Jump to content

வேதாளம் சொன்ன கதைகள் - 2


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது:

"மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் நடந்த ஒரு சம்பவம் அத்தகையதுதான். உனக்கு கூறுகிறேன் கேள்" என்று கூறி பின்வருமாறு கூறியது.

தனி தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று தமிழ் மக்கள் திடமாக நம்பிய பிறகு ஆயுதப்போராட்டம் மேலும் மேலும் வலு கூடிக்கொண்டே போனது. துரோகிகள் களை எடுக்கப்பட்டார்கள். எதிரிகள் அழிக்கப்பட்டார்கள். பன்னாட்டு சமூகம் என்று தம்மை அழைத்துக்கொண்ட கயவர்களின் அங்கீகாரம் இல்லாமலே தமிழ் ஈழம் மலர்ந்து மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ ஆரம்பித்த நேரம்.

போராளிகளின் செயல்கள் எதிரிகளுக்கு உடனுக்குடன் தெரிந்தன. அவற்றில் பல, மூத்த போராளிகள் என்று கவுரவிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். சுதந்திர ஈழ பிரகடனமும் கூட அதில் ஒன்று என்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.

மூத்த போராளிகள் அனைவருமே இயக்கத்திற்காக பல்லாண்டுகாலம் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடியவர்கள் , போராடிக்கொண்டிருப்பவர்கள். யாரையும் சந்தேகப்பட முடியாத நிலை. இந்த நிலையில், போராளிகளின் தலைமையை கொல்லவும் சில முயற்சிகள் நடந்தன.

இந்த நேரத்தில், போராளிகளுக்கு ஆயுதம் ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களில் ஒன்று திடீரென்று நேச நாடு என்று போராளிகள் நம்பிய துரோக நாட்டின் படைகளால் மறிக்கப்பட்டது. அதிலிருந்த மூத்த போராளி ஒருவர், அந்த நாட்டிடம் பிடிபட விரும்பாமல் கப்பலுடன் தீவைத்துக்கொண்டு இறந்து போனார். நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்து கொண்ட போராளிகள், வேறு வழியே இல்லாமல், உயர்மட்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் தனித் தனயே கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள். போராட்டத்தில் அவர்கள் இணைந்தது முதல் யார் யாருடன் அவர்கள் தொடர்பில் இருந்தார்கள், அந்த தொடர்புகள் எப்படிப்பட்டவை என்று அலசி ஆராய்ந்தார்கள்.

தலைவரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய இயக்கத்தின் மூத்த போராளி ஒருவரே துரோகியாக மாறியிருந்தார். அந்நிய நாட்டுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தப்படி, தலைவரை கொல்லவும், இயக்கத்தின் செயல்களை உடனுக்குடன் அவர்களுக்கு தெரியப்படுத்தியும் பல்லாண்டுகாலம் அவர் இயங்கி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இரண்டாண்டுகள் விசாரணை நடந்தது. இயக்க தோழர்கள் அனைவருக்கும் அவருடைய துரோகம் புரிய வைக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சமயத்தில் இயக்கத்தின் மற்றொரு மூத்த போராளியான கலோனேல் கருணா, 'துரோகி கருணா'வாக மாறி இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் எதிரிக்கு சொல்லி,பதிலுக்கு சில எலும்புத்துண்டுகளை பெற்று துரோக வாழ்வு வாழ்ந்து, போராட்ட வரலாறில் மிகபெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டார்.

பிறகு இயக்கம், தன்னை மெதுவாக நிலைநிறுத்தி, எதிரிகளை வென்று, பன்னாட்டு சமூக கயவர்களின் அங்கீகாரத்துடனே சுதந்திர ஈழத்தை நிறுவி, இன்றுள்ள உன்னத நிலையை அடைந்தது."

என்று கூறிவந்த வேதாளம், "மூத்த தளபதிகளில் ஒருவர் செய்த தவற்றை இனம் கண்டுகொண்ட போராளிகள், இன்னொருவர் விஷயத்தில் எப்படி கோட்டை விட்டார்கள்? இன்னொருவரின் துரோகத்தையும் முன்பே அடையாளம் கண்டுகொண்டிருந்தால்அவர்கள் அந்த தற்காலிக பின்னடைவை தவிர்த்திருக்கலாமே? இந்த கேள்விக்கு உனக்கு சரியான பதில் தெரிந்தும் கூறவில்லை என்றால், உன் தலை சுக்கு நூறாக உடைந்து சிதறிவிடும்" என்று கூறியது.

உடனே விக்ரமாதித்யன், " நாம் உண்ணும் உணவும்,பழகும் நண்பர்களும், விவாதிக்கும் விஷயங்களும், பார்க்கும் படங்களும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை தீர்மானிக்கின்றன. நம் ரத்த ஓட்டத்தில் ஒரு வினாடிக்கு அறுபது முறை மந்த குணம், நல்ல குணம், ராட்சத குணம் ஆகிய மூன்றும் மாறி மாறி வருகின்றன. அறிவாளிகள் மிகவும் விழிப்புடனிருந்து தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே நாடுகின்றனர். சஞ்சல புத்திகாரர்கள் தீய எண்ணங்களுக்கு ஆட்பட்டு தீய செயல்களை செய்கின்றனர். இளம்வயது மிகவும் சஞ்சலம் கொண்டது. சென்னை பாண்டி பஜாரின் ஜன நெரிசல்களிலும், 12-B பேருந்தின் நெரிசலிலும் மன கற்போடு பயணம் செய்பவர்கள் மிகவும் குறைவு. உனக்கு சந்தேகம் இருந்தால் நீயே ஒருமுறை பரிசோதனை செய்துகொள்.

போராளிகள் விஷயத்தை பொறுத்தவரை, புலிகளுடன் சேர்ந்து எதிரிகளுடன் இருபதாண்டுகளுக்கும் மேல் போராடியவர், ஜெயசிக்குறு சமரில் எதிரிகளை புறம் கண்ட போராளி கருணா, பேச்சு வார்த்தைக்கு வெளிநாடு சென்றபோது அவருக்கு அங்கு விதம் விதமான வெளிநாட்டு மதுவகைகளும், மிருகம் போல் புணரும் மேல்நாட்டு புணர்ச்சி வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, துரோகம் செய்தால் இவைகளை நிரந்தரமாக அனுபவிக்கலாம் என்று ஆசைகாட்டப்பட்டது. சஞ்சல புத்தி கொண்ட கருணாவும் தன்னுடைய கீழான குணங்களுக்கு அடிமையாகி துரோகியாகவும் ஆனார்.

கருணாவைப் பற்றிய இந்த தகவல்கள் போராளிகளுக்கு கிடைத்தாலும், இயக்கத்தின் முன்னேற்றத்தில் அவருக்கிருந்த பங்கை நினைத்து, சொல்லி திருத்தி விடலாம் என்றே அவர்கள் நம்பினார்கள். அதனால்தான் அவர் மேல் உடனடி நடவடிக்கை எடுக்காமல் பேச கூப்பிட்டார்கள். ஒழுக்கமான இயக்கத்தில் தன்னுடைய ஒழுங்கீனமான செயல்களுக்கு நியாயமாக என்ன தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணிய கருணா, துரோகத்தின் பக்கம் முழுமையாக தாவிவிட்டார். பேசி திருத்திவிடலாம் என்ற போராளிகளின் எண்ணம் இவ்வாறு தோல்வியடைந்தது.

அன்றுமட்டும் அவர் விழிப்புடனிருந்து நல்ல எண்ணங்களை கைகொண்டிருப்பார் என்றால் போராளிகள் இந்த பின்னடவை சந்தித்திருக்க மாட்டார்கள். அவர்கொண்டது திடீர் சபலம். மின்னல் மின்னுவது போல. நீண்ட கால திட்டம் இல்லை.போராளிகள் அதை அடையாளம் கண்டுகொள்ளுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். முன்னைய துரோகியை பொறுத்தவரை அவருடையது நீண்ட கால திட்டம் எனபதால் தகுந்த கண்காணிப்பின் மூலம் இனம் கண்டுகொள்ளுவது சுலபமாய் இருந்தது " என்று கூறினான்.

விகரமாத்திதனின் சரியான இந்த பதிலால் அவனது மவுனம் களையவே, அவன் தோள் மீதிருந்த உடலுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

Posted

வேதாளத்தின் கதைகள் நல்லாய் இருக்கிது. தொடருங்கள். கீழ யாரைச் சொல்லுறீங்கள் என்று விளங்கவில்லை:

"மூத்த தளபதிகளில் ஒருவர் செய்த தவற்றை இனம் கண்டுகொண்ட போராளிகள், இன்னொருவர் விஷயத்தில் எப்படி கோட்டை விட்டார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வேதாளத்தின் கதைகள் நல்லாய் இருக்கிது. தொடருங்கள். கீழ யாரைச் சொல்லுறீங்கள் என்று விளங்கவில்லை:

"மூத்த தளபதிகளில் ஒருவர் செய்த தவற்றை இனம் கண்டுகொண்ட போராளிகள், இன்னொருவர் விஷயத்தில் எப்படி கோட்டை விட்டார்கள்?

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

முதலாமவர் மாத்தையா, இரண்டாமவர் கருணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எட்டப்பன்.. காக்கவன்னியனுக்கு கதை எழுதிப் படிச்சதாலதான் என்னவோ.. அவர்கள் துரோகம் செய்தும் வரலாற்றில் படிக்கப்படுறாங்கள். மறக்கப்படல்ல. அதேபோல எத்தனையோ மக்களின் உயிர்களைக் காவு கொண்ட துரோகிகளுக்கும் கதை எழுதி வையுங்கோ. அவங்கள அடத்த சந்ததிக்கும் கடத்தத்தானே வேணும்.

திறமையான பணி..! கதாசிரியர்கள்.. இலக்கியப்படைப்பாளிகள்.. மாறனும்.. தங்கட உக்திகள மாற்றனும். துரோகிகள் பற்றிய பதிவுகள் அழிக்கப்படனும். வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த தடமே இருக்கக் கூடாது..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எட்டப்பன்.. காக்கவன்னியனுக்கு கதை எழுதிப் படிச்சதாலதான் என்னவோ.. அவர்கள் துரோகம் செய்தும் வரலாற்றில் படிக்கப்படுறாங்கள். மறக்கப்படல்ல. அதேபோல எத்தனையோ மக்களின் உயிர்களைக் காவு கொண்ட துரோகிகளுக்கும் கதை எழுதி வையுங்கோ. அவங்கள அடத்த சந்ததிக்கும் கடத்தத்தானே வேணும்.

திறமையான பணி..! கதாசிரியர்கள்.. இலக்கியப்படைப்பாளிகள்.. மாறனும்.. தங்கட உக்திகள மாற்றனும். துரோகிகள் பற்றிய பதிவுகள் அழிக்கப்படனும். வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த தடமே இருக்கக் கூடாது..! :)

தவறான கருத்து நண்பரே!

தியாகங்களும், துரோகங்களும் வரலாற்றில் கட்டாயமாக பதியப்படவேண்டிய இரண்டு முக்கிய நிகழ்வுகள். தியாகங்கள் உணர்வூட்டவும், உரமூட்டவும், துரோகங்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.