Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபீடீபி டக்லஸ் தேவானந்தாவின் அபிமானி ஒருவரின் உள்ளக்குமுறல்..!

Featured Replies

வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!….

கால் வைத்து நிற்பதற்கு கடுகு நிலம் கூட இல்லை. உலகப்புரட்சி பற்றி கனவு காண்கிறார்கள் வரட்டுச்சித்தாந்த வாதிகள். ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல். திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் கேள்வியைப்போல் பாட்டெழுதிப்புகழ் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். கேள்வி கேட்டு புகழ் வாங்க முயற்சிக்கும் புலவர்களும் இருக்கின்றார்கள். இதில் சபா நாவலன் போன்றவர்கள் எந்த ரகம் என்பதை யாரும் இனங்கண்டு கொள்ள முடியும்.

கடந்த சனியன்று ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டான் தமிழலை வானொலியில் செவ்வி வழங்கிக்கொண்டிருந்த போது இடையில் ரஞ்சன் என்ற பினாமிப்பெயரில் ஒருவர் வந்து கேள்வி கேட்டு புகழ் வாங்க எத்தனித்திந்தார். இவர் வேறு யாருமல்ல. அதே சபா நாவலன்தான்.

மாக்சிசம் குறித்தும், உலகமயமாக்கல் குறித்தும், உலகப்புரட்சி குறித்தும் கூச்சலிடும் சபா நாவலன் ஆரம்பங்களில் தேர்ந்தெடுத்த இயக்கம் ரெலோ இயக்கம். ரெலோ இயகத்தில் இருந்த போது கெலன் என்ற முகத்தோடு செயற்பட்டவர். ரெலோ அமைப்பு புலிகளால் தடை செய்யப்பட்ட போது தனது உயிர்ப்பிச்சைக்காக கிராமிய உழைப்பாளர் சங்கத்துடன் இணைந்து கொண்டு கிராமிய மக்களை தனது சொந்த பாதுகாப்பிற்காக பயன்படுத்தியிருந்த வரலாறுகளை யாரும் மறந்து விட முடியாது. கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் தீபன் என்ற முகத்தோடு வெளிவந்திருந்தவர். இன்று புல்ம்பெயர் தேசத்தில் சபா நாவலன் என்ற முகத்தோடு புனை கதைகளையும், கற்பனை சித்திரங்களையும் வரைந்து வருகின்றார். இதே சபாநாவலனின் இன்னொரு முகம்மான் டான் தொலைக்காட்சியில் வந்து கோள்வி கேட்ட றஞ்சன் என்ற பெயர்.

இவ்வாறு கெலன், தீபன், சபாநாவலன், றஞ்சன் என்று தனது முகங்களை அடிக்கடி மாற்றி வேடதாரி அரசியல் நடத்தி வரும் இவர் தனது சொந்த முகத்தோடு வந்து டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி கேட்டிருந்தால் இவரது உறுதிப்பாட்டை நம்பியிருக்கலாம். ஆனால் முகமூடி அணிந்து வந்து மாச்சீயம், ஐனநாயகம், மனித உரிமை குறித்து கூச்சலிட்டு சென்றிருக்கின்றார்.

சுய சிந்தளைனயில் எதையும் எழுதத்தெரியாத சோப்பறித்தத்துவவாதிகள் தங்களது தத்துவ வரட்சிக்காக யாரோ எழுதி வைத்த கட்டுரைகளை அப்படியே பிரதி செய்து தங்களை தத்துவ வித்தகர்களாக புலம்பெயர் தேசங்களில் காட்ட முற்படுவது வேடிக்கையான விடயம்.

யாழில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வன்னிக்குள் சென்றிருந்த சபா நாவலன் தன்னோடு இருந்த சக இயக்க போராளிகளான ரெலோ உறுப்பினர்களை கொன்றொழித்த புலிகளை கண்டு பல்லிழித்து திரிந்த காட்சிகள் மறக்க முடிந்தவைகள் அல்ல. பாவம் இவர்! பாசிசப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று வியாபாரிகள் போல் உடுத்த சாரத்துடன் கொழும்பு வந்து சேர்ந்தவர்.இவர் கூறும் சிங்களப்பேரினவாதிகள் மத்தியில்தான் இவரால் நிம்மதி பெரு மூச்சு விடமுடிந்தது.

பாசிசப்புலிகளும் தவறு, பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும், பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில் செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?… அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள் ஒட்ட நறுக்கி, அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தாயகத்தில் அரசியல் ரீதியாக செற்படுவதென்றார் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஓன்று சபா நாவலன் கூறும் போரினவாதிகளோடு பொது உடன்பாட்டிற்கு செல்வது, அல்லது பாசிசப்புலிகளோடு சேர்ந்திருப்பது. இந்த இரு நிலைகளையும் தவிர தனித்துவமாக இயங்க முடியும் என்றால் சபா நாவலன் போன்றவர்கள் தாயகம் சென்று அவலப்படுகி;ற மக்களை காப்பாற்ற முயற்சிக்கலாம்.

அவ்வாறு யாராவது புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தாயகத்தில் செயற்பட்டிருந்தாலும் சபா நவலன் போன்றவர்கள் ஐராப்பாவில் இருந்து கொண்டு கற்பனைக்கட்டுரைகளையே வரைந்து கொண்டிருப்பார்கள். அது தவிர இவ்வாறு செயற்படுபவர்களையும் திட்டித்தீர்ப்பதற்கு சபா நாவலன் போன்றவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.காரணம் இவர்கள் எதையாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராக சேறடித்தே பழக்கப்பட்டவர்கள்.

இன்று தமிழ் பேசும் மக்கள் கொல்லப்படுவதற்கும்,அவலங்களை சந்தித்து நிற்பதற்கும் காரணமானவர்கள் புலிகள் மட்டுமல்ல.இவர்களும்தான் காரணமானவர்கள்.இத்தனை இழப்புகளின் பின்னரும் அரை குறை தீர்வுகளை ஏற்பதா என்று சபா நவலன் போன்றவர்கள் கூறி வந்திருக்கிறார்கள்.ஆகவே புலிகள் தொடர்ந்தும் யுத்தம் நடத்த வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக இருந்து வருகின்றது.

ஒரு யுத்த சூழலில் மக்கள் அழிவுகளையே சந்திக்க வேண்டிய அவலம் நடக்கும். இதை ஆரம்பம் முதல் ஈ.பி.டி.பி.,ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற அமைப்புகளும், மற்றும் ஐனநாயக முற்போக்கு சக்திகளும் தெளிவாக உரைத்திருந்திருந்தனர்.

கிடைப்பதை எடுத்துக்கொண்டு இன்னும் பெற வேண்டியவற்றுக்காக நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் முன்னேற வேண்டும் என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி கூறி வருவதுண்டு. பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும் என்று டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் கூறிய கூற்றின் உண்மைகள் இன்று புலப்படத்தொடங்கி விட்டன. இது புலம் பெயர் தேசத்தில் இருந்து வரட்டு சித்தாந்தம் பேசும் நுனிப்புல் மேய்ந்த சபா நவலர்களுக்கு மட்டும் புரியாமல் போனது ஆச்சரியமல்ல.

ஊடக சுதந்தரமில்லை, உண்மையை உரைக்கும் சுதந்திரமில்லை. அது உண்மைதான்.சாதரண அப்பாவி குடி மக்களுக்கே உயிர் வாழும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பாசிசப்புலிகளே என்பது உலகறிந்த உண்மை.

வன்னியில் இருந்து தப்பித்து வந்திருந்த சபாநாவலன் இலங்கை புலனாய்வுத்துறைக்கு வன்னி நிலவரங்கள் குறித்து தகவல் கொடுக்கப்போவதாக கூறி கொழும்பு தெருக்களில் அலைந்த வரலாறுகள் இருக்கின்றன. இது இவ்வாறு இருக்கையில் தமிழ் பேசும் மக்களுக்காக பரிந்து பேசுவது போல் நாடகம் நடித்து தனது சந்தர்ப்ப வாத அரசியலை ஐரோப்பிய அரங்கில் மேடையேற்றி வருகின்றார்.

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் மாற்று ஐனநாயக சக்திகள் மத்தியில் பிளவுகளையும், முரண்பாடுகளையும் திட்டமிட்டு தோற்றுவித்து வரும் இவர்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

இழப்புகளை சந்தித்து வரும் நாம் இந்த தீர்வையா ஏற்பது என்று பாசிசப்புலிகளுக்கு வாக்காலத்து வாங்கும் இவர்கள் தம்மை நடு நிலையாளர்களாக முகம் காட்டுவதற்காகவே அடிக்கடி பாசிசப்புலிகள் என்றும் கூறி வருகின்றார்கள்.

தமது உறவினர்கள் அரச படையினரால் கைது செய்யப்பட்ட போதும், தமது உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்காகவும் டக்ளஸ் தவானந்தாவுடன் தொடர்பு கொள்ளும் இவர்கள் மீன் மணக்கும், மீன் விற்ற காசு மணக்காது என்ற கொள்கையுடையவர்கள் என்பதே உண்மை.

தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு காரணமானவர்கள் நீங்களும்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்தாத புலித்தலைமையை நோக்கி இது வரை கேள்வி எழுப்பாத சபா நாவலன் போன்றவர்கள் கற்பனையில் மட்டும் எழுதிக்கொண்டிருக்கவே அருகதையுடையவர்கள்.

அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது.

ஆகவே இன்று நடக்கும் யுத்தத்திற்கும் அதனால் நடக்கும் அழிவுகளுக்கும் நீங்களும் ஏதோ வகையில் காரணமாக இருந்து வருகின்றீர்கள். மகிந்த சிந்தனைக்கும் மாவோ சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவு படுத்துவதற்கு சுண்டங்காய் சபாநாவலனுக்கு முடியும் என்றால் ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முடியாமல் போகும் என்று சிறு பிள்ளைத்தனமாக சிந்திப்பது வேடிக்கை.

அழிவு யுத்தம் மனித மண்டையோடுகளில் இரத்தம் குடிக்கிறது. சாதாரண மக்களை நடுத்தெருவிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. புத்திஐPவிகள், கல்விமான்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், ஐனநாயகசக்திகள், சமூக அக்கறையாளர்கள், மாற்று இயக்க போராளிகள் என பலரையும் வகை தொகையின்றி கொன்றொழித்து வருகின்றது.இதில் இவர்கள் கூறும் போரினவாதிகளின் கரங்களை விடவும் புலிகளின் பாசிசக்கரங்களே அதிகளவு நீண்டிருக்கின்றது. எஞ்சியுள்ளோர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டார்கள்.

மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சேறடிப்புகளுக்கு மத்தியில் நின்று நீங்கள் அவதூறு பொழியும் டகளஸ் தேவானந்தா ஐனநாயகத்தையும் அரசியல் தீர்வையும் உருவாக்கி வைப்பார்.அப்போது பெட்டிக்கடை போடுவதற்கு மட்டும் வந்து சேருங்கள்.

முடிந்தால் நீங்கள் கூறும் யுத்த குற்றவாளிகள் மீதான குற்றங்களை ஆதாரங்களோடு முன்வைத்து அவர்களை சர்வதேச நீதி மன்றத்தின் முன்பாக நிறுத்தப்பாருங்கள். அதை விடுத்து அர்த்தமற்ற வகையில் திட்டமிட்டு அவதூறு பொழிவதை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை.

நடைமுறையில்லாத தத்துவமும், தத்துவமில்லாத நடைமுறையும் நொண்டிக்குதிரைக்கு ஒப்பானது. அந்தரத்தில் இருந்து கொண்டு சுந்தர வசனத்தில் ஆகாசப்புழுகு விடுவதில் அர்த்தமில்லை. வேடதாரி அரசியலை விட்டு மக்களின் நண்பர்களாக முகங்களை காட்டி வாருங்கள்.

- அகத்தியன்

www.paarvai.net

******************************************

பதிவுடன் தொடர்புடைய வலைத்தளம்: http://inioru.com/

சபா நாவலனின் அண்மைய ஓர் கட்டுரை: புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரச பயங்கரவாத வலைப்பின்னலும் மாற்று அரசியலுக்கான முன்நிபந்தனையும்

******************************************

பி/கு: மேலுள்ள கட்டுரைகளும், விமர்சனமும் எனது கவனத்தை ஈர்த்தமையால் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். வேறு தனிப்பட்ட உள்நோக்கங்கள் இல்லை. நன்றி!

மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சேறடிப்புகளுக்கு மத்தியில் நின்று நீங்கள் அவதூறு பொழியும் டகளஸ் தேவானந்தா ஐனநாயகத்தையும் அரசியல் தீர்வையும் உருவாக்கி வைப்பார்.அப்போது பெட்டிக்கடை போடுவதற்கு மட்டும் வந்து சேருங்கள்.

அதுதானே ,அரசியல் சின்னத்தில தேர்தலில் நிக்கமுடியல்ல இந்தலட்சணத்தில அரசியல் தீர்வு

டக்கி ஜயாவால் எடுத்ததர ஏலாது எதுவும்மில்லை

வாழ்க டக்கி

Edited by Jil

கருத்துகளை இணைத்ததில் தவறில்லை. ஆனால்.. இனியொரு.. அதன் படைப்புகள்.. அவற்றின் அடிப்படை கருத்துகள்.. அவற்றையும் கவனித்து இங்கே கொண்டு வந்தால் நல்லது. ஒரு துரோகியை துகிலுரிய. இன்னொரு துரோகிக்கு துகில் கொடுப்பதாக ஆகக்கூடாதல்லவா?! :D

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!….

பி/கு: மேலுள்ள கட்டுரைகளும், விமர்சனமும் எனது கவனத்தை ஈர்த்தமையால் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். வேறு தனிப்பட்ட உள்நோக்கங்கள் இல்லை. நன்றி!

உள்நோக்கம் ஏதும் இல்லை என்றால்........? அதையிருந்த இடத்திலேயே வைத்து வாசித்திருக்கலாமே? இங்கே இணைப்தற்கு உங்களிடம் நிற்சயம் ஒரு காரணம் இருந்திருக்கவே வேண்டும்! இது....... இதை எழுதுவதால் என்னையும் துரோகி என்பார்கள் என்று எழுதிவிட்டு அத்தனை துரோகதனமான கருத்துக்களையும் சிலர் எழுதுவது போல் உள்ளது. இது இப்போது புது பாஸன்போல...........

  • தொடங்கியவர்

உள்நோக்கத்துடனேயே இணைத்து இருந்தேன் மருதங்கேணி. தவறுதலாக மாறி எழுதிவிட்டேன் மன்னிக்கவேண்டும். நீங்கள் யாராவது என்னை துரோகி என்று சொல்ல பிறகு எனக்கு கலுசானுடன் மூத்திரம் போகும் என்கின்ற பயத்தில்தால் அப்படி எழுதி இருந்தேன்.

சோழியன் மாமா... ஏற்கனவே குறிப்பிட்ட வலைத்தளத்தின், கட்டுரையின் தொடுப்பை குடுத்து இருக்கிறன் தானே. எனக்கு சில காலமாக இன்னுமொருவில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதுண்டு. கூகிழில் தடவிப்பார்த்தேன். மேலுள்ள கட்டுரையும் சிக்கியது. இந்தக்கட்டுரை உண்மை அல்லது பொய் என்பதைவிட ஓர் படைப்பாளியாக இந்தக்கட்டுரை பிடித்து இருந்தது. எனவே கதைகள் பகுதியில் இணைத்து இருக்கின்றேன்.

உள்நோக்கத்துடனேயே இணைத்து இருந்தேன் மருதங்கேணி. தவறுதலாக மாறி எழுதிவிட்டேன் மன்னிக்கவேண்டும். நீங்கள் யாராவது என்னை துரோகி என்று சொல்ல பிறகு எனக்கு கலுசானுடன் மூத்திரம் போகும் என்கின்ற பயத்தில்தால் அப்படி எழுதி இருந்தேன்.

சோழியன் மாமா... ஏற்கனவே குறிப்பிட்ட வலைத்தளத்தின், கட்டுரையின் தொடுப்பை குடுத்து இருக்கிறன் தானே. எனக்கு சில காலமாக இன்னுமொருவில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதுண்டு. கூகிழில் தடவிப்பார்த்தேன். மேலுள்ள கட்டுரையும் சிக்கியது. இந்தக்கட்டுரை உண்மை அல்லது பொய் என்பதைவிட ஓர் படைப்பாளியாக இந்தக்கட்டுரை பிடித்து இருந்தது. எனவே கதைகள் பகுதியில் இணைத்து இருக்கின்றேன்.

படைப்புகள்.. கருத்துகள். அவை எவையாயினும் நானும் வாசிப்பதுண்டு.. எனக்கும் இனியொரு பூன்ற சில தளங்களிலிருந்து மின்னஞ்சல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இந்த ஆக்கத்திலேயே 'பாசிசம்' என்ற பதம் எப்படி எந்த இடத்தில் எத்தனைமுறை பாவிக்கப்பட்டுள்ளது என்பதை அவதானித்திருப்பீர்கள்.. ஆகவே, கட்டுரை மேலெழுந்தவாரியாக வெளிப்படுத்தும் கருத்ரைதவிட, அது வாசகர் மனதில் எதை மறைமுகமாக மீண்டும் மீண்டும் விதைப்பதைில் உறுதியாக உள்ளது என்பதையும் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மற்றும்படி, 'எப்பொருளாயினும் மெய்ப்பொருள் காண்ப தறிவு' போல, நாம் இருந்தாலும், சந்தணத்துக்காக சாக்கடையில் இறங்கினால்.. சாக்கடை அப்பிக் கொண்டு உபத்திரவம் தரும்... அதனால் அவதானமாக இருப்போம்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல்.

இதைத்தான் இவ்வாக்கத்தை எழுதிய அகத்தியனும் செய்கின்றார்.. இதே மாதிரியான ஆக்கங்கள் இணையங்களிலும் சிறுசஞ்சிகைகளிலும் மலிந்துபோய் உள்ளன. இவற்றைப் படித்து மண்டை விறைக்குமே தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது..

மக்கள் மீதான கரிசனை உள்ளவர்கள் வெறும் "கதை"யில் நேரத்தைச் செலவழிப்பதைவிட பிரயோசனமான சின்னச் சின்ன விடயங்களைச் செய்வது நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

அழிவு யுத்தம் மனித மண்டையோடுகளில் இரத்தம் குடிக்கிறது. சாதாரண மக்களை நடுத்தெருவிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. புத்திஐPவிகள், கல்விமான்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், ஐனநாயகசக்திகள், சமூக அக்கறையாளர்கள், மாற்று இயக்க போராளிகள் என பலரையும் வகை தொகையின்றி கொன்றொழித்து வருகின்றது.இதில் இவர்கள் கூறும் போரினவாதிகளின் கரங்களை விடவும் புலிகளின் பாசிசக்கரங்களே அதிகளவு நீண்டிருக்கின்றது. எஞ்சியுள்ளோர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டார்கள்.

இந்த பந்தியில் உள்ள கருத்தை தான் நிச்சயமாக அக்த்தியன் என்பவர் நிச்சயமாக சொல்ல வந்தார் என்று சொல்லாம். வேறென்ன புரட்சிகரமான கருத்தை இவர் கூறி விட்டார். ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கெலன் என்கிற சபாநாவலன் ஒரு வங்குரோத்து பேர்வழி..இவரின் சுத்துமாத்தும்

திருட்டுகளும் புலம் பெயர்ந்துள்ள 'ரெலோ' காரர்களுக்கும் நல்லாத் தெரியும். இவரை

இயக்கத்துக்கு கொண்டு வந்த மனோமாஸ்டரின் முதுகிலேயே குத்தினவர்தான் இந்த

நாவலன். பிரான்ஸில் ஆக்களை ஏத்தி இறக்கி தருவதாக சொல்லி நிறைய பணம்

பெற்று அங்கிருந்து ஓடி லண்டன் போனார். அங்கும் ஒரே மோசடிதான். எந்த அமைப்பிலும்

ஒரு மாதத்துக்கு மேல் இருக்க முடியாத கொள்ளை குன்றம்தான் இவர்.

டக்ளஸ் ஒரு முல்லைமாறி : சபாநாவலன் ஒரு முடிச்சவிக்கி

டக்ளஸ் இனத்தை விற்று மந்திரியானவன் : நாவலன் சந்தர்ப்பம் கிடைத்தால் இனத்தை

மொத்தமாக விற்பான்.

இரண்டும் நல்ல கோமாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்நோக்கத்துடனேயே இணைத்து இருந்தேன் மருதங்கேணி. தவறுதலாக மாறி எழுதிவிட்டேன் மன்னிக்கவேண்டும். நீங்கள் யாராவது என்னை துரோகி என்று சொல்ல பிறகு எனக்கு கலுசானுடன் மூத்திரம் போகும் என்கின்ற பயத்தில்தால் அப்படி எழுதி இருந்தேன்.

உங்களிடம் எந்த உள் நோக்மும் இல்லையேனில் அதை இங்கே இணைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? ஏதோ ஒரு காரணத்தை யாவரும் காட்டலாமே?

அப்போ ஒட்டுக்குழுக்களின் யாருக்கும் விழங்காத கட்டுரைககளை இங்கே தொடாந்தும் இணைக்கலாமே? ஏன் பாலியல் சம்ந்தமான ஆடையில்லாத பெண்களின் படங்களிலும் ஏதொ ஒன்று இருக்கின்றதுதானே? எனக்கு மனக்குளிர்ச்சியாக இருந்து உங்களுக்கும் குளிரட்டும் என்று.............. நானும் இணைக்கலாமா?

உங்கள் ஒருவருடைய தனிபட்ட சிந்தனையை ஒரு யாழ்களமே ஏற்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருப்பின். அதைத்தான் தமிழில் மமதை என்பார்கள்......... அது இல்லாதிருப்தே சிறப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.