Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும்

Featured Replies

இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும் - பிரம்மா

lankaIndiaAccord1.jpg

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு அல்லது இந்தியா இலங்கை அரசியலில் நேரடியா தலையீட்டு 22 வருடங்கள் ஆகின்றன. இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்நிறுத்தி சாத்வீக ரீதியாக போராடி உயிர்நீத்த தியாகி தலீபனின் 22வது வருடத்தை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் நமது அரசியல் முன்னெடுப்புகளில் நாம் தவிர்த்துச் செல்ல முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்தும் இதில் நமது நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் சிறிது அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இன்று நாம் ஒரு மிகவும் இக்கட்டான முட்டுச் சந்தியில் நிற்கிறோம் என்பதில் எவருக்குமே கருத்து பேதங்கள் இருக்கமாட்டாது. இவ்வாறானதொரு நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு இன்று பலரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இதற்கு புலிகளின் எதேச்சாதிகார அரசியலே பிரதான காரணம் என்போர் அதற்கான காரணங்களை அடுக்கிச் செல்கின்றனர். இல்லை இன்றைய உலக அரசியல் ஒழுங்கை சரியாக விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப அரசியலை கையாளும் திறன் புலிகளிடம் இல்லாததே இன்றைய அவலத்திற்கு காரணம் என்பது பிறிதொரு தரப்பினரது வாதம். இவைகளை விட்டுவிடுவோம் இதனை ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியாகக் கருதி அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டியதே இன்றைய சூழலில் நமது கடப்பாடாகும் என்பது இன்னொரு சாராரது நிலைப்பாடு. என்னளவில் முன்றாவது தரப்பினரின் நிலைப்பாடே சரியானது என்பேன். இதற்காக விமர்சனங்கள், மீள்பார்வை தேவையில்லை என்பதல்ல அர்த்தம். அவைகள் தேவை, எந்த இடத்தில் நாம் தடுக்கி விழுந்திருக்கிறோம்? எந்த இடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாதிருந்திருக்கிறது? புதிய பலமையங்களுக்கிடையிலான உறவு-முரண்களை எம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிந்ததா? இப்படியான உரையாடல்கள் நமக்கு தேவை ஆனால் விமர்சனங்களை தனிப்பட்ட குரோதங்களாக மாற்றிவிடும் எழுத்துக்கள் நமக்கு தேவையற்றது என்பதே எனது கருத்து. விடுதலைப்புலிகளும் கடந்தகாலம் குறித்த விமர்சனங்களை உள்வாங்கி சிந்திக்கும் அரசியல் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் பண்பு வெளிப்பாட்டை துல்லியமாக மதிப்பிடுவோமானால் நமது அரசியல் உள்ளடக்கமாக இரண்டு விடயங்கள் இருந்து வந்திருப்பதை காணலாம், ஒன்று சிங்கள எதிர்ப்பரசியல் மற்றையது இந்திய எதிர்ப்பு அரசியல் இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால் நமது தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் இரு எதிர்ப்பு அரசியல் கூறுகளில் நிலை கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் தமிழ்த் தேசியத்திற்கான ஒரு பக்கத்துணை சக்தியாகவே இந்தியா பார்க்கப்பட்டது எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களின் பின்புலத்திலேயே இந்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவம் வளர்ந்து சென்றது. இந்தியா ஈழத் தமிழரின் தேசிய நலன்களுக்கு தடையாக இருக்கும் ஒரு நாடு என்ற வகையிலேயே நமது எதிர்ப்பரசியல் நியாயம் அமைந்திருந்தது ஆனால் நாம் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக பார்க்கலாம் சிங்களத்துடனான எமது முரண்பாடும் ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான முரண்பாடும் அடிப்படையிலேயே வேறுபாடானது. இன்று இந்தியா நமது அரசியலில் தலையீடு செய்து 22 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் மீண்டும் நம்முன் தாண்டிச் செல்ல முடியாததொரு பெரும் சக்தியாக இந்தியாவே தென்படுகிறது. விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தோல்விக்கு பின்னாலுள்ள மறைமுக கரம் இந்தியா என்பது இரகசியமான ஒன்றல்ல. தெற்காசிய அரசியல் நிகழ்சிநிரலிலிருந்து விடுதலைப்புலிகளின் ஒரு இராணுவ சக்தி என்ற அந்தஸ்த்தை முற்றாக துடைத்து அழிக்க வேண்டுமென்ற முடிவிலிருந்துதான் இந்தியா கொழும்பின் பின்னால் இருந்திருக்கிறது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.

lankaIndiaAccord2.jpg

இந்த பின்புலத்தில் இனிவரும் காலங்களில் இந்தியாவை நாம் எவ்வாறு அணுகப் போகிறோம்? அதிகார மையங்களுக்கிடையிலான அரசியல் போட்டிக் களமாக மாறியிருக்கும் இன்றைய புதிய உலக அரசியல் ஒழுங்கில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என்ன? தொடர்ந்தும் நடைமுறை சாத்தியமற்ற உணர்ச்சிகரமான அரசியல் சொல்லாடல்களுக்குள் சீவிக்கப் போகின்றோமா அல்லது நடைமுறைச் சாத்தியமான அரசியல் குறித்தும் அதற்கான அணுகுமுறைகள் குறித்தும் சிந்திக்கப் போகின்றோமா?

இப்படியான கேள்விகள் இன்றைய சூழலில் ஏன் நமக்கு அவசியப்படுகின்றன என்று இன்னுமொரு கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக் கொள்ளலாம். தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்கின்றது என்ற அச்சத்தின் காரணமாகவே இலங்கையின் உள் அரசியலுக்குள் இந்தியா நேரடியாக தலையிட்டது. ஆனால் அன்றிருந்த உலக அரசியல் இன்று இல்லை. அன்று அமெரிக்காவின் இலங்கை மீதான கரிசனைகளை அச்சுறுத்தலாக பார்த்த இந்தியா இன்று மூலோபாய ரீதியாக அமெரிக்காவுடனான நட்பு சக்தியாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஆசிய காய்நகர்த்தலுக்கான பிரதான சக்தியாக இன்று இந்தியாவே இருக்கிறது. அமெரிக்கா முன்னர் சோவியத்துக்கு எதிராக சீனாவை கையாண்டது போன்று இன்று சீனாவிற்கு எதிராக இந்தியாவை கையாளுகின்றது. அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது, மாறாதது நலன்கள் மட்டுமே. இந்த மாற்றங்களை கருத்தில் எடுக்காமல் இனிவருங்காலத்தில் நமது அரசியலை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?

lankaIndiaAccord3.jpg

இந்தியா தனது நலன்களிலிருந்தே ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள முற்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மை எந்தவொரு அதிகார சக்தியும் தனது நலன்களில் இருந்தே தனது பிராந்திய பரப்பினுள் அமையும் அரசியலை கையாளும் என்பதும். ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசை தனது பிடிக்குள் இறுக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்தியா யூலை 83 இற்கு பின்னரான சூழலை சாதமாகப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக ஈழத் தமிழர்களை பயன்படுத்த எத்தணித்தது, இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழர் இயக்கங்களுக்கு பயிற்சியளிக்கும் முடிவையும் இந்தியா எடுத்தது. இதன் மூலம் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. அப்போது சிறிலங்கா இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பயிற்சியளித்துக் கொண்டிருந்தன என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிங்கள இராஜதந்திரம் இதில் நுட்பமாக பணியாற்றி ஈழத் தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கும் காய்நகர்த்தல்களில் வெற்றிபெற்றது. இந்தியா, அமைதிப்படை என்ற பெயரில் இங்கையினுள் பிரவேசித்தாலும் கனரக ஆயுதங்கள், டாங்கிகள் சகிதமாகவே பிரவேசித்தது உண்மையில் அதன் உள்ளடக்கம் இலங்கையில் ஒரு தீர்வை ஏற்படுத்தினாலும் அதனை மேற்பார்வை செய்தல் என்ற பெயரில் நிரந்தர தளங்களை அமைப்பதுதான். அடிப்படையில் அன்றைய உலக ஒழுங்கில் இலங்கையை தனது இராணுவ, பொருளாதார தளமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில்தான் இந்தியா செயலாற்றியது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இதனை நன்கு விளங்கிக் கொண்ட சிங்களம் புலிகளின் உதவியுடன் இந்தியாவை வெளியேற்றியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஓரு இராணுவ-புலானாய்வு ரீதியான பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள்-பிரேமதாஸா உடன்பாட்டின் கீழ் இலங்கையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக்கட்ட இந்தியா நீண்டகாலமாக இலங்கை அரசியல் தொடர்பில் ஒரு விதமான தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவே காட்டிக் கொண்டது. விடுதலைப்புலிகளும் சிங்கள ஆட்சியாளர்களும் இணைந்தே இந்திய வெளியேற்றத்திற்கான சூழலை உருவாக்கியிருந்தாலும், தனது தந்திரோபாய தோல்விக்கான பிரதான சக்தியாக விடுதலைப்புலிகளையே இந்தியா கருதியது. நமது தரப்பிலும் உலகின் நான்காவது இராணுவத்தை தோற்கடித்த பெருமைக்குரியவர்கள் என்ற வகையான பெருமித அரசியலே முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் விடுதலைப்புலி - இந்திய முரண்பாடு என்பது ஒர் இந்திய எதிர்ப்பு அரசியலாகவே ஈழத் தமிழர்களுக்குள் வளர்ந்தது.

ஆனால் இன்று ஒரு பாரிய வீழ்சியை சந்தித்திருக்கும் நாம் இலட்சிய அரசியல் பற்றி சிந்திப்பதா அல்லது உலக, பிராந்திய அரசியலை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியமான அரசியல் பற்றி சிந்திப்பதா, எது சரியானது? அமெரிக்கா இந்தியாவுடன் கைகோர்த்து நிற்கும் இன்றைய அரசியல் சூழலில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் சாத்தியப்பாடென்ன? கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க- இந்திய கூட்டு நலன்களுடன் நமது நலன்களும் இணைந்து செல்வதற்கான வாய்புக்கள் இருக்கின்றனவா? இந்தியாவும் கொழும்பும் முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டுமாயின் அது இந்தியா குறித்த நமது முன்னைய நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ளாமல் சாத்தியமாகுமா? இந்தியாவை எதிர்த்துக் கொண்டு அதன் மூலோபாய கூட்டாளியான அமெரிக்காவை நமது நலன்களுக்கு ஏற்ப அணுக முடியுமா?

இப்படியான கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி நாம் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் உணர்ச்சிகரமான அரசியலுக்கு இடம் கொடுக்காமல் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் முதலில் பரந்தளவில் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமைகள் குறித்து நாம் நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்திக்காவிட்டால் நாம் மேலும் தனிமைப்படும் ஆபத்தே நேரிடும். இன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பியிருக்கும் மேற்கின் கரிசனையைக் கூட நாம் இழக்க நேரிடலாம்.

http://www.kuralweb.com/200909/IndianSL.aspx

Sri Lanka unlikely to lose EU trade scheme yet- Diplomats

The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday.

The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalized System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council.

"It is likely to be extended with a negative recommendation," a diplomat briefed on the EU's internal discussions told Reuters on condition of anonymity. "There would then be some targets for Sri Lanka to meet."

GSP Plus gives Sri Lanka the right to export more than 7,200 products duty-free to the EU, which last year accounted for 36 percent of Sri Lanka's $8.1 billion in total exports.

Lat year, Sri Lanka's garment and textile industry earned $3.5 billion in total, 43 percent of which came from EU markets.

The EU decision will be the culmination of a year-long rights probe launched in October, when the government was fighting to crush the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) and win a 25-year war. Sri Lanka declared total victory in mid-May.The government refused to cooperate with the probe or let the EU-contracted investigators enter the country, and said doing so was tantamount to betraying its sovereignty.

Since July 2008, the EU has warned Sri Lanka may not meet the human rights standards required to retain GSP Plus, mainly because of allegations security forces either carried out or failed to crack down on abductions and killings during the war.

Sri Lanka has been wary of criticism from Western nations, particularly those with large Tamil populations that supported the LTTE, and flatly rejected any interference or criticism as it battled to finish off the Tigers over the past year.

The EU mission in Sri Lanka declined to comment on the GSP Plus, saying it was confidential. Countries receiving GSP Plus must have ratified and implemented 27 international conventions on rights, labor, development and good governance. Two other diplomats with knowledge of the discussions told Reuters a conditional extension would be the likely outcome.

"We hope the government will take a few little steps to help us find an intermediate solution," one of those diplomats said. "We see a few signs of goodwill, but they see everything in terms of war -- it is either winning or giving up." (Reuters)

இன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பியிருக்கும் மேற்கின் கரிசனையைக் கூட நாம் இழக்க நேரிடலாம்.

ஜிஎஸ்பி+ (GSP+) சலுகை நீடிக்கப்பட்டிருப்பதை சொல்லுறீங்களா? :wub:

  • தொடங்கியவர்

ஜிஎஸ்பி+ (GSP+) சலுகை நீடிக்கப்பட்டிருப்பதை சொல்லுறீங்களா? :lol:

மேற்குலகின் கபடத் தனம் நாம் அறியாததல்ல ஆனால் இலங்கையரசின் மூர்க்கத்தனம் மேற்கில் சில எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. அதை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை எவ்வாறு நீங்கள் பயன் படுத்துவீர்கள்?

இலங்கை அரசின் மூர்க்கத்தனம் தான் பல்லாண்டு காலமாக நடக்கிறது.மேற்குலகின் நலன்ககள் எவை, இந்திய நலங்கள் எவை ஏன் அவை சிறிலங்கா அரசு சார்பாக இருக்கின்றன?

இவை ஏன் தமிழர் சார்பாக இல்லை?

இந்திய சார்பான பல தமிழ்க் கட்சிகள் இருந்தும், ஏன் இந்தியா சிங்கள அரசு சார்பாக இயங்குகிறது?

இவை எவற்றிற்கும் உங்களிடம் பதில்கள் இருக்கின்றனவா?

நீங்கள் வெறுமனே சீண்டலுக்கு தான் உந்த கேள்விக் கணைகளை எறிந்து மகிழ்கிறீர்கள் என்பது வேறு விடயம். உங்களுக்கு பதில் தெரிந்தால் எடுத்து விடலாமே, விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் மாதிரி கேள்விகளை அடுக்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும் - பிரம்மா

இதற்காக விமர்சனங்கள்இ மீள்பார்வை தேவையில்லை என்பதல்ல அர்த்தம். அவைகள் தேவைஇ எந்த இடத்தில் நாம் தடுக்கி விழுந்திருக்கிறோம்? எந்த இடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாதிருந்திருக்கிறது? புதிய பலமையங்களுக்கிடையிலான உறவு-முரண்களை எம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிந்ததா? இப்படியான உரையாடல்கள் நமக்கு தேவை ஆனால் விமர்சனங்களை தனிப்பட்ட குரோதங்களாக மாற்றிவிடும் எழுத்துக்கள் நமக்கு தேவையற்றது என்பதே எனது கருத்து. விடுதலைப்புலிகளும் கடந்தகாலம் குறித்த விமர்சனங்களை உள்வாங்கி சிந்திக்கும் அரசியல் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் நாம் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக பார்க்கலாம் சிங்களத்துடனான எமது முரண்பாடும் ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான முரண்பாடும் அடிப்படையிலேயே வேறுபாடானது. இன்று இந்தியா நமது அரசியலில் தலையீடு செய்து 22 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் மீண்டும் நம்முன் தாண்டிச் செல்ல முடியாததொரு பெரும் சக்தியாக இந்தியாவே தென்படுகிறது.

விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தோல்விக்கு பின்னாலுள்ள மறைமுக கரம் இந்தியா என்பது இரகசியமான ஒன்றல்ல. தெற்காசிய அரசியல் நிகழ்சிநிரலிலிருந்து விடுதலைப்புலிகளின் ஒரு இராணுவ சக்தி என்ற அந்தஸ்த்தை முற்றாக துடைத்து அழிக்க வேண்டுமென்ற முடிவிலிருந்துதான் இந்தியா கொழும்பின் பின்னால் இருந்திருக்கிறது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.

தொடர்ந்தும் நடைமுறை சாத்தியமற்ற உணர்ச்சிகரமான அரசியல் சொல்லாடல்களுக்குள் சீவிக்கப் போகின்றோமா அல்லது நடைமுறைச் சாத்தியமான அரசியல் குறித்தும் அதற்கான அணுகுமுறைகள் குறித்தும் சிந்திக்கப் போகின்றோமா?

தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்கின்றது என்ற அச்சத்தின் காரணமாகவே இலங்கையின் உள் அரசியலுக்குள் இந்தியா நேரடியாக தலையிட்டது. ஆனால் அன்றிருந்த உலக அரசியல் இன்று இல்லை. அன்று அமெரிக்காவின் இலங்கை மீதான கரிசனைகளை அச்சுறுத்தலாக பார்த்த இந்தியா இன்று மூலோபாய ரீதியாக அமெரிக்காவுடனான நட்பு சக்தியாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஆசிய காய்நகர்த்தலுக்கான பிரதான சக்தியாக இன்று இந்தியாவே இருக்கிறது. அமெரிக்கா முன்னர் சோவியத்துக்கு எதிராக சீனாவை கையாண்டது போன்று இன்று சீனாவிற்கு எதிராக இந்தியாவை கையாளுகின்றது. அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாதுஇ மாறாதது நலன்கள் மட்டுமே. இந்த மாற்றங்களை கருத்தில் எடுக்காமல் இனிவருங்காலத்தில் நமது அரசியலை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?

இந்தியா தனது நலன்களிலிருந்தே ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள முற்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மை எந்தவொரு அதிகார சக்தியும் தனது நலன்களில் இருந்தே தனது பிராந்திய பரப்பினுள் அமையும் அரசியலை கையாளும் என்பதும். இந்தியாஇ அமைதிப்படை என்ற பெயரில் இங்கையினுள் பிரவேசித்தாலும் கனரக ஆயுதங்கள்இ டாங்கிகள் சகிதமாகவே பிரவேசித்தது உண்மையில் அதன் உள்ளடக்கம் இலங்கையில் ஒரு தீர்வை ஏற்படுத்தினாலும் அதனை மேற்பார்வை செய்தல் என்ற பெயரில் நிரந்தர தளங்களை அமைப்பதுதான். அடிப்படையில் அன்றைய உலக ஒழுங்கில் இலங்கையை தனது இராணுவஇ பொருளாதார தளமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில்தான் இந்தியா செயலாற்றியது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

ஆனால் இன்று ஒரு பாரிய வீழ்சியை சந்தித்திருக்கும் நாம் இலட்சிய அரசியல் பற்றி சிந்திப்பதா அல்லது உலகஇ பிராந்திய அரசியலை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியமான அரசியல் பற்றி சிந்திப்பதாஇ எது சரியானது? அமெரிக்கா இந்தியாவுடன் கைகோர்த்து நிற்கும் இன்றைய அரசியல் சூழலில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் சாத்தியப்பாடென்ன? கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க- இந்திய கூட்டு நலன்களுடன் நமது நலன்களும் இணைந்து செல்வதற்கான வாய்புக்கள் இருக்கின்றனவா? இந்தியாவும் கொழும்பும் முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டுமாயின் அது இந்தியா குறித்த நமது முன்னைய நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ளாமல் சாத்தியமாகுமா? இந்தியாவை எதிர்த்துக் கொண்டு அதன் மூலோபாய கூட்டாளியான அமெரிக்காவை நமது நலன்களுக்கு ஏற்ப அணுக முடியுமா?

இப்படியான கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி நாம் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் உணர்ச்சிகரமான அரசியலுக்கு இடம் கொடுக்காமல் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் முதலில் பரந்தளவில் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமைகள் குறித்து நாம் நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்திக்காவிட்டால் நாம் மேலும் தனிமைப்படும் ஆபத்தே நேரிடும். இன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பியிருக்கும் மேற்கின் கரிசனையைக் கூட நாம் இழக்க நேரிடலாம்.

மிகவும் ஆழமாக சிந்தித்து எழுதபட்டிருக்கும்............ அண்மைகாலங்களில் வெளிவரும் புலிகளுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் ஒரு வாந்தி கட்டுரைபோல் அல்லாது தொட்டும் தொடாமலும் முடிந்த அளவில் கடந்காலத்தை அலசி ஆராயந்து எழுதபட்டிருக்கும் ஒரு கட்டுரை.

அரசியல்பற்றி ஓரளவு தெரிந்தவர்களாலும் பத்திரிகை மற்றும் வெளியீடுகளிலும் கட்டுரைககளை எழுத வேண்டியவர்களாலும் இப்படியான ஆய்வு கட்டுரைகளையும். தமிழர்களுக்கு அறிவுரைகளையும் எழுத முடியுமே தவிர வேறேதும் புடுங்க முடியாது. தமிழர்களுக்காக ஏதாவது புடுங்குவதென்றால் அது புலிகளால் மட்டும்தான் முடியும் அவர்களின் பாணியில் மட்டும்தான் முடியும்.

அதை நான் சொல்லவில்லை........... மேலே கட்டுரை எழுதிய பிரம்மாதான் மறைமுகமாக சொல்கிறார். ஒன்றை அவர் ஆணிதரமாக சொல்கிறார்............. பிரந்திய வல்லரசுகள் தமது நலன்சார்ந்தே செயற்படும். எமக்கென்று ஒரு ஆளுமையை நாம் வைத்திருந்தால் மட்டுமே எம்மால் அதற்கு ஈடுகொடுக்க முடியும். வீட்டுபூனையை அடக்குவதுபற்றி யாரும் உட்கார்ந்திந்து யோசிப்தில்லை. அது பிறவியிலேயே அடிமை சோறுபோட்டால் போதும் அடங்கியே இருக்கும். அது போல் சிங்களவனுக்கு அடிமையாக இருக்கும் தமிழர் பற்றி யாரும் இனி அலட்ட மாட்டார்கள் சிங்களவனை தமது வசம் வைத்திருப்பது எப்படி என்றுதான் யாபரும் அலட்டுவார்கள் என்பது சிங்களவன் கடந்தகாலங்களில் கற்றுகொண்டது. அதனால்தான் அவனால் வகைதொகையின்றி கொல்ல முடிகின்றது. எம்மால் புலிகளின் அரசியல் தவறுகள் பற்றி ஆய்ந்து எழுத முடியகின்றது. கடந்த காலங்களில் இந்தியாவின் நட்பை பேணி அதனுடு ஒரு அரசியலை புலிகள் நடாத்த முனைந்தார்கள். எத்தனையோ கடற்கலங்களையும் போராளிகளையும் இந்தியா நேரடியாகவே தாக்கியபோதும். புலிகள் நேரடியாக இந்தியாவை சாடியதில்லை. முள்ளிவாய்க்காலில் நின்ற போது கூட மாவீரர் நடேசன் அவர்கள் பல அன்னிய சக்திகள் எமக்கெதிராக நேரடியாக களத்தில் இருந்து செயற்படுகின்றன என்று சொன்னாரே தவிர. இந்தியா என்று கை நீட்டி காட்டவில்லை. இப்போது ஒரு அரசியல் ஆய்வு செய்து என்னால் எழுத முடியும் புலிகள் இந்தியாவை நேரடியாக எதிர்காது..... இந்தியாவின் நட்பை தமிழர்களின் எதிர்கால அரசியல் இலாபம் கருதி வேண்டி நின்றதாலேயே இந்தியாவால் இந்த முடிவுக்கு வர முடிந்ததென்று. ஒவ்வொரு முறையும் இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்ட போது புலிகள் இந்தியாவை எச்சரித்திருக்க வேண்டும் என்றும் குநை;தபட்டசம் டெல்லியிலோ மும்பாயிலோ இந்தியா அதிரும்படி ஒரு பெரிய தொடர் கரும்புலி தாக்குதலை செய்திருக்க வேண்டும் என்றும். அது இந்தியாவை அச்சத்திற்குள்ளாக்கியிருக்

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.