Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து

எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி...

எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய்

என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்...

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

மரணத்திற்கு நாள்க் குறித்து

மரணத்தையே முத்தமிட்ட...

மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன்

என்று பெருமை கொள்ளும் என் மனது..

மாண்ட உங்களின் கனவான_தாய்

மண் விடுதலைக்காய் உழைக்காது...

வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால்

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர்

ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ...

அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர்

தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை...

அர்ப்பணித்தும் இன்று உங்கள் கனவு வெறும் கனவாகவே

போய்விடுமோ என்று தெரிந்தும் நீர்விட்ட...

பணி தொடராது அழுதுபுலம்பும் கோழை நான்_அதனால்

என்னை மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே!

என்னை நினைத்தே நான் தோற்றுப்போகிறேன்

இன்னும் எத்தனை நாளைக்குத் தான்...

இணையங்களில் எழுதி என்(ம்)னை(மை) நானே ஏமாற்றுவது

என்ன செய்யபோகிறேன் உங்கள் கனவை நனவாக்க...

எனக்கு எதுவுமே தெரியாவில்லை_அதனால்

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

தாயகக் கனவைச் சுமந்த நீங்கள்_இந்த

பாவியின் பாவமன்னிப்பையும் சுமந்திடுங்கள்...

யேசுவையே சுமக்கும் சிலுவைகள் நீங்கள்_பாரு

இப்பவும் பாவமன்னிப்பு கேட்டு தப்ப நினைக்கும் பாவியாய் நான்..

பரிகாசமாய் இருக்கிறது என்னை நினைத்தாலும் எனக்கு_ஆனாலும்

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா....

நீங்கள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழ் மகனதும்,மகளதும் கவலை உம்மை போன்றே உள்ளது.காத்திருங்கள் எமக்காய் நிச்சயம் ஒரு வளிபிறக்கும்.எங்களுக்கும் நிறையவே பணிகள் வரும் அப்போ காத்திருந்து கடமைகள் முடிப்போம்.

யாயினி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

மாவீரர்களிடம் மன்னிப்பு கேட்ட உங்கள் மன நிலையில் தான் நாங்களெல்லோரும் இருக்கிறோம், ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஜீவா...

இறக்கும் போதும் விடுதைலைச் சிந்தித்த அந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது, அவர்களின் தியாகங்களை நினைத்து தினம் தினம் அழும் எங்கள் கண்ணீர் வீண்போகாது, புலம்பெயர் உறவுகள் இதுவரை காலமும் இனிமேலும் செய்யும் போராட்டங்களும் வீண்போகாது.....

விடுதலையை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டங்களைத் தொடர்வதே நாங்கள் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன்....

கவிதை மிக நன்று...... வாழ்த்துகள் ஜீவா....

  • தொடங்கியவர்

நன்றி அக்கா. எல்லாரது கவலையும் இதுதான் என்றாலும் கூட...ஏனோ காலம் இன்னும் இன்னும் தமிழரை விட்டு தள்ளியே போகிறது.

ஜீவா

மாவீரர்களிடம் மன்னிப்பு கேட்ட உங்கள் மன நிலையில் தான் நாங்களெல்லோரும் இருக்கிறோம், ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஜீவா...

இறக்கும் போதும் விடுதைலைச் சிந்தித்த அந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது, அவர்களின் தியாகங்களை நினைத்து தினம் தினம் அழும் எங்கள் கண்ணீர் வீண்போகாது, புலம்பெயர் உறவுகள் இதுவரை காலமும் இனிமேலும் செய்யும் போராட்டங்களும் வீண்போகாது.....

விடுதலையை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டங்களைத் தொடர்வதே நாங்கள் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன்....

கவிதை மிக நன்று...... வாழ்த்துகள் ஜீவா....

நன்றி இளங்கவி அண்ணா.

இன்றிருக்கும் நிலை நிச்சயமாக தமிழருக்கு சாதகமாய் இல்லை. எல்லாமே வெறும் கானல் நீர் தானோ என்று தோன்றுகிறது. :unsure:

சிங்கம் படுத்தா பன்னி கூட பம்படிச்சிட்டு போகுமாம் இந்த நிலை தான் இப்போ.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க.. மாவீரர்கள் என்ன உங்களை வந்து தட்டிக் கேட்கவா போறாங்க. அந்தத் துணிச்சலில தானே.. மன்னிப்புக் கேட்கிறீங்க. உங்களை மாவீரர்கள் மன்னிக்கிறார்களோ இல்லையோ வரலாறு மன்னிக்காது. அதுமட்டும் நிதர்சனமான உண்மை. உங்களைப் பற்றி வரலாறு எழுதி வைக்கும். மாவீரர்களின் தியாகத்தில் தமது சுயநலத்தை தக்க வைத்துக் கொண்ட.. துரோகிகள் என்று.

தயவுசெய்து இப்படி எழுதாதீங்க. மாவீரர்களின் இலட்சியத்தோடு பயணிக்க முடியாது என்றுதானே புறமுதுகிட்டு ஓடினீர்கள். பிறகென்ன. மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாங்க.. மாவீரர்கள் என்ன உங்களை வந்து தட்டிக் கேட்கவா போறாங்க. அந்தத் துணிச்சலில தானே.. மன்னிப்புக் கேட்கிறீங்க. உங்களை மாவீரர்கள் மன்னிக்கிறார்களோ இல்லையோ வரலாறு மன்னிக்காது. அதுமட்டும் நிதர்சனமான உண்மை. உங்களைப் பற்றி வரலாறு எழுதி வைக்கும். மாவீரர்களின் தியாகத்தில் தமது சுயநலத்தை தக்க வைத்துக் கொண்ட.. துரோகிகள் என்று.

தயவுசெய்து இப்படி எழுதாதீங்க. மாவீரர்களின் இலட்சியத்தோடு பயணிக்க முடியாது என்றுதானே புறமுதுகிட்டு ஓடினீர்கள். பிறகென்ன. மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்..! :icon_idea:

நெடுக்கண்ணா ஏன் இப்படி பயமுறுத்துறிங்க :lol: நானாச்சும். நான் செய்தது தவறு தான் என்று ஒத்துக்கொள்கிறேன் ஆனால் என்னை மாதிரி பலபேர் இருக்கினமே. இந்த வரலாறு என்னை மட்டும் துரோகி என்று எழுதப்போவதில்லை என்னுடன் உங்களையும் புலம்பெயர்ந்து வாழும் கிட்டத்தட்ட 12லட்சம் மக்களையும் சேர்த்துத் தான் எழுதும். நாங்க எல்லாரும் தான் புறமுதுகு இட்டு ஓடிவந்தோம் அதுசரி..நெடுக்கு நீங்களும் புலம்பெயர்ந்து தானே <_<

நெடுக்கு அண்ணா யேசுவிடம் போய் இல்லை கடவுளிடம் ஏன் செல்கிறார்கள். ஏன் பாவமன்னிப்பு கேட்கிறார்கள் யேசுவந்து இல்லை கடவுள் வந்து மன்னிப்பார் என்றா?

ம்..எங்கையோ லாஜிக் இடிக்குதில்லை...? எனக்கும் தான்...

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா யேசுவிடம் போய் இல்லை கடவுளிடம் ஏன் செல்கிறார்கள். ஏன் பாவமன்னிப்பு கேட்கிறார்கள் யேசுவந்து இல்லை கடவுள் வந்து மன்னிப்பார் என்றா?

ம்..எங்கையோ லாஜிக் இடிக்குதில்லை...? எனக்கும் தான்...

இதில எந்த லாஜிக்குமே இல்ல. செய்யுற கொடுமை எல்லாத்தையும் செய்திட்டு ஜேசுவின் பெயரால் மன ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். அதேபோல்.. செய்வதையெல்லாம் மாவீரர்களின் இலட்சியத்துக்கு சம்பந்தப்படாமல் செய்திட்டு.. மன்னிப்புக் கேட்கிறார்களாம். இரண்டுமே போலியான வேடங்களே. இதில் எங்க லொஜிக் இருக்குது..??! இல்லாத ஜேசுவிடம் மன்னிப் கேட்பதிலும்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் செய்வார்களா இல்லை. மாவீரர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை.. அவர்களின் காற்தடம் பற்றி இவர்கள் நடப்பார்களா. இன்னும் அதற்குத் தயாரில்லை..! ஆனால் இலகுவாக சுகமாக வசதியாக இருந்து கொண்டு இப்படி மன்னிப்பை எட்ட இருந்து கேட்டுக் கொள்வதாக உலகை மட்டும் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இதுவும் மாவீரர்களுக்குச் செய்யும் தூரகங்களில் ஒருவகை.. என்றே சொல்ல வேண்டும்..! :icon_idea:

நெடுக்ஸ் அண்ணா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மன்னிப்பு கேட்ட நான் அல்லது அப்படியான மனநிலையில் இருக்கும் அனைவரும் துரோகிகள் அல்லது போராட்டத்தில் நேரடியாக பங்குபற்றியவர்கள் தவிர மற்றைய

அனைவரும் துரோகிகள் என்று சொல்ல வருகிறீரா? நெடுக்ஸ் போராட்டத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால் இது எவ்வளவு பைத்தியகாரத்தனமான கேள்வி என்பது தெரியுமல்லவா?

ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் இந்த போராட்டத்திற்கு உதவாத எந்த ஒரு தமிழனுமே இருக்க முடியாது அப்படியிருக்கும் போது போராட்டத்திற்கு பங்களிக்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்?

ஏன் இன்று கூட புலிகளின் வெற்றிடங்களை கழுதைகள் தான் நிரப்ப போகும் அவலம் இருக்கே அதற்காக என்ன செய்தீர்கள்? இல்லை புலிகளின் வீழ்ச்சி ஏற்பட்டு கிட்டத்தட்ட 2மாதங்கள் கடந்த பின்பும் என்ன ஏதாவது

நடக்கிறதா? இல்லை அகதிமுகாம்களில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்காகவேனும் ஒரு ஆர்ப்பாட்டம்,ஊர்வலம்??

நெடுக்ஸ் ஆரையும் பார்த்து துரோகி அல்லது நீ போராட்டத்திற்கு என்ன செய்தாய் என்று கேட்குமுன் இந்த கேள்வியை ஒவ்வொருவரும் உங்களை நோக்கியே கேட்டுப்பாருங்க அப்போ தெரியும்.

நான் என்னை நினைத்தே எழுதினேன் காரணம் நான் யாரையும் சுட்டிக் காட்டமுன் அதுக்கு தகுதியானவனாய் இருக்க வேண்டும்.

இப்ப லொஜிக் சரியா இருக்கும்னு தோணுது.

நான் போராடத் துணிவின்றி.. எனது தாயகத்தின் விடுதலையில் அக்கறையின்றி.. எனது சுயநலத்தை கருத்தில் கொண்டு.. வாழ்ந்தேன்.. வாழ்கிறேன் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன். மாவீரர்களே நான் இப்படி வாழ்ந்திட்டேன் என்னை மன்னியுங்கள் என்பது போன்ற போலித்தனத்தை நாம் ஏன் காவித் திரிய வேண்டும். அவர்கள் உண்மையில் உயிரோடு இருப்பின் போராட்டத்தில் பங்கேற்காத (நேரடியாப் பங்களிக்காட்டி.. அதென்ன பங்களிப்பு.. ஓ. மாதம் மாதம்.. காசு கொடுத்திட்டு.. அது போராடும் என்று கனவு கண்டு கொண்டிருந்ததும்.. கடைசி நேரத்தில.. வீதியில இறங்கி கத்தினதும்.. பங்களிப்பு என்று கருதினால்.. அதைப் போல் முட்டாள் தனம் ஏதும் இல்லை..!) எவரையும் தாயக விடுதலையின் பெயரால் மன்னிப்பார்களோ தெரியவில்லை.

இறுதியாகக் கூட கொழும்பில் விமானத்தாக்குதல் மேற்கொண்ட கரும்புலிகள் சொன்னார்கள்.. தலைவரின் வழியில்... விடுதலை பெற எல்லோரும் ஒருங்கிணைந்து போராடுங்கள் என்று. எவர் மதிச்சார் அவர்களின் கூற்றை. இரண்டு நாள் செய்தி அவ்வளவே. தெரிந்து கொண்டே நடந்துவிட்டு.. தெரியாதது போல... மாவீரர்களிடம் பாவமன்னிப்புக் கேட்டு எம் வாழ்க்கையை நாம் பார்த்துக் கொள்ளப் போவதற்கு.. ஏன் இந்த மன்னிப்பு..! தவறுகளை மன்னிக்கவா அவர்கள் மாவீரர் ஆனார்கள். அவர்கள் மாண்டது தமிழீழத்திற்காக.

இப்ப கூட மன்னிப்புக் கேட்க வேண்டாம். போராடலாம் வாருங்கள். கடந்த காலத்தவறுகளை மாவீரர்கள் மன்னிக்காவிட்டாலும்.. போராடித் தமிழீழத்தை மீட்டால்.. வரலாறு உங்களை மன்னிக்கும்.. வாருங்கள்.. களத்தில் நின்று போராடுவோம். புதிய சரித்திரம் எழுதும் பலத்தைக் கட்டி அமைப்போம்..! முடியுமோ.. எத்தனை பேர் தயாராக இருக்கிறீங்க..???! அது முடியாது.. மன்னிப்பு என்று பசப்பு வார்த்தைகளைக் கொட்டித் திரிவது அவசியமா. அது தமிழீழக் கனவை நனவாக்க எந்த வகையில் உதவப் போகிறது..??! இதுதான் என் கேள்வி..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போராடத் துணிவின்றி.. எனது தாயகத்தின் விடுதலையில் அக்கறையின்றி.. எனது சுயநலத்தை கருத்தில் கொண்டு.. வாழ்ந்தேன்.. வாழ்கிறேன் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்.

இதைத்தான் நெடுக்ஸ் அண்ணா நானும் சொல்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கூட மன்னிப்புக் கேட்க வேண்டாம். போராடலாம் வாருங்கள். கடந்த காலத்தவறுகளை மாவீரர்கள் மன்னிக்காவிட்டாலும்.. போராடித் தமிழீழத்தை மீட்டால்.. வரலாறு உங்களை மன்னிக்கும்.. வாருங்கள்.. களத்தில் நின்று போராடுவோம். புதிய சரித்திரம் எழுதும் பலத்தைக் கட்டி அமைப்போம்..! முடியுமோ.. எத்தனை பேர் தயாராக இருக்கிறீங்க..???! அது முடியாது.. மன்னிப்பு என்று பசப்பு வார்த்தைகளைக் கொட்டித் திரிவது அவசியமா. அது தமிழீழக் கனவை நனவாக்க எந்த வகையில் உதவப் போகிறது..??! இதுதான் என் கேள்வி..??! :icon_idea:

நெடுக்ஸ் இப்பதான் எனது சிந்தனையும் உங்கள் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. எனக்கு எழுத தூண்டியது இரண்டு விடயம்

1.5கொடி 3பொடி என்று மாற்றுக்கருத்தாக்களின் தளத்திலும்,யாழிலும் பதியப்பட்ட கட்டுரை.

காரணம்_எனக்கு தெரிந்து மக்கள் இதெல்லாம் எமக்கு தேவையில்லை ஆரும் எக்கேடும் கெடட்டும் இருக்கும் மக்களை காப்பாற்றுவதே வழி என்ற நிலைக்கு வந்துள்ளார்களோ என்று சந்தேகப் பட

வைக்குது. ஏனென்றால் சுவிஸ்,யேர்மனி போன்ற இடங்களில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு விழவின் போட்டொ க்கள் பார்த்தேன் மக்களி வருகை மிக குறைவே..

அதைவிட பலருடன் உரையாடும் போதும் தெரிந்த விடயம்.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தான் இருக்கினம்.

2.யாழ்,வவுனியா தேர்தல்_

இங்கும் நாம் எதிர் பார்க்கும் விடயம் நடக்காது போல அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்லுகின்றன.

மாற்றுக்கருத்தாளர்கள் அல்லது தம்மைத்தாமே ஜனநாயகவாதிகள் என்று காட்டுவவர்களே வெல்ல வைக்கப் பட போகிறார்கள். இதையே சர்வதேசமும் தமிழரில் பலரும் நம்பி

அவர்களுக்கு கொடி பிடித்தாலும் பிடிப்பார்கள் இது எனக்கு சரிப்பட்டு வராது... அதுதான் இப்படி ஒரு மனநிலை எனக்கு.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க நானும்,நீங்களும் ஏன் இன்னும் கொஞ்ச பெருமா சேர்ந்து அவுஸ்ரேலியா பாராளுமன்றம் முன்னோ அல்லது ஏதாவது வீதி முன்னோ நாலைஞ்சு கொடியோடு நின்று கத்தினா ஏதும் நடக்குமா?

நிச்சயமா எங்களுக்கு தெரிந்த வகையில் (ஆகக் குறைந்தது ஒரு துண்டு பிரசுரம் குடுத்தாவது) மாவீரர்களின் கனவுக்காக உழைப்போம் இல்லை. நிலமை எமக்கு சாதகமா இல்லாட்டி என்றால் சொறி ப்பா...ஆளை விட்டிடு

என்றிட்டு பேசாமல் காதலையோ, ஆபாசம் பற்றியோ ஆராய்ச்சி பண்ணிட்டு இல்லை அவன் அவளோடை ஓடிட்டான்,இவன் இவளோடை ஓடிட்டான் என்றும்

மானாட மயிலாட வை பார்த்தும் கதைத்தும் மோட்சம் பெறுவோம் <_<:lol::D

இது என் தனிப்பட்ட கருத்து.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க நானும்,நீங்களும் ஏன் இன்னும் கொஞ்ச பெருமா சேர்ந்து அவுஸ்ரேலியா பாராளுமன்றம் முன்னோ அல்லது ஏதாவது வீதி முன்னோ நாலைஞ்சு கொடியோடு நின்று கத்தினா ஏதும் நடக்குமா?

ஒருநாள் கத்தலாம்,சரி ஒருமாதம் லீவு எடுத்து போட்டு இருந்து கத்தலாம் ,பிறகு வேலயால் வீட்டை போ என்று சொல்லுவான் ,அதற்கு பிறகு மனிசியும் ,பாங்காரனும் எங்களை பார்த்து கத்துவான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றை Google இல் search பண்ணுங்கள்:

Srebrenica Massacre

sudan genocide

rwanda genocide

முதல் இணைப்பாக விக்கிபீடியாவில் விபரமாக எழுதப்பட்டிருக்கும்.

ஆனால் vanni massacre அல்லது sri lanka genocide என்று அடியுங்கள் ... பாருங்கள் ஏதாவது உலக மக்களால் அறியப்பட்ட தளங்களின் இணைப்புக்கள் இருக்கின்றதாவென. எதுவும் இருக்காது..

இனி என்ன செய்யமுடியும் எல்லாம் முடிந்துவிட்டதே என்று பெருமூச்சு விட்டுவிட்டு வேலையைப் பார்க்கப் போகின்றோமெ தவிர நடந்த கொடுமையைக் கூட பதிவு (document) செய்ய ஒருவரும் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.