Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

Featured Replies

ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.

நேற்றைய தினமணி நாளிதழில் "தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். "இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்" என்று தொடங்குகிறது அவரது கட்டுரை.

"Loyal than the king" – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய அரசு ராஜபக்சேவுக்குத் துணை நின்றதற்கு எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் போன்ற மலையாளிகளின் தமிழர் விரோத உணர்வுதான் காரணம் என்று நமக்குத் தெளிவு படுத்தியிருந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். மேற்படி மலையாளிகள் போதுமான அளவுக்கு இந்திய மேலாதிக்க உணர்வு இல்லாதவர்கள் என்பதும், நெடுமாறன் அளவுக்கு 'நுண்மான் நுழைபுலமும் அறிவாற்றலும்' இல்லாத கபோதிகள் என்பதும் அவரது கட்டுரையைப் படித்த பின்னர்தான் நமக்கு வெளிச்சமாகிறது.

நேற்றுவரை தொப்பூள்கொடி உறவு, தமிழ்ச் சொந்தங்கள் என்று கூறி ஈழத்தமிழரை ஆதரிக்குமாறு தமிழக மக்களிடம் கூறி வந்த ஐயா நெடுமாறனின் இரத்த நாளங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்திய மேலாதிக்க கொலஸ்ட்ராலின் அளவை இந்தக் கட்டுரை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் உணர்வைத் தூக்கிக் கடாசிவிட்டு, சிங்கள அரசால் ஏமாற்றப்பட்டு விட்ட இந்திய மேலாதிக்கவாதியின் உணர்விலிருந்து, அதாவது பார்ப்பன தேசிய உணர்விலிருந்து அல்லது ஆரிய உணர்விலிருந்து சிந்திக்குமாறு இந்திய தேசபக்தர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் நெடுமாறன். அந்தக் கட்டுரையின் சாரமான பகுதிகளை மட்டும் கீழே தருகிறோம்:

"...ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது."

"1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது...."

"...இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய – இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது..."

"...இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்..."

"...இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்...."

"....இதன்மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும். 1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ளவேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது...."

"...சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை..."

"... பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு கூட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை – சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை..."

"... இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன..."

"...இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் 'இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். 'பிரிட்டன் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுபாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றையமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுபாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்.' "

"அமெரிக்காவுடன் இந்தியா செய்த கொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுபாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது."

" இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை..." – இதுதான் அய்யா நெடுமாறனின் கட்டுரை சாரம்சம்.

ஒரு பெரிய நாடு, தனது சிறிய அண்டை நாட்டை ஆதிக்கம் செய்வது நியாயம். சிறிய நாடு அதற்கு அடங்கி நடப்பதுதான் தருமம். நாடுகளுக்கு இடையிலான சமத்துவம், சுதந்திரம் என்றெல்லாம் ஒரு சிறிய நாடு பேச முடியாது. பேசக்கூடாது என்பதே நெடுமாறனின் கருத்து. "ஈழத்தமிழர்களை ஆதரித்திருந்தால், இந்தியாவின் விசுவாசமிக்க அடிமைகளாக தமிழர்கள் இருந்திருப்பார்கள். இப்படி சிங்களனை நம்பிக்கெட்டாயே பாரதமே" என்று புலம்பியிருக்கிறார் நெடுமாறன்.

இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்குகிறது என்ற காரணத்தினால்தான் இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை அவர் நியாயப்படுத்துகிறார் என்று யாரும் கருதிக் கொள்ளவேண்டாம். இலங்கை அரசுக்கும், அதற்கு துணைநின்ற பாகிஸ்தான் அரசுக்கும் மட்டும் இந்த நியாயத்தை நெடுமாறன் கூறவில்லை. தமிழர்களை எந்த விதத்திலும் ஒடுக்காத, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லா தெற்காசிய நாடுகளும் இயற்கையிலேயே இந்திய மேலாதிக்கத்துக்கு அடிமையாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்கிறார் நெடுமாறன். யாரிடம் ஆயுதம் வாங்குவது, எந்த நாட்டு முதலாளிகளை தொழில் தொடங்க அனுமதிப்பது, எந்த நாட்டுடன் நட்புறவு கொள்வது என்று தீர்மானிக்கும் உரிமை சிறிய நாடுகளுக்கு இருக்க முடியாது என்ற மேலாதிக்க நீதியை நிலைநாட்டுவதற்கு ரவி கவுல் எனும் இந்திய கடற்படை அதிகாரியையும் மேற்கோள் காட்டுகிறார்.

மேலாதிக்கம் என்பது என்ன? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய மக்களுக்கோ, இந்திய அரசால் ஒடுக்கப்படும் தெற்காசிய நாடுகளின் மக்களுக்ககோ என்ன நன்மையைச் செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரணாப் முகர்ஜியோ சிவசங்கர் மேனனோ எப்போதுமே பதில் சொல்வதில்லை. அரூபமான இராணுவ அபாயங்களைக் காரணம் காட்டுவதன் மூலம் மேலாதிக்கத்தை அவர்கள் நியாயப்படுத்துக்கிறார்கள். அதையேதான் நெடுமாறனும் செய்கிறார்.

டாடா, பிர்லா, அம்பானி, இந்துஜா, மிட்டல் போன்ற எந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்காக இந்திய மக்களை இந்திய அரசு ஒடுக்குகிறதோ, அதே முதலாளிகளின் லாப வேட்டைக்கு சிறிய நாடுகளையும் உட்படுத்துவதுதான் மேலாதிக்கத்தின் நோக்கம். எளிமையாகச் சொன்னால், வங்கதேசத்தின் சணல் ஆலைகளை இந்தியத் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டதும், நேபாளத்தின் மின் நிலையங்களையும், ஆற்றுநீரையும், தொழில்களையும் இந்தியா கட்டுப்படுத்துவதும்தான் மேலாதிக்கத்தின் நோக்கம். இதனைப் பாதுகாக்கும் நோக்கத்தை மறைப்பதற்குத்தான் பாதுகாப்பு அபாயம் என்ற புருடாக்கள். வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.

இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கா, குர்து மக்களுக்கு இன உரிமை வாங்கித்தருவதற்கா? இராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்க கம்பெனிகள் அபகரித்துக் கொள்வதற்குத்தான் அந்தப் போர் என்பது பாமரனும் அறிந்த உண்மை. சிறிய நாட்டின் மக்களுக்குச் சொந்தமான தொழில்களையும், இயற்கை வளங்களையும் பெரிய நாடு ஆக்கிரமித்துக் கொள்வதும், ஆதிக்கம் செய்வதும் நியாயம்தான் என்பதே நெடுமாறனின் வாதம். எனவேதான் இந்தியாவின் புவிசார் நலன்கள் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், இந்திய மேலாதிக்கம் என்று பச்சையாகச் சொல்லியே அதனை ஆதரிக்கிறார். நெடுமாறன் முதலான தமிழ்த் தேசியவாதிகளும், தமிழக ஓட்டுக் கட்சிகளும் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிக்கும் மனோபாவத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். "நேபாளத்தை ஒடுக்குகிறாயா ஒடுக்கு, வங்கதேசத்தை சுரண்டுகிறாயா சுரண்டு, சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எங்களுக்கு மட்டும் உதவி செய்" என்று கேட்கும் அநீதிக்கும் அடிமைத்தனத்திற்கும் அவர்களைப் பழக்கியிருக்கிறார்கள்.

நெடுமாறன் கூறுகின்ற நியாயப்படி தனது பாதுகாப்புக்கு கியூபாவும், வெனிசூலாவும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற அமெரிக்காவின் கவலையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளில் அமெரிக்கா நடத்தும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் நியாயமானவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அயர்லாந்தை ஒடுக்கியதும் நியாயம். தற்போது நேபாளத்தில் இந்தியா நடத்தியிருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பும், வங்கதேசத்திலும், மாலத்தீவிலும் நடத்திய தலையீடுகளும், சிக்கிமை இணைத்துக் கொண்டதும் நியாயமே.

ஒரு சிறிய நாடு, பெரிய அண்டை நாட்டுடன் சம உரிமை கோர முடியாது. பெரிய நாடு என்பது ண்டை நாடல்ல, ண்டை நாடு என்று வலியுறுத்துகிறார் நெடுமாறன். இதே நியாயத்தைத் தான் ராஜபக்சேவும், ஜாதிய ஹெல உறுமயவும் தமிழர்களிடம் கூறுகிறார்கள். பெரிய இனத்துடன் சிறிய இனம் எப்படி சம உரிமை கோர முடியும் என்பதுதானே அவர்களது கேள்வி. அவர்கள் மட்டுமா? பெரும்பான்மை இந்துக்களுடன சிறுபான்மை முஸ்லீம்கள் எப்படி சம உரிமை கோர முடியும் என்று கேட்கிறார் மோடி. பெரும்பான்மை சாதி இந்துக்களுக்கு சிறுபான்மை தலித் எப்படி ஊராட்சித் தலைவராக வரமுடியும் என்று கூறித்தான் மேலவளவு முருகேசனை வெட்டினார்கள் தேவர் சாதி வெறியர்கள். "இந்திய மேலாதிக்கம் ஏமாந்துவிட்டதே" என்று பதறித்துடிக்கும் ஐயா நெடுமாறனின் உணர்வும், "சாதி ஆதிக்கம் சரிந்து விட்டதே" என்று குமுறும் ஆதிக்க சாதி ஆண்டையின் உணர்வும் எந்தவகையில் வேறுபட்டவை என்பதை தமிழ் உணர்வாளர்கள்தான் விளக்க வேண்டும்.

ஒருவேளை, நெடுமாறனின் ஆதரவு பெற்ற புரட்சித்தலைவி 40 தொகுதியிலும் வென்று தமிழ் ஈழத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் அதன்பின் இலங்கையில் என்ன நடக்ககக் கூடும்? ஈழத்தமிழர்கள் இந்தியாவின் அடிமைகளாகி இருப்பார்கள். சீனாவின் அடிமைகளாக சிங்களர்கள். அதன்பின் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கக் கூடிய பதிலிப்போரில், இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, சீனக்கைக்கூலி சிங்கள அரசுக்கு எதிராக, ஈழத்தமிழ் அடிமைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடத்தி தங்களைக் காவு கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

வேறுவிதமாகச் சொன்னால், இன்று கருணாநிதி செய்த அதே வேலையை செய்யும் "அதிகாரம்' பிரபாகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் யாரிடம் ஆயுதம் வாங்குவது, தமிழ் ஈழத்தில் யார் ரோடு போடுவது, கடை போடுவது என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் டாடா, பிர்லா, அம்பானிக்குக் கிடைத்திருக்கும். "அத்தகைய பொன்னான வாய்ப்பை கெடுத்து விட்டாயே நாராயணா" என்று தலையிலடித்துக் கொள்கிறார் நெடுமாறன்.

முன்னர் சீனப்போரைக் காரணம் காட்டி திராவிட நாட்டை மூட்டை கட்டினார் அண்ணா. இன்று அதே சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தில் தனிநாடு வாங்கித்தரச் சொல்கிறார் நெடுமாறன். "திராவிடத்தால் வீழ்ந்தோம்! – திரவிட, திரமில, தமில, தமிழ – எனவே தனித் தமிழ்நாடுதான்" என்றெல்லாம் முழங்கி, 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக சுற்றி வந்து சேர்ந்திருக்கும் இடம் சீரங்கம். எங்க சுத்தியும் ரெங்கனைச் சேவி! எல்லாம் பேசிவிட்டு கடைசியில் "சீன அபாயத்திலிருந்து பாரதத்தைக் காப்பாற்றும் விபீஷணாழ்வார்கள் ஈழத்தமிழர்கள்தான்" என்று பகவான் நாராயணனுக்கு அவதார ரகசியத்தைப் புரிய வைக்கிறார் நெடுமாற முனிவர்.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமை தனக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதாலும், இந்து மாக்கடல் பகுதியில் தான் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்பதனாலும்தான் சீனா இலங்கை அரசுக்கு உதவுகிறது என்கிறார் நெடுமாறன்.

இந்து மாக்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்ற கேள்வி மட்டும் அவருக்கு எழும்பவேயில்லை. தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்ய இயற்கையாகவே இந்தியா பெற்றுள்ள உரிமையை அங்கீகரிக்கும் அவருடைய ஆதிக்க சிந்தனை, உலகை மேலாதிக்கம் செய்வதற்கு இயற்கையாகவே அமெரிக்கா பெற்றுள்ள உரிமையையும் அங்கீகரிக்கத் தானே செய்யும்? புரியும்படி சொல்லவேண்டுமானால், தலித் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதைத் தங்களது பிறப்புரிமையாகக் கருத்தும் சாதி இந்துக்கள், பார்ப்பன மேலாண்மையை இயற்கையாகவே அங்கீகரிப்பது போலத்தான் இதுவும்.

சீனாவையும் ரசியாவையும், அந்நாடுகளின் கடல்வழிப் பாதைகளையும் உலக அளவில் முற்றுகையிட்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் உலகப் போர்த்தந்திர வியூகத்தில் தெற்காசியாவின் அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இராணுவ ஒப்பந்தம் ஆகியவற்றின் நோக்கம் அதுதான். இதற்கு சீனா வகுத்திருக்கும் எதிர் வியூகம் இந்தியாவைச் சுற்றி வளைப்பது. சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பது மட்டுமல்ல, பர்மாவின் இராணுவ ஆட்சியையும் சீனா ஆதரிக்கிறது. பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மூலம் மலாக்கா நீரிணையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதால், அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து பர்மாவுக்கு 1300 கி.மீ நீள எண்ணெய் குழாயும் அமைக்கிறது. மேலை நாடுகளோ பர்மாவில் ஆங் சாங் சுயியை ஆதரிக்கின்றன.

இதுதான் ஆட்டம். அமெரிக்காவின் தற்போதைய உலக மேலாதிக்கத் திட்டம், அதற்குப் போட்டியாக சீனாவும் ரசியாவும் இணைந்து 2005 இல் உருவாக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, அதில் சேருமாறு ரசியாவும் சீனாவும் இந்தியாவை அழைத்த மறுகணமே நடைபெற்ற கண்டலிசா ரைஸின் டெல்லி விஜயம், அமெரிக்க இந்திய அணுசக்தி- இராணுவ ஒப்பந்தங்கள், அதன் தொடர்ச்சியாக ஜப்பானுடன் இணைந்து சீனக்கடற் பகுதியில் இந்திய கடற்படை நடத்திய கூட்டுப்பயிற்சி, தற்போது டாலர் மேலாதிக்கத்தை அசைக்க சீனாவும் ரசியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள்.. இவை பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமல்ல. ஆனால் சீனாவையும், இந்தியாவையும், பாகிஸ்தானையும், ரசியாவையும், கியூபாவையும், வெனிசூலாவையும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அணிவகுக்கச் செய்த காரணிகளில் முக்கியமானவை இவை.

ஒரு இனப்படுகொலைக்குத் துணை நின்ற குற்றத்துக்காக சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் கண்டிப்பதென்பது வேறு. இந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்டும் பொருட்டு சீனத்தை கண்டிப்பது என்பது வேறு. நெடுமாறனோ, இந்திய மேலாதிக்கத்தின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதற்காகக் கண்ணீர் விடுகிறார்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக நெடுமாறன் தமிழில் எழுதியிருக்கும் இந்தக் கருத்துகளை, இந்தியில் மொழிபெயர்த்தால் உடனே அதன் கீழே கையெழுத்துப் போட்டு தன்னுடைய சொந்த அறிக்கையாகவே வெளியிட்டுவிடுவார் அத்வானி. இதே கருத்துகளை அத்வானி இந்தியில் சொன்னால் அதன் பெயர் பார்ப்பன இந்து தேசியம். அதையே நெடுமாறன் தமிழில் சொல்லும்போது அதற்குப் பெயர் தமிழ்த் தேசியம்.

நெடுமாறனிடம் இயல்பாக வெளிப்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு ராஜதந்திர ஆலோசகர் என்ற முறையில் சூழ்நிலையையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தி சவடால்களை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வைக்குமாறும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியத் துருப்புகளை வாபஸ் பெறுமாறும் ஒபாமா மன்மோகனுக்கு உத்தரவிட்டு, இந்தியப் படையையும் வாபஸ் வாங்கியாகிவிட்டது. இதுபற்றி அத்வானி கூட சவுண்டு கிளப்பவில்லை என்பதை நெடுமாறன் கவனிக்கவேண்டும். அமெரிக்க ஆசியுடன் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட தலிபானை ஒழிப்பதற்கான போரில் பாகிஸ்தானே இப்போது ஈடுபட்டிருக்கிறது - புலிகளை ஒழிப்பதற்கு இந்தியாவே போரில் ஈடுபட்டதைப் போல. தலிபானை முடித்த பின் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் பாகிஸ்தானையும் "பாய்.. பாய்" சொல்லவைப்பது அமெரிக்காவின் திட்டம்.

"எனவே சீன எதிர்ப்பு இந்திய தேசியம்தான்" அமெரிக்காவின் இப்போதைய திட்டமாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ராணுவத்தை வாபஸ் வாங்கிய மன்மோகன் அரசு, படையை சீன எல்லைக்கு அனுப்பியிருக்கிறது. எனவே "இலங்கையின் மூலம் தென்னிந்தியாவுக்கு சீன அபாயம்" என்று நெடுமாறன் ஊதியிருக்கும் 'தமிழ்ச்சங்கு' டெல்லியின் காதில் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

யார் கண்டது? "ரவிசங்கர் கொடுத்த சி.டியைப் பார்த்தேன். தமிழ் ஈழம்தான் தீர்வு" என்று ஜெயலலிதா சொல்வார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா என்ன? "சிவசங்கர் (மேனன் தான்) கொடுத்த சி.டியைப் பார்த்தேன். ஈழம்தான் தீர்வு" என்று நாளை மன்மோகனும் சொல்லக்கூடும். டாலர் ஆதிக்கத்துக்கு அபாயம் அதிகரிக்க அதிகரிக்க, தெற்காசியாவில் சீன அபாயமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. 5 வது ஈழப்போரை அமெரிக்காவின் ஆசியுடன் மீண்டும் ரா (RAW) ஸ்பான்சர் செய்வதற்கும் வாய்ப்புண்டு.

"தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்" என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், "இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்" என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் உண்மையான ராஜவிசுவாசிகளின் உணர்வை என்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

என்ன செய்வது? பாகிஸ்தானை உடைத்த துர்க்காதேவி என்று வாஜ்பாயியால் புகழப்பட்டவரும், இந்திய மேலாதிக்கத்தின் அன்னையுமான இந்திராவின் உயிரைக் காப்பாற்றியதற்காகத்தான் ஐயா நெடுமாறனுக்கு "மாவீரன்" பட்டம் கிடைத்தது என்ற வரலாற்று உண்மை கூடத் தெரியாத மரமண்டைகள் டெல்லி அதிகாரவர்க்கத்தில் நிரம்பியிருக்கும்போது, உண்மையான ராஜ விசுவாசிகள் சந்தேகிக்கப் படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

"அடிமையாக இருக்கிறேன் என்று தமிழன் ஆயிரம் முறை சொன்ன பிறகும் தமிழன் மீது நம்பிக்கை வைக்காமல், சிங்களனோடு சேர்ந்து கொண்டு தமிழினத்தைக் கருவறுத்திருக்கிறது இந்திய அரசு என்றால், அதற்குக் காரணம் ஆரியம் அன்றி வேறு என்ன?" என்று தமிழர் கண்ணோட்டம் இதழில் குமுறியிருக்கிறார் மணியரசன். நியாயம்தானே! "அடிமைச் சேவகம் செய்கிறேன்" என்று மன்றாடிய பிறகும் அந்த அடிமையின் விசுவாசத்தை மதிக்கவில்லை என்றால், அப்படிப்பட்ட ஆண்டைக்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்துவதைத் தவிர ஒரு அடிமைக்கு வேறு என்ன வழி இருக்கமுடியும்?

எனினும் மணியரசனைப் போல ஐயா நெடுமாறன் கோபப்படவில்லை. தினமணி கட்டுரையின் மூலம் டெல்லிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ராஜவிசுவாசம் நிரம்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கையில் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இந்திய தேசியத்தையும், மேலாதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் ராஜவிசுவாசத்தை அலட்சியப் படுத்துவதன் மூலம் விடுதலைக்குப் போராடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதா என்பதை டெல்லி ஆண்டைகள் முடிவு செய்தாக வேண்டும்.

எந்த நாட்டின் வரலாற்றிலும் ஆண்டை வர்க்கம் சந்தித்திருக்கவே முடியாத சவால் இது.

பின் குறிப்பு:

1. ஈழத்தின் இனப்படுகொலையை வழிகாட்டி இயக்கியது மட்டுமின்றி, இறுதி நாட்களில் புலிகள் இயக்கத் தலைவர்களை அடையாளம் கண்டு கொலை செய்வதற்கு சிங்கள இராணுவத்துடன் ரா அதிகாரிகளும் உடனிருந்தனராம். இந்திய அரசின் கொடூரம் குறித்து, நமக்கெல்லாம் தெரியாத ஏராளமான பல உண்மை விவரங்கள் ஐயா நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இந்திய தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்த, தேசிய கீதத்துக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்த பல வெவரங்கெட்ட தேசபக்தர்களுக்குக் கூட ஈழப்படுகொலைக்குப் பின்னால் 'பக்தி' போய்விட்டது. ஆனால் ரொம்பவும் வெவரமா ஐயாவுக்ககோ, தேச பக்தி மட்டுமல்ல, மேலாதிக்க வெறியும் ஒரு மில்லி கூட இறங்கவில்லை. குடிமகன் என்றால் இவரல்லவோ இந்தியக் குடிமகன்!

2. தினமணி கட்டுரையைப் படித்த தேசபக்தர் ஒருவர், "ஏங்க, ஐ.ஏ.எஸ் படிச்சவனைத்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா நியமிக்கணுமா? இந்த மரமண்டை நாராயணனுக்குப் பதிலா நெடுமாறனை அந்த போஸ்ட்ல நியமிக்க கூடாதா என்ன?" என்று கேட்டார்.

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திகைத்துப் போனேன். கலைஞர் தொலைக்காட்சியில் 23 ஆம் புலிகேசி ஓடிக்கொண்டிருந்த்து. "கககபோ" என்றார் வடிவேலு.

இதிக்கி மேலா நாஞ்சொல்றதுக்கு என்ன இருக்கி?

கருத்துப்படத்தை காண

வினவு தளத்திலிருந்து http://www.vinavu.com/2009/06/18/nedumaran/

இதன் மறுமொழிகள் http://www.vinavu.com/2009/06/18/nedumaran/#comments

தொடர்புடைய இடுகைகளின் தொகுப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கட்டுரையை இங்கு இணைத்ததன் நோக்கம்?.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கட்டுரையை இங்கு இணைத்ததன் நோக்கம்?.....

இந்தியாவை அழிப்பதற்கான செயல்களை, உங்களை இறங்க ஆயத்தம் செய்யட்டாம். :)

இந்தக்கட்டுரையை இங்கு இணைத்ததன் நோக்கம்?.....

ஈழப்பிரச்சினையில் துரும்பைக்கூட அசைக்காதவர்கள், ஈ.பி.டி.பியுடன் கள்ள உறவு வைத்திருப்பவர்கள், புலிப்பாசிசம் புலிப்பாசிசம் என தூக்கத்தில் கூட முணுமுணுத்தவர்கள் இப்போ குழம்பிய குட்டையில் "ஈழச்சுறா" பிடிக்க கிளம்பிருக்கிறார்கள்.

அடுத்தவனை விமர்சிக்கும் முன் தன் தலைமையின் "தீடீர்" சொந்த சாதி திருமணம் குறித்து இதைப்போல முழநீள வியாக்கியான கட்டுரை எழுத தோழர் முன்வரட்டும்.

இது போன்ற பதிவுகளை அனுமதிப்பதன் மூலம் யாழ் களம் நடுநிலையுடன் இருக்கிறது என குதர்க்கவாதிகளும் , காலமெல்லாம் இயக்கத்தையும் அதன் தலைமையையும் விமர்சனம் என்கிற பெயரில் ஏசி மகிழ்ந்தவர்களிடம் நற்சான்று பெற்றால் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

கக்க கக்கபோ வினவு, ஏனய்யா தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்க முற்பட்டிருக்கும் இத்தாலிச்சி சோனியா பற்றி உங்களால் ஒரு கட்டுரை வடிக்க முடியுமா என எதிர்பார்க்கிறேன். ஏதோ சனநாயக நாட்டில் வாழ்வதாக சொல்கிறீர்கள். எங்கே பார்ப்போம் உங்கள் துணிவை"வினவு".

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பழ. நெடுமாறன் அவர்களால் தான் எழுதப்பட்டது.!!!

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=1

  • தொடங்கியவர்

ஈழப்பிரச்சினையில் துரும்பைக்கூட அசைக்காதவர்கள், ஈ.பி.டி.பியுடன் கள்ள உறவு வைத்திருப்பவர்கள், புலிப்பாசிசம் புலிப்பாசிசம் என தூக்கத்தில் கூட முணுமுணுத்தவர்கள் இப்போ குழம்பிய குட்டையில் "ஈழச்சுறா" பிடிக்க கிளம்பிருக்கிறார்கள்.

அடுத்தவனை விமர்சிக்கும் முன் தன் தலைமையின் "தீடீர்" சொந்த சாதி திருமணம் குறித்து இதைப்போல முழநீள வியாக்கியான கட்டுரை எழுத தோழர் முன்வரட்டும்.

இது போன்ற பதிவுகளை அனுமதிப்பதன் மூலம் யாழ் களம் நடுநிலையுடன் இருக்கிறது என குதர்க்கவாதிகளும் , காலமெல்லாம் இயக்கத்தையும் அதன் தலைமையையும் விமர்சனம் என்கிற பெயரில் ஏசி மகிழ்ந்தவர்களிடம் நற்சான்று பெற்றால் மகிழ்ச்சியே.

உங்கள் விமரிசனம் என்னவென்று புரியவில்லை, விளக்கினால் நலம். அடுத்து இந்த கட்டுரையில் இந்திய மேலாதிக்கம் தோற்றதற்கு வருத்தப்பட்டு அய்யா நெடுமாறன் எழுதிய கட்டுரையின் மீதான விமரிசனம்தான் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் மேலாதிக்கம் என்பது அண்டை நாடுகளை வல்லாதிக்கம் செய்யும் அமெரிக்காவின் ஆசிபெற்ற ரவுடித்தனம். இந்த ரவுடித்தனத்தினால்தான் ஈழம் இன்று பிணக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இன்று இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கையை குளிப்பாட்டுகின்றன. இந்த விசயத்தில் இந்தியா தோல்வியுற்றதென நெடுமாறன் வருத்தப்படுவது ஏன்? இப்படி இந்தியாவின் அக்மார்க் தேசபக்தராக நெடுமாறன் உருவெடுத்த்தை இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது. இதை தவறு என்று சொல்வர்கள் தங்களை வாதங்களை முன்வைக்கட்டும். அதை விடுத்து ஏன் இந்தக் கட்டுரையை இங்கே பதிவீட்டீர்கள் என்று கேட்பதில் என்ன பொருள்? நாங்கள் ஆதிக்கம் செய்யும் இந்தியாவை எதிர்க்கிறோம். அந்த இந்தியாவை நெடுமாறன் உச்சிமோர்கிறார். அதை ஈழத்தமிழ் மக்கள் அறிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே பதிவு செய்தோம். நன்றி

நட்புடன்

வினவு

வினவு!

திரு.பழ.நெடுமாறன் ஐயா எழுதிய கருத்தில் தவறு எதுவுமில்லை என்றே தோன்றுகின்றது. அவரது நிலையில் இருந்துகொண்டு அவரது தாய்நாடு எந்தளவுக்கு ஈழத்தமிழரை அழிக்கத் துணைபோயிருக்கின்றது என்பதனையும், அதற்காக அந்நாடு எதனைப்பற்றியும் கவலைப்படாமல்,கருத்தில் எடுக்காமல் செயற்பட்டது என்பதனையும் சுட்டிக்காட்ட முனைந்திருக்கின்றார் என்றே தென்படுகின்றது.

திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் நமது ஈழப் போராட்டத்திற்கான பெரும் ஆதரவாளர். அவரை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகவும் எளிமையானவர்,நேர்மையானவர்.

மற்றவர்களைப்போல் எடைபோட்டு இவரையும் களங்கப்படுத்த வேண்டாம்.

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இந்தியாவும்இ சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கையை குளிப்பாட்டுகின்றன. இந்த விசயத்தில் இந்தியா தோல்வியுற்றதென நெடுமாறன் வருத்தப்படுவது ஏன்?

நெடுமாறன் ஐயா ஒன்றும் இந்தியாவுக்காக வருத்துப்படவில்லை வருத்தப்படவும் மாட்டார் ஏனெனில் அவர் ஒரு தமிழன். அண்ணன் பருத்தியன் சொல்வது போல் இந்தியா ராஐதந்திர ரீதியாக இலங்கை மற்றும் தெற்காசியாவில் தோல்வி அடைந்ததை ஐயா சுட்டிக்காட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வினவு,

நெடுமாறன் அவர்கள் தன்னால் முடிந்த சகல வழிகளிலும் ஈழத் தமிழன் துயர் நீக்கப் போராடி வருபவர். இதை நீங்கள் ஏற்க மறுத்தாலும் எம் எல்லாருக்கும் அது நன்கு தெரிந்த விடயமே. அவரின் இந்த அறிக்கையின் உண்மையான அர்த்தம் தெரியாது நுணிப்புல் மேய்வதன் மூலம் நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மையை என்னவென்று சொல்ல? அதாவது, இந்தியா தனது மேலாதிக்க வாதத்திலிருந்து சிந்தித்திருந்தாலாவது சீனாவும், பாக்கிஸ்த்தானு பிண்ணும் நாசவலை புரிந்திருக்கும் . ஆனால் அது கூட நடக்கவில்லையே என்று தான் ஆதங்கப்பட்டிருக்கிறார். இது தெரிந்திருந்தும் அவர் "இந்திய மேலாதிக்க வாதத்தை தூக்கிப்பிடிக்கிறார்" என்று வாதாடுவது உங்களின் நோக்கத்தின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டி விடுகிறது.

ஈழ விடுதலைக்காக இன்று தமிழ் நாட்டில் ஓயாது போராடும் ஒரு சிலரில் நெடுமாறனும் ஒருவர். ஆகவே அப்படியானவர்களை கேவலப்படுத்துவதன் மூலம் எமது எதிரிகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். முடிந்தால் உண்மையான இந்திய மேலாதிக்க வெறிபிடித்த அரக்கி பற்றியும் அவளது அனுபவமும், அறிவுமற்ற பிள்ளைகள் பற்றியும் அவர்கள் எமக்குச் செய்த அட்டூழியம் பற்றியும் எழுதுங்கள்.

நெடுமாறன் இந்திய மேலாதிக்கவாதியா அல்லது ஈழ விரும்பியா என்கிற ஆராய்ச்சிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

நண்பர்களே,

நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம். இங்கே இந்தியா என்னென்ன அட்டூழியம் செய்கிறது என்பதை நாம் அறிவோம். ஈழத்தில் மட்டுமல்ல, நேபாளத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, காஷ்மீர், வடகிழக்கில் ராணுவ ஒடுக்குமுறை, அப்புறம் இந்தியாவில் உள்ள முசுலீம்களை பயங்கரவாதிகளாய் சித்தரிப்பது இப்படி இந்தியாவின் அடக்குமுறைக்கு ஆயிரம் எடுத்துக் காட்டுகள் சொல்லலாம். இப்படி இந்தியா என்னவேண்டுமானாலும் அட்டூழியம் செய்யட்டும், அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் ஈழத்தை மட்டும் ஆதரிக்கவேண்டும் என்பதுதான் நெடுமாறனின் கருத்து. பரவலான ஈழத்தமிழர்களும் இந்த கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். எந்த நீதியின்பால் ஈழத்திற்காக இந்திய வல்லாதிக்கத்தை கண்டிக்கிறோமோ அதே நீதியின்பாற்பட்டு இந்தியாவின் மற்ற ஆதிக்க வன்முறைகளையும் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈழத்திற்காக நாம் பேசும் செய்யும் போராட்டங்களுக்கு தார்மீக வலிமை இருக்காது. இதைத்தான் எமது கட்டுரை குறிப்பாக உணர்த்த விரும்புகிறது. அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை என்பது எமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

நட்புடன்

வினவு

நெடுமாறன் அவர்கள் ஈழமக்கள் மீதும் தமிழர்கள் மீதும் பற்றுள்ளவர். தமிழின அழிப்புக்கு துணை போன இந்தியாவிற்கு உணர்த்தவே (தவறான இராஜ தந்திரம்)இக்கட்டுரையை தினமணிக்கு எழுதினார்.

அதுசரி உங்களைப் போன்றவர்கள் கடந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் நாடகங்கள் காரணமாக தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். ஈழத்தமிழர்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை விட ஈழத்தமிழர்களைக் கொலை செய்ய உதவி புரிந்த காங்கிரசுக் கூட்டணி வெற்றி பெறுவது தான் கூடாது என்பதைப் புரியாமல் நீங்கள் வாக்களிக்காது காங்கிரசுக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து விட்டீர்களே. இதைப் பற்றி என்ன சொல்வது?

அவுஸ்ரெலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று இந்தியா கொந்தளித்தது ,அமிதாப்பச்சனும் குரல் கொடுத்தார்,.தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டு,கொலை செய்யப்பட்ட பொழுது இந்திய மாணவர் கள் குரல் கொடுக்கவில்லையே ஏன்?இந்திய எகாதிபத்திய மாணவர்கள்,உழைக்கும் மீனவர் வர்க்கம் என்று சொல்லி ஒரு கட்டுரை எழுதுங்கோ அடுத்தமுறை

இப்படி நெடுமாறன் அண்ணாவின் கூற்றை போலவே பலமுறை விடுதலைப்புலிகளும் கூறி இருக்கிறார்கள்... அதுக்கேற்ப செயற்பட்டும் இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு,

அன்று முதல் இன்று வரை எமக்காக எந்தநிலையிலும், தளராது, தன்னிலை மாறாது குரல் கொடுத்து வருபவர், எமது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பழ நெடுமாறன் ஐயா அவர்கள் என்பது உம்போன்றோருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சராசரி அறிவுள்ள எந்த தமிழீழத்தவனும் அதை அறிவான். தங்கள் நோக்கம் ஐயாமீது கரி பூசுவது என்பது தங்கள் கட்டுரையை வாசிக்கும் போதே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் வடிவேலு காமெடியுடன் (உங்கள் மொழிநடையில்) முடிப்பது நீங்கள் எமது பிரச்சினையை அணுகும் முறையை தெளிவு படுத்துகிறது. நீங்கள் உண்மையிலேயே எம்மீது அக்கறை கொண்டால் ஏன் இன்னும் எமது பிரச்சினையை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் எந்த அரசியல் வாதியையும் எழுதி கிழிக்கவில்லை. தானே உலகத்தமிழரின் தலைவர் எனத்தம்பட்டம் அடித்து தன் குடும்பத்துக்கு தமிழ் நாட்டை எழுதி வைப்பதற்காக எமது இரத்தத்தை குடித்தபுறம்போக்கு கிழட்டு நரி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.எங்கிருந்தோ வந்த இத்தாலிக்கழுதைக்கு குடை பிடிக்கும் மானங்கெட்ட தமிழன் எவரையும் பற்றி எதுவும் எழுதவில்லை. உங்கள் சுயரூபத்தைக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி.

இந்த வினவு இடுகைகளை தூக்குவதுதான் நமக்கு நல்லது. தேவையில்லாமல் நம் நேரம் வீணாகிறது இந்த சிங்களவனால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வினவு இடுகைகளை தூக்குவதுதான் நமக்கு நல்லது. தேவையில்லாமல் நம் நேரம் வீணாகிறது இந்த சிங்களவனால்,

உரியவர்கள் செய்வார்களா? கருத்துச்சுதந்திரம் தேவைதான், ஆனால் தமிழீழ்த்தவனுக்கு இதைவிடப்பல முக்கிய கடமைகள் உள்ளன.

தோழர்.வினவு அவர்களே, சீனாவின் ரசியாவின் கூபாவின் ஈழபடுகொலைகளுக்கு எதிரான நிலைபாடு குறித்து இது போல நீட்டி முழக்கி எழுதிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

அனைத்திந்திய அல்லக்கை சுப்பிரமணியசாமியை அதற்கு முன் எவ்வளவோ வாய்ப்பிருந்தும், தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினைக்காக இனவுணர்வை துருத்தியாய் ஊதி பல்வேறு தரப்பினரையும் தெருக்களில் போராடவைத்துக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை திசை திருப்பவே இந்திய உ(இ)ளவுத்துறையின் ஏற்பாட்டில் அன்றைய தாக்குதல் நடைபெற்றது என்றும் அதில் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பங்கும் பிரதானமாய் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே அது குறித்து நீட்டி முழங்கி கட்டுரை ஒன்றை தூக்கி போட்டிருந்தீர்கள் என்றால் "கச்சிதமாக கவ்விக்கொண்டிருப்போம் போங்கள்". அதை விடுத்து நெடுமாறன் அய்யாவை நோக்கி"தலையாட்டும்" உங்கள் ஆள்காட்டும் பருப்பு வேகாது .

  • தொடங்கியவர்

நெடுமாறன் அவர்கள் ஈழமக்கள் மீதும் தமிழர்கள் மீதும் பற்றுள்ளவர். தமிழின அழிப்புக்கு துணை போன இந்தியாவிற்கு உணர்த்தவே (தவறான இராஜ தந்திரம்)இக்கட்டுரையை தினமணிக்கு எழுதினார்.

அதுசரி உங்களைப் போன்றவர்கள் கடந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் நாடகங்கள் காரணமாக தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். ஈழத்தமிழர்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை விட ஈழத்தமிழர்களைக் கொலை செய்ய உதவி புரிந்த காங்கிரசுக் கூட்டணி வெற்றி பெறுவது தான் கூடாது என்பதைப் புரியாமல் நீங்கள் வாக்களிக்காது காங்கிரசுக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து விட்டீர்களே. இதைப் பற்றி என்ன சொல்வது?

அய்யா தமிழின அழிப்புக்கு துணை போன இந்தியாவிற்கு எதை உணர்த்த நெடுமாறன் விரும்புகிறார்? இதனால் இந்தியாவின் மேலாதிக்க ராஜதந்திரம் தோற்றுபோனது என்றால் அது ஜெயித்திருக்க வேண்டும் என்பதும் அதாவது ஈழத்தை ஆதரிக்கும் இந்தியாவின் மேலாதிக்கம் வெல்லும் என்றால் அதன் பொருள் என்ன? இதைத்தானே கட்டுரையில் எழுதியிருக்கிறோம். பொறுமையாக படியுங்கள்.

நாங்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் காங்கிரசு வெற்றி பெறவில்லை. சொல்லப்போனால் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு விகிதம் அதிகம். ஏற்கனவே யாழில் இந்த தேர்தலில் ஈழம் மக்களிடன் முக்கிய பிரச்சினையாக இல்லை என்றும் அதற்கு தமிழக மக்களிடன் எல்லா பெரிய கட்சிகளும் ஈழப் பிரச்சினையை உண்மையாக கொண்டு செல்ல வில்லை என்றும் எழுதியிருந்தோம். இங்கு உள்ள அரசியல், சமூக பிரச்சினைகள், பணபலம், ஊழல், முறைகேடு எல்லாம் சேர்ந்துதான் தி.மு.க கூட்டணியின் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கின்றன. ஜெயாவின் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற நாடகத்தை தமிழக மக்கள் நம்பவில்லை.

வினவு

  • தொடங்கியவர்

தோழர்.வினவு அவர்களே, சீனாவின் ரசியாவின் கூபாவின் ஈழபடுகொலைகளுக்கு எதிரான நிலைபாடு குறித்து இது போல நீட்டி முழக்கி எழுதிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

அனைத்திந்திய அல்லக்கை சுப்பிரமணியசாமியை அதற்கு முன் எவ்வளவோ வாய்ப்பிருந்தும், தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினைக்காக இனவுணர்வை துருத்தியாய் ஊதி பல்வேறு தரப்பினரையும் தெருக்களில் போராடவைத்துக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை திசை திருப்பவே இந்திய உ(இ)ளவுத்துறையின் ஏற்பாட்டில் அன்றைய தாக்குதல் நடைபெற்றது என்றும் அதில் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பங்கும் பிரதானமாய் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே அது குறித்து நீட்டி முழங்கி கட்டுரை ஒன்றை தூக்கி போட்டிருந்தீர்கள் என்றால் "கச்சிதமாக கவ்விக்கொண்டிருப்போம் போங்கள்". அதை விடுத்து நெடுமாறன் அய்யாவை நோக்கி"தலையாட்டும்" உங்கள் ஆள்காட்டும் பருப்பு வேகாது .

ரசியா ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதையும், சீனாவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும் இரண்டு நாடுகளுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மக்களிடம் விளக்கியிருக்கிறோம். மற்றபடி சீனா ஒரு கம்யூனிச நாடு என்பதை போலிக்கம்யூனிஸ்டுகள்தான் கூறி வருகிறார்கள். சீனாவை கம்யூனிச நாடு இல்லை என்றதற்காக அன்று எங்களை சி.ஐ.ஏ கைக்கூலிகள் என்று சொன்னார்கள். ஆனால் வரலாறு யார் கைக்கலி என்பதை நீருபித்து இருக்கிறது.

அடுத்து இந்திய மேலாதிக்கத்திற்கு வால் பிடிக்கும் நெடுமாறனை அம்பலப்படுத்தினால் நாங்கள் "ரா'வின் கைக்கூலிகள் என்று பொய் சொல்வதில்கூட பொருத்தமின்றி உளறும் நண்பரே உங்கள் போராளிகள் தமிழகத்தில் அதே ரா வின் ஆசியோடு பயிற்சி எடுக்கும்போதே இது ஈழ விடுதலைக்கு எதிராகத்தான் முடியும் என்று அப்போதே சொன்னோம். தேவைப்பட்டால் இந்திய உளவுத்துறையோடு நட்பும், தேவையில்லாவிட்டால் மற்றவர்களை இந்திய உளவுத் துறையின் கைக்கூலிகள் என்று மாய்மாலம் செய்வது நிச்சயம் நாங்களல்ல.

அடுத்து ராஜீவ்காந்தி கொலையின் போது உங்கள் அய்யா நெடுமாறன் மற்றும் பல புலி ஆதரவாளர்கள் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று அஞ்சி ஒளிந்த போது ராஜீவ் கொலை ஈழத்தில் ஆக்கிரமிக்கு செய்த இந்திய மேலாதிக்க வெறியர்களுக்கு கிடைத்த தண்டனை என தமிழகத்தின் வீதிகளில் நாங்கள்தான் முழங்கினோம். அதற்காக எங்கள் தோழர்கள்மீது தடா துவங்கி பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இத்தகைய கொடுமைகளை ஏவிவிட்ட பாசிச ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் விருந்து சாப்பிட்டவர் அய்யா நெடுமாறன். இப்போதும் ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டியதற்காக எங்கள்தோழர்கள் இன்றும் சிறையில் இருக்கிறார்கள். இப்படி ஈழ்த்திற்கா அன்றும் இன்றும் சமரசமின்றி போராடுவது நாங்கள் மட்டும்தான்.

வினவு

இந்த வினவு இடுகைகளை தூக்குவதுதான் நமக்கு நல்லது. தேவையில்லாமல் நம் நேரம் வீணாகிறது இந்த சிங்களவனால்,

உரியவர்கள் செய்வார்களா? கருத்துச்சுதந்திரம் தேவைதான், ஆனால் தமிழீழ்த்தவனுக்கு இதைவிடப்பல முக்கிய கடமைகள் உள்ளன.

அய்யா கட்டுரையப் படித்து கருத்து சொல்லுங்கள். அதை விடுத்து இடுகைகளை தூக்குவது நல்லது என்று அன்பாய் மிரட்டல் விடுவது நிச்சயம் நல்லதல்ல. இது வரை ஈழம் தொடர்பாக பல கட்டுரைகள் பல போராட்ட செய்திகள் இட்ட போது நாங்கள் நல்லவர்கள். இப்போதும் அதே ஈழத்திற்கா இந்தியாவின் மேலாதிக்கத்தை தாஜா செய்யும் நெடுமாறனை விமரிசித்தால் நாங்கள் கெட்டவர்கள். இப்படி அடி முட்டாள்தனமாய் இருப்பது நல்லதல்ல.

நட்புடன்

வினவு

  • தொடங்கியவர்

வினவு,

அன்று முதல் இன்று வரை எமக்காக எந்தநிலையிலும், தளராது, தன்னிலை மாறாது குரல் கொடுத்து வருபவர், எமது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பழ நெடுமாறன் ஐயா அவர்கள் என்பது உம்போன்றோருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சராசரி அறிவுள்ள எந்த தமிழீழத்தவனும் அதை அறிவான். தங்கள் நோக்கம் ஐயாமீது கரி பூசுவது என்பது தங்கள் கட்டுரையை வாசிக்கும் போதே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் வடிவேலு காமெடியுடன் (உங்கள் மொழிநடையில்) முடிப்பது நீங்கள் எமது பிரச்சினையை அணுகும் முறையை தெளிவு படுத்துகிறது. நீங்கள் உண்மையிலேயே எம்மீது அக்கறை கொண்டால் ஏன் இன்னும் எமது பிரச்சினையை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் எந்த அரசியல் வாதியையும் எழுதி கிழிக்கவில்லை. தானே உலகத்தமிழரின் தலைவர் எனத்தம்பட்டம் அடித்து தன் குடும்பத்துக்கு தமிழ் நாட்டை எழுதி வைப்பதற்காக எமது இரத்தத்தை குடித்தபுறம்போக்கு கிழட்டு நரி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.எங்கிருந்தோ வந்த இத்தாலிக்கழுதைக்கு குடை பிடிக்கும் மானங்கெட்ட தமிழன் எவரையும் பற்றி எதுவும் எழுதவில்லை. உங்கள் சுயரூபத்தைக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி.

நண்பரே,

அய்யா நெடுமாறன் இதுவரை ஈழ்த்திற்காக குரல் கொடுக்கவில்லை என்று அவர் பங்கை நாங்கள் எங்கேயும் மறுக்கவில்லை. கட்டுரையில் அப்படி ஒரு வரியையாவது காட்டுங்கள் பார்க்கலாம். இங்கே இந்தியாவின் வல்லரசு மேலாதிக்கவெறியை நெடுமாறன் ஐயா ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அப்படி இந்திய மேலாதிக்க வெறி ஈழ்த்திற்கு ஆதரவாக செயல்பட்டிருந்தால் இலங்கைதொடர்பான ராஜதந்திரம் வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்வதையும்தான் நாங்கள் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

அடுத்து வினவு தளத்தில் கருணாநிதியையும், சோனியாவையும் எதிர்த்து பல கட்டுரைகள், கருத்துப் படங்கள் வெளியிட்டுள்ளோம். அதையெல்லாம் படித்து விட்டு எங்களை விமரிசனம் செய்யுங்கள்.

நட்புடன்

வினவு

  • கருத்துக்கள உறவுகள்

வினவு,

இது தான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள பண்பு. மற்றவர்களைக் குறை சொல்லியே உங்களை முன்னுக்குக் கொண்டு வருகின்ற செயலைச் செய்கின்ற வேலையே தவிர, ஈழத்திற்கான குரலாக வரவில்லை. இன்றைக்கு ஈழத்தில் 55 ஆயிரம் வரையிலான மக்கள் கொல்லலப்பட்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாப்பிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

""இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு ராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும்'' என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார். 1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது. 2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு ராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நோரோச் சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

ஏனெனில் ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். நோரோச் சோலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுகால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொருத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்'.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கைத் தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

"ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.'

கோத்தபய ராஜபட்சவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபட்சவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

http://dinamani.com/edition/story.aspx?Sec...்தான்!

  • தொடங்கியவர்

வினவு,

இது தான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள பண்பு. மற்றவர்களைக் குறை சொல்லியே உங்களை முன்னுக்குக் கொண்டு வருகின்ற செயலைச் செய்கின்ற வேலையே தவிர, ஈழத்திற்கான குரலாக வரவில்லை. இன்றைக்கு ஈழத்தில் 55 ஆயிரம் வரையிலான மக்கள் கொல்லலப்பட்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம். இங்கே இந்தியா என்னென்ன அட்டூழியம் செய்கிறது என்பதை நாம் அறிவோம். ஈழத்தில் மட்டுமல்ல, நேபாளத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, காஷ்மீர், வடகிழக்கில் ராணுவ ஒடுக்குமுறை, அப்புறம் இந்தியாவில் உள்ள முசுலீம்களை பயங்கரவாதிகளாய் சித்தரிப்பது இப்படி இந்தியாவின் அடக்குமுறைக்கு ஆயிரம் எடுத்துக் காட்டுகள் சொல்லலாம். இப்படி இந்தியா என்னவேண்டுமானாலும் அட்டூழியம் செய்யட்டும், அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் ஈழத்தை மட்டும் ஆதரிக்கவேண்டும் என்பதுதான் நெடுமாறனின் கருத்து. பரவலான ஈழத்தமிழர்களும் இந்த கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். எந்த நீதியின்பால் ஈழத்திற்காக இந்திய வல்லாதிக்கத்தை கண்டிக்கிறோமோ அதே நீதியின்பாற்பட்டு இந்தியாவின் மற்ற ஆதிக்க வன்முறைகளையும் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈழத்திற்காக நாம் பேசும் செய்யும் போராட்டங்களுக்கு தார்மீக வலிமை இருக்காது. இதைத்தான் எமது கட்டுரை குறிப்பாக உணர்த்த விரும்புகிறது. அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை என்பது எமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

நட்புடன்

வினவு

வினவு நெடுமாறன் அவர்களின் கட்டுரை மீதான உங்களின் பார்வை இப்படி விவகாரமாக இருப்பது பெரும்பான்மையால் ஏற்புடையதாய் கொள்ளத்தக்கது அல்ல. அவர் எங்களுக்காக உண்மையாய் உழைப்பவரா? இல்லையா என்றால் உங்களின் பதில் என்ன?

அப்படி உண்மையான உழைப்பு இருக்கும் போது, இப்படிப் பட்ட ஆராச்சிகள் அவசியமானதா?

ஒரு தாய் தன் பிள்ளையை மோசமாக அடித்துக் கொண்டிருக்கும் தன் கணவனிடம், ஏன் இப்படிக் கொல்கின்றாய் அவனை, அவன் தான் நாளை உன்னை வைத்து காப்பாற்றப் போகின்றவன் என்று சொல்லியிருந்தால் மேலும் ஒருவேளை இந்த கணவன் மோசமான ஒரு பேர்வழியாய் இருந்தும்விட்டால் உங்கள் கணக்குப் பார்வை என்ன சொல்லப் போகிறது என்றால் "ஒரு மோசமான சமூகத்துரோகியை காப்பாற்றுகின்ற எண்ணம்தான் இந்த தாயிடம் மேலோங்கி இருக்கின்றது பிள்ளையின் வருத்தத்தை விட " என்ற கருத்தை அல்லவா?

இந்தியத்தேசியத்திற்கு பல பாதகங்கள் வாடிக்கையாய் இருக்கலாம், ஈழத்தின் கஸ்ரத்திற்கு அதை உபயோகப் படுத்த நினைப்பது தர்மத்திற்கு துரோகமாகுமா? அதை சாதிக்க நினைக்கின்ற நெடுமாறன் அவர்களை கூண்டில் ஏற்றுவது முறையாகுமா?

உங்கள் கருத்தியலை நோக்குகின்ற போது, காகிதவாதிக்கு யதார்த்தவாதம் புரியாத புதிரா என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.