Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களுக்கு என்ன ****** தெரியும்?!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்த Quantum Mechanics நிகழ்ச்சியின் dvd பார்த்தேன்...

What The Bleep!? - Down The Rabbit Hole

what-the-bleep-rabbit-hole-c.jpg

பார்க்கும் போது பெரும்பாலும் விளங்க கூடியதாக இருந்தது... பார்த்து முடித்து பல காலம் அதை பற்றி சிந்தனை வரும் போதும் முழுமையான விஞ்ஜானம் இல்லா விட்டாலும் (இருக்கலாம் ஆனால் இல்லை ஆனால் இருக்கலாம்!!) அந்த Quantum Mechanics ஆய்வாளர்களின் கூற்றில் பல உண்மைகள் அடங்கி இருப்பதாக படும்....

ஆனால் பிறருக்கு விளங்க படுத்த முயன்ற போது மட்டும் எனது மட்டு மட்டான அறிவு :D ! + தமிழறிவு :( + பொறுமையின்மை :lol: காரணமாக என்னால் சீராக விளங்க படுத்த முடியவில்லை...

quantum mechanics உடன் சேர்ந்து இதில் sub-atomic level இல இருந்து ஆன்மிகம் வரை கலந்தடிச்சு இருப்பதால் - நான் இதை பற்றி கதைக்க வெளிகிட்டாலே தமிழ்சனம் என்னை ஏதோ ஒரு மரத்தடி சாமியார் என்பதை போல தான் பார்க்க வெளிக்கிடும்... :icon_idea:

:D அப்படி எல்லாம் எதுவும் இல்லை, எனக்கு விளங்கினது ஒரு பக்கம் இருக்க அடுத்தவர்களின் கருத்தையுமே ஆவலாக எதிர்பார்த்தேன்.... ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்திருக்கவில்லை. நான் விளங்க படுத்திய விதத்தில் இருந்து அவர்கள் பெரும்பாலும் அதுக்கு பிறகு பார்த்தும் இருக்க மாட்டர்கள்...

உங்களில் யாராவது பார்த்து இருந்தால்...

இப்ப எண்ட அலட்டலை கேட்டால் பிறகாவது போய் பார்க்க நேர்ந்தால் பார்த்திட்டு வந்து சொல்லுங்கள்... உங்கள் கருத்துக்களை.

இந்த பட பிரதிகள் மூன்று level இல தரப்படுத்தி இருந்தது.... முதலாவது அடிப்படை கருத்துகளை கொண்டதாகவும், மூன்றாவது கொஞ்சம் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டதாகவும், இரண்டாவது இடப்பட்டதாகவும் இருந்தது.... நேரம் மிச்சம் பிடிக்க மூன்றாவதை மட்டும் பார்த்தாலே காணும்...

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன்....

யான் பெற்ற குழப்பம் பெருக இவ்வையகம்!!!! :lol:

உதைவிட பெரிய ஒரு அவலம் ஒன்று இருக்கிது. அது என்ன எண்டால் மீசை ஆராய்ச்சி. நேற்று யாழில ஊர்ப்புதினத்தில ஓர் செய்தியைப் பார்த்தபிறகு இந்த ஆராய்ச்சிக்குரிய முடிவு கிடைக்காமல் அங்கால ஏதும் யோசிக்கிறது கஸ்டமாய் இருக்கிது.

என்ன செய்யுறது.. தமிழர் போராட்டத்திண்ட தலைவிதி கடைசியில தலைவருக்கு ரெண்டு கிழமையில எத்தனை இஞ்சி மீசை முளைக்கும் எண்டுற கேள்விக்கு விடை காணுறதில வந்து நிக்கிது.

சரி, நாங்கள் விசயத்துக்கு வருவம். ஒரு ஆளுக்கு ரெண்டு கிழமையில எவ்வளவு நீளமான மீசை வளரும்? நான் மீசை வளர்த்து குழந்தைப்பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டுறது இல்லை. இதனால எனது அனுபவத்தில் பதிலை சொல்லுறது கஸ்டமாய் இருக்கிது. ஆனால்..

வலைத்தளத்தில் தேடிப்பார்த்ததில் கீழ்வரும் கேள்வியையும் பதிலையும் காணமுடிந்தது. பின்வருமாறு:

Q: How fast do all areas of facial hair grow (mustache area, beard region, sideburns, eyebrows, and neck)?

A: The rate of growth for all the hair on the body is approximately one-half inch per month. Some people think that facial hair grows faster, but that’s an illusion created by the fact that facial hair (for men) is usually shaved to the skin and the growth of it is really noticeable. Some people’s hair grows faster, and some slower, but one-half inch per month is the average.

This shouldn’t lead you to believe that left unchecked the hair of your face will grow to unlimited lengths. If this were the case, we might see trends where eyebrows are grown to dramatic lengths and styled in astonishing configurations. However, the hair on the face, head and body are all governed by genetic factors that determine maximum lengths, textures, wave patterns and growth patterns. So for a general idea of what you can expect from your own facial hair, look no further than your family tree. Good, bad or ugly, it’s all there.

தகவல் மூலம்: http://www.hairfinder.com/hairquestions/facialhairgrowth.htm

அதாவது சராசரியாக ஒருவருக்கு ஒருமாதத்தில் முகத்தில் ஒன்று அரை இஞ்சி நீளமான உரோமம் வளரும் என்று சொல்லப்படுகிது. இதன் வளர்ச்சி ஆளாளுக்கு வேறுபடும். ஐயா, ஈழமுரசுக்காரர் தயவுசெய்து இனிமேல் தலையங்கம் எழுதும்போது நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பிடாதிங்கோ. இப்படிப்பார்த்தால் தலைவருக்கு இரண்டு கிழமைகளில் முக்கால் இஞ்சி நீளத்துக்கு அல்லது அதற்கும் மேலால் மீசை வளர்ந்து இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வைத்தியர் இளையபிள்ளை மீசை சம்மந்தமாய் உங்கட விளக்கத்தையும் ஒருக்கால் கொடுத்து புலம்பெயர் தமிழரிண்ட அறிவுப்பசியை நீக்கிவிடுங்கள். நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு அடர்த்தியான மீசை 2கிழமையில் வளரமாட்டது என்பது எனது அனுபவம்.இப்ப நாங்கள் ஆராச்சி செய்யவேணும் அடர்த்தியைபற்றியும் நீளம் பற்றியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைவிட பெரிய ஒரு அவலம் ஒன்று இருக்கிது. அது என்ன எண்டால் மீசை ஆராய்ச்சி. நேற்று யாழில ஊர்ப்புதினத்தில ஓர் செய்தியைப் பார்த்தபிறகு இந்த ஆராய்ச்சிக்குரிய முடிவு கிடைக்காமல் அங்கால ஏதும் யோசிக்கிறது கஸ்டமாய் இருக்கிது.

என்ன செய்யுறது.. தமிழர் போராட்டத்திண்ட தலைவிதி கடைசியில தலைவருக்கு ரெண்டு கிழமையில எத்தனை இஞ்சி மீசை முளைக்கும் எண்டுற கேள்விக்கு விடை காணுறதில வந்து நிக்கிது.

சரி, நாங்கள் விசயத்துக்கு வருவம். ஒரு ஆளுக்கு ரெண்டு கிழமையில எவ்வளவு நீளமான மீசை வளரும்? நான் மீசை வளர்த்து குழந்தைப்பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டுறது இல்லை. இதனால எனது அனுபவத்தில் பதிலை சொல்லுறது கஸ்டமாய் இருக்கிது. சராசரியாக ஒருவருக்கு ஒருமாதத்தில் முகத்தில் ஒன்று அரை இஞ்சி நீளமான உரோமம் வளரும் என்று சொல்லப்படுகிது. இதன் வளர்ச்சி ஆளாளுக்கு வேறுபடும். ஐயா, ஈழமுரசுக்காரர் தயவுசெய்து இனிமேல் தலையங்கம் எழுதும்போது நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பிடாதிங்கோ. இப்படிப்பார்த்தால் தலைவருக்கு இரண்டு கிழமைகளில் முக்கால் இஞ்சி நீளத்துக்கு அல்லது அதற்கும் மேலால் மீசை வளர்ந்து இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வைத்தியர் இளையபிள்ளை மீசை சம்மந்தமாய் உங்கட விளக்கத்தையும் ஒருக்கால் கொடுத்து புலம்பெயர் தமிழரிண்ட அறிவுப்பசியை நீக்கிவிடுங்கள். நன்றி!

அண்ணா கலைஞா...

உங்களுக்கு என்னில என்ன கோவம் :icon_idea: ?! இருக்காரா இல்லையா பிரச்சனையில் என்னை இழுக்கிறியள்?! :lol:

எதோ நோயாளியின் மயிர் பிரச்சனை என்றாலும் ஜோசித்து விளக்கம் சொல்லலாம்..... இது அரசியல் மயிர் பிரச்னை.... நீங்கள் பிடிக்க வேண்டிய ஆள் நெடுக்கர் அல்லோ?! சும்மா அவருக்கும் இடைக்கிட இப்படி ஏதும் பிராக்கு குடுங்கோ... இல்லாட்டி நிழலியையும் நெடுக்கரையும் விலக்கு பிடிக்கிறதுக்கு குமாரசாமி தான் கள்ளு கொட்டிலுக்கால வர வேணும்..!

தனிய நான் தப்ப மட்டும் அல்ல, கள நலனுக்காகவும் தான் சொல்றன்.... இந்த கேள்வியை நெடுக்கரிடமே விடலாம்....! :lol:

எல்லாம் சரி - quantum mechanics ஐ பற்றி கதைக்க எங்களுக்கு என்ன ****** தெரியும்? என்று அந்த நிகழ்ச்சியின் தலைப்பை போட ஒரு வேளை "எங்களுக்கு என்ன மயிர் தெரியும்?" என்று நேற்றையான் மீசை பிரச்னையை பற்றி என்று நினைத்து விட்டார்கள் போல..... :(

அந்த மயிர் இணைப்பை தானே யாழில் இருந்து நிர்வாகம் அகற்றி விட்டார்கள்....இப்ப என்னையும் யாழில இருந்து அகற்ற தானா இந்த கேள்வி?! எல்லாம் நேரம்..... :D

ஐயோ வைத்தியர் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. அப்பிடி எண்டால் இந்தமயிர் ஆராய்ச்சி quantum mechanics ஐவிடவும் பெரிசு எண்டு சொல்லுங்கோ. வைத்தியருக்கே காய்ச்சல்வருகிது என்றால் சும்மா இல்லை. எண்டாலும், புத்தன் நீங்கள் விடாதிங்கோ. நாங்கள் ஆராய்ச்சிசெய்து கண்டுபிடித்தால் எங்களுக்கு நோபல் பரிசு (யாருட்டையாவது அடிவாங்கி பல்லு உடையிறது) கிடைக்கலாம். என்றபடியால் வடிவேலு மாதிரி அடிவாங்காமல் உதுகளை ஆராய்ஞ்சு முடிவுகாணாமல் நிப்பாட்டப்போறது இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ வைத்தியர் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. அப்பிடி எண்டால் இந்தமயிர் ஆராய்ச்சி quantum mechanics ஐவிடவும் பெரிசு எண்டு சொல்லுங்கோ. வைத்தியருக்கே காய்ச்சல்வருகிது என்றால் சும்மா இல்லை. எண்டாலும், புத்தன் நீங்கள் விடாதிங்கோ. நாங்கள் ஆராய்ச்சிசெய்து கண்டுபிடித்தால் எங்களுக்கு நோபல் பரிசு (யாருட்டையாவது அடிவாங்கி பல்லு உடையிறது) கிடைக்கலாம். என்றபடியால் வடிவேலு மாதிரி அடிவாங்காமல் உதுகளை ஆராய்ஞ்சு முடிவுகாணாமல் நிப்பாட்டப்போறது இல்லை.

கலைஞன் அண்ணா, மன்னிபெல்லாம் கேக்க வேண்டாம் அண்ணா....மற்றது, வெறும் இளையபிள்ளை என்றே கூப்டுங்கோ....அதை தான் விரும்புகிறேன்... :lol:

நோபல் பரிசு பெற வாழ்த்துகிறேன்....ஆனால் மயிராய்வை விட்டிருங்கோ. :icon_idea: ...வேற தலைப்பை தேடி எடுங்கோ...

சரி உங்களுக்கு quantum mechanics இட தமிழாக்கம் என்ன என்று தெரியுமா? எனக்கு தெரியாத படியால் கேட்கிறேன்... :lol:

வணக்கம் இளையபிள்ளை,

சரி கோவிக்ககூடாது. இனி நீங்கள் ஆரம்பித்த விடயத்துக்கு வாறன்.

யாழில ஈழத்திருமகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் Quantum Mechanics பற்றி பலவித கருத்துக்கள் எழுதி இருந்தார். அதில் மிகவும் ஆர்வம் உடையவர். இப்ப காணவில்லை. பால்வெளியுக்க தவறி விழுந்திட்டாரோ தெரியாது. இந்தப்பதிவை பார்த்தால் நிச்சயம் அவர் இங்கு வந்து தனது கருத்தை கூறுவார் என நினைக்கின்றேன்.

அவர் கடைசியாக யோககலை என்கின்ற பகுதியில கீழ்வரும் இழையை ஆரம்பித்து இருந்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=44549&hl=

ஏப்பிரல் 2009பிறகு ஆளை காணவில்லை.

ஈழத்திருமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளையபிள்ளை,

சரி கோவிக்ககூடாது. இனி நீங்கள் ஆரம்பித்த விடயத்துக்கு வாறன்.

யாழில ஈழத்திருமகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் Quantum Mechanics பற்றி பலவித கருத்துக்கள் எழுதி இருந்தார். அதில் மிகவும் ஆர்வம் உடையவர். இப்ப காணவில்லை. பால்வெளியுக்க தவறி விழுந்திட்டாரோ தெரியாது. இந்தப்பதிவை பார்த்தால் நிச்சயம் அவர் இங்கு வந்து தனது கருத்தை கூறுவார் என நினைக்கின்றேன்.

தகவலுக்கு நன்றி கலைஞன் அண்ணா, இந்த தலைப்பு சம்மந்தமாய் எனது விளக்கத்தை கூட்ட இருந்த ஒரு ஆளும் பால்வெளிக்கையா தவறி விளோனும்?!!! :icon_idea:

சரி எப்போதாவது திரும்பி வந்தால் சந்திப்பம்...

நானும் மீசையோடை மல்லுக்கட்டுறன்

குறுக்காலை போனது ஒரு மாசத்திற்கு ஓரு இன்சாவது வளருதில்லை

ஏதாவது ஜடியா தாங்கப்பா

நன்றி இளைய பிள்ளை

உங்களின் திரியை பார்த்த பின் இந்த படத்தினை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது. ஒரு வாறு படத்தினை தேடி தற்சமயம் தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கின்றேன் (5GB). இந்த வார இறுதியில் பார்க்க நேரம் கிடைத்தால் பார்த்து விட்டு குறிப்பு எழுதுகின்றேன்

பின் குறிப்பு: சிவப்பு எழுத்து பாவிப்பதை தவிர்த்தால் புண்ணியமாய் போகும். சிவப்பு எழுத்து எச்சரிக்கை அல்லது ஒரு தவறான ஒன்றை குறிக்க மட்டுமே பயன்படுத்தப் படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளைய பிள்ளை

உங்களின் திரியை பார்த்த பின் இந்த படத்தினை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது. ஒரு வாறு படத்தினை தேடி தற்சமயம் தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கின்றேன் (5GB). இந்த வார இறுதியில் பார்க்க நேரம் கிடைத்தால் பார்த்து விட்டு குறிப்பு எழுதுகின்றேன்

பின் குறிப்பு: சிவப்பு எழுத்து பாவிப்பதை தவிர்த்தால் புண்ணியமாய் போகும். சிவப்பு எழுத்து எச்சரிக்கை அல்லது ஒரு தவறான ஒன்றை குறிக்க மட்டுமே பயன்படுத்தப் படும்

நல்லது நல்லது... நீங்களும் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்....என்னை வந்து திட்ட வேண்டாம் - கொஞ்சம் அறுவையா தான் இருக்கும்...! ஆனால் சாதரணமாய் தொலைக்காட்சி பார்பதென்றாலே பொறுமை இல்லாமல் கடுப்பேறும் நானே இருந்து பார்த்த ஒரு நிகழ்ச்சி அது ... திறம் என்று சொல்ல மாட்டேன்... ஆனால் பறவாய் இல்லை.

ஆ....!!!! வேலையில் தான் சிவத்த மை பாவிக்க விடமாட்டார்கள் என்று பார்த்தால் (எல்லாம் legal documentation கோதாரி...எனெவே எல்லாம் கறுப்பில தான் இருக்கோனும் என்று இரண்டு கிழமைக்கு ஒருக்கால் கறுத்த மை cartridge மாத்த வேண்டி இருக்கு... ஆனால் சிவத்த பேனை ஒன்று நாலு வருசமா கால் இஞ்சி மை கூட முடியாம இருக்கு... மறந்தும் நீலத்தில ஏதும் எழுதினா கூட திரும்ப கொண்டு வருங்கள் :lol: ).... அந்த அடக்குமுறையின் பாதிப்பு தான் இங்க சிவத்த மையாய் பிரதிபலிக்குது... :o

இப்ப இங்கயும் நீங்கள் இருக்கிறியள் - என்ர சிவத்த ரீபிலை பறிச்சு எறியற கணக்கில!!! :wub:

தும்பி முட்டாஸ் நிறத்தில பொம்பிளையள் உடுப்பு போட்டால் ரசிச்சு பார்க்கிற உலகம் என்னை சிவத்த பேனையால எழுத விடுது இல்லை... ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.