Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை: இந்திய ஊடகவியலாளர்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய போரில் சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், இது தொடர்பான தகவல்கள் ஒருபோதும் வெளிவரப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போரில் இந்தியா வெறுமனே ஒரு பொதுமக்கள் தொடர்பு முகாமையாளர் (public relations manager) போலவே செயற்பட்டிருக்கின்றது எனவும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளரான சத்தியா சிவராமன் தெரிவித்திருக்கின்றார்.

"சிறிலங்காவில் அடுத்தது என்ன?" என்ற தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்திய அவர், "இன நெருக்கடிக்கு ஜனநாயக ரீதியான தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசு மேற்கொண்ட அனைத்துப் போர்க் குற்றங்களையும் மூடிமறைத்து, அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறிலங்காவைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே இந்தியா மேற்கொண்டது" எனவும் குற்றம் சாட்டினார்.

"சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகளில் இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் இந்தியாவும் சிறிலங்காவின் படைக்கு நேரடியாகவே உதவிகளை வழங்கியது" எனவும் தெரிவித்த சத்தியா சிவராமன், "ஆனால் இந்தியாவின் உதவிகள் மிகவும் இரகசியமாவை" எனவும் "அது தொடர்பான தகவல்கள் ஒருபோதும் வெளியே தெரியவராது" எனவும் குறிப்பிட்டார்.

"தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு சிறிலங்கா விவகாரங்களில் சீனாவின் அதிகரித்த பங்கை இந்தியா பயன்படுத்திக் கொண்டது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தனியான தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா ஆதரவானதல்ல" எனத் தெரிவித்த இந்திய ஊடகவியலாளர், அவ்வாறான அரசு ஒன்று அமைவது இந்தியாவில் உள்ள தேசியவாதக் குழுக்கள் பிரிவினைக்கோரிக்கையை முன்வைப்பதை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என இந்தியா அஞ்சுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

"மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் இனநெருக்கடியை வைத்து ஒரு உதைபந்தாட்டப் போட்டியையே நடத்தியிருக்கின்றன. இதில் ஈழத் தமிழர்கள்தான் பந்தாடப்பட்டிருக்கின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த கே.பாலகோபால் இங்கு உரையாற்றிய போது, இடம்பெயர்ந்த மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை மிகவும் இலகுவானதாகவே ராஜபக்ச அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ளார். அவர்கள் வெற்றிக்களிப்பில் இப்போதுள்ளதால் இடம்பெயர்ந்த மக்களுடைய புனர்வாழ்வு நடவடிக்கைகளில் எந்தவித அவசரத்தையும் காட்டவில்லை" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

"இந்த விடயத்தில் தம்மீது யாரும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் நன்கு தெரிந்துகொண்டுள்ளது" எனவும் குறிப்பிட்ட கே.பாலகோபால், மீள்குடியேற்றம் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு தீவிரமான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் அவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்த பகுதிகளில் மீளக்குடியர்த்தப்படுவார்கள

  • கருத்துக்கள உறவுகள்

A reliable report from Chennai states that India was providing Mobile Gas Chambers during last Holocaust in Mullaithivu area.

Also some people have observed few Indian Naval crafts delivered Bulldozers in Nanthikkadal area to crush the wounded civilian and level the surface after they were buried, to hide the traces.

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.