Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச - கருணாநிதிக்கு கூட்டு இன அழிப்பிற்கான நோபல் பரிசு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2002 ம் ஆண்டில் எழுதப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பின் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் சிறீலங்கா சிங்கள ராஜபக்ச அரசு 2006 வாக்கில் தமிழர் தாயகம் எங்கும் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

2007ம் ஆண்டு தென் தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. அப்போது பல நூறு தமிழர்கள் உயிரிழந்துடன் காயப்பட்டும் அகதிகளாகவும் போயினர்.

அதன் பின் 2008ம் ஆண்டு முற்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது சிங்கள அரசு.

பன்னாட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெற்றிகரமாக சிங்கள அரசால் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் இந்தியா போன்ற நாடுகள் வெறும் கண்துடைப்புக்காக கண்டித்ததோடு சரி. ஆனால் உள்ளூர சிங்கள அரசு அப்படிச் செய்ததை ஊக்குவித்ததுமின்றி சிறீலங்கா இராணுவத்தலைமைகளை புதுடெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் பீஜிங்கிற்கும் அனுப்பி இராணுவ மற்றும் இராஜதந்திர உதவிகளை பெற வழி செய்து கொடுத்ததுடன் இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷ்சியா உட்பட்ட முன்னாள் வார்சோ நாடுகள் சிலவற்றில் இருந்து அதி நவீன ஆயுதக் கொள்வனவுகளையும் செய்து கொடுத்தனர்.

நீண்ட ஒரு அபாயகரமான போர் திணிக்கப்படப் போவதை உணர்ந்து கொண்ட வட தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் வடக்கு மக்கள் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களை அவை செயற்பட்ட பகுதிகளில் தங்கி இருக்கக் கோரினர். ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு ஐநா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் வன்னியில் இருந்து விரட்டி அடித்தது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் இயங்கி வந்தது.

அதன் பின் சிங்கள அரசு பல தொன் குண்டுகளைக் கொட்டி வன்னி மீது பொர் தொடுத்தது.

உலகிலேயே குறுகிய காலத்தில் அதிக அளவு விமானக் குண்டுகள் வீசப்பட்ட பகுதியாக வன்னி மக்கள் குடியிருப்புக்கள் விளைச்சல் நிலங்கள் இனங்காணப்பட்டன. இதனை சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச தனது வெற்றிப் பிரச்சாரக் கூட்டமொன்றில் புகழுரையாக தனது விமானப்படையின் சாதனையாக சிங்கள மக்களுக்கு புகழ்ந்து தள்ளினார்.

போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது.. உலகெங்கும் தமிழ் மக்கள் கதறி அழுதனர். பலரின் வாசற்படிகளில் கிடந்து புரண்டனர். உண்ணா நோன்பிருந்தனர்.. ஊர்வலங்கள் போயினர். மக்கள் மடிகிறார்கள்.. அகதிகளாக்கப்படுகிறார்கள்.. உடனே இந்தப் போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று உலகின் மனச்சாட்சியை தட்டிக் கொண்டே இருந்தனர்.

ஆனால் இந்தியா உட்பட எந்த நாடும் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சில நாடுகள் அக்கறை காட்டுவதாகப் பாசாங்கு பண்ணிக் கொண்டு எரிகிற வீட்டில் கொள்ளி செருகிவிடும் வேலையையே செய்து கொண்டிருந்தன.

தமிழகத்தில் மட்டும் மக்கள் எழுச்சி ஒன்று உருவானது. அதை தந்திரமாக அடக்கும் பொறுப்பை சோனியா காந்தி கருணாநிதிக்கு அளித்தார். அதன் விளைவாக கடிதப் பரிவர்த்தனைகளும்.. சில மணி நேர உண்ணா விரதங்களும் மற்றும் சில உதவிப் பொருட்களை சேகரித்து கொழும்பு அரசிடம் கையளிப்பதும் என்று செயல்கள் செய்யப்பட்டு நேரம் வீணடிக்கப்பட்டதோடு.. மக்களுக்கு உண்மைகள் தெரிவது திட்டமிட்டு மறைக்கப்பட்டன.

உண்மையில் அக்காலப் பகுதியில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு உலகமெங்கும் இருந்து தமிழ் இளையோர் சார்பில் மற்றும் பிற தமிழ் அமைப்புக்களிடம் இருந்து ஈழத் தமிழ் மக்கள் சார்பில் உண்மை விளக்கக் கடிதங்கள் பல அனுப்பட்டன. ஒன்றுக்குக் கூட அவர் பதிலளித்ததில்லை. இதில் இருந்து அவரின் செயற்பாடுகளின் உண்மை நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இறுதியில் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவோடு ராஜபக்ச அரசும் வன்னியில் 30,000 இற்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்று.. 3,00,000 அதிகமான மக்களை சிறைபிடித்து தனது போர் வெற்றியை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தது.

அவரும் பதிலுக்கு ராஜபக்ச அரசுப் போர் வெற்றியின் அடையாளமாக 500 கோடி பண உதவியும் போர்க்கப்பல் ஒன்றை பரிசாகவும் அளித்தார். தனது சிறப்பு தூதுவர்களை அனுப்பி விருந்துண்டு மகிழ வைத்தார். அந்தப் பெருமை சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனைச் சாரும்.

இறுதியில் போர் வெற்றி விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த நாராயணன் குலாமிடம் இன்னும் 180 நாட்களில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி விடுவேன் என்றும் அதற்கு இந்தியா கண்ணிவெடிகளை அகற்ற உதவ வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார் ராஜபக்ச.

இன்று 180 நாட்கள் மிக வேகமாக கடந்து போய் விட்டன. ஆனால் மீளக் குடியமர்வு என்பது வெறும் வார்த்தை அளவில் இருப்பதோடு மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் சுமார் 15,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

மொத்தத்தில் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் போர் வெற்றி விருந்துண்டு மகிழ்ந்து காலாண்டுக்கு மேல் கடந்து போய் விட்டது. அதுவரை எந்தக் கவலையும் இன்றி சோனியா காந்தியோடு இசைந்து ராஜபக்ச அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி இன்று.. தமிழ் இன கொலைவெறியன்.. இனவாதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு தனது மகள் உட்பட்ட பரிவாரங்களை சிங்களப் பாசறைக்கு அனுப்புகிறாராம். தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வர..!

யாருக்கு இவர் கண்ணாமூஞ்சி விளையாட்டுக் காட்டுகிறார். கருணாநிதியின் கண் முன்னாலேயே இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை என்று சொல்லி முத்துக்குமார் என்ற இன உணர்வாளன் எழுதி வைத்துவிட்டு உயிர் விடுகிறான்.. அதைக்கூட பணத்தால் பதவியால் அரசியலால் சரிக்கட்டி விடலாம் என்று செயற்பட்ட கருணாநிதிக்கு இன்று ராகபக்சவின் அழைப்பின் பெயரில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஏன் திடீர் கரிசணை பிறந்தது..???!

வன்னியில் இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு இரங்கல் கூட்டத்தைக் கூட தமிழக சட்டசபையில் கூட்ட நாதியற்ற ஒருவர் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழின அழிப்பைச் செய்யும் சிங்கள அரசுகளின் மிகக் கொடிய தமிழின அழிப்பாளனாக தன்னை வர்ணித்துக் கொள்ளும் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதானது ராஜபக்சவின் இன அழிப்பை விட மோசமான செயலாகவே தெரிகிறது.

இதே ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் பொங்குகிறான்.. இப்படி.. "வன்னியில் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்துமா சமுத்திரத்தை செந்நிறமாக்கட்டும் தமிழ் பெண்கள் சிங்களப் படையினருக்கு இரையாகட்டும் என்று."

இதனை இந்திய தமிழ் நாளிதழ்கள் கருணாநிதியின் பார்வைக்கும் கொண்டு வந்திருந்தன.ஆனால் அதற்காக எல்லாம் கருணாநிதி வருந்தி இந்திய அரசினூடு சிங்கள அரசை எச்சரிக்கை செய்யவோ முனையவில்லை..! மாறாக கோத்தபாய சொன்னதை செய்ய வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இன்று அவனிடமே அவனின் அழைப்பின் பெயரில் விருந்துக்கு ஒரு தூதுக்குழுவையும் அனுப்பி வைக்கிறார்.

ஆனால் இதே கருணாநிதி.. 1987 இல் இந்திய அமைதிப்படை பலாலியில் கால் பதித்த போது ஜே ஆர் ஜெயவர்த்தன என்ற சிங்கள தலைவன் கருணாநிதியை பார்த்து தமிழகத்தில் இருந்து குரல் கொடுப்பதை விடுத்து நேரில் வந்து நிலமையைக் கண்டு செல்லுங்கள் என்று இப்படி ஒரு அழைப்பை விடுத்த போது அதனை கருணாநிதி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை..??!

அப்போது இனம் மானம் இன அழிப்பு சிங்கள அரசு என்று தத்துவம் பேசிய கருணாநிதி இன்று கூட்டத்தோடு கூட்டமாப் போய் சிங்கள அரசின் தமிழின அழிப்பை நில ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கச் செய்வது போன்று சிங்களப்படைகளால் நிறைந்துள்ள தமிழர் தாயகத்துக்கு தனது தூதுக்குழுவை அனுப்புவதன் நோக்கம் என்ன..??!

"எங்களுக்கும் சில அளவு தான் அதிகாரம் இருக்கிறது. அதனை தாண்டி எதனையும் செய்ய முடியாது என்று" தமிழ் மக்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு அவலக் குரல் கொடுத்த போது அதனை சுலபமாகத் தட்டிக்கழித்த கருணாநிதி இன்று ராகபக்சவின் அழைப்பை ஏற்று தனது விருந்தினர்களை அவனிடம் அனுப்பி தமிழின அழிப்பு விருந்துண்டு மகிழ்வது ஏன்..??!

வன்னியில் போர் நிகழ்ந்த போது ராஜபக்ச ஒரு கொலைவெறிஞன் என்று மேடையில் முழங்கிய கனிமொழி, திருமாவளவன் போன்றோர் இன்று அவனிடம் விருந்துண்டு மகிழச் செல்வது ஏன்..??!

சரி இவர்களுக்கு இத்தனை மக்களை கண்முன்னே சிங்களவன் கொல்ல பார்த்திருந்தோமே என்ற குற்ற உணர்வு மிக... திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் முளைத்துப் ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் போகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்.. பெரிய பெரிய வளர்ந்த நாடுகளே, ஐக்கிய நாடுகள் சபையே ராஜபக்சவை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள நிலையில்.. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இந்தியத் தேசிய அடிமையாகக் கிடக்கும் கருணாநிதியும் அவரது தூதுக்குழுவினரும் திறந்த வெளியில்.. முட்கம்பிச் சிறையில் கிடக்கும் தமிழ் மக்களுக்கு என்னத்தை பெரிதாகச் செய்து விடப் போகின்றனர்...?!

இவர்களால் ராஜபக்சவை தமிழ் மக்களுக்கு உதவியளிக்க பூரண அதிகாரமளிக்க தூண்டி விட முடியுமா..??! 3,00,000 தமிழ் மக்களையும் முட்கம்பிச் சிறைகளில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வைக்க முடியுமா.. சிங்களப் படைகள் செய்த இன அழிப்புக்கான நீதி விசாரணையை ஆரம்பிக்க இடமளிக்க வகை செய்ய முடியுமா...அல்லது அவன் (ராஜபக்ச) செய்த இன அழிப்புக்கு அவனை மன்னிப்புக் கேட்க வைத்து.. சிங்களப் படைகளை தமிழர்களின் நிலத்தில் இருந்து வெளியேறக் கேட்கத்தான் முடியுமா..??! இல்லவே இல்லை..! இதில் எதனையும் இவர்கள் செய்யப் போவதில்லை.

இவர்களால் முடிந்தது.. தமிழனை சிங்களவன் எப்படி அடிமையாக நடத்துகிறான் என்பதை பார்த்து ரசித்து விட்டு.. விருந்துண்டு மகிழ்வதே. சிங்களவனின் இறுமாப்பில் இவர்கள் பூரிப்படைவதே..!

ராஜபக்சவினால் கருணாநிதிக்கு விடப்பட்ட, சிறீலங்காவிற்கு வருகைக்கான அழைப்பை ஏற்றான திமுக கூட்டடணி பிரமுகர்களின் இந்த விஜயத்தின் மூலம்.. அவர்கள் செய்யப் போவது ஒன்றை ஒன்று மட்டுமே. அது.. சிங்களத்தின் தமிழின அழிப்பை, சிங்கள ஆக்கிரமிப்பை தமிழர் தேசத்தில் அங்கீகரிப்பதை மட்டுமே செய்யப் போகின்றனர். சோனியா காந்தி தனது சொந்த நலனுக்காக முன்னெடுக்கும் தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் சிங்கள - இந்திய கூட்டுச் சதியின் நாசகார நகர்வின் ஒரு பகுதியே இந்த விஜயம். இதற்கு திருமாவளவன் போன்றோரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போவதுதான் வருத்தமளிக்கிறது.

கருணாநிதியின் இந்த நாசகார வேலைக்காக அவருக்கும்.. இத்தனை காலம் இந்த நாசகாரியை தமிழினத்தின் தலைவன் என்று அழைத்துக் கொண்டிருந்ததை மாற்றி அவரின் உண்மையான சிங்கள இன விசுவாசத்தை அதனுடனான ரகசியக் கூட்டை வெளிப்படுத்தி வெற்றிகரமாக தமிழின அழிப்பைச் செய்ததற்காக.. செய்து கொண்டிருப்பதற்காக மகிந்த ராகபக்சவிற்கும் இந்த இன அழிப்புக்கான நோபல் பரிசை அளித்து கெளரவிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நீதியான பார்வையில் இருந்து.. இவர்களுக்கு இப்பரிசு அளிக்கப்படுகிறது.

பிரதான பதிவு: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

நோபல் பரிசை மகிந்தவுக்கு கொடுங்கள்.... அவன் சிங்களவன் தனது இனத்துக்காக பாடுபட்டான் என்பதுக்காக பொருத்தமாக இருக்கும்....

ஈனப்பிறவி கருணாதியியை மகிந்தவுடன் சம்பந்தபடுத்துவது அழகும் அல்ல....

ஆனால் கருணாநிதிக்கு நேபாம் குண்டை வேண்டுமானால் குடுக்கலாம்.... குடும்பத்தோடை தற்கொலை செய்து கொள் எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக மூன்று மணித்தியாலம் மெரீனா பீச்சிலை உண்ணாவிரதம் இருந்து , இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த கருணாவுக்கு

வாழ்த்துக்கள்.

ஈழத் தமிழர் சார்பில் ......உங்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு . உங்கள் அரசியல் வாழ்வுக்கு கிடைத்த உயரிய

பரிசு .

நாளையோ நாளண்டையோ எண்டு கடைசி மூச்சைவிட இருக்கற வயசு போன கிழவனை துரத்தி துரத்தி சம்மட்டியால அடிக்கிறதுக்கு எண்டே ஒரு கூட்டம் நாக்கை தொங்க போட்டுகொண்டு திரியுது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளையோ நாளண்டையோ எண்டு கடைசி மூச்சைவிட இருக்கற வயசு போன கிழவனை துரத்தி துரத்தி சம்மட்டியால அடிக்கிறதுக்கு எண்டே ஒரு கூட்டம் நாக்கை தொங்க போட்டுகொண்டு திரியுது. :rolleyes:

அரச தனியார் துறைகளில் 58 - 67 வயது வரைக்கும் தான் வேலை செய்யலாம். ஆனால் அரசியலில் மட்டும் ஓய்வும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஏன் அரசியல் என்ன.. அறளை கண்டவர்களும் செய்யும் விடயமா..??!

இந்த வயதிலும் தவறான முடிவெடுக்கும் தூக்குச் சட்டி சுமக்கும் புத்தி போகல்லைன்னா.. ஏன் அரசியலில் இருப்பான். ஈழத்தமிழன் கேட்டானா.. என்னை வந்து பார்.. அறிக்கை கொடு என்று.

வந்து போன சிவசங்கர் மேனனுக்கும் நாராயணனுக்கும் தெரியாததையா இவை காட்டப் போகினம்..??!

ஏற்கனவே ஜே ஆர் துப்பாக்கிப் பிடியால அடிப்பிச்சார்.. பிரேமதாச ஓட ஒட விரட்டினார். இருந்தும்.. சிங்களவனையே சுத்தி சுத்தி வருகுது வெட்கம் கெட்ட பாரதம்..!

இதோ மீண்டும்.. மிகப் பெரிய அவமானத்தை கூப்பிட்டு வைத்துக் கொடுத்திருக்கிறார்... ராஜபக்ச..!

சிங்களவன்.. தமிழக மீனவனை கொன்று துயில் உரிந்து விடுறான். அதே தமிழகத்தைச் சேர்ந்தவை துயிலுரிந்தவனிடத்திலேயே கை குலுக்கிக் கொள்வதன் மூலம்.. அவன் செய்வதை நியாயம் என்று தானே அங்கீகரிக்கிறார்கள்.

இவர்கள் செய்வது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல.. சொந்த மக்களுக்கே செய்யும் அநியாயம் இது...!

இதையும் படியுங்கோ.. கூப்பிட்டு வைச்சு முஞ்சில காறித்துப்பி இருக்கிறார் ராஜபக்ச. வேணும் இந்தக் கிழவருக்கு.

இந்தப் பயணத்திற்கு எவ்வளவு பேரம் பேசி பேரப்பிள்ளைகளின் அரசியலுக்காக வங்கியில் போட்டாரா யாருக்குத் தெரியும்...!

ஈழத்தமிழனின் துயரில் அரசியல் செய்வது கருணாநிதிக்கு புதிய விடயம் அல்ல. எம் ஜி ஆர் காலத்தில் இருந்து அதையே அவர் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியே இது..!

Colombo cancels TamilNadu MPs visit to east

[TamilNet, Saturday, 10 October 2009, 15:33 GMT]

The visit of a group of parliamentarians of Tamilnadu in India to the eastern province was cancelled Saturday last minute, according to media reports from Colombo. The TN group arrived in Colombo Saturday morning, and was scheduled to visit Batticaloa and especially the resettled village Vaaharai the same day.

TN parliamentary group was scheduled to meet the Eastern Provincial Council (EPC) Chief Minister Sivanesathurai Chandrakanthan.

Chandrakanthan told Colombo media that he had been informed from Colombo last Friday night that the TN group visit to east was cancelled.

Tamilnadu delegation was to be accorded a civic reception by the Batticaloa Municipal Council Saturday evening and to see the express train service now being run between Batticaloa and Polonnaruwa under a project funded by the Government of India, reports added.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச தனியார் துறைகளில் 58 - 67 வயது வரைக்கும் தான் வேலை செய்யலாம். ஆனால் அரசியலில் மட்டும் ஓய்வும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஏன் அரசியல் என்ன.. அறளை கண்டவர்களும் செய்யும் விடயமா..??!

nedukkalapoovan

ஆம் இது சரியான கேள்விதான்?

அத்துடன் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலுள்ள அரசியல்வாதிகளையும் ஒரு தட்டு தட்டி உங்கள் கேள்வியை முன் வைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.