Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் :::

Featured Replies

சிலவேளைகளில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றதே வேலையின்றி தேவையற்றவற்றைப் பேசி நேரத்தை வீணடிக்கின்றார்களே என்று சில உறவுகள் திட்டி இருக்கலாம்... ஆனால் என்னைப்பொறுத்தவரை, தமிழரின் பாரம்பரிய வரலாற்றில் வாழ்ந்த சுவடுகள் அழிந்துபோய்விடக்கூடாது... எப்படி ஒரு காவியங்கள் காவிச்செல்லப்பட்டு அடுத்த சந்ததி, அடுத்த சந்ததி என்று மாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்துருவிலானதோ... அவ்வாறு இவையும் எழுத்துருக்காணவேண்டும்..

நீங்கள் கேட்கலாம் ஏன் நான் அதையே இப்போதே செய்யலாம் என்று... நான் வரலாற்றில் தோற்றுப்போனவன்... வரலாற்றில் தமிழர் பக்கங்களில் எழுதப்படமுடியாப்பக்கம் ஒன்று எதுவென்றால் நானாகத்தான் இருக்கமுடியும்...

சாதீயத்திலும், ஆன்மீகத்திலும் இன்னமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு மத்தியில் ஓர் விமர்சன ஓலை...

மின் விசிறிகளிற்கும் காற்றாடிகளுக்கும் மத்தியில் ஓர் துர்வாடை...

உறவுகளே... மானிட வாழ்வென்பது கணம் நிச்சயிக்கப்பட்டதல்ல... என் மரணம் இந்நிமிடம் கூட நிகழலாம்... அதனால் இருக்கும்போது செய்யமுடிந்ததை செய்யவேண்டும்...

இறுமாப்புக்களுக்கும்... குரல்வளை நசுக்கல்களுக்கும் மத்தியில் நின்றுகொண்டும் உரிமைக்கான எமது குரல் கொடுக்கவேண்டும்...

தொண்டை கிழியக் கத்திக்கத்தி... உங்கள் தொண்டைகளை மட்டும் கிழியவிடாமல், சிறிது காலமொதுக்கி மூளையையும் சிந்திக்க விடுங்கள்... ஆபத்திலும் அடிமனக்குமுறல்களை சிதறவிடாதீர்கள்...

அவசரத்தில் புத்தி தடுமாறாதீர்கள்... இன்று இருப்பவை நாளை இருக்கப்போவதில்லை, நாளை இருப்பவை இன்று தெரியப்போவதில்லை, இது உலகின் ஆதி சக்தி நியதி...

மதவாதிகளே! உங்களுக்கு ஓர் சிறு விண்ணப்பம். மதத்திற்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மானிடத்துக்குக் கொடுங்கள், ஒவ்வொரு மானிடனுள்ளும் உங்கள் மதத்தின் ஆதிப்பொருள், பரம்பொருள், அடிநாதம், ஆண்டவர் எல்லாம் அங்கேயே இருக்கின்றார்கள். இப்போது மனிதம் மரத்த பூமியாகிவிட்டது எமது ஈழ தேசம். கொல்லப்பட்ட உறவுகளின் இரத்தம் காயுமுன்பே இரத்தநாளங்கள் சுருங்கிப்போயின ஏன் என்றால் பாவிக்கப்பட்ட நச்சுக்குண்டுகள்...

மனித உரிமை மனித உரிமை என்று குரல்கொடுக்கும் மனிதவுரிமையாளர்களே உங்களுடன் ஓர் நிமிடம்.

விடுதலைப்புலிகள் சிறுவர்களை இயக்கத்தில் சேர்க்கின்றார்கள் அவர்கள் எனவே பயங்கரவாதிகள் எனச்சொல்லி சொல்லியே எம்மை அடக்கிய பெருந்தகைகளே, ஓர் நிமிடம் உங்களுடன் ஓர் சிறு வரிகள் பேசவேண்டும்...

தமிழ் தங்கை, நான் இங்கே எழுதும் ஆக்கத்தினை அப்படியே பிரதி செய்து ஓர் ஆக்கமாக யாழில் பதியவும்... என் பெயர் வேண்டுமானால் இட்டுக்கொள்ளவும்... என்னால் ஆக்கத்தினை இட முடியவில்லை... அதனாற்தான் இங்கே சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்...

ஆம் விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் சேர்ந்தார்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை, அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாக ஏன் உங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை? ஏனெனில் 90 ஆரம்ப காலத்தில் இடம்பெற்றிருக்கலாம் ஆனால் பின்னர் முற்றாக நிறுத்திக்கொண்டார்கள், அப்படியானால் அந்த சிறார்கள் எங்கே? அவர்கள் தான் அவர்களுக்கு என்று அமைக்கப்பட்ட செஞ்சோலை, அறிவுச்சோலை என்னும் கல்விக்கூடங்களில் கல்வி கற்றவர்கள். அவர்கள் ஆயுதப்பயிற்சி எடுக்கின்றார்கள் என்றும், சிறுவர்களைப்படையில் சேர்க்கின்றார்கள் என்றும் வாய்கிழியக் கத்தியவர்களே, செஞ்சோலையில் குண்டுமழை பொழிந்து எம் பிஞ்சுகளின் உடல் தெரியாது சிதைத்தபோது நீங்கள் எங்கே போனீர்கள்?

இறுதி யுத்தம் என்னும் போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தினை அழிக்கும்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு சிங்கள அரசு வயிற்றிலிருக்கும் பிள்ளை உட்பட சின்னஞ்சிறு பச்சிழங்குழந்தைகளை கொன்றபோது நாமும் கத்தினோம், உங்களுக்கும் தெரியப்படுத்தினோம் அப்போது எங்கே போனீர்கள்?

ஐ.நா சபையே உனது படைகளை அனுப்பென்று கெஞ்சிக்கேட்டோமே, நீயுமா சேர்ந்து எம் உறவுகளைப்பூண்டோடு அழித்தாய்?

மனிதவுரிமை அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அங்கிருந்து(வன்னியிலிருந்து வெளியேற்றப்படும்போது) நாம் சொன்னோமே, வெளியேறவேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தோமே, கத்திக்கதறி அழுது, உன் வாசலில் புரண்டு அழுது எம் உடலெங்கும் புழுதி அப்பி உங்களௌ மனமின்றி பிரிந்தோமே, அப்போது மீண்டும் வருவோம் என்று ஓர் நம்பிக்கை வார்த்தை குடுத்துச் சென்றீர்களே, நாம் எம் உறவுகள் இன்று ஆவிகளாக அலைகின்றோம், உங்களைக்காணவில்லையே, எங்கே போனீர்கள்? இல்லை எங்கேதான் வருவீர்கள்?

மிருகவதை என்று குரல்கொடுக்கும் மிருகவதை எதிர்ப்பாளர்களே உங்களிடம் ஓர் சில வரிகள்... மிருகங்கள் வதைக்கப்படுகின்றன, அவை போதிய இடமின்றி அடைக்கப்படுகின்றன என்று பல வழக்குத் தாக்கல் செய்யும் சான்றோர்களே, உங்களுக்கு இன்னமுமா கண்களில் தெரியவில்லை வவுனியா முகாம்களும் அங்கே அடைக்கப்பட்டிருக்கும் மக்களும். மிருகங்களுக்குக் கொடுக்கும் மரியாதையில் 10%தன்னும் மானிடத்திற்குக் கொடுங்களேன், கேளுங்களேன், ஏன் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றார்கள் என்று?

கேளுங்களேன் சித்திரவதை செய்யப்படுபவர்கள் என்ன ஆகின்றார்கள் என்று? தாய்ப்பசுவுடன் இருக்காத கன்றினினைப்பிரித்ததற்காக ஒரு மனிதனுக்கு சிறைத்தண்டனை கொடுத்து அவனை சிறைக்கு அனுப்பினீர்களே, இன்று வவுனியா முகாம்களிலும் கொழும்பு வைத்திய சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ள, தமது தாய் தந்தையர் உயிருடனிருக்கின்றனரா இல்லையா எனத்தெரியாது தவிக்கும் சிறு பிள்ளைகளைப்பிரித்துவைத்திர

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டை கிழியக் கத்திக்கத்தி... உங்கள் தொண்டைகளை மட்டும் கிழியவிடாமல், சிறிது காலமொதுக்கி மூளையையும் சிந்திக்க விடுங்கள்...

மிகச்சரி யாழ்நிலவன் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நிச்சயம் பலன் உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிலவன் அண்ணா,

நல்ல பணி தான்..

மொழிப்புலமை உள்ளோர் விரைந்து செயற்பட்டால் நல்லது.

நன்றி.

  • தொடங்கியவர்

யதார்த்தத்தினை உணர்ந்து மக்களாகிய நாம் எமது கடமைகளை, எமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தவேண்டும்... அதைவிடுத்து தேவையற்றவற்றில் மூக்கை நுழைத்து காலத்தை வீணடிக்காதீர்கள்... மனதை தளரவிடாதீர்கள்... ஈழம் ஒன்றே எமது கொள்கை எனப்போராடுங்கள்... தனியாகப் போராட்டத்தினை மட்டும் நினைத்து மனதினை இறுக்கிக் கல்லாக்கிக்கொள்ளாமல் எமது பாரம்பரியம், எமது வாழ்க்கைமுறை... நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதையும் அடிக்கடி பேசி மனசை இளக்கிக்கொள்ளுங்கள்... தமிழரின் போராட்டம் தமது உரிமைக்கான போராட்டம் என்பதனை சர்வதேசம் எங்கும் இருக்கக்கூடிய ஒவ்வொரு மக்களின் காதுகளுக்கும் எட்டவேண்டும்...

அண்மையில் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய ஓர் விடயம்... இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள

Edited by யாழ்நிலவன்

  • தொடங்கியவர்

தமிழ் நங்கை இதற்கு மொழிப்புலமை மட்டும் தான் அவசரம் என்று எண்ணாது நீங்களும் பங்களிப்பு செய்யமுடியும்... எப்படி என்று கேட்கின்றீர்களா? உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் குழும அஞ்சல்களிலிருக்கும் மின்னஞ்சல்கள்... மற்றும் இணையத்தளம் மூலம் தேடிப்பிடிக்கும் மின்னஞ்சல்களையும் தொகுக்க முடியும் இதன் மூலம் கூட நீங்களும் இதிலே பங்களிக்க முடியும்... நான் உங்களுக்கு இதனைக்குத்திக்காட்டுகின்றே

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது யாழ் நிலவன் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் மொழி மாற்றி கொடுத்தால் இன்னும் இலகுவாக இருக்கும் நிலவா உன்மையை சொன்னால் எனக்கு ஆங்கிலம் என்பது அடிமட்டம் அதனால் மொழி பெயருங்கோ அனுப்பி பார்க்கலாம் எல்லோருக்கும்

நன்றி நிலவா.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் நங்கை இதற்கு மொழிப்புலமை மட்டும் தான் அவசரம் என்று எண்ணாது நீங்களும் பங்களிப்பு செய்யமுடியும்... எப்படி என்று கேட்கின்றீர்களா? உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் குழும அஞ்சல்களிலிருக்கும் மின்னஞ்சல்கள்... மற்றும் இணையத்தளம் மூலம் தேடிப்பிடிக்கும் மின்னஞ்சல்களையும் தொகுக்க முடியும் இதன் மூலம் கூட நீங்களும் இதிலே பங்களிக்க முடியும்... நான் உங்களுக்கு இதனைக்குத்திக்காட்டுகின்றே
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் பார்த்த ஓர் காட்சி என் மனதில் கண்ணீரை வரவைத்தது... ஒரு சிறு குழந்தை சத்தமின்றி அழுகின்றது... அதன் கண்களில் கண்ணீர்த்துளி அது கத்தி அழ போசாக்கின்றி கண்ணீரை மட்டும் சொரிகின்றது... அக் குழந்தையின் தாய் அப்பிஞ்சின் கண்ணீரைக்கழுவுகின்றாள்... தன் கண்களால் கண்ணீர் இறைத்து... பசியால் அழும் அக்குழந்தைக்கு உணவூட்ட தாயுக்கும் சக்தியில்லை அப்படி உணவூட்டினாலும் அதைக்குடிக்கும் சக்தி அக்குழந்தைக்கில்லை...

நீண்ட நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வழுகை அப்படியே குழந்தையின் கண்களில் வந்த ஓர் துளி கண்ணீர் கீழே விழாமல் கண்களில் தங்குகின்றது... தாயின் கண்ணீர்த்துளி அக்கண்ணீர்த்துளியின் மேல் விழுந்து கீழே நிலத்தில் விழுகின்றது...

வன்னியில் இடம் பெயர்வுக்கு முன்னர் பதிவாகிய ஓர் காணொளி...

யாரறிவர் அந்தக் கண்ணீர்த்துளியுடன் அக்குழந்தையின் உயிரும் சேர்ந்து இம்மண்ணிலே புதைந்தது என்பதை?... இக்கண்ணீரைத் திரையினிற் பார்த்த என் கண்கள் தானாகக் குழம்பின... ஏதுமற்ற ஓர் தனிமனிதனாக என்னால் எதனையும் சாதிக்க முடியவில்லையே என என் கண்கள் அழுதன... இன்று அந்தத் தாயும் உயிருடனில்லை அந்தச் சேயின் நிழல் கூட என்னிடமில்லை...

பாசக்கயிறு வீசும் யெமனுக்கு கூட மனச்சாட்சி இல்லையா பிஞ்சுடலை பிரித்தெடுத்துச் சென்ற அவனா இறை தூதன்? இல்லவே இல்லை... பூலோக வாழ்வு முடித்து சொர்க்கலோகமா நரகலோகமா என்று தீர்மானிக்கப்படும் என்பார்களே அது பொய்தனே??

இதுதானே நரகலோகம்... மாமிசம் உண்ணும் பீரங்கிகள்... சித்திரவதைக்கூடங்கள்... யெமன் மகிந்தா... சித்திரகுப்தன் சரத் பொன்சேகா... ஏதுமறியா மொழிபேசும் அரக்கர்கள்...

ஏதுமறியாப்பாவியரைக் கட்டுண்டு போட்டு எம் மக்களின் குருதி குடித்த நயவஞ்சகர்கள்... வீதி எங்கும் உலங்கள் சிதறிக்கிடக்க,.. ஐ.நா தன் நா அடக்கி நின்றதே எதற்காக?...

எம்மினம் முற்றாக அழிக்கப்படுவதைப்பார்த்து இரசிப்பதற்காகவா? இல்லை எம் மக்களின் குருதிகளின் மீது பரிசோதனை செய்த இந்திய வல்லாதிக்கத்தின் பரிசோதனைக்கூடமாக வன்னி மண்ணை மாற்றியமைக்காகவா?

இதெல்லாம் வீடியோவில் பார்த்த எங்களுக்கே இப்படி என்றால்.. அதை அனுபவித்த மக்களுக்கு எப்படியான மனநிலை இருக்கும்...

எலிகள் மீது பரிசோதனை செய்தால் வழக்குத்தாக்கல் செய்து அப்பரிசோதனையை நிறுத்தச்சொன்ன வக்கீல்களே எங்கே நீங்கள்... எம் அப்பாவி மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தீர்கள்???

பன்றிகளில் இன்சுலின் தயாரிப்பதை எதிர்த்தவர்களே நீங்கள் எங்கே போனீர்க்ள் எம் உறவுகள் உயிருடன் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டபோது...

சர்வதேசமெங்கும் வாழும் உறவுகளே... மனச்சாட்சியைத் தட்டுங்கள்... ஒவ்வொருவரது மனச்சாட்சியைத்தட்டுங்கள்... எம் விடுதலை எமது கைகளில் என்பதை நாமே வெல்வோம் என்றுரையுங்கள்... தென்னைகள் வளர்ந்து தோப்பாகினவே... இன்று தேங்காய்கள் விழுத பூமிதனில் கண்ணிவெடிகள்.. விவசாய நிலங்கள் அனைத்தும் இரத்த வயல்களானதே இனி விளையும் நெல்லுக்கூட எம்மவர் வீரம் செறிந்தே விளையும் பூமி...

வன்னி மண்ணில் விற்கப்பட்ட காணிகள் மீண்டும் பெறப்படவேண்டுமென்று உண்ணாவிரதமிருக்கும் பிக்கு முண்டங்களே... எம் தேசத்துச் சொத்தான அனுராத புரத்திலே நீங்கள் வளைத்துக்கொண்டு பிடித்டித்துக்கொண்ட எமது நிலங்கள் எங்கே...???

அன்று குட்டிமணியிடம் தோண்டி எடுக்கப்பட்ட கண்களின் வலி ஆறும் முன்னர் இன்று எமது வயிறு கிழித்து கருவைக்கலைத்தீர்களே... நீங்கள் உங்கள் குலங்கள் உருப்படுமாக இருந்தால்... அது ஆண்டவன் என்றொன்று இல்லை என்பதைப் பறைசாற்றும் ஓர் செயல்..

உங்கள் புத்தமதம் இதனைத்தானா போதிக்கின்றது? உங்கள் புத்தர் சொன்னது இவைகள்தானா? அன்பைப் போதித்த புத்தனின் பெயராலே அழிகின்றீர்களே... உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பதில் சொல்லும் நீங்கள் செய்தவற்றிற்கான தண்டனைகளை...

இன்றுவரை அனுராதபுரத்திலே கொலன்னாவைக்கு அருகில் ஓர் பாழடைந்த பங்களா வீட்டில் ஏறத்தாள 200 பெண்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சுவர்களில் சங்கிலிகளோடு பிணைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வருகின்றனர் சிங்களச் சிப்பாய்கள். போரின் வெற்றியைக்கொண்டாட சிங்களச் சிப்பாய்களுக்காக மகிந்த செய்து கொடுத்த ஓர் விருந்தாம்...

சர்வதேசமெங்கும் மானிடம், மானிடத்தர்மம், மனித உரிமைகள் எண்டு ஆயிரமாயிரம் வீர வசனங்கள் பேசிக்காலத்தைக்கழிக்கும் வீரவான்களே உங்கள் திறமையையாவது பாவித்து அந்த அப்பாவிப்பெண்களை விடுவியுங்கள்....

  • தொடங்கியவர்

உங்கள் பூசாக்கள் மட்டுமல்ல எங்கள் வீட்டுக் கூசாக்கள் கூட குருதியால் நிறைந்திருக்கின்றது... தொடர் தோட்டா பதில் சொல்லாது என்றும். அரசியல் வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்த ஒபாமா? நீங்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றீர்களா? ஒரு வருடமாகப்போகின்றது... ஒபாமாவுக்கான தமிழர்களாம்... என்னத்தை செய்தார்கள்??? இது வரை எத்தனை கணக்கெடுப்புக்கள் நிகழ்த்தினீர்கள்?

நாமும் மனம் கோணாது எல்லாவற்றிலும் பங்கெடுத்தோமே... எங்கே உங்கள் ஒபாமாவின் பதில்? புரூக்ஸ் பெயின் ஏதோ இன்று வழக்குத் தொடுக்கின்றேன்... நாளை நீதிமன்றில் ஏற்றுகின்றேன் என்று கத்தினீர்களே? ஏன் இன்னமும் செய்யவில்லை? நீங்கள் நீதி மன்று ஏற என்னுடைய உயிர் வேண்டுமா? அதையும் தரத்தயாராக இருக்கின்றேன்... தீக்குளித்த எம் தியாகங்களுக்கு கண்ணீருடன் அஞ்சலித்தீர்கள் இன்று அவர்களின் கல்லறைகள் கட்டவேண்டிய இடம் காலடிப்பட்டு அழிகின்றதே? தமிழர்களே உங்கள் உணர்வுகளைத் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டுமானால் தினம் ஒரு முத்துக்குமாரன் இறக்கவேண்டுமா? இறக்க நாம் தயார். நான் தயார்... இப்படியே படித்த ஒரு சமுதாயம் முற்றாக அழிந்து போகட்டும் பர்வாயில்லை அடுத்து வரும் சமுதாயமாவது நிம்மதியாக உறங்கட்டுமே?

உங்கள் தேவைகள் என்னவென்று கேளுங்கள்... சர்வதேசம் எங்கும் வாழும் எமது உறவுகளே.. உங்கள் ஒவ்வொரு வேற்று மொழி நண்பர்களுக்கும் அவர்களது மொழியில் ஒரு ஆக்கத்தை இவ்வாறு எழுதுங்கள்... அரசியல் வாதிகளுக்கு மின்னஞ்சல் போட்டு போட்டு காலத்தை வீணடிப்பதிலும் காட்டில் மனிதவுரிமை மானிட நேயம் என்று வாய் கிழியக்கத்தும் அனைவரின் மனங்களிலும் கேள்விகளை எழுப்புங்கள்... கூடிக்க் கத்தினோம் கேட்கவில்லை.. வீதிகளை மறித்தோம் பார்க்கவில்லை.. வீட்டுப் படலைகள் எங்கும் பாசங்கள் மறந்த பட்டுக்கள் இட்டோம் திரும்பவில்லை... ஒவ்வொரு தமிழனும் சொல்லுங்கள் உங்கள் மனச்சாட்சியைத் தட்டிச் சொல்லுங்கள்... தமிழனே விடுதலைப்புலி... விடுதலைப்புலியே தமிழன்... விடுதலைப்புலியை தடை செய்வது தமிழனை, எமது இனத்தை தடைசெய்வது என்று உரக்கவே சொல்லுங்கள்... சிங்களம் கத்தட்டும் விடுதலைப்புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று... நாம் வென்று கொண்டிருக்கின்றோம்... இன்னமும் போராடவேண்டும்... இடையறாது போராடவேண்டும்...

இது உன்வீட்டு என்வீட்டுப்பிரச்சனையே அல்ல... எமது இனத்தின் வாழ்வியலுக்கான இருப்பிடத்தைக் கேள்விக்குறியாக்கிய உரிமைக்கான பிரச்சனை... எமது இனம் அழிக்கப்படுகின்றது... இன்னமும் அழிக்கப்படுகின்றது... இதோ நேற்று 3பேர் கடத்தப்பட்டிருக்கின்றார்கள

  • தொடங்கியவர்

தமிழனே நீ தேர்ந்தெடு உன் போராட்டப்பாதையை...

தமிழனே நீயே உனக்கு நீதிபதி...

நீயே உனக்குத் தலைவன்...

நீயே உனக்குத் தீர்ப்பாளன்...

உன் தண்டனை உன்னுடல்... உன் உரிமை... நீயே எடுத்துக்கொள்... உன் வாழ்வை மட்டுமல்ல உன் சொந்தங்களின் வாழ்வினையும் அவர்களின் உரிமைகளையும் நீ ஒவ்வொருவனும் பெற்றுக்கொடு...

எழுதிய பேனாக்கள் கூர் மழுங்கிப்போகலாம் அதற்காக உன்னுடைய முயற்சியைக் கைவிடாதே... உன் விரல்களால் எழுது... இரத்தம் தோய்த்து உன் விரல்களால் எழுது... " இது தமிழரின் உரிமைப்போர்... விடுதலைப்புலிகளே தமிழர்கள்... தமிழர்களே விடுதலைப்புலிகள்... எம்மீதான தடையை நீக்கு!!!

சர்வதேச சமூகமே எம்மைத் தடை செய்யாதே!!!"

தமிழனே நீ! நீயாகவிரு...

தமிழனே உன் புத்தியிடம் நீயே கேள்விகளைக்கேள்...

தமிழனே உன் குருதியின் வலி தெரியவேண்டுமா உன் கையில் ஊசியாற் குற்றிப்பார்...

எம் சொந்தங்கள் எறிகணைகள் வீழ்ந்து சிதறிப்போனார்களே அவகளின் வலி என்னவென்பதை நீ உணர்வாய்..

விடுதலைப்புலி என்பது அழிக்கபடமுடியாத சரித்திரம்... பொல்லாப்புக்களையும் செய்திகளையும் படித்து மக்களைக்குழப்பும் ஈனச்செயல்களை விடுத்து... இழப்புக்கள் இழப்புக்களே... என்று கொண்டு வீறுகொண்டு எழவேண்டும்... அன்று தினேஸ் அண்ணன் இறக்கும்போது பாட்டெழுதினீர்கள்... கதறி அழுதீர்கள்... இன்று அதே பதவிய்லிருந்த நடேசன் ஐயா இறந்தபோது ஒரு இரங்கல் கூட செய்யவில்லையே? ஏன்? அப்படியானால் மானிடம் மரத்துவிட்டதா?

என் இறுதி மூச்சு உரைக்கும் வரை என் நா உரைத்துக்கொள்ளும் "தமிழ்"

என் மனது சொல்லிக்கொள்ளும் "விடுதலைப்புலி"

என் செய்கை காட்டிக்கொள்ளும் "தமிழனே விடுதலைப்புலி"

உரைத்திட அஞ்சா என் நா என்றும் அடிபணியா ஐ.நா முன் கூட ஒயாது ஒலித்திடும்...

சென்று வருகின்றேன்... நாளை என்பது நிச்சயமல்ல... இன்றே இப்பொழுதே நிச்சயமானது... காலத்தை விட்டுவிட்டு காலத்தை ஏங்காதே... இருக்கும் கால்மணித்துளியிற் கூட உன் காரியத்தை ஆற்றிக்கொள்....

Edited by யாழ்நிலவன்

  • தொடங்கியவர்

தலமைத்துவம்

ஓர் கொள்கையுடன், தனக்கான பாதையை அமைத்து, தன் வழி வரும் சக தோழர்களையும், அவ்வழி இழுத்து நல்வழி புகுத்தி, தலைமை இல்லாத போதும் தலமை இருப்பதான எண்ணத்தோற்றத்தில் அக்கொள்கையில் மாற்றமின்றி கொண்டுசெல்லக்கூடிய மனப்பாங்கை வளர்த்துவிடுவதே சிறந்த தலைமைத்துவம்...

சத்தங்களின்றி நீண்ட பாலைவனம்... மணல்களாலான மலைகளுக்கிடையில் இருக்கும் பள்ளத்தாக்கில் நீரில்லை... ஊனில்லை... உறக்கமில்லை... உண்பதற்குத்தன்னிலும் ஒன்றுமில்லை... அங்கே இருப்பது பிராண வாயுகூட இல்லை... அடர்த்தி கூடியதால் காபனீரொக்சைட் படிந்திருக்கும் பள்ளத்தாக்கில் வாகனப்பிரயாணம் எவ்வளவு ஆபத்தானதோ? அதே போன்று எமது போராட்டமும் இன்று இருப்பது பள்ளத்தாக்கிலேயே...

தொடரட்டும் உங்கள் போரும்... இன்று நான் இருக்கலாம் நாளை நான் இல்லாமற் போய்விடலாம்... இதிலே படிக்கும் ஒவ்வொரு தமிழனும் உரத்து எழுதட்டும் அதைப் பார்த்தாவது அடுத்து வருபவன் ஏதும் செய்யட்டும்... என்னிருப்பு எப்போதும் இல்லாமற் போகலாம்... ஆனால் தமிழனின் இருப்பு எப்போதும் உள்ளது ஆகவேண்டும்... ஆக்கவேண்டும்... தொகுத்து யாராவது எழுதுங்கள்... எல்லா மொழிகளிலும் மொழி பெயருங்கள்... எல்லா சமூகத்திற்கும் சென்றடைய ஆவன செய்யுங்கள்...

தமிழ் மொழி மட்டுமல்ல... ஒரு இனத்தின் அழிவு கண்முன்னே... பார்த்திருக்க நடக்கும் ஓரழிவுக்கு நீங்களும் சாட்சியமாகப்போகின்றீர்களா? தட்டிக்கேளுங்கள் ஒவ்வொரு மனிதனையும் அவனது சொந்த மொழியில் தட்டிக்கேழுங்கள்... 40 பேரைத்தட்டும் போது 4 பேருக்காவது உறைக்காதா என்ன?

Edited by யாழ்நிலவன்

  • தொடங்கியவர்

நல்லது யாழ் நிலவன் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் மொழி மாற்றி கொடுத்தால் இன்னும் இலகுவாக இருக்கும் நிலவா உன்மையை சொன்னால் எனக்கு ஆங்கிலம் என்பது அடிமட்டம் அதனால் மொழி பெயருங்கோ அனுப்பி பார்க்கலாம் எல்லோருக்கும்

நன்றி நிலவா.......

காலம் தாமதிக்காது நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். இருக்கும் காலப்பகுதியை பயனுள்ளதாக்க முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் சேகரித்துக்கொள்ளுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.