Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

___________________________________________________ -வல்வைக்கடல்-

இழு தேரை..

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை...பரவாயில்லை..புலத்த

ு தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்...

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்...

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப+மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்.....

அட நானும் தேரை இழுக்க கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு ஓடியாந்தன் இப்பிடி ஏமாத்திட்டியளே வல்வைக் கடல். :(

உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்...

உயிரைக் காப்பாற்று என்று கதறியவனுக்கு கால் போனது. அவன் தலையோடு வந்தது தலப்பாகையோடு போனதென நேத்திக்கடனை நிறைவேற்றக் காத்திருக்கின்றான். உயிருக்காக மன்றாடி செத்தவர்கள் கடவுளை வெறுக்கப்போவதில்லை. அவர்கள் செத்துவிட்டார்கள். தப்பியவர்கள் தேரிழுத்துக்கொண்டே இருப்பார்கள் காரணம் அவர்கள் கடவுளால் காப்பாற்றப்பட்டவர்கள். இறக்கும் வரை சம்பவங்கள் சிந்தனைக்கு அப்பால் கடவுளுடன் முடிந்து வைக்கப்பட்டுள்ளது.

எண்பதுகளில் ஒரு ஓவியம் வந்தது. அதில் இரண்டு சிங்களச் சிப்பாய்கள் புத்தரை துப்பாக்கியால் சுடுகின்றார்கள். அடுத்தவன் ஏன் என்று கேட்கின்றான். அதற்கு அவர்கள் இவனை கொல்லாவிட்டால் ஒரு ஈ காக்காயை கூட சுட முடியாது பின் தமிழனை எங்கே சுடுவது என்று கேட்டான். அவனே இன்று ஆதிகாரம் மிக்கவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி....சுகன்...காந்தன் .....ஆக்கம் படித்து ஊக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvai kadal

எங்கள் கலை,கலாச்சார, மற்றும் சமய வழிபாடுகள் முக்கியம் தான் ஆனால் போகும் நிலையில் எங்கள் மொத்த இனமே அழியும் அபாயத்திலிருக்கும் போது எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்காமல் கோவில் திருவிழாக்களிலும் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பங்குபற்றும் மக்களைப் பார்த்தால் தான் வேதனையாக இருக்கிறது.....

உங்கள் இந்த வரிகள் மனதைத் தைத்தவை......

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

___________________________________________________ -வல்வைக்கடல்-

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்.....

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கடல்,

எவ்வளவு தான் நாம் தொண்டை கிளியக் கத்திச் சொன்னலும் நம்மவர் காதுகளுக்கு. பெரியவர்கள் சொல்வார்களே.....விளலுக்கு இறைத்த நீர் எண்டு...அது தான்...ஆனாலும் எல்லா மக்களும் அப்படி எண்டு இல்லை.

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

கேட்டால் சொல்கிறாய் நேர்த்திக்கடன்.நம் நாட்டில் பசியால் சாகிறார்கள்..இங்கு மக்கள் குப்பைக்குள் கொட்டும் உணவில் கால் கவளம் போதும் அவர்களின் பசியை ஆற்றுவதற்கு.தமிழா இனிமேலாவது திருந்துவாயா....?

யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர் இழுத்த கவிதைபடித்து கருத்துக்கள் மற்றும் ஊட்டங்கள் எழுதிய எல்லாருக்கும் நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கடல் எனக்குப் பரிச்சயமானது. பிறப்பிலிருந்து இனி எப்போதோ நான் காணப்போகும் இறப்புவரை தொடரப் போகும் பந்தம் வல்வைக்கடல்.

வல்வைக்கடல் உங்கள் குமுறலும் கொந்தளிப்பும் இங்கு நீங்கள் சாடும் கூட்டத்திற்குப் புரியுமா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முறுவலுடன் கொழுவிருக்கும் தெய்வத்திற்குத்(?) தெரியுமா? மனமது லிங்கமாகும் நேசமே நெய்யும் பாலும் என்று பட்டினத்தார் என்றோ பாடியும் என் பயன்? தெய்வத்தை நிந்திப்பது என் நோக்கமல்ல. தெய்வம் என்பது யாது? தெய்வத்தை விழுந்து விழுந்து கும்பிட்டு தேரிழுத்துத் திருவிழாக்கள் நடாத்தி நேர்த்திகளை நிறைவேற்றினால் நாம் நினைக்கின்ற அனைத்தையும் அடைய முடியுமா?

மகாபாரதக்கதையில் துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலிரியத் தொடங்குகிறான். திரௌபதி ஒற்றைக் கையால் சேலையை இறுகப்பற்றியபடி மானத்தைக் காக்கப் போராடியபடி காப்பாற்றக் கண்ணனைஜஅழைக்கிறாள். காக்கும் கடவுள் கண்ணன் வரவில்லையாம். ஆடையைக் கைவிட்டு இரண்டு கைகளையும் தூக்கிக் கண்ணனைக் கூப்பிட்டு கும்பிட்டபோது அவள் மானம் காப்பாற்றப்பட்டதாம் என்று இந்த இதிகாசப் புனைவு....... இந்த தேரிழுக்கும் கூட்டத்திடம் ஒரு கேள்வி..... இந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரேயடியாக மரணத்திற்குள் புதையுண்டு போன சனத்தில் எவருமே கடவுளை காப்பாற்ற அழைக்கவில்லையா? அல்லது கடவுளுக்குக் கண்ணில்லாமல் போய்விட்டதா? இப்போதும் வதைமுகாம்களுக்குள் முடக்கிவைத்து சித்ரவதைக்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் தெய்வத்தை நாடுவதில்லையா? அல்லது கடவுளே காக்கும் சக்தியற்று கையாலாகாத நிலையில் உள்ளது என்று கைவிட்டுவிட்டார்களா?

வல்வைக்கடல் நாங்கள் மிகப்பெரிய தவறுகளை கடந்த காலத்தில் செய்துவிட்டோம் தெரிந்தோ தெரியாமலோ தேசியம் என்பதை கேளிக்கைகள் வாயிலாகவே புலம் பெயர் மக்களிடம் கொண்டு சென்ற தவறு எங்களுடையது. நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் மிகக் கீழ்தரமாக ஒடுக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் புலமபெயர் உறவுகள் கேளிக்கை நிகழ்வுகளை நிகழ்த்தக் குதூகலிக்க எத்தனையோ விதமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள். இப்போது தேவையா என்று கேட்டால் தாம் இயந்திர வாழ்க்கையில் உள்ளோம் எங்களுக்கும் ரிலாக்ஸ் வேண்டும் என்று ஞாயப்படுத்துகிறார்கள்(?)

இங்கு கனடாவில் ஒரு கோயில் ஸ்தாபகர் இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள் அனைவரிட்மும் ஒரு வேண்டு கோளை முன்வைக்கிறார் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டி முடியுங்கள் தமிழீழம் மலரும்??????? அந்தக் கோயிலின் ராஜகோபுரம் கட்டும் வரை எதுவுமே நடக்காதாம். இந்தத் தேரிழுக்கும் கூட்டத்தை இந்த ராஜ கோபுரத்தைக் கட்டிவிடச் சொல்லுங்கள் தாயகத்தில் தமிழர் தன்னாட்சியுடன் பெருவாழ்வுபெறும் வரத்தை அந்தக் கடவுள் தந்துவிடுவார்.!!!!!! பின்னர் எல்லோரும் மகிழ்ச்சியாக தாயகத்திற்குச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு எங்களை ரிலாக்ஸ் ஆக்கலாம்.

பட்டும், பொன்னும் பவுசும் காட்டவே கோயிலுக்குச் செல்லும் கூட்டத்திடம் உங்கள் கவிதை எடுபடுமா வல்வைக்கடல்? எல்லாம் எருமை மாட்டில் மழை பெய்த கதைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் எழுதிய உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றிகள்.நீங்களும் மிகவும் கனமாகவும் அழகாகவும் எழுதிவருகிறீர்கள்.தொடரட்டும

  • கருத்துக்கள உறவுகள்

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

கவிதைத் தலைப்பு அழகு.

நிஜங்கள்.......... ஆவேசமாய் கவிதையில் பட்டுத் தெளிக்கிறது.

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வாசிங்டனில் மட்டும் தானா இல்லை வேறு எங்காவதுமா?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29966

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.