Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...!

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர் களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.

வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 'கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்'. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியாக புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், 'தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்' என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. 'இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது' என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை... கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை... புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட 'இந்து ராம்' வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்... என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் ... என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்... நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்... அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.

இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்... இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்... வதந்திகள் பரப்ப... துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட... சொந்தப் பிரச்சனைக்கும் 'துரோகிகள்' பட்டம் வழங்க... இப்படி... இப்படி... எத்தனையோ பேர்.

ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். 'நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்' என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்... தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.

நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்... இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்... இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா...?

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா...? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா...? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா...? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா...? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா...?

அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?

போதும்... இதுவரை போதும்... இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்.

:ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை

http://www.pathivu.com/news/3413/68//d,art_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதும்... இதுவரை போதும்... இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால்இ மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்.

வரலாற்றில் இந்த இரண்டு பெயரையும் பிள்ளைகளுக்கு வைக்க கூடாது.

நல்லது இவர்கள் துரோகிகள் தான் ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் வரை மக்களை கொண்டுபோய் நட்ட நடுவில் விடவில்லையே.

இன்று கிழக்கில் இந்த துரோகிகள் செய்த ஒரு விடயம்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்திவரும் சிங்கள, தமிழ் இலக்கியப் பெருவிழா (2009) இம்முறை அம்பாறையில் நடைபெறவுள்ளது. வழக்கமாக சிங்கள மொழி மூலமான இலக்கியப் பெருவிழா தனியாகவும், தமிழ் மொழி மூலமான இலக்கியப் பெருவிழா தனியாகவுமே நடைபெற்று வந்தது. இம்முறை 2009 ஆம் ஆண்டுக்கான விழா சிங்களம், தமிழ் மொழிகள் இணைந்த விழாவாக ஒருங்கே நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையில் இந்த இலக்கியப் பெருவிழா கோலாகலமாக நடைபெறவிருப்பதாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். விழாவில் கலை, இலக்கிய விருதுகள், வழங்கப்படவிருப்பதுடன், இலக்கிய நூல்களிற்கான பரிசும் விருதுகளும் கூட வழங்கப்படவுள்ளன. இதேவேளை மேற்படி இலக்கியப் பெருவிழாவையொட்டிய தமிழ் ஆய்வரங்கு செப்டம்பர் 25 ஆம் திகதி தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் நடைபெறும். கிழக்கிலங்கையின் வாய்மொழி இலக்கியம் எனும் கருப்பொருளில் இந்த ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. விழாவில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்களின் சிறந்த கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன், தமிழ், சிங்கள மொழிகளிலமைந்த கலாசார விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவிருப்பதாகவும் கலாசார உத்தியோகத்தர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் செய்த ஒரு விடயம்!

கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களிற்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்தி 200 மாணவர்கள் கட்டம் கட்டமாக பங்குபற்றுகின்றனர். இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக 321 விளையாட்டு வீரர்களும் 62 விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு ஏ-9 பாதையின் ஊடாக பஸ்களின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டு புகையிரதம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்குரிய சகல தேவைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது.

இரண்டாவது குழுவினர் எதிர்வரும் 10ம் திகதியும் மூன்றாவது குழுவினர் 20ம் திகதியும் கொழும்பை வந்தடையவுள்ளனர். மன்னாரில் கடந்த மாதம் இடம்பெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்ட ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வீர வீராங்கனைகளே கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். கடந்த பல வருடங்களாக வடபகுதி மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அநீதியாக நடந்தார்கள் உண்மை! ஆனால் மக்களை வகைதொகையா பறிகொடுத்தார்களா?

நாங்கள் இங்கையிருந்து உவங்களை பற்றி வசைபாட அவங்கள் தங்கட தங்கட அலுவலை வலு பக்குவமாக செய்யிறாங்கள்! இன்னுமொரு 1வருசம் பொறுங்கே அதுக்குபிறகு இந்த களம் இருந்தால் இவைபற்றி என்ன சொல்லுறம் என்டு பார்ப்பம்!

:rolleyes::(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இவர்கள் துரோகிகள் தான் ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் வரை மக்களை கொண்டுபோய் நட்ட நடுவில் விடவில்லையே.

இவர்கள் செய்த துரோகங்களும் காட்டிக்கொடுப்புக்களும்தான

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இவர்கள் துரோகிகள் தான் ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் வரை மக்களை கொண்டுபோய் நட்ட நடுவில் விடவில்லையே.

வெள்ளைவானில் கடத்தல் ,கொலை, சிறுமிகளை கற்பளித்தல், முகமூடி அணிந்து இராணுவத்துக்கு புலி உறுப்பினர்களை காட்டி கொடுத்தல், இராணுவத்துக்கு புலிகளின் முகாம்களை காட்டி கொடுத்தல், புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு கிளைமோர் வைத்து கொல்லல், புலி உறுப்பினர்களின் குடும்பத்தை மிரட்டல், கடத்தல் கொல்லுதல், புலிகளிக்கு/தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பத்திரிகையாலர்களை சுட்டு கொல்லல், பத்திரிகைகளை எரித்தல் , ஆழ ஊடுருவி புலிகளை அழித்தல், அரசுடன் கூட்டு சேர்ந்து தமிழ் மக்களை காட்டி கொடுத்தல், மக்களை வாக்களிக்காது மிரட்டல் அல்லது தாம் சார்ந்த கட்சிக்கு வாக்களிக்கும் படி மிரட்டல் இவ்வளவும் தமிழர்களுக்கு எதிராக இந்த பரதேசிகள் மேற்கொண்டவை. எவ்வளவு தூரம் போராட்டத்தை பாதித்ததவை என்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஊகிக்க முடியும்.

கருணாவும் டக்கிளசும் புலிகளை விட நல்லவர்கள் எண்று சொல்லும் உவருக்கு அவர்கள் தான் தமிழீழ போராட்டத்தை சிதைத்து மக்களை வவுனியா முகாமுக்குள் வைத்து இருக்கிறார்கள் என்பது கூட புரியவில்லை என்பது விசுவாசம் முள்ளிவாய்க்காலில் அடித்த கச்சான் காத்துக்கு இடம் மாறி போனதனால்தான்...

இப்ப மட்டும் அல்ல இனியும் அவர்களின் விசுவாசிகளாக பலர் வரலாம்..

Edited by தயா

வேண்டாம் இனி ஒரு கருணா என்றும் ஒருபோதும் வேண்டாம் இன்னொரு டக்ளஸ் என்றும்தான் எல்லா இனமும் நாடுகளும்

இறைவனை வேண்டுவினம். ஆனால் சரித்திரமானது குரூரமானது. அது தன்னுடைய நகைச்சுவைக்காகவும் திருப்பங்களுக்காகவும்

இப்படியான கோமாளிகளை உருவாக்கி விளையாட்டுக்காட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது இவர்கள் துரோகிகள் தான் ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் வரை மக்களை கொண்டுபோய் நட்ட நடுவில் விடவில்லையே.
இவர்கள் பேசாமல் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மக்கள் நின்றிருக்க மாட்டார்கள்

வேளுத்ததெல்லாம் பாலாக முடியாது

கதிரையை காப்பாற்ற செய்துதானே ஆக வேண்டும்

இந்த சனியனுகளைப்பற்றிப் பேசவே கூடாது.

எம் இனத்துக்கு வாய்த்த சாபக்கேடுகள் இந்தப் பரதேசிகள்.

இனிமேலும் வேண்டாம்...................................! :rolleyes:

Edited by நான் அடிமையில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.