Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் கடத்தல்: மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறை கூட்டுச்சதி

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகள் ஊடாகவும் 'புதினம்' சேகரித்த தகவல்களில் இருந்து தெரியவருவதாவது:

நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.

பிற்பகல் அளவில் - ஜலான் ரொன்கு அப்துல் ரஹ்மான் (Jalan Tuanku Abdul Rahman) வீதியில் இருக்கும் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.

பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது உணரப்பட்டது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி - செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்பு உணர்த்துகின்றன.

அதே வேளையில் வேறு ஒரு பெரிய வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.

இதே வேளையில் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இருந்த போதும் - இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் புலனாய்வு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது.

இதே வேளையில் கொழும்பில் இருக்கும் 'புதினம்' செய்தியாளருக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செல்வராஜா பத்மநாதன் நேற்று வானூர்தி முலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சர்வதேசம் மீண்டும் தமிழ் மக்களுக்கு அள்ளி வைத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளரும், அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

புதினம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது, நீங்கள் தொடர்ந்து வாசிக்க எண்டு கொடுத்தால் எம்மால் வாசிக்க முடியாது, நீங்கள் என்ன புதினத்திக்கு விளம்பரமா செய்யுறியல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் சர்வதேசம் மீண்டும் தமிழ் மக்களுக்கு அள்ளி வைத்துள்ளது.

என்ன எதுக்கெடுத்தாலும் சர்வதேசத்தை வம்புக்கு இழுக்கிறிங்க ??? நம்ம பீ ஈழத் தளரையும் , பிணந்தின்னி நாய் பொறுப்பாளர்களயும் என்ன செய்வது ...அவர்கள் தான் நமக்கு கேடு ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதினம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது, நீங்கள் தொடர்ந்து வாசிக்க எண்டு கொடுத்தால் எம்மால் வாசிக்க முடியாது, நீங்கள் என்ன புதினத்திக்கு விளம்பரமா செய்யுறியல்?

இலங்கையில் எவ்விடம் ? சொன்னால் police க்கு அடித்து சொல்லிவிடுவன் அண்ணே ...அவன் எனக்கு கொஞ்ச எலும்புத் துண்டு தருவான் .....

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா பத்மநாதனை இதற்கு முன்பும் பலததடைவை இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளில் கைது செய்ததாக இந்திய , இலங்கை உளவுத்துறைகள் அறிவித்திருந்தன ..... , அப்படி இருக்கும் நிலையில் அதே நாடுகளில் மீண்டும் கவனக் குறைவாக இருந்திருக்க மாட்டார் . பத்மநாதனுக்கு மூக்கால் போய் காதால் வரும் வழி தெரியும் . எதற்கும் இச் செய்தி உண்மை என்றால் இலங்கை புலனாய்வுத்துறை படங்களை வெளியிடட்டும் .

அதையும் மீறி அவர் உண்மையாகவே கைது செய்யப் பட்டிருந்தால் ........மீண்டும் தமிழனை சாட்டி, சிங்களவன் மகிழ்ச்சி கொண்டாடி கொழும்பில் பட்டாசு வெடி வெடிக்க வைத்தமைக்காக கேபி கண்டனத்துக்குரியவர் ஆவார் .

இலங்கையில் எவ்விடம் ? சொன்னால் police க்கு அடித்து சொல்லிவிடுவன் அண்ணே ...அவன் எனக்கு கொஞ்ச எலும்புத் துண்டு தருவான் .....

ஏன்யா, உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையா? வீண் தர்கத்திற்கே அலையறீங்க.... தமிழனாகிய நீங்கல்லாம் எப்பத்தான் ஒற்றுமையா இருக்கப் போறீங்க?

ஏன்யா, உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையா? வீண் தர்கத்திற்கே அலையறீங்க.... தமிழனாகிய நீங்கல்லாம் எப்பத்தான் ஒற்றுமையா இருக்கப் போறீங்க?

இருக்க மாட்டோம் இருக்கமாட்டோம்..ஒற்றுமை அப்படி என்றால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தியா, மலேஷியா, இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை துரிதமாக முடுக்கிவிடப்பட்டது கே,பி எனப்படும் செல்வராஜா பத்மநாதனை நோக்கி, தாய்லாந்து, மலேஷியா, இந்தியாவில் துரிதமாக செயல்பட்ட இந்தக் குழுவினர் கே.பி ‐க்கு எதிரானவர்களையும் இக்கடத்தலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மலேஷியாவில் நேற்றுக் கைது செய்யப்பட்ட கே,பி கொழும்பு கொண்டு செல்லப்பட்டபிறகுதான் கே,பி.யை இன்டர்போல் கைது செய்திருப்பதான செய்தியை இலங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிட்டது. ஆனால் இனடர்போல் ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் கைது செய்கிறார்களோ அந்த நாட்டில் வைத்து விசாரிக்கும். அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி, இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் தலைமையகம் இருக்கும் பிரான்ஸ் நாட்டிற்குக் கொண்டு செல்லும்.

கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகிறாரோ அந்த அரசு அவரை முறைப்படி தங்களிடம் ஒப்படைக்குமாறு முறைப்படி கேட்டால் சர்வதேச விதிகளின் படி இண்டர்போல் அவரை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமலும் போகலாம்.

ஆனால் கே.பி யின் விஷயத்தில் நடந்தது ஒரு மனித உரிமை மீறல் எனவும் இன்று கே,.பிக்கு நடந்தது நாளை எவர் ஒருவருக்கும் நடக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைப் புலனாய்வுத்துறையின் இந்தக் கடத்தலுக்கு சர்வதேச அளவில் நிலவும் மௌனமும், தமிழ் மக்களிடையே நிலவும் மௌனமுமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித ஹோகன தமக்குத் தெரிவித்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் செல்வராசா பத்மநாதன் கடந்த ஓகஸ்ட் இரண்டாம் திகதியே கைது செய்யப்பட்டு விட்டதாக இன்னொரு செய்தி கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமானதாகச் சொல்லப்பட்டதை அடுத்து அவ்வியக்கத்திற்கு செல்வராசா பத்மநாதனே தலைமை தாங்கி வந்தார்.

முன்னதாக கடந்த ஜனவரியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக செல்வராசா பத்மநாதனை நியமித்திருந்தார் என விடுதலைப் புலிகளின் உயர்மட்டக்குழு குறிப்பிட்டுள்ளது.

தற்போது விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் அடுத்த கட்டத்திற்கு தான் எடுத்துச் செல்ல உள்ளதாக செல்வராசா பத்மநாதன் அறிவித்திருந்தார். கே.பி அல்லது குமரன் பத்மநாதன் என அழைக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டின் மையமாக தொழிற்பட்டவர். அண்மைய நாட்களில் பரவலான ஊடக செவ்விகளை அளித்து வந்ததோடு தனது நிஜமான தோற்றங்களையும் ஒளிப்படங்களாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

2007 செப்ரம்பர் மாத முற்பகுதியில் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக தமக்கு கிடைத்த நெருக்கமான தகவல்களை ஆதாரம் காட்டி இலங்கைப் பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் அச்செய்தி தொடர்பாக மெற்றோ பொலிற்றன் காவற்துறை விசேட காவற்துறைப் பிரிவு, குடிவரவு குடியகல்வு காவற்துறைப் பிரிவு என அனைத்திலும் விசாரித்ததாகவும் அவ்வாறான ஒருவர் கைது செய்யப்படவில்லை என்றும் தேசிய காவற்துறைப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் றொன்னாறோங் யங்யூன் தெரிவித்தருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

gtn

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என தாய்லாந்தின் பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறொரு நாட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளமையை தம்மால் உறுதி படுத்த முடியும் என தாய்லாந்தின் பிரமர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மலேசியாவில் வைத்து கைதானதாக வெளியான தகவல்களை இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.

இதற்கிடையில் சர்வதேச காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் வைத்து நேற்று சர்வதேச காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக கொழும்பு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகள் ஊடாகவும் 'புதினம்' சேகரித்த தகவல்களில் இருந்து தெரியவருவதாவது:

நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.

பிற்பகல் அளவில் - ஜலான் ரொன்கு அப்துல் ரஹ்மான் (Jalan Tuanku Abdul Rahman) வீதியில் இருக்கும் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.

பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது உணரப்பட்டது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி - செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்பு உணர்த்துகின்றன.

அதே வேளையில் வேறு ஒரு பெரிய வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.

இதே வேளையில் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இருந்த போதும் - இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் புலனாய்வு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது.

இதே வேளையில் கொழும்பில் இருக்கும் 'புதினம்' செய்தியாளருக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செல்வராஜா பத்மநாதன் நேற்று வானூர்தி முலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

புதினம்

லண்டனிலிருந்து போன லூக்காஸ் அம்மாண் அவர்களின் புண்ணியத்தில் (கூட்டுசதியில்) இவ்வளவும் நடந்தேறியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.