Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

K.P. அண்ணனிற்கு ஒரு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

K.P. அண்ணனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்

எமக்கு ஏற்பட்டு பாரிய பின்னடைவைத் தொடர்ந்து

எங்களை மீட்க நல்லதொரு மீட்பன் வரமாட்டாரோ என்ற ஏக்கத்தில் இருக்கும்

பல இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளில் ஒருவனாய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

சிங்கள அரசு இன அழிப்பை ஆணவத்துடன் செய்து முடித்தபின் சொல்லொணாத் துயரத்தில்

இருந்த எமக்கு அந்த இறுதிநாட்களில் வன்னியில் நடந்தேறியவற்றை பக்குவமாகச்

எடுத்துரைத்து உண்மைகளை உணர்ந்து ஏற்று அடுத்தது என்ன என்று சிந்திக்கவும் வைத்தீர்கள்.

தொடர்ந்து வந்த உங்கள் அறிக்கைகளில் உலகத்தமிழர் அனைவரிடமிருந்தும் துறைசார்

அறிஞரிடமிருந்தும் ஆக்கபு}ர்வமான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும்

எதிர்பார்ப்பதாகவும் கூறினீர்கள். பாரிய பின்னடைவுகள் தந்த பாடங்களை அலசி ஆராய்ந்து

புதியதொரு பாதை அமைக்கப்போவதாகக் கூறினீர்கள்.செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டு

அதன் நெறிப்படுத்தலில் அமைப்புத் தொடர்ந்து செயல்படும் எனவும் கூறினீர்கள்.

மேய்பனை இழந்து தவித்த எமக்கு இருண்ட வானில் ஒரு ஒளிக்கீற்றுத் தெரிவதாக உணர்ந்தோம்.

நீங்கள் எமது அமைப்பின் சர்வதேச தொடர்பாளரானதன் பின் உலகநாடுகளின் நிலைப்பாடு பற்றிச்

சரியான கணிப்பீடுகளை வன்னிக்குக் கொடுக்கத் தவறியதால்தான் எமக்கு இந்தப் பாரிய பின்னடைவு

ஏற்பட்டதாக ஒருசாரார் கூறியபோதும் அமை ஏற்க மறுத்தோம். உங்களுடன் கரம் பற்றி

எமது விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடரத் தயாரானோம்.

ஆனால் அண்மைக்கால உங்கள் அறிக்கைகள் நடவடிக்கைகள் இவற்றுக்கு மாறாக இருப்பதால்

சுதந்திரமான எமது வாழ்வில் பற்றாளனாகவும் அதன்கான ஒரு சிறுபங்காளனாகவும் இருப்பவன்

என்பதால் இவ்விடயங்களை எழுதுகிறேன்.

அண்மைக்கால உங்கள் அறிக்கைகளில்

நான் இந்திய அரசுடன் உறவைப்பேண முயலுவேன்.........

நான் அதைச் செய்வேன்........ நான் இதைச் செய்வேன்............. என்றவகையில்

தனியார் நிறுவனமொன்றை நடத்தும் அதன் உரிமையாளர் கூறுவதுபோல அமைந்துள்ளது.

எமது தலைவர்கூட என்றுமே நான் செய்வேன் என்றரீதியில் எந்தவித அறிக்கையும் விட்டதில்லை

எமது அமைப்புச் செய்யுமென்றுதான் கூறிவந்தார்.

நாளும் புதிது புதிதாக வெளிவரத்தொடங்கும் இணையத்தளங்களிலும்

தலைவரின் திருமணத்தில் நான்..... அண்ணன் பாலசிங்கத்துடன் நான்......

வன்னிப்போர்க்களத்தில் முதன்மைப்போராளிகளுடன் நான்.......... தலைவரின் இறுதி நியமனக் கடிதம் என்பதாக

உங்கள் புகழ்பாடுவதாகவும் உங்களை முதன்மைப்படுத்துவதுவுமாகவே காணப்படுகின்றன.

நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல எமது அமைப்பிற்கு செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டதா?

அப்படி அமைக்கப்பட்டிருந்தால் ஏன் அதன் அறிக்கைளாக வெளிவராமல்

தனியொரு K.P: அண்ணனின் அறிக்கைகளாகவே வெளிவருகின்றன.

மக்களிடமிருந்தம் துறைசார் வல்லுனர்களிடமிருந்தும் கருத்துக்கள் திரட்டி ஆராயப்பட்டு கொள்கைகளும்

செயற்திட்டங்களும் வகுக்கப்பட்டதா?

கொள்கைகளும் செயற்திட்டங்களும் முதன்மைப்படுத்தப்படதெளிந்த சிந்தனையும் பரந்த அறிவும் கொண்ட

ஒரு அணியை ஒன்றுதிரட்டாமல் வெறுமனே ஒருமாயையில் உங்கள் புகழ்பாடும் மந்தைக்கூட்டமொன்றை உருவாக்கவே முனைகிறீர்களா?

அப்படியாயின் அது மக்கள் திலகத்தின் மறைவிற்குப்பின் ஜானகி அம்மா ஜெயலலிதா அம்மையார் என

ஆளாளுக்கு கட்சியையும் இரட்டை இலைச்சின்னத்தையும் மக்கள்திலகத்தின் கணக்கிலடங்காச் சொத்துக்களையும்

தமதாக்க ஆடிய நாடகங்களை நினைவுகூர்வதாக இந்தச் செயல்கள் அமையாதா?

இதுபோன்ற எம்மவர் சந்தேகங்களைக் களையவேண்டியது அடுத்தகட்ட எமது நடவடிக்கைளுக்கு முக்கியமானது. செய்வீர்களா?

Edited by naanal

கே.பி யின் அறிக்கை படிக்கும் பொழுது இதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது.இன்று எமக்குதேவை

பலமான மனிதர்கள் அல்ல

பலமான ஒர் கட்டமைப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜில்! எனது இந்தக் கருத்திற்கு உங்கள் பதில்கருத்தை முன்வைத்ததற்கு நன்றி.

எனக்கும் உங்களுக்கும் மட்டுமல்ல பலருக்கும் இப்படியான சந்தேகங்கள் தோன்றினாலும்

வெளியே சொல்ல அல்லது உரியவரைக் கேட்க ஒருவித தயக்கம்

தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம்

தனக்கு விபரம் தெரியாது என தன்னை குறைவாக மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற எண்ணம்

சமுதாயத்திற்கு எதிரானவன் துரோகி என ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம்

எனக்கு எதற்கு வம்பு அடுத்தவன் பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனப்பான்மை

இவற்றின் காரணமாக நம்மவர் கேட்க வேண்டியவிடயத்தைக் கேட்காமலும்

கதைத்து விவாதிக்க வேண்டியதைக் கதைக்காமலும் விடும் தவறைச் செய்கிறார்கள்

நம்மிடையே இருக்கும் இந்த மனப்பான்மை மாறி விழிப்படைந்தவர்களாகும்வரை

சமுதாயத்தில் பாரிய மாற்றங்கள் தோன்றுவது கடினம்.

.

குமரப்பாவுடன் தானும் மாவீரன் ஆகியிருப்பேன் ஆனால் தலைவர் தன்னை ஒரு பணி நிமித்தம் திருப்பி கூப்பிட்டபடியால் இன்று உயிருடன் இருப்பது போல எழுதியுள்ளார்,இன்றைய சுழ்நிலையில் இக்கருத்து அவசியமில்லை என்பது என்கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே சொல்ல அல்லது உரியவரைக் கேட்க ஒருவித தயக்கம்

தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம்

என்ன கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் "இமேஜ்" பழுதடைந்துவிடும் என்றுதான் என்கன்ட இமேஜ் கந்தரைப்போல

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி யின் அறிக்கை படிக்கும் பொழுது இதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது.இன்று எமக்குதேவை

பலமான மனிதர்கள் அல்ல

பலமான ஒர் கட்டமைப்பு

.

குமரப்பாவுடன் தானும் மாவீரன் ஆகியிருப்பேன் ஆனால் தலைவர் தன்னை ஒரு பணி நிமித்தம் திருப்பி கூப்பிட்டபடியால் இன்று உயிருடன் இருப்பது போல எழுதியுள்ளார்,இன்றைய சுழ்நிலையில் இக்கருத்து அவசியமில்லை என்பது என்கருத்து

ஜில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் முதல் வைத்த கருத்திற்கும் அடுத்து எழுதிய கருத்துக்கும் இடையில் முரண்பாடாகஇருப்பதுபோல் தோன்றுகிறது. அல்லது நீங்கள் கூறவருவது புரியவில்லைப்போலத் தெரிகிறது. K.P.. அண்ணன் கூறியதாக நீங்கள் குறிப்பிட்ட விடயம்கூட அவர் தன்னை முதன்மைப்படுத்தக் கூறியதாகத்தான் உள்ளது.

Edited by naanal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் உங்கள் கருத்திற்கு நன்றி உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவந்ததில் புரிகிறது எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல் நன்றாக ஆளஆராய்ந்துபார்ப்பவரென்று அந்த விடயத்தில் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில் பயணிப்பது சந்தோசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜில்

K..P: அந்தக்கருத்தைச் சொல்லியிருக்கத்தேவையில்லை என நீங்கள் கூறியதை நான் முதலில் நான் அந்தக் கருத்துப்பதிவை இன்றைய சந்தர்பத்தில் தொடங்கியிருக்கத் தேவையில்லை என நீங்கள் கருதுவதாக தவறாகப் புரிந்துகொண்டு பதில் எழுதிவிட்டேன் மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.