Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் குற்றவாளி'எனும் எத்துவாளி நீதிபதிகள்

Featured Replies

ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.

முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.

“தலைவர் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்”

“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”

“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”

“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”

மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.

“முஸ்லிம்களை விரட்டாதிருந்திருக்கலாம்”

“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”

“அவர் முன்னரே வெளியேறியிருந்திருக்கலாம்”

“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”

எத்தனை ‘லாம்’கள்!

அரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள

Edited by SIVARAMAN

தமிழீழ கோரிக்கை என்பது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதன்று. அது புலிகள் உருவாக முன்னரே தமிழர்களின் நிலைப்பாடக இருந்தது. சில தவறுகளை விட்ட போதும் சுதந்திர தமிழீழம் என்ற தமிழரின் நிலைப்பாட்டினைக் கடைசி வரை கைவிடாமல் விடுதலைப் புலிகள் மட்டுமே தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்துச் சென்றனர். அடுத்ததாக பிரபாகரன் அவர்கள் தம்முடையதும் தம்முடைய இயக்க உறுப்பினர்களினதும் ஒழுக்கசீலத்தில் மிகவும் கவனமாய் இருந்தார். அதனால் தான் தமிழ் மக்களின் ஆதரவை இலகுவாகப் புலிகளால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போராடிய பல இயக்கங்கள் கடைசியில் ஏதோ ஒரு காரணத்தால் தமது குறிக்கோளைக் கைவிட்டு கேவலம் கைவிட்டாலும் பரவாயில்லை அந்தக் குறிக்கோளுக்கு எதிராக இனவெறி அரசுடனும் இந்திய நயவஞ்சக அரசுடனும் இணைந்து செயல்பட்டன. இந்தக் கட்டத்தில் இவர்களின் பிழைப்புக்கு "புலி எதிர்ப்பு" கைகொடுத்தது. தற்போதைய சூழ்நிலையில் "புலி எதிர்ப்பு" என்ற "பொன் முட்டையிடும் வாத்து" இனிமேலும் இவர்களுக்குச் சோறு போடப்போவதில்லை என்ற நிலையில் இப்போது புலிகளின் வீழ்ச்சி, தலைவர் பிரபாகரன் பற்றிய அவதூறு என்று அரற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தவேண்டியுள்ளது.

இதுவரை புலிகளையும் அதன் தலைமையையும் பற்றி விமர்சித்தவர்களே, உங்கள் விமர்சனங்களை ஒரு புள்ளியில் நிறுத்தி விட்டு, அந்தப் புள்ளியில் இருந்து நீங்கள் தமிழரின் தாகமான தமிழீழ கோரிக்கையை அரசியல் வழியில் முன்னெடுங்கள் பார்க்கலாம். அதற்கும் உங்களிடம் பதிலிருக்கும். அந்தப் பதில் நிச்சயமாக புலிகள் மேல் பழி போடுவதாகவே இருக்கும். நீங்கள் இதய சுத்தியுடன் செயற்படுவதை தமிழ் மக்களுக்கு காண்பியுங்கள். மக்கள் உங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். ஏனெனில் தமிழீழ கோரிக்கை என்பது புலிகளின் தாகம் அல்ல தமிழரின் தாகம். புலிகள் கடைசிவரை தங்கள் கொள்கையில் விழுந்து போகவே இல்லை.

புலிகளின் வீழ்ச்சியில் கொக்கரிப்பவர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புலிகள் தமிழ் மக்களால் என்றுமே தோற்கடிக்கப்படவில்லை. அல்லது உங்களுடய கருத்துக்களோ விமர்சனங்களோ புலிகளை வீழ்த்தவில்லை. மாறாக வஞ்சகமும், காட்டிக் கொடுப்புகளும் துரோகங்களும் பிராந்திய வல்லாதிக்க வல்லூறுகளின் நரித்தனமான ஒத்துழைப்பும் பங்களிப்புமே அவர்களை, இல்லை வரலாற்று ரீதியான ஒரு தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை வீழ்த்தின.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-93: பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்!

பாவை சந்திரன்First Published : 01 Sep 2009 11:59:00 PM IST

இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:

""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.

தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்; புலிகளாக மாறுங்கள்; புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது. ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.

இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.

பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.