Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!!

on 26-08-2009 08:43

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ராகுல் காந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்ற விஜய், ராகுல் காந்தியுடன் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தியதாக இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறும்போது ‘‘தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். விஜய்யுடன் பேசியது அதில் ஒரு முயற்சி. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்’’ என்றனர். இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே புதுவை முதல்வர்தான் என்றும் கூறப்படுகிறது.

விஜய்க்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பைத் தர ராகுல் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விஜய்யின் தந்தை-இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் மின்னஞ்சலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். இப்போது நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றார்.

ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என் தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தும் கூறி வரும் நிலையில், அடுத்த முக்கிய நடிகரும் காங்கிரஸ் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் 'கோயிங் ஸ்டெடி' என்பதைப் போல காட்டிக் கொண்டே, மறுபக்கம் விஜய், விஜய்காந்துடன் அரசியல் பேச ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

அதிகாலை.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன காங்கிரசுக்கு உயிரூட்டி மிச்சசொச்ச தமிழனையும் பரலோகம் அனுப்பப் போறாங்கள்..! :)

ஓஹோ.. அப்ப கெதியில விசயிண்ட படங்கள், தொலைக்காட்சி புறக்கணிப்புக்கான முஸ்தீபுகளை புலத்தில காணலாம் என்று சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிப்பெல்லாம் அறிக்கயில தாங்க

இது சொத்து பிரச்சினையாம்.

விஜய் புது கட்சி தொடங்குவதாக கதை அடிபட, கருணா நிதி மெதுவாக அவர்களின் பெரும் சொத்தை(அதவது நமது சொத்து) கொள்ளையடிக்கும் நோக்கில் சில சில்மிசங்களில் ஈடுபட்டுள்ளார். அதில் இருந்து தப்பவே காங்கிரசில் விஜய் இணைந்து விட்டாராம். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கொதித்து போய் உள்ளனராம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால் இவனது (இவனுக்கெல்லாம் மரியாதை கொடுக்க என்னால் முடியவில்லை) பொண்டாட்டி ஈழத்தமிழிச்சி எனக் கேள்விப்படேன். பெண்கொடுத்தசாதிசனத்தை இன அழிப்புச் செய்ய ஆயுதமும், அனுசரணையும் கொடுத்து அம்மாக்காரிக்கு துணையாகவிருந்த ராகுல் காந்தியின் கைகளில் உள்ள இரத்தக்கறை இன்னமும் காயவுமில்லை கழுவப்படவுமில்லை. அவனுடன் கூட்டுச்சேர்ந்துவிட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யை தொடர்ந்து பிரபுவையும் இழுக்கும் காங்.

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 14:28 [iST]

சென்னை: விஜய்யைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவையும் காங்கிரஸில் இணைக்க அக்கட்சியிலிருந்து முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

நடிகர்களே இல்லாத ஒரே கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில் தனிக்கட்சி தொடங்கும் மன நிலையில் இருந்த விஜய்யை வலியக்க போய் தங்களது கட்சியில் இணைக்க முயன்று வருகிறது காங்கிரஸ். விஜய்யும் அதற்கு சம்மதித்து விட்டதாக தெரிகிறது.

விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் சோனியா காந்தி - ராகுல் காந்தி முன்னிலையி்ல விஜய் காங்கிரஸில் கை கோர்ப்பார் என்று தெரிகிறது.

பிரபுவுக்கும் அழைப்பு...

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு நடிகர் பிரபுவுக்கும் அக்கட்சியிலிருந்து அழைப்பு போயுள்ளதாம்.

பிரபுவின் தந்தை சிவாஜி கணேசன் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்து வந்த அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி சிவாஜியை எப்படி நடத்தியது என்பது அரசியலை நீண்ட காலமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

சிவாஜி ரசிகர்களை போஸ்டர் ஒட்டவும், பிரசாரம் செய்யவும், கொடி பிடிக்கவும் மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு அப்போது பலமாகவே இருந்தது.

சிவாஜி கணேசனை கிட்டத்தட்ட ஒரு கறிவேப்பிலை போலவே காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும் அப்போது சிவாஜி தரப்பில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.

காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி தொடங்கினார். இந்தக் கட்சியை அவரால் நடத்த முடியவில்லை. காரணம் அரசியல்வாதியாக மட்டுமே இருந்த சிவாஜிக்கு அரசியல் நடத்தத் தேவையான நுணுக்கங்கள் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஒரு அணியாக செயல்பட்டபோது, சிவாஜியின் கட்சி, ஜானகி அணியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து, அனைத்துத் தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவியது.

அப்போது சேவல் சின்னத்தில் தனி அணியாகப் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 20க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது நினைவிருக்கலாம்.

அத்தோடு அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார் சிவாஜி கணேசன். அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் யாரும் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக நடிகர் பிரபு, அரசியலில் குதிப்பார் என அவரது அண்ணன் ராம்குமார் அவ்வப்போது கூறி வருகிறார்.

விஜய் விழாவில் பிரபுவும் சேரக் கூடும்...

இந் நிலையில், காங்கிரஸ் கட்சியில் வந்து இணையுமாறு பிரபுவுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வந்துள்ளனவாம். விஜய், காங்கிரஸில் இணையும் விழாவை சென்னையில் சோனியா காந்தி தலைமையில் பிரமாண்ட விழாவாக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டப்பட்டு வருகிறதாம்.

அதே விழாவில் பிரபுவும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பேச்சு அடிபடுகிறது.

பிரபுவையும் காங்கிரஸில் சேர்த்து விட்டால் விஜய் ரசிகர்கள் மற்றும் பிரபு, சிவாஜி ரசிகர்களை வைத்து தொண்டர் பலத்தைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது காங்கிரஸின் திட்டம்.

மாணிக் தாக்கூர் மும்முரம்...

விஜய்யை காங்கிரஸ் கட்சிக்கு இழுத்து வரும் பணியை விருதுநகர் தொகுதியில் வைகோவைத் தோற்கடித்து எம்.பியான மாணிக் தாக்கூர்தான் முன்னின்று செய்து வருகிறாராம்.

இவர்தான் ராகுல், விஜய் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் கர்னல்களில் தாக்கூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் மானம், சூடு, சொரணை என்பவற்றின் எல்லைகளை எல்லோரும் சோதிக்கின்றார்கள். அல்லது எங்களுக்கு எதுவும் இல்லை என்றே கங்கணம் கட்டி விட்டார்கள். தலைவரை கண்டபாட்டுக்கு விமர்சிக்கும் தமிழினமே! முடிந்தால் உன்னால் இந்த நாய்ப் பயல் விஜயை புறக்கணித்துக் காட்டு!

Edited by காட்டாறு

ஐந்து சதத்திற்கு பிரயோசனமில்லாத ஒருவரை பற்றி நாம்தான் அலட்டிக் கொள்கின்றோம். இந்தாள் போய் எந்தக் கட்சியில் சேர்ந்தால் தான் என்ன? ஒரு கூத்தாடியை கூத்தாடியாக பார்க்காமல், அரசியல் தலைவராக பார்க்கும் தமிழக காச்சல் எமக்கு வேண்டாம். இந்த கூத்தாடி எந்த கட்சியில் சேர்ந்தாலும், அவன் சார்ந்த இனத்திற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை.

ஈழத்திலும் வெளிநாடுகளிலும் இந்தாளின் பெயரையும் அஜித்தின் பெயரையும் தமது குழுக்களுக்கு சூட்டி (விஜய் அணி, அஜித் அணி, சீயான் குழு என) தெருக்களில் சுத்தித் திரியும் தமிழ் காவாலிக் கூட்டங்களில் இருக்கும் ரவுடிகளுக்கு வேண்டுமென்றால் விஜயில் இருக்கும் ஆத்திரத்தை வைத்து வந்தால் நாலு சாத்து சாத்துவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டிலே அப்பழுக்கில்லாத தமிழின உணர்வுள்ள கொஞ்சப் பேரைத் தவிர மிகுதி நடிகர்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி அனைவரும் பச்சோந்திகள், சுய நலவாதிகள்....

நாலே நாட்களில் ஐம்பதினாயிரன் தமிழ் உறவுகள் கொல்லப்பட்டபோது எதுவுமே பேசாமல் இருந்த நா...களா இனிப் பேசப் போகிறது....

விஜய்யின் தகப்பன் சந்திரசேகரன் விஜையை முன்னணிக்கு கொண்டுவருவதர்காக ஆரம்பத்தில் எடுத்த படங்களைப் பார்த்தால் இது புரியும்... சங்கவி அல்லது யுவராணி என்று நினைக்கிறேன்.., விஜய் தெருவில் கிடந்து கபடி( நாங்கள் ஒப்பு என்று அழைக்கும் விழையாட்டு))விளையாடுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுத்து கீழ்மட்ட ரசிகர்களின் அபிமானங்களைப் பெற்றுத்தான் விஜய்யை மெல்ல மெல்லமாக மேலே கொண்டுவந்த பெருமை விஜய்யின் தந்தையையே சாரும்...

அப்படிப்பட்டவர்கள் முன்னுக்கு வருவதற்காகக் தன் இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள், அவங்களின் படங்களில் தான் நாங்கள் அவர்களின் தாய் நாட்டுப் பற்றைப் பார்க்கமுடியும் ஆனால் நிஜவாழ்வில் அவர்களும் இன்னொரு கருணா நிதியே.....

ஐந்து சதத்திற்கு பிரயோசனமில்லாத ஒருவரை பற்றி நாம்தான் அலட்டிக் கொள்கின்றோம். இந்தாள் போய் எந்தக் கட்சியில் சேர்ந்தால் தான் என்ன? ஒரு கூத்தாடியை கூத்தாடியாக பார்க்காமல், அரசியல் தலைவராக பார்க்கும் தமிழக காச்சல் எமக்கு வேண்டாம். இந்த கூத்தாடி எந்த கட்சியில் சேர்ந்தாலும், அவன் சார்ந்த இனத்திற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை.

ஈழத்திலும் வெளிநாடுகளிலும் இந்தாளின் பெயரையும் அஜித்தின் பெயரையும் தமது குழுக்களுக்கு சூட்டி (விஜய் அணி, அஜித் அணி, சீயான் குழு என) தெருக்களில் சுத்தித் திரியும் தமிழ் காவாலிக் கூட்டங்களில் இருக்கும் ரவுடிகளுக்கு வேண்டுமென்றால் விஜயில் இருக்கும் ஆத்திரத்தை வைத்து வந்தால் நாலு சாத்து சாத்துவோம்

இது எப்ப்டியிருக்கு

இந்த காவாலி விஜய் லண்டனுக்கு வரும்போது, போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது இலங்கையின் வன்னியைச் சேர்ந்த குடிமக்கள் தான்.

விஜயின் எடுபிடிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களை பற்றி என்ன சொல்வது. பல ஈழத்தமிழர்கள் விஜயின் பின்னால் உள்ளனர்

செய்தி: விஜயும் - ராகுலும் இன்டெர்னெற்றில் அடிக்கடி பேசி கொள்ளுவாங்களாம்!

வாசகருத்து: எது நம்ம முட்டு சந்துல இருக்குற ராமசாமி மகன் - ராகுல் கூடவா பேசினே...>?

ஸ்ஸ்ஸ்........அப்பப்பா....... இப்பவே கண்ணைக்கட்டுதே!

தட்ஸ் டமில் - ல வாசிச்சன்......

பிடிச்சிருக்கு:!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி-நடிகை ரோஜா சந்திப்புதான் ஆந்திர அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! இந்த சந்திப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் காங்கிரசில் சேர்கிறார் ரோஜா என்று ஒய்.எஸ்.ஆரே கூறியிருக்கும் நிலையில் நடிகை ரோஜாவுடன் பேசினோம்.

மேடைகளில் ஒய்.எஸ்.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தவர் நீங்கள். எப்படி இருந்தது உங்கள் சந்திப்பு?

ரோஜா : நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த காலங் களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக் கிறேன். முதல்வரை சந்திக்க திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், என்னுடைய உறவினருமான கருணாகர ரெட்டிதான் ஏற்பாடு செய்தவர். அவரிடம் முதலில் என்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்தான்... "முதல்வர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத் திருக்கிறார். உங்களை சந்திப்பதில் அவருக்கு எந்த பிரச்சனை யும் இருக்காது' என்று என்னை அழைத்துச் சென்றார்.

கருணாகர ரெட்டி சொன்னது போலவே, முதல்வர் ஒய்.எஸ்.ஆர். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார். மதுக்கடைகள் ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக நான் நடத்திய ஆர்ப்பாட்டங்களைப் பற்றி பாராட்டி பேசினார். பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உங்கள் அரசியல் எனக்கு பிடிக்கும் என்றார். உங்களைப் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவரே என்னை கட்சியில் இணையு மாறு அழைத்தார். பெண்கள் மீது அவர் வைத்தி ருக்கும் மதிப்பும், மரியாதையும் என்னை சிலிர்க்க வைத்தது. பெரிய அளவுக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத கவிதா இந்திரா ரெட்டிக்கு உள்துறை அமைச்சர் பதவியை கொடுத்து கவுரவித்திருக்கிறார் ஒய்.எஸ்.ஆர். என்னை அவருடைய தங்கையாக பாவிக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகு அவர் மீதான மதிப்பு உயர்ந்துவிட்டது. ஆட்சியில் இருப்பதால் என்னால் அவர்களுக்கு உடனடி பலன் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் கூட என்னை வரவேற்கிறார்கள்.

குறுகிய காலத்தில் மாநில மகளிரணித் தலைவி பதவியெல்லாம் கொடுத்து ஆந்திர அரசியலில் உங்களை உயர்த்திய சந்திரபாபு நாயுடுவுக்கு துரோகம் செய்யப்போகிறீர்களா?

ரோஜா : சந்திரபாபு நாயுடு மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஆனால் உட் கட்சி துரோகத்தை அவரால் தடுக்க முடிய வில்லை. 2 முறை நான் தெலுங்கு தேசம் கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டேன். தெலுங்கு தேசத்துக்காக என்னுடைய மொத்த நேரத்தையும் செலவிட்டிருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு யாரும் இவ்வளவு தூரம் கட்சிக்காக உழைக்க முடியாது. சந்திரபாபுவுக்கு நிகராக அதிக அளவு கூட்டங்களில் கலந்துகொண்டிருக் கிறேன். கடந்த 5 வருடங்களில் ஆயிரம் கூட் டங்களுக்கு மேல் பேசியிருக்கிறேன். ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்திருக்கிறேன். முதல்வ ராக இருந்த ஒய்.எஸ்.ஆரை பெரிய பணக் காரர்களும், சீனியர் லீடர்களுமே விமர்சிக்க பயந்த காலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வ ராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தைரியமாக விமர்சித்து வந்தேன்.

சந்திரபாபு என்னை கவுரவமாக நடத்தினார் என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் கட்சியில் எனக்கு எதிராக துரோகம் செய்தவர்களை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. என்னுடைய சினிமா கிளாம ரால் மக்களை அதிகம் திரட்ட முடியும் என்றுதான் எனக்கு பதவி கொடுத்தார்கள். என்னுடைய பணம், கிளாமர் என்று எல்லா வற்றையும் கட்சிக்காக பயன்படுத்தினார்கள். சிரஞ்சீவி கட்சியினர், தேர்தல் நேரத்தில் என்னைப் பற்றி அபாண்டமான ஆபாசப் புகார்களை எழுப்பினார்கள். ஆனால் அந்த நேரத்தில்கூட கட்சி எனக்கு பயன்படவில்லை. நானே ஒற்றைப் பெண்ணாக எல்லாவற்றையும் எதிர் கொண்டேன். சிரஞ்சீவியை கடுமையாக தாக்கிப் பேசி னேன். கட்சிக்காக இவ்வளவும் செய்தும், கடந்த தேர் தலில் தோற்கடிக்கப்பட்டேன். கட்சிக்காக எதையும் செய்யாத நடிகை ஜெயசுதா வெற்றிபெற்றார். மக்களுக் காக எதையுமே செய்யாத நடிகை விஜயசாந்தி எம்.பி. யாகிறார். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட நான் தோற் கடிக்கப்பட்டேன். இதனால் மனம் வெறுத்துப் போய் அரசியலில் இருந்தே ஒதுங்கி விடலாம் என்று நினைத் தேன். மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து "நாடோடிகள்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த நிலையில்தான் காங்கிரஸ் என்னை அழைக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

ரோஜா : காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால்தான் என்னைப் போன்றவர் களை சந்திக்கிறார் ஒய்.எஸ்.ஆர். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவிருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் இடத்திற்கு போவதில் தவறில்லை என்று முடிவெடுத்துள்ளேன். மாநில அரசியலில் ஈடுபட்டால் ஒய்.எஸ்.ஆர். பற்றி நான் பேசியவற்றையே திரும்ப போட்டுக்காட்டி அரசியல் செய்வார்கள் என்பதை ஒய்.எஸ்.ஆரிடமே சொன்னேன். "நீங்கள் மாநில அரசியலில்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தென் இந்தியா முழுவதும் அறிந்த நடிகை என்பதால் தேசிய அரசியலில் உங்களுக்கு ஒரு இடத்தை காங்கிரஸ் தரும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ராகுல்ஜி விரும்புவதால் நீங்கள் தமிழக அரசியலில் ஈடுபடலாம். தமிழகத்தில் உங்களுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை காங்கிரஸ் கட்சிக்கு பயன்படுத்துங்கள்' என்று சொன்னார் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.

அப்படியானால் ஆந்திராவை கலக்கியதுபோல் தமிழகத்தையும் கலக்கப் போகிறீர்களா?

ரோஜா : தமிழ்நாடு என்னை வளர்த்த நாடு. அந்த மக்களுக்காக உழைக்க நான் தயாராக இருக் கிறேன். அதற்கான தகுதியான இடத்தை காங்கிரஸ் எனக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன்.

-ச.கார்த்திகைச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

ரோஐh அவர்கள்

எமது செல்வமணியின் மனைவி

பார்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.