Jump to content

இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sweetdreams.jpg

"வதை முகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம் தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறு புகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி, ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப் போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன. மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப் போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன் பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியதோர் பரிமாணம்.

இதே காலகட்டத்தில் பிறிதொரு வெற்றி வடஅமெரிக்காவில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. நிர்வாணம் செய்து கை, கால்கள் கட்டுண்ட நிலையில் தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சிகளை பிரித்தானியாவின் "சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அது உண்மை யானதல்ல -உருவாக்கப்பட்ட போலி என ராஜபக்சே அரசு உலக அளவில் பெரும்பணம் செலவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ளும்படி நிர்பந்தத்திற்குள்ளானது. ஆனால் ராஜபக்சே அரசின் பொய்யை முறியடிக்கும் இலக்குடன் "இன அழித்தலுக்கெதிரான அமெரிக்கத் தமிழர்கள்' அமைப்பு மேற்கொண்ட விஞ்ஞான அடிப்படை யிலமைந்த முயற்சியின் விளைவாக அந்த ஒளிப்பதிவு உண்மையானது, உருவாக்கப்பட்டதல்ல என அமெரிக்க உயர் ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.

அழிவின் இடர்பாடுகளின்று மீளும் வழி தேடி மூச்சுத் திணறும் தமிழர்களுக்கு இவையெல்லாம் மிகச் சிறிய வெற்றிகள்தான் -ஆயினும் நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கிறது. தொடர்ந்து பயணிக்க லாம் என்ற மனபலம் தருகிற வெற்றிகள். அதே வேளை நாம் கடக்க வேண்டிய தூரம் சிறியதல்ல, மிக நீண்டது. விடுதலைப்போராட்டம் மீது சார்த் தப்பட்ட பயங்கரவாதம் என்ற வஞ்சகத்திரை இன்னும் அகற்றப்படவில்லை, யுத்த குற்றங்களுக்கான அனைத்துலக நீதி விசாரணை முயற்சிகள் முன் நகர்வதாகத் தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபட்ட, இடைவிடாத முயற்சிகள் இவற்றையெல்லாம் சாதித்துவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பினை சிதைத்திட ராஜபக்சே அரசு இன்று இருவிதமான தந்திரோபாயங்களை முன்னிறுத்தி முனைப்பாக இயங்கி வருகிறது.

முதல் வியூகம் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்குள் ஐயங்களை யும் கருத்து மோதல்களையும் தூண்டி அவர்களை சலிப்புறச் செய்து பலவீனப்படுத்துவது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் களத் தலைமை வெளிப்படையாக இயங்க முடியாத இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கிற அந்த இடைவெளியை இலங்கை வெளியுறவு மற்றும் ராணுவப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து இப்பணியை கச்சிதமாய் செய்து வருகின்றன.

அதற்கு ஓர் சிறு உதாரணமாக "அதிர்வு' என்ற இணையதளத்தின் செயற்பாடுகளை கூர்ந்து நோக்கி ஆய்வு செய்தாலே போதுமானது. விடுதலைப் போராட்டத்துடனான புலம்பெயர் தமிழர்களின் முக்கிய இழையாக "இணையம்' (Internet) இன்று திகழ்கிறது. மூத்த தளபதி பானு அவர் களைச் சுற்றியே இரண்டு துரோகிகளை ஊடுருவச் செய்ய முடிந்த இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு சொகுசான ஐரோப்பிய-வடஅமெரிக்கச் சூழலில் துரோகிகளை விலைக்கு வாங்குவதொன் றும் பெரிய வேலையல்ல. பெருமைக்குரிய தளபதி பானு அவர்களுக்கு தெரியாமலேயே அவரைச் சுற்றி நடந்த ஊடுருவல் குறித்து பிறிதொரு இதழில் நிச்சயம் பதிவு செய்யப்படும்.

புலம்பெயர் தமிழர்களின் "உணர்வுகள்' பெருமளவு இணையத்தினூடாக (Internet) இயங்குவதையும் இயக்கப்படுவதையும் நன்றாக அறிந்த இலங்கை புலனாய்வுப் பிரிவு தமிழ் இணையங்களை ஊடுருவியுள்ளது, கூலி கொடுத்து இயக்குகிறது. முதலில் அவ்வாறு இலங்கை புலனாய் வுப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையம் "ஏசியன் ட்ரிபியூன்' (Asian Tribune). இதன் நடத்துனர் ராஜசிங்கம், குழப்ப நிலையிலிருந்த கருணம்மானை துரோக முடிவுக்கு திட்டமிட்டு நுட்பமாக உந்தித் தள்ளியவர்களில் முக்கியமானவர். தமிழீழ விடுதலை கருத்தாக்கத்தை சிதைப்பதிலும், குழப்பங்களை உருவாக்குவதிலும் இந்த "ஏசியன் ட்ரிபியூன்' முக்கிய பங்காற்றி வருகிறது.

"ஏசியன் ட்ரிபியூனை' தொடர்ந்து இலங்கை புலனாய்வுப் பிரிவுகள் தத்தெடுத் துள்ளது "அதிர்வு' என்ற இணையதளத்தை. இவர்களின் தந்திரம் மிகவும் எளிதானது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவான முகம் காட்டி இணை யத்தை நன்றாக வளர்ப்பார்கள். ஓரளவுக்கு வளர்ந்தபின் மக்களை குழப்பி பலவீனப் படுத்துவதற்குப் பயன்படுத்துவார்கள். அக்டோபர் 11-ந் தேதி இந்த இணையம் நக்கீரன் பத்திரிகைக்கெதிராகவும் அதில் என் எழுத்துக்களையும் விமர்சித்து ஓர் செய்திக் கட்டுரை வெளியிட்டி ருந்ததாய் நண்பர்கள் என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுவில் கட்டற்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை என எப் போதுமே கருதுவதால் விமர்சனம் நல்லதுதானே என விட்டுவிட்டேன். கட்டுரை எழுதியிருந் தவரது பெயர் தமிழரசு என்றும் சொன்னார் கள். இரண்டு நாட்களுக்குப்பின் லண்டனிலிருந்து விடுதலைப் பணியில் நீண்ட காலமாய் ஈடுபட்டுவரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு "அதிர்வு' இணையதளம் நடத்துபவரது பெயர் கண்ணன் என்றும், தமிழரசு என்று எவரும் தாங்கள் அறிய "அதிர்வு' வட்டத்தில் இல்லையென்றும் கண்ணனும் குழுவுமே தமிழரசு என பெயரிட்டு எழுதி யிருப்பதாகவும் சொன்னார்கள்.

விடுதலைப் போராட்டத்தோடு தொடர் புடைய எவரும் இக் கட்டுரையின் பின்னணியில் இல்லை எனவும் கூறினார்கள். அப்போதும் நான் அக்கட்டுரையை முக்கியமானதாகக் கருத வில்லை.

லண்டனிலிருந்து உணர்வாளர்கள் தொலைபேசிய இரண்டாம்நாள் அடையாளம் குறிக்க முடியா இடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று அலை பேசியில் பதிந்தது.

எடுத்தபோது "களத் தின் பிரதிநிதிகளாய்' பேசுவதாகக் கூறினார் கள். அதிர்வு கட்டுரை பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று சொல்லவே அழைத்த தாகவும் கூறிய அவர்களது தகவல் சுருக்கம் இது தான்:

""அதிர்வு இணைய தளம் நடத்துகிறவரது பெயர் கண்ணன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். தவறான ஒழுக்கம் காரணமாக புலனாய்வுப் பிரிவுத் தளபதி பொட்டம்மான் அவர்களால் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டவர். பின்னர் இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாக மாறி இப்போது ஐரோப்பிய கண்டத்தில் வசதியாக செட்டில் ஆகி யிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒருசில தலைவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். அவ்வாறே போர் உக்கிரமடைந்த நாட்களில் தலைவர் நாட்டுக்கு அழைத்தும்கூட திரும்பி வராமல் ஐரோப்பாவில் தங்கி நின்ற சிலரோடும் பழைய போராளி என்ற கோதாவில் தொடர்பு வைத்திருக்கிறார். அவர்களுக்கும்கூட இவரது நிஜமான குற்றப்பின்னணி தெரியாமல் இருக்க லாம். போராட்ட இயக்கமொன்றும் முற்றாக அழிந்து விடவில்லை.

நாட்டுக்கு அவர் திரும்பி வந்தால் என்ன தண்டனை என்பது அவருக்கே தெரியும். இத்தகைய புல்லுருவி களுக்கெல்லாம் நீங்கள் பயப்படாதீர்கள்'' என்றார்கள். தொடர்ந்தும் அவர் தமிழகத்தின் சில தலைவர்களைப் பற்றி சொன்ன விஷயங்கள், ""கடவுளே... இப்படியுமா சுயநல அரசியலுக்காக துரோகம் செய்வார்கள்...'' என நெஞ்சம் பதற வைத்தது. தேசியத்தலைவர் அடிக்கடி கூறுவதுண்டாம் "துரோகிகளைவிட எதிரிகள் எவ்வளவோ மேலானவர்கள்' என்று. எதிரிகளை எதிர்கொள்ளலாம், துரோகிகளை...?

இத்தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான், "சரி, என்னதான் எழுதியிருக்கிறார்களென்று பார்ப்போமே' என கட்டுரையைப் படித்தேன். நகைப்பே மிஞ்சியது. முதலில் கண்ணன் "தமிழரசு' என முகமூடி அணிய வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. ஒன்றை, ஒருவரை விமர்சிக்கையில் சொந்தப் பெயரிட்டு சுய கௌரவத்துடன் எழுதும் நாணயம் இல்லாதவருக்கும் மஞ்சள் பத்திரிகை வியாபாரிகளுக்குமிடையே பெரிய வேறுபாடு இல்லை.

கிளிநொச்சியில் இந்தத் தமிழரசுதான் என்னை தேசியத் தலைவரிடம் அழைத்துச் சென்றதாகவும் தேசியத் தலைவர் சரியாக ஆறு நிமிடம் மட்டுமே என்னிடம் பேசியதாகவும் அக்கட்டுரையில் அழுத்தமாய் கூறியிருந்தார்.

எனது பதில் : ""கவலைப்படாதீர்கள் தமிழரசு என முகமூடி தரித்த தவறான ஒழுக் கத்திற்காய் இயக்கத்திலிருந்து விரட்டியடிக்கப் பட்டு இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாகி, புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியை குலைப்பதற்காய் அதே ஏஜெண்டாய் ஐரோப்பாவில் வசதியாக வாழும் கண்ணன் அவர்களே... இன்னும் இரண்டொரு வாரங்களில் தேசியத் தலைவருடனான மிக நீண்ட நேர்காணலின் ஒளிப்பதிவு இதே இணை யத்தில் வெளிவரும். அது ஒன்றே போதுமான தாயிருக்கும் உங்கள் முகத்திரை கிழிய.

பாவம், நான் எழுதுகிற பாணியைப் பார்த்து ஒளிப்பதிவு இருக்க வாய்ப்பில்லை என்ற எண் ணத்தில் கதையை அவிழ்த்துவிட்டீர்கள்போல் தெரிகிறது. "ஏஜெண்டுகள்' எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு அழகாக நாடகமாடினாலும் சட்டென்று தங்களை காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இன்னொன்று தமிழீழ விடுதலையை இனியில்லையென்று கொச்சைப்படுத்திய ஊடகங்களையெல்லாம் விட்டுவிட்டு தமிழகத் தில் லட்சக்கணக்கான உணர்வாளர்களுக்கு ஆறுதலாயும் நம்பிக்கை இழையாயும் நின்ற - நிற்கிற நக்கீரனோடு போர்புரிய வரிந்து நிற்பது யாருடைய வேண்டுதல் -அல்லது உத்தரவின் பேரில் என்றும் புரியவில்லை.

எதிரிகளோடு உரையாடுவோம், துரோகி களோடு கடைசிவரை இல்லை. துரோகி ஒரு வனைப் பற்றி இவ்வளவு வரிகள் வீணடித்திருக் கக்கூடாது. ஆயினும் விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போர்க்களப் பின்னடைவைப் பயன்படுத்தி புலம்பெயர் மக்களை குழப்பப் புறப்பட்டுள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவை கருதியே இவ்வளவும் எழுதும் துரதிருஷ்டம் நேர்ந்தது.

சரி, ராஜபக்சே அரசின் இரண்டாவது தந்திரோபாயம்?

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன் வாரஇதழ்

http://www.nakkheeran.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதைத்தான்.

Link to comment
Share on other sites

அடிகளாருக்கு மிகவும் விரும்பிய அல்லது பிடித்த கருத்தியல் கத்தோலிக்கம் .எனயவைகள் இரண்டாம் பட்சம் தான்.முதலாவது கருத்தியலுக்காக இரண்டாம் கருத்தியலை உபயோகப்படுத்துகிறோ? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்வு இணையத்தளத்தை பற்றிய கருத்துகோளை விட்டு, அடிகளாரின் கருத்துக்களை நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நானும் நானும் என்ற பாணியை அடிகளார் தொடர்ந்து உள்புகுத்தி வருகின்றார். அவர் பற்றிய விமர்சனஙக்ளில் தவறுகள் இருக்கலாம். இல்லை என்று சொல்லிட முடியாது. அதே நேரம் அடிகளாரின் கருத்தும் முழுமைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் தான் சார்ந்து நிற்க்கும் நோக்கத்துக்காக எழுதுகின்றாரா? இல்லை உண்மையில் எம் மீதான அக்கறையா? அல்லது அவரது அக்கறை என்பது அளவுக்கதிகளமாக எமது பிரிச்சினைகளில் உரிமை எடுக்க வைத்துள்ளதா?

அடிகளார் துரோகி என்று விளிக்கும் அளவுக்கோ, அல்லது அடிகளாரை துரோகி என்று அதிர்வுகள் விளிக்கும் அளவுக்கோ இந்த கருத்தியல் பிரச்சினை ஆகிவிட்டது துரதி்ஸ்டம். காலப்போக்கில் அனவைரையும் ஓரங்கட்ட வேண்டிய நிலைக்கு அல்லது இரு இணையங்களை இழுத்து மூடியது போன்ற நிலைக்கே இவை இட்டுச் செல்லும்.

அடிகளாரைப்பற்றிய அதிர்வின் விமர்சனத்தை நீக்கும் யாழ் இணையம். அதிர்வு பற்றி அடிகளாரின் விமர்சனத்தை அனுமதிக்க முடியுமா? சிந்திக்கவும்.. ஏன் எனில் எதை செய்யும் போதும் ஒரு அடிப்படை நோக்கம் வேண்டும். அதிர்வின் விமர்சனத்தை படிக்காமல் அதற்கெதிரான விமர்சனங்களை படிப்பவம் எழுந்த மனதாக தீர்மானங்களை எடுக்க நிர்பந்திக்கப்படுவான்.

Link to comment
Share on other sites

அடிகளாரின் குழப்பகரமான சிந்தனைகள் சிலகாலத்திற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் குமுதத்திற்கு அளித்த பேட்டியில் அவரது குழப்பம் தென்படத்தொடங்குகின்றது. .............

Link to comment
Share on other sites

.

அடிகளாரைப்பற்றிய அதிர்வின் விமர்சனத்தை நீக்கும் யாழ் இணையம். அதிர்வு பற்றி அடிகளாரின் விமர்சனத்தை அனுமதிக்க முடியுமா? சிந்திக்கவும்.. ஏன் எனில் எதை செய்யும் போதும் ஒரு அடிப்படை நோக்கம் வேண்டும். அதிர்வின் விமர்சனத்தை படிக்காமல் அதற்கெதிரான விமர்சனங்களை படிப்பவம் எழுந்த மனதாக தீர்மானங்களை எடுக்க நிர்பந்திக்கப்படுவான்.

அதுதானே அது எப்படி முடியும்.அருட்தந்தை என்ற படியால் பிரசுரிக்கினமோ தெரியல்ல :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.