள் எல்லோர் முகங்கள், பதிவுகளையும் வைத்து இருப்பார்கள். சமயம், சந்தர்ப்பம் பார்த்து நாங்கள் சட்டத்தை மீறும்போது எங்களை கைது செய்து உள்ளேபோட்டால் அதன் மூலம் நீண்டகாலத்தில் பாதிக்கப்படப்போவது நாங்களே.

உங்களுக்கு தெரியவேண்டும்.. எங்கள் போராட்ட அமைப்பு வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டது எங்கள் தாயக விடுதலைப் போராட்டத்தை எப்படி நிர்மூலமாக்கியது என்று.

இதனாலேயே நாங்கள் புத்திசாலித்தனமாகவும் செயற்படவேண்டி இருக்கின்றது. உணர்வு நிச்சயம் வேண்டும். ஆனால்... அறிவுபூர்வமாக பிரயோகிக்கப்படாத உணர்வு ஆபத்தானது.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.